subbudu.com » அமெரிக்கா

வெற்றிமாறனும் விஷால் பரத்வாஜும்
தற்போதெல்லாம் வெள்ளியன்று படம் வெளிவந்து எல்லா தியேட்டர்களையும் நிறைத்துக் கொள்ள தமிழுலகம் சனி, ஞாயிறுக்குள் பார்த்துவிட சினிமா விமர்சனம் என்ற வஸ்து தேவையில்லை என்றே தோன்றுகிறது. அதனால் விகடன் உட்பட எல்லா வாராந்திரிகளும் ஒரே நேரத்தில் மூன்று நான்கு படங்களுக்கு விமர்சனம் எழுதிவிடுகின்றன. படம் பார்க்க விமர்சனம் படித்ததெல்லாம் போய், படம் பார்த்து வந்து பொறுமையிருந்தால் பிறகு படிக்கிறார்கள் இல்லையென்றால் டுவிட்டரில் 140க்குள் எதையாவது எழுதி வைத்த பின் மறந்து போய் விடுகிறார்கள்.

இங்கே அமெரிக்காவின் கடைக்கோடியிலோ நிலைமை வேறு மாதிரி. இந்தப் படம் ஹிட்டைத் தவிர வேறொன்றும் ஆகாது என்ற காரெண்டி உள்ள படங்களை மட்டும் யாராவது எடுத்து தியேட்டரில் போட்டு விடுவார்கள். அதில் கூட அவ்வப்போது உத்தமபுத்திர தப்புக்கள் நடப்பதுண்டு. சில சமயம் இதற்கு ஏதிர்ப்பதமாக – ஆயிரத்தில் ஒருவன் படம் ஒரு சனிக்கிழமையன்று ஒரே ஒரு ஷோ திரையிடப்பட்டது. அந்த மாதிரி ஒரு பிரமாதமான படத்தை நானும் பதினெட்டு பேரும் பார்த்துக் கொண்டு இருந்தோம்.

இந்தியாவில் இப்படி பல முறை தனியாக படம் பார்த்த அனுபவம் உண்டு. ஹே ராமின் முதல் நாள் மாலைக் காட்சிக்கு ஆபிஸில் சொல்லிவிட்டு போனேன். தேவியில் பாண்டு வாத்திய பேரிசை, ரசிக கண்மணிகளின் சரம், ஆங்காங்கே ”பத்து-நுப்பது பத்து-நுப்பது வாய்ங்க்கோ வாய்ங்க்கோ” ப்ளாக் டிக்கெட் ஆசாமிகளை கடந்து உள்ளே போனால் கமல் எதோ ஜட்கா வண்டியில் பவனி வந்து கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். படம் பார்த்து சிலாகித்துப் போய் ஒரிரு வாரங்களுக்கு பின் நண்பர்களை பேசி சமாளித்து  ஹேராம் பார்க்க கூட்டி வந்தேன். தேவி பாரடைஸ் தியேட்டரின் உள்ளே இருபத்தைந்து பேர், இருக்கிற மின்விசிறிகளை எண்ணிக் கொண்டிருந்தார்கள்.  இதே போல் உட்லாண்ட்ஸில் இருவர் படம் ரிலீஸ் ஆகிய மூன்று வாரங்களுக்கு பின் கல்லூரி நண்பர்களை கூட்டிப் போனேன். அடிக்காத குறை. எண்ணிப் பார்த்தால் கூட என்னையும் சேர்த்து முப்பது பேர். கூட்டம் இல்லாததால் படம் பார்த்துக் கொண்டிருந்த போது குளிர் அதிகமாகி பத்து டிக்கெட்டுகள் ஜகா. என் நண்பர்கள் ஆளுக்கு ஒரு மூலையாக தூங்கி போய்விட நான் ரசித்துக் கொண்டிருந்தேன்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மட்டும் பத்து இருபது நாட்களுக்கு படம் ஓடும். மற்ற ஊர்களில், அதாவது இந்த மாதிரி வடமேற்கு மூலையில் இருக்கும் சியாட்டலில் ஒரு ஷோ, மிஞ்சிப் போனால் நாலு ஷோ. அதுவும் இந்தியாவில் வந்த இரண்டு மூன்று வாரம் கழித்தே வரும். நான் பார்த்து விமர்சனம் எழுதுவதற்குள் அதைப் பற்றிய சுவாரசியம் குறைந்து போய்விடுகிறது. இதில் ஒரு நல்ல விஷயமும் அடக்கம், படம் வந்த முதல் நாளே கதையை விமர்சனத்தில் கோடிட்டு கூட காட்ட முடியாது. ஆனால் எல்லோரும் படம் பார்த்த பின்னர் விரிவாக உட்கார்ந்து அலசி ஆராயலாம். இதற்கேற்ற ஒரு சூழ்நிலை வேண்டும். அதுவும் தமிழில் ஆரோக்கியமாக இல்லையோ என்றே தோன்றுகிறது.

திரும்பவும் அமெரிக்காவுக்கு வரலாம். ஆக, இப்படி தியேட்டரில் வராத படங்களின் டிவிடி வந்தால் தான் படம் பார்க்க முடியும். படம் இந்தியாவில் வெளியான ஒரிரு வாரங்கள் கழித்து, ஸ்ருதிலயம் என்னும் ஒரு கம்பெனியின் டிவிடி வெளிவரும். அது அடாசு ப்ரிண்டாக இருக்க வாய்ப்புண்டு. அதற்கு பிறகு இரண்டு மாதங்கள் கழித்து லோட்டஸ் என்ற கம்பெனியின் பிரகாசமான டிவிடி வெளிவரும். இது எந்த அளவுக்கு ஒரிஜனல் டிவிடி என்ற கேள்விகளெல்லாம் இங்கே இல்லை. அமெரிக்காவில் இருக்கும் இந்தியக் கடைகளில் டிவிடி, அதை உரசிப் பார்க்காமல் வாங்கி வந்து பார்த்து விடுவார்கள் அமெரிக்க தமிழர்கள்.

