seth godin small is the new big

சமிபத்தில் ப்ளைட்டில் ஒரு படமும் பார்க்க பிடிக்காமல் படித்த புத்தகம், சேத் காடின் எழுதிய Small Is The New Big. பார்த்த Namesakeஇன் தொல்லை தாங்கவில்லை.

சேத்தின் வலைப்பதிவை படித்துக் கொண்டு வருபவர்களுக்கு இந்த் புத்தகம் புதிதல்ல. அவரின் வலைப்பதிவில் இருந்தும், அவரின் சில பல பேச்சுக்களிலிருந்தும் எடுத்து தொடுக்கப்பட்ட விஷயங்கள் தான் இந்த புத்தகம். எட்டு வருடங்களாக குருவி சேர்த்த எழுத்துகளாததால், ஹாரி பாட்டர் போல ஒரேடியாக உட்கார்ந்து படித்தால், மவனே சத்தியமாக தலை வலிக்கும் என்று முன்னுரையில் சொன்னாலும், கொரியாவிலிருந்து சீயாட்டல் வருவதற்கு முன்பு படித்துக் கிழித்தாயிற்று. வழக்கம் போல ப்ளைட் சாப்பாடு சாப்பிட பிடிக்காமலும், சேத்தின் எச்சரிக்கையும் சேர்ந்து செம தலைவலி.

சேத் ஒரு மார்க்கெட்டர். அதை தவிர அவருக்கு பல வேலைகள் உண்டு. ஆனால் மார்க்கெட்டிங்கில் புலி. இந்த புத்தகத்தில் மார்க்கெட்டிங் மாயாஜாலம் தவிர பல விடயங்களை பற்றி உரத்த சிந்தனை செய்கிறார். உதாரணத்திற்கு, 94′ல் தான் ஒரு இணையதளத்தை உருவாக்க நினைத்ததை பற்றி சொல்லும் போது, தான் நினைத்ததுடன் நிறுத்திக் கொண்டதாகவும், யாஹூ நிறுவனர்கள் அதை செய்து வெற்றியும் பெற்றார்கள் என்கிறார். இதற்கு அவர் விவரிக்கும் காரணங்கள், யாஹூ நிறுவனர்கள் இளங்கன்றுகள், பயம் அறியாமல் அவர்கள் ஆரம்பித்த இணையதளம் இணைய உலகத்தை மாற்றிற்று. தன் பல வருட அனுபவத்தினால் அந்த செயலில் உள்ள அபயாம் அறிந்து, அந்த எண்ணத்தை விடுத்து, இன்னும் புத்தகம் எழுதி சொல்பமாய் சம்பாதிக்கிறார்.

இணைய உலகத்தை பற்றியும், எப்படி ப்ளாக்குகள் பல கம்பெனிகளை, அதன் வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்கின்றன என்பது பற்றியும் ஏராளமான கட்டுரைகள். இணையத்தில் புதிய சேவையையோ, புதிய மாறுதலையோ கொண்டு வரத் தேவையான அளவுக்கு புதிய ஐடியாக்கள் வேண்டுமாயின் பாத்ரூமில் வைத்து படிக்கலாம். அங்கு தான் பல பெரிய சிந்தனைகள் தோன்றுகின்றன. ஆனால் சேத் சொல்வது போல ஒரே சிட்டிங்கில் முடித்தால், தலை வலிக்கும்.

சேத் காடினின் இந்த வீடீயோவை பார்த்தால், தலை வலித்தாலும் அவரை படிப்பீர்கள் – Sliced bread and other marketing delights. ரிமார்கபிள்.


scribbles ?

subbudu a.k.a guru subramanian is from chennai living in the showery seattle a software consultant by destiny loves creative arts yaps about intellectual stuff and still on the only(!) belief that he is a geek!!
read the archives>>