0000

So we’ll live, And pray, and sing, and tell old tales, and laugh at gilded butterflies என்று ஷேக்ஸ்பியரின் கிங் லியர் சொல்லுவதாய் இருக்கும் வரிகளைப் போன்ற ஒரு கடைசிக் கவிதை முடிவு, ஆடுகளத்தில். கதாநாயகன் தன் காதலியுடன் ஒரு வழியாக தப்பித்து லாரியேறி ஊரை விட்டு போகும் காட்சியில் தெரிவது தான் வெற்றிமாறனின் வெற்றி. Everything gone wrong  கதை. அதில் கடைசியில் யாருமே ஒன்றுமே செய்ய முடியாது என்ற பட்சத்தில் தப்பிப்பதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவு, ரியலிஸ்டிக். ஆனாலும் கடைசிக் காட்சியில் அந்த லாரி கண்ணை விட்டு மறைந்து போக ஆலம் விழுதெல்லாம் தெரிகிறது. ஒருவேளை டைரக்டரின் டச்சோ என்னவோ?

ஆ.களத்தை பற்றி பேசுவதற்கு முன், கிங் லியரை ஷேக்ஸ்பியரின் மிகத் திறமையான படைப்பு என்று கிட்டத்தட்ட எல்லோரும் ஒத்துக் கொண்டு விட்டார்கள். அந்த மாதிரி ஒரு ட்ராஜெடி முடிவை, பதினேழாம் நூற்றாண்டில் எதிர்கொள்வதற்கு கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்திருக்கும்.  இன்னமும் எல்லா பெரிய நடிகர்களும் ஒரு முறையாவது கிங்லியராக நடிக்கும் வாய்ப்பிற்கு தவமிருக்கிறார்கள். தமிழில் கூட சமீபத்தில் அசல் என்ற படத்தில் கிங்லியரை கொஞ்சம் உல்டா அடித்திருந்தார்கள். கி.லியரில் அவருக்கு மூன்று பெண்கள், இங்கே ஆண்பிள்ளைகள். கடைப் பெண் கார்டெலியாவாக இங்கே அஜித் குமார். அசல் அசலல்ல.

ஆடுகளத்தின் கதை, ஏற்கனவே பல முறை சொல்லப்பட்ட துரோகக் கதை. ஆனால் துரோகத்தின் சாத்தியக்கூறுகள் பலப்பல. எத்தனை முறை இப்படியான கதையைப் பார்த்தாலும்/படித்தாலும் ஒரு திடுக்கிடல் வரத்தான் செய்கிறது. அந்த பெரிய மனிதரை(!) துரோக உணர்ச்சி ஆக்கிரமிப்பதை, காமிரா சற்றும் விலகாது படம் பிடிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக சகுனி சூழ்ச்சிகள் நடைப்பெற இனி யார் நினைத்தாலும் தடுக்க முடியாத படி துரோகம் அறுவாளைத் தூக்கிக் கொண்டு அலைய, சீட்டு நுனி லயிப்பிற்கு குறைவில்லை. தனுஷும் அவர் கூட வரும் ’சாவல்’ பார்ட்டியும் நகமும் சதையும், கடைசியில் ரத்தமும் கொண்ட மனிதர்களாக வலம் வருகிறார்கள். உதாரணத்திற்கு தனுஷின் அம்மா, பேட்டைக்காரனின் மனைவி என பல ரியல்-லைப் காரெக்டர்கள்.

வெற்றி மாறனின் இரண்டாவது படமும் அவரின் முதல் படத்தைப் போலவே இருக்கிறது. படத்தின் முக்கிய பகுதி ஓரிரவில் நடக்கிறது, கதையின் கடைசியை முன்னமே கொஞ்சம் காட்டி விடுகிறார், பின்பு கதை ப்ளாஷ்பேக்கில் போகிறது, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கு வருகிறது. இம்மாதிரியாக நான்-லீனியராக கதை சொல்வதில் சில நன்மை/தீமைகள் இருக்கின்றன. இந்த இரண்டு படங்களிலும் நல்ல வேலையாக இது சம்பந்தப்பட்ட குறை தெரியவில்லை.  படத்தில் அந்தக் காதல் தேவையேயில்லை என்று தோன்றினாலும் அதில்லாமல் கல்லா கட்டுவது கடினம்.கடைசியாக டைட்டிலில் இந்தப் படம் எடுக்க உதவிய படங்கள் லிஸ்டில் தேவர் மகன் விருமாண்டி Babel எல்லாம் இருக்கிறது. புத்தகங்களில் கிரிகோரி ராபர்ட்ஸின் Shanthaaram  மற்றும் Roots தென்படுகின்றன. இலக்கியம் படிப்பதன் அவசியம் ஆங்காங்கே படத்தில் தெரிகிறது.

“நீ இந்தப் பையன லவ் பண்றியா இல்ல அவனையா?” என்று கதாநாயகியை கேள்வி கேட்கும் போது இசைக்கும் அந்த ஜில்லிடும் தீம் மியூஸிக் பிரமாதம். ஜி.வி பிரகாஷ் எங்கிருந்து இன்ஸ்பயர் ஆனார் என்று சொல்லியிருக்கலாம். ஒத்த சொல்லால பாடல் எல்லோரையும் சகட்டு மேனிக்கு ஆட வைத்திருக்கிறது. கதர் ஜிப்பா ஜோல்னாப்பை வகையராவுக்கு பிடித்த மாதிரியும் டப்பா கட்டு கட்டும் லுங்கி மாம்ஸ்களுக்கும் பிடித்த மாதிரியும் படமெடுக்கும் வெற்றிமாறனுக்கும் விஷால் பரத்வாஜுக்கும் வித்தியாசம் அதிகமில்லை.

- இன்ன பிற பத்தி – March 8, 2011

பெரும்பள்ளம்
எகிப்தில் நடக்கின்ற மக்கள் புரட்சியை பார்க்கும் போது பிரமிப்பாய் இருக்கிறது. பஸ் பிடித்து போய் பேக்கரியிலோ டுரிஸ்ட் கைடாகவோ வேலை பார்த்து வந்த சாமானியர்கள் திடிரென்று பேசி வைத்த மாதிரி வேலையை உதறிவிட்டு, மனைவி பிள்ளைகளை வீட்டில் அடைத்து விட்டு டஹ்ரீர் ஸ்குயரில் புரட்சி செய்ய ஆரம்பித்தது அவர்களின் கோபத்தை காட்டியது.

மக்கள் புரட்சி என்றால் பிரஞ்சுப் புரட்சியைப் போல் சாவகாசமாய் வருடக்கணக்காக நடக்க வேண்டும் என்பதல்ல. கடந்த 10 தினங்களில் அங்கும் ட்யுனிஷ்யாவிலும் நடந்தைவை உலகை சற்றே மாற்றக் கூடியவை. நான்கு நாட்களுக்கு உலுலாக்காட்டியாக் போய்க் கொண்டிருந்த இந்த புரட்சி ஊர்வலங்களைப் பார்த்து அரசு பயந்து போய் விட்டது நன்றாக தெரிந்தது. அதற்கு பிறகு நடந்தது தான் பயங்கரம். யாரோ போய் கைரோவில் இருந்த சிறைச்சாலையை திறந்துவிட 17,000 கைதிகள் வெளியே தப்பி ஓட, பிடித்தது தீ. இந்த கைதிகளில் அரசு ’சந்தேகத்தின் பேரில்’ பிடித்துப் போட்ட நல்லவர்களும் அடக்கம். ஆக நல்லவர்களும் அல்லாதவர்களும் ஒரே நேரமாக வெளியே வர ஏற்கனவே இருந்த பதட்டம் அதிகமாகி ஒரே களேபாரம். புரட்சி செய்து கொண்டிருந்த மக்கள் கொஞ்சம் பேர் வீடு திரும்பி தத்தம் காலனிக்கு பாதுகாப்பாய் இருக்க மற்றவர்கள் இன்னமும் விடிய விடிய புரட்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

புரட்சி நல்லதா கெட்டதா என்பதை அந்நாட்டவர்களிடம் விட்டு விடலாம். நம்நாட்டில் இம்மாதிரி ஏன் நடக்காது என்றாவது யோசித்துப் பார்க்கலாம். எகிப்தில் முபாரக் என்றொருவர் தான் இருக்கிறார். லஞ்சம் நம்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு தேசிய குணமாகியிருக்கும் இந்நாட்களில் யாரை எதிர்த்து புரட்சி செய்வோம்? ப்ளாக் டிக்கெட்டில் இருந்து, ப்ளாடுக்கு பட்டா வாங்குவது, பம்பு தண்ணிக்கு குழாயை வீட்டுக்கு இழுப்பது, குழந்தைக்கு ஸ்கூல் டொனேஷன் என்று எல்லோரும் எதோ விதங்களில் கறைப்பட்டுப் போய் இருக்கிறோம். அப்படியே புரட்சி பண்ணுகிறோம் என்று ஜெமினி பிரிட்ஜுக்கு அடியில் போய் நின்று கோஷமிடும் போது, உண்மை நெருட திரும்பி வந்து விடுவோம். ஆக புரட்சியும் கூட உதவாதென்றால் என்றால், சிம்பிளாக, சுயேச்சையில் நிற்கும் ஐஐடி மாணவன் யாருக்காவது ஓட்டாவது போட்டு கறை கழுவலாம்.

இத்தனை நாட்களாக சூப்பர் சிங்கர் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ”எகிப்துல என்னாச்சு சார்” என்று கேட்பவர்களுக்கு எழுதிப் புரியவைக்கவே முடியாது. பார்த்துக் கொள்ளுங்கள்.

0000

இந்த எகிப்துப் புரட்சியில் ஈடுபட்டு முக்கிய அமைப்பாளர்களை இந்த சத்தமெல்லாம் ஓய்ந்து விட்ட போது, “அந்த நாட்கள் எப்படி இருந்தது?” என்று கேட்டுப் பார்த்தால், “கருப்பாய் அடி வயிற்றை கவ்வுகிற பயமாய் இருந்தது” என்று சொல்லுவார்கள். வேலையிருக்குமா இருக்காதா, பாஸ் ஆவோமா மாட்டோமா என்ற நாட்கள் நமக்கும் நடந்திருக்கலாம், அப்போது நமக்கு எப்படி இருந்தது என்று கேட்டுப் பார்த்தாலும் இப்படித் தான் பதில் சொல்லுவோம். இதைத் தான், பெரும்பள்ளம் அல்லது Pit என்கிறார்கள்.

உங்கள் வேலையில் தினம் தினம் இம்மாதிரி தோன்றுகிறதா? அமாம் என்றால் நீங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இம்மாதிரி அடிவயிற்று பயம் இல்லையென்றால் உங்களில் comfort zoneல் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். சிறந்த தலைமைப் பண்புள்ளவர்கள் மீண்டும் மீண்டும் இம்மாதிரி பெரும்பள்ளங்களைத் தேடிப்போய் விழுந்து, மீண்டும் மேலெழுந்து வருகிறார்கள். கேட்டால் சேலன்ஞ் என்கிறார்கள். கேள்விப்பட்டதுண்டா?

சமீபத்தில் Validation என்றொரு குறும்படம் பார்த்தேன். இம்மாதிரி கட்டிப்புடி வைத்தியங்களுக்கு நாமெல்லோரும் ஏங்குகிறோம். இதுவும் ஒரு சிறந்த தலைமைப் பண்பு தான் என்று தோன்றுகிறது. பதினாறு நிமிடங்களும் பார்க்க முடியவிட்டாலும் முதலிரண்டு நிமிடங்களையாவது பார்த்து விடுங்கள்.

0000

10 000 000 000 மிருகங்கள். அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு பத்து பில்லியன் மிருகங்கள் உண்பதற்காக கொல்லப்படுகின்றன. இவைகளில் வான்கோழி, கோழிகள் மட்டும் கிட்டத்தட்ட ஒன்பது பில்லியன். மாடுகள் கிட்டத்தட்ட 33 மில்லியன்கள். அதாவது மூன்று கோடியே முப்பது லட்சம்.

Fast Food Nation எனும் புத்தகத்தில் இம்மாதிரி உணவு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் மிருகங்களை எப்படி கொல்லுகிறார்கள் என்று படித்த பொழுது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இந்த வார ஓப்ரா ஷோவில் மாடுகளை கொன்று உணவு Ground Beef தயாரிக்கும் தொழிற்சாலையில் எடுத்த வீடியோவைப் பார்த்து எல்லோரும் அதிர்ந்து போய் விட்டார்கள். என்ன தான் நாங்கள் இம்மிருகங்களை ஒழுங்காக பராமரித்து மரியாதையுடன் தான் கொல்கிறோம் என்றெல்லாம் அவர்கள் சொன்னாலும், கொலை கொலை தான் என்று பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். Inside a Slaughterhouse என்னும் இந்த ஆறு நிமிட வீடியோ உங்களின் வாழ்வை மாற்றக் கூடியது. ஜாக்கிரதை.

இன்னொரு தல்
அமெரிக்காவில் பணம் கொழிக்கும் பல விஷயங்களில் ஒன்று Parenting.  சாப்பிடுதல், தூங்குதல் போல இதுவும் ஒரு தல், குழந்தை வளர்த்தல். ஓயாது செய்யவேண்டியதாக மார்க்கெட்டிங் செய்யப்பட்டு ஏராளமான பெற்றோர்களின் இருதயத்திற்குப் பங்கம் விளைவிக்கும் விஷயம். இந்தியாவிலும் இது ஒரு ஸ்ட்ரெஸ் மிகுந்த விஷயமானதுதான் சோகமே.

நாற்பது ஆண்டுகளுக்குமுன் உலகெங்கும் பெற்றோர்கள் இருந்தார்கள், குழந்தைகள் இருந்தார்கள், பெற்றார்கள், வளர்ந்தன, சனிக்கிழமைகளில் கடை-கண்ணிக்குப் போய் வந்தார்கள், பந்து தூக்கி எறிந்தார்கள், மூக்கைச் சிந்திவிட்டார்கள், சண்டை போட்டார்கள், பாடம் சொல்லித் தந்தார்கள், கடுக்கண் இட்டார்கள், மணந்துகொண்டு சென்றார்கள்.  1960களுக்குப் பின்னர் பெண்களும் வேலைக்கு போவது அதிகரிக்தபோது குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் கடமையை இரு பெற்றோர்களும் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட அங்கிருந்துதான் ஆரம்பித்தது வினை.

மார்க்கெட்டிங் ஆசாமிகளுக்கும் குழந்தை டாக்டர்களுக்கும் சாக்குக் கிடைத்து, குழந்தை வளர்த்தல் என்ற விஷயம் ’பிறந்தது’. பின்னர் ஏராளமான புத்தகங்களும், ட்ரைனிங் க்ளாஸ்களும் தோன்றி,  தேவையில்லாததை வாங்கவைத்து, நீச்சல், கிடார், கராட்டே,பந்து எறிதல், நண்டு பொரித்தல் என்று எல்லா க்ளாஸ்களிலும் பிள்ளைகளைச் சேர்த்து, அதற்குமேல் மற்ற நேரமெல்லாம் பாடங்களைத் திணித்து, குழந்தைகளும் பெற்றோர்களும் ஒருவிதமான செயற்கை உறவில் திளைத்து,  பதினெட்டுக்குப்பிறகு விட்டால் போதுமென மற்றொருவரிடமிருந்து ஓடி ஒளிகிறார்கள்.

இதை இப்போது மாற்றமுடியாது, இது ஒரு sociological phenomenon.  ஆனால் குழந்தை வளர்ப்பில் வரும் மனச் சோர்வைக் குறைக்கலாம் என்றே நினைக்கிறேன்.  பொறுப்பில்லாத பெற்றோரும் ஆர்வக்கோளாறுப் பெற்றோரும் எல்லாக் காலங்களிலும் இருந்திருக்கிறார்கள்.  இவர்களுக்கு நடுவே இயல்பாக இருப்பதற்கு ஸ்வீட்ஸ்பாட் ஒன்று இருக்கவேண்டும். கண்டுபிடித்தால் சொல்லுங்கள்.

0000

ஆஸ்திரேலிய ஓபனில் ஆண்கள் இறுதிப் போட்டி பிசுபிசுத்துப் போக, பெண்களின் பைனல்ஸ் கொஞ்சம் நகம் கடிக்கவைத்தது.பெரிய ஆள்கள் எல்லாம் தோற்றுப் போய், ஆசியாவிலிருந்து முதன்முறையாகக் கடைசிப் போட்டிக்கு வந்திருந்த லி நாவும், காணாமல் போய் மீண்டும் திரும்பி வந்திருந்த கிம் கிளிஸ்டர்ஸும் அசத்தினார்கள். முதல் செட்டில் தோற்றுப் போய் இரண்டாம் செட்டில் லூப் ஷாட்டெல்லாம் அடித்து விளையாடிய கிம் கிளிஸ்டர்ஸ் சைனாவின் கனவை இன்னும் ஒரு நான்கைந்து மாதங்களுக்குத் தள்ளிப் போட்டார். தோற்றுவிடப்போகிறோம் என்று தெரிந்தவுடன் ரசிகர்கள் கத்துகிறார்கள் என்றெல்லாம் புகார் செய்த லி நா நெருக்கடிக்கு ஆள்பட்டது தெளிவாகத் தெரிந்தது.

ஆனாலும் லி நா இரண்டாம் பரிசை வாங்கியபோது ரொம்பவும் இயல்பாகச் சிரித்து பேசிக் கொண்டே இருந்தவர், “That guy in yellow t-shirt, he is my husband, I tell him, whether you are fat or skinny, handsome or ugly, I will always follow you, I always love you” என்று எல்லோர் மனத்தையும் கவர்ந்து சென்றார்.

0000

தமிழ் சினிமாமட்டுமில்லை, சினிமாப் பாட்டும் பல கோடிகள் கொழிக்கும் ஒரு வியாபாரம். பாட்டுப் புஸ்தகம் விற்பவரிலிருந்து இசையமைப்பவர், பாட்டெழுதுபவர், பாடுபவர்,  ஹார்மொனி பாடுபவர், கஞ்சிரா வாசிப்பவர், சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோ நிகழ்த்துபவர்வரை அது ஒரு தனி இயந்திரம். தமிழ் சினிமாப் பாட்டு என்பதே இல்லாமல் போய்விட்டால் பலப்பல பேரின் வேலை போய்விடும்.

கெளதம் மேனனின் அடுத்த படத்தில் பாட்டில்லையாம். மேற்சொன்ன அத்தனைப் பேரும் கொதித்துப்போயிருக்கிறார்கள்.  காரணம், சினிமாப் பாட்டு நம் வாழ்வில் ஒன்றாக கலந்து விட்டது. சினிமாப் பாட்டு சாராயம் என்று எழுதிய பாலகுமாரன்கூட ’காஃபி வித் அனு’வில் ’எங்கிருந்தோ வந்தான்’ பாடிவிட்டுப் போனார்.

பாட்டும் இசையும் வாழ்வின் இனிமைகளில் ஒன்று. ஆக அதில்லாமல் இருக்கமுடியாதென்றாலும் சினிமாப் பாடல்மட்டும்தான் என்ற நிலை கொஞ்சம் கடினம். தமிழ் பாப்மட்டும் வென்றிருந்தால் சினிமாப் பாட்டின் ஆக்கிரமிப்பு குறைந்திருக்கும்.  நமக்கும் வேறொருவிதமான புது இசை கிடைத்திருக்கும். மால்குடி சுபா, சுரேஷ் பீட்டர்ஸ்,  அனுராதா ஸ்ரீராம், பிரேம்ஜி, தேவன் எனச் சகலரும் தமிழ் பாப்பில் முயன்று ஓய்ந்து போய்விட்டார்கள். பீட்டர்ஸ் ’மின்னல்’ என ஒரு பிரமாதமான ஆல்பம் செய்திருந்தார். அது தோற்றபோதுதான் தமிழ் பாப் என்று ஒன்று இருக்கப்போவதில்லை என்று தெளிவாகத் தெரிந்தது.  அதனால் நாலு ஃபைட், அஞ்சு பாட்டு ஃபார்முலாவிலிருந்து விடிவுகாலம் இன்னமும் கிடைத்தபாடில்லை.

சமீபத்தில் ’வானம்’ படத்தில் ”எவன்டி ஒன்னைப் பெத்தான் பெத்தான், அவன் கையில கிடைச்சா செத்தான் செத்தான்” என்று சிம்பு பாடி யுவன் இசையமைத்த பாட்டு கேட்டவுடன் பாலகுமாரன் சொன்னதுதான் ஞாபகம் வந்தது.  Bad Arrack.

0000

இனிமேல் தமிழ் சினிமாவில் கதைத் திருட்டு நடப்பது கடினம். நந்தலாலா கதை இதிலிருந்துதான் சுடப்பட்டது என்று யாரோ சொன்னதுதான் தாமதம்,  இரண்டு பேர் டிவிடி எடுத்து அந்த ஜப்பானியப் படத்தை பார்த்துவிட்டார்கள். தட்டச்சு தெரிந்த மற்ற அத்தனை பேரும், ’அட, அந்த ஜப்பானியப் படமா? அதையெல்லாம் எப்பவோ பாத்து அனலைஸ் பண்ணியாச்சு’ என்று கதை விட்டுத் தனது பண்டிதத்தனத்தை காட்டிக்கொண்டார்கள்.  ரொம்ப தாங்க்ஸ்.

படம் நன்றாகவே இருந்தாலும் டைரக்டரின் டச் என்று ஒரேயடியாகக் கால்களை காட்டியபடியே எடுக்கப்பட்ட காட்சிகளும், எல்லாக் காரெக்டர்களும் பேசாமல் தலை குனிந்து நிற்பதும் கொஞ்சம் டூமச். இளையராஜாவின் இசையில் முதல் மரியாதை, நாடோடித் தென்றல் வரிசையில் இந்தப் பின்னணி இசையும் பிரமாதமான ஒன்று. மிஷ்கினின் லேசாகக் கீச்சும் குரல் அந்த கதாப்பாத்திரத்துக்கு ஒத்துப்போகிறது. இசையில்லாமல் ஆங்காங்கே விடப்பட்டிருக்கும் மெளனமான நொடிகளும், சொல்லாமல் விடப்பட்ட சில விஷயங்களும், மிக எளிமையான திரைக்கதையும்தான் மிஷ்கினைத் தொடர்ந்து எதிர்பார்க்கவைக்கின்றன.

0000

பெற்றோர்களைப் பற்றி மேலே இருப்பதை எழுதியபோது ஆக்டன் நாஷ் எழுதியிருந்த ஒரு குறும்புக் கவிதை ஞாபகம் வந்தது. தேடி எடுத்தேன். ’First Child… Second Child’ என்ற இந்தக் கவிதையில் வழக்கம் போல் ஆக்டன் நாஷின் வார்த்தை விளையாட்டும் உண்டு.

FIRST

This child is a marvel, a matchless wonder.

A staggering child, a child astounding,

Dazzling, diaperless, dumbfounding,

Stupendous, miraculous, unsurpassed,

A child to stagger and flabbergast,

Bright as a button, sharp as a thorn,

And the only perfect one ever born.

SECOND

Arrived this evening at half-past nine.

Everybody is doing fine.

Is it a boy, or quite the reverse?

You can call in the morning and ask the nurse.

வீட்டுக் கதை
சில மாதங்களுக்குப்பின் மீண்டும் கலிஃபோர்னியா வருகிறேன். சின்ன வயதில் கேட்ட மூன்று நாட்டவர்கள் வானத்தில் பறக்கும்போதே தங்களது நாட்டைக் கண்டுபிடிக்கும் (அதாவது இந்தியாவைக் கிண்டலடிக்கும்) ஜோக்கைப்போல் கலிபோர்னியாவின்மேல் பறக்கும்போதே சிலிக்கான் வாசனை மூக்கைத் தொலைக்கிறது. ப்ளேனில் எல்லோரும் திடிரென்று #include <stdio .h> என்றெல்லாம் ப்ரோக்ராம் உளறுகிறார்கள்.

விமானம் சான் ஃப்ரான்சிஸ்கோவில் எப்போதும் படர்ந்திருக்கும் மேகத்தைக் கிழித்தபடி அதிவேகமாக நகர்ந்து சான் ஹொசே ஸ்டேஷனில் இறங்கிவிடுகிறது.  ரோடெல்லாம் தங்கமும் வைடூரியமும் கிடைக்கும் என்று நினைத்தலாகாது. பொட்டைக் காடாக எல்லா இடத்திலும் வானம் தெரியும் பாலைவனமாக இருந்த இடத்தில் திடீரென்று ஒரு முப்பது வருடங்களில் உலகம்முழுவதிலும் இருந்து டெக்னாலஜி ப்ரஜைகள் வந்து அடைத்துக்கொண்டிருக்கும் ஓர் artificial சொர்க்கம். எங்கெங்கும் பணச் செழிப்பு தெரிகிறது. ரேச்சல் வெங்கடாசலம் என்றெல்லாம் பெயர்கள் காணக் கிடைக்கிறது.  சரவணபவன் இருக்கிறது. தக்காளி ரசத்தை சூப் என்கிறார்கள். மினி டிபன் முதற்கொண்டு அடை அவியல், கைமா இட்லிவரை எல்லாம் கிடைக்கிறது. ஏப்பம் உள்பட. எந்தக் கம்பெனி போனாலும் வந்தாலும் இந்தியன் ஸ்டோர்கள் மாறுவதே இல்லை. காய்ந்துபோன டஜன் கறிவேப்பிலைகளை ப்ளாஸ்டிக் பையில் போட்டு ஒரு டாலருக்கு விற்றுவிடுகிறார்கள்.

இங்கிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ்தான் அமெரிக்காவிலேயே rudest நகரமாம். சாண்டா க்ளாராவில் பெல்ட் போடாத கார் ட்ரைவர்கள் வருகிறேன் வருகிறேன் என்று சித்த ஞாழி காக்கவிட்டு 101 ஹைவேயில் கம்ப்யூட்டர் இன்ஜினியர்களுடன் மல்லுக்கட்டி ப்ளேனை எடுக்கும்முன் எப்படியோ கொண்டுவந்து போட்டுவிடுகிறார்கள்.

0000

போன வருடம் படித்த ஆங்கில வரிசையில் எனக்குப் பிடித்த புத்தகம் பில் ப்ரைசன் (Bill Bryson) எழுதிய At Home – A Short History of Private Life என்ற புத்தகம். பில் ப்ரைசன் ஓர் ஆதர்ச எழுத்தாளர். படிக்கும் ஒவ்வொருவரிடமும் 1-1 பேசுகிறமாதிரி எழுதக்கூடியவர். ப்ரபஞ்சத்தில் இருந்து பெருவெடிப்பு, கல் மனிதன் எனக் கடினமான விஷயங்களை A Short history of nearly everythingல் விளக்கியிருப்பவர். ஓவ்வொரு புத்தகத்திலும் புதியவைகளைமட்டுமே எழுதக்கூடியவர்.

ஐம்பதுகளில் இருந்த அமெரிக்காவைப் பற்றி இவர் எழுதிய சுயசரிதையான The Life and Times of the Thunderbolt Kid எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஓரிரு அத்தியாயங்களை இரண்டு மூன்று முறைகூடப் படித்திருக்கிறேன். விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். ஓரிருவருக்குப் பிறந்தநாள் பரிசாக இந்தப் புத்தகத்தை அளித்திருக்கிறேன்.படித்தால் உங்களின் குழந்தைப் பருவத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பீர்கள். படித்தபடியே சிரிப்பு வரவில்லை என்றால் நீங்கள் டாக்டரை நாடவேண்டிவரலாம்.

தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் ப்ரைசனின் வீட்டில் ஒரு நாள் எங்கிருந்தோ தண்ணீர் ஒழுகுகிறது. அவர் ஆட்டிக்(Attic) என்னும் வீட்டின் உட்கூரையின்மேலிருக்கும் அறையில் ஏறிப் பார்க்கிறார்.  முதன்முறையாக அந்த அறைக்கு வரும் அவருக்குத் தோன்றுவது, உலகத்தைப் பற்றியெல்லாம் பேசும் எனக்கு என் வீட்டைப் பற்றியே தெரியாத விஷயங்கள் எத்தனை இருக்கிறது!

இதையடுத்து அவர் தன் வீட்டில் இருக்கும் ஒவ்வோர் அறையாக நம்மை அழைத்துச்செல்கிறார். அந்த அறையின் பின்னணியில் இருக்கும் வரலாறை ஆராய்ந்து விளக்குகிறார். இப்படி உருவானதுதான் இந்தப் புத்தகம் At Home – A Short History of Private Life.

டைனிங் டேபிளில் ஏன் உப்பும் மிளகும்மட்டும் வைக்கிறார்கள், forkல் ஏன் நான்கு பற்கள்மட்டும் இருக்கிறது, பாத்ரூம் உருவானது எப்படி எனச் சுவாரசியமான, ஆனால் அதிகம் பிரசித்தம் இல்லாத விஷயங்களை ஆராய்கிறார். ப்ரசன் சொல்லவருவது உங்கள் வீட்டிற்கும் வரலாறுக்கும் சம்பந்தமில்லை என நினைக்காதீர்கள். வரலாறு கடைசியாக முடிவது வீட்டில்தான்!

ரோமானியர்கள்தான் குளியலறைப் பழக்கத்தைக் கொண்டுவந்தார்கள். அதற்குமுன் கிரேக்கர்கள் Gymnasium என்றோர் இடத்தை வைத்திருந்தார்கள். Gymnasium என்றால் ’ஆடையில்லாத அறை’ என்று அர்த்தம். கொஞ்சம் உடலை வியர்க்கவிட்டுவிட்டுக் குளித்த இடம்தான் அது. அவர்களோடு ஒப்பிடும்போது ரோமானியர்கள் கொஞ்சம் சொகுசானவர்கள். அவர்கள் குளியறை பல ஏக்கர்களுக்குப் பரந்து விரிந்தது. அதனுள் சலூன், நூலகம், ப்யூட்டி பார்லர், டென்னிஸ் கோர்ட், ரெட் லைட் ஏரியா என்று பலதும் இருந்ததாம்.  நகரத்தில் நடுவில் இருந்த இந்தக் காமென் குளியலறைதான் அவர்களின் டைம் பாஸ். கொடுத்துவைத்தவர்கள்!

ரொம்பவும் அபாயகரமான அறை அல்லது இடம் மாடிப்படிதான்.  அமெரிக்காவில் வருடத்திற்குப் பன்னிரெண்டாயிரம் பேர் கீழே விழுகிறார்கள். மீண்டும் எழுவதே இல்லை. அவர்கள் விழுவது படிகட்டிலா, மொட்டை மாடியிலிருந்தா, அல்லது மரக் கிளையிலிருந்தா எனத் தெரிவதில்லை. இங்கிலாந்தில் வருடத்திற்குச் சுமார் மூன்று லட்சம் பேர் படிகட்டிலிருந்து விழுந்து டாக்டர் க்ளினிக் செல்கிறார்கள். இந்த மாடிப் படி பற்றியே MIT ப்ரொஃபஸர் ஒருவர் ஆராய்ச்சி செய்திருக்கிறார். இதன்படி இந்த நம்பர்கள் ரொம்பவே குறைந்தவை என்கிறார் அவர். கார் விபத்திற்கு அடுத்தபடி அதிகமாக நடக்கும் விபத்து இந்த மாடிப்படிச் சறுக்கல்தான்.

ஆனாலும் மற்ற இடங்களுக்குச் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாடிப்படிகளுக்குச் செய்யப்படுவதில்லை என்பதுதான் சோகமே.  நியுயார்க்கில் ஒரு

சப்வேயில் சறுக்காமல் இருக்கப் போடப்பட்டிருந்த ரப்பர் படிகட்டுகள் எங்கு ஆரம்பிக்கின்றன என்று தெளிவாக தெரியவில்லை. அதனால் சுமார் ஆறு வாரங்களில் 1400 பேர் விழுந்துவிட்டிருந்தார்கள். அப்புறம் அதை விழுந்தடித்துக்(!)கொண்டு மாற்றினார்கள்.

கிட்டத்தட்ட எல்லோரும் ஏதாவது தருணத்தில் மாடிப்படியில் இருந்து சறுக்கி விழுகிறார்கள்.  2,222 முறைகளில் ஒரு முறையாவது கண்டிப்பாக நீங்கள் ஒரு படியாவது தவறுவீர்களாம். 63,000 முறைகளில் ஒரு முறையாவது ஒரு சின்ன விபத்தாவது நேருகிறதாம். முப்பது லட்சம் முறைகளில் ஒரு முறையாவது ஹாஸ்பிட்டலுக்கு செல்ல நேர்கிறதாம்.  திருமணமாகாதவர்களும் கொஞ்சம் ஒல்லியானவர்களும் அதிகம் விழுகிறார்களாம்.  ஒருமுறை சறுக்கினீர்கள் என்றால் மீண்டும் சறுக்கும் வாய்ப்பு அதிகமாகிறதாம்.  ஏறுவதைவிட இறங்கும்போதுதான் விபத்துகள் அதிகம் நடக்கிறதாம். நல்ல ஆரய்ச்சி, ந.ப.

இப்படிக் கீழே விழுவதை ஒரு ஸ்லோ-மோஷனில் ஓட்டிப் பார்க்கலாம். படிகட்டில் இறங்குவதே ஒருவிதக் கீழே விழுதல்தான். என்ன, நாம் கொஞ்சம் கண்ட்ரோலில் இருக்கிறோம். ஆகவே விழாமல் இறங்குகிறோம். சட்டென அடுத்த படி சறுக்கிவிட்டால் இந்த மனிதன் இறங்கவில்லை, சறுக்க ஆரம்பித்திருக்கிறான் என மூளைக்குப் புரிந்து உங்கள் ரிஃப்ளக்ஸ் இயக்கத்தில் இறங்க ஆகும் நேரம் 190 மில்லி செகண்டுகள்.  இந்தப் பூதாகர இடைவெளியில் நீங்கள் சரியாக ஏழு இஞ்ச்கள் இறங்கியிருப்பீர்கள். விழலாம், அல்லது விழாமல் சுதாரித்துக்கொண்டும்விடலாம்.

இப்படியான மாடிப்படியில் அதிகம் கவனமாக இருக்கவேண்டிய இடம் முதலும் முடிவும்தான். மூன்றில் ஒரு விபத்து முதல் படியிலோ கடைசிப் படியிலோ நடக்கிறது. மிச்ச இரண்டு பங்குகள் முதல் மூன்று படிகளிலோ கடைசி மூன்று படிகளிலோ நடக்கிறது. ஆக நடுவில் மோட்டு வளையத்தை பார்த்தபடி நடக்கலாம். திடிரென்று ஒரு படி இருக்கக்கூடிய இடங்களும் நான்குக்கும் குறைவான படிகள் இருக்கக்கூடிய பிரதேசங்களிலும் அஜாக்கிரதை அதிகம் இருக்கிறது.

பெட்ரூம் பற்றிக்கூடச் சுவாரசியமான பல குறிப்புகள் இருக்கின்றன. எஜமானர்கள் தூங்கும் படுக்கைகளின் கால் பகுதியில் வேலைக்காரர்கள் படுத்து உறங்கியிருக்கிறார்கள். மன்னர் ஐந்தாம் ஹென்றி அவர் மனைவியுடன் கூடியபோது அவருடைய சமையல்காரரும் வேலைக்காரரும் உடன் இருந்ததாகத் தெளிவான குறிப்புகள் இருக்கின்றன. படுக்கையின் மேல் திரைச்சீலை ஒன்று இருந்திருக்கலாம் என்று சந்தேகத்துடன் எழுதிய குறிப்பும் மங்கலாக இருக்கிறது

0000</stdio>

மறந்து போனவை
டிசம்பரின் கடையிறுதி வாரங்களில் ஆபிஸில் லீவு சொல்லி விட்டு, வீட்டில் இருந்தேன். சுவாரஸ்யமாக எதாவது தென்படுகிறதா என்று டிவியை மேய்ந்தேன். அமெரிக்கத் தாய்மார்கள் எப்படித்தான் மதிய நேர டெலிவிஷனைப் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.  எல்லா முக்கிய சானல்களிலும் பொழுதெல்லாம் பேசித் தொலைக்கிறார்கள். பெண்களுக்கான டாக்-ஷோவாம். ராவிலும் இதே தொல்லை. லேட்-நைட் ஷோ. ஹூஹும் நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை, அவையும் டாக்-ஷோக்கள் தான். பேசுவது ஆண்கள்.

எல்லா டாக்-ஷோக்களும் ப்ரைம் டைம் ஷோ மாதிரி மார்க்கெட்டிங் செய்யப்பட்டு, அதற்கேற்ற மாதிரி பேச்சுக்கள் திசை திருப்பப்பட்டு, டிவி சீரியல் மாதிரி கமெர்ஷியல் ப்ரேக்குகளுக்காக கரெக்டாக கொக்கிக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. பதில் ப்ரெக் கே பாஸ்.

என்.பி.சியில் வரும் ஓப்ரா வின்ப்ரே ஷோவிற்கு இது கடைசி சீசன்.  மனுஷி ரிடையர்டாகி விடுவார் என்று பார்த்தால், பெப்பே. ஒரு மணிநேர ஷோவுக்கு OWN(Oprah Winfrey Network) என்று ஒரு சானலே ஆரம்பித்து விட்டார். ஆடின காலும் பேசின வாயும் என்று பழமொழியை மாற்றி விடலாம். தாய்க்குலங்களின் பேராதரவோடு 25 வருடமாக பேசிக் கொண்டிருக்கிறார் ஓப்ரா. ஆங்காங்கே நல்ல விஷயங்கள் செய்தாலும், பேசப்படும் விஷயங்களை விரல்களால் எண்ணிவிடலாம். கைவிட்ட கணவனும், கடன் தொல்லையில் மூழ்கியவர்களும் அவர்களை மீட்க எடுக்கப்படும் முயற்சிகளும், குண்டாவது மற்றும் ஒல்லியாவது மற்றும் ஒன்றும் ஆகாகது எப்படி எனப்படும் ஹவ்-டூ வகை விஷயங்கள்.

நான் பார்த்த ஒரு மதிய ஷோவில், ஹாரி பாட்டர் கதாசிரியர் ஜெ.கே, ரவுலிங்கை ஸ்காட்லாண்டில் சந்தித்து உரையாடினார். ஓப்ரா வாய்க்கு அவல் கிடைக்குமா என முடிந்த மட்டும் தேட, ரவுலிங்கோ நேரெதிர்.  மொத்தத்தில் அந்த பேட்டி சுத்த வேஸ்ட்.   ரவுலிங் ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை, பாவம் ஓப்ரா.

ஓப்ரா ஒரு புக்-கிளப் வைத்திருக்கிறார், அவற்றில் பரிந்துரைக்கப்படும் புத்தகங்கள், ஜெயமோகனின் உலோக வேகத்தை தூசி ஆக்கி விடக்கூடியவை.  சமீபத்திய பரிந்துரை, டிக்கின்ஸின் The Tale of Two Cities. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

நான்சி க்ரேஸ் என்று ‘ரொம்பப் பேசும்’ ஒரு வக்கீல் மாலை நேரங்களில் தொலைந்து போன சிறுவர்களின் கேஸ்களை சத்தமாக பேசியபடியே ஆராய்கிறார்.  மற்ற நேரங்களில் ப்ரைவேட் கோர்ட் நடத்துகிறார். அதை ஒளிபரப்பவும் செய்கிறார்கள். மற்ற குடும்பங்களின் சண்டையை நாமும் அந்த குடும்ப கோர்ட்டுகளில் பார்க்க நேர்கிறது.  மெகா சிரியலாய் இருந்தால் என்ன கோர்ட்டாக இருந்தால் என்ன, நமக்கு தேவை அண்டை குடும்பங்களின் கண்ணீர் வம்புகள்.  ரொம்ப சந்தோஷம்.

இதற்கு நடுவில் ஜெர்ரி ஸ்பிரிங்கர் எனும் ஒரு செக்ஸ் வம்பு டாக் ஷோவும் உண்டு.  இந்த ஷோவில் சக்காளத்தி சண்டை நடக்கிறது. திடீரென்று இரண்டு பெண்மணிகளும் அல்லது இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணுக்காகவோ/ஆணுக்காகவோ தலை மயிரை பிடித்துக் கொள்கிறார்கள். எனக்கு சென்னையின் மெட்ரோ பம்பு சண்டை ஞாபகம் வந்தது, குடம் தான் இல்லை, மற்றபடி அதே குழாயடி கூத்து. Pun Intended.

இவைகளின் நடுவே எலன் டிசெனரஸ் எனும் ஒரு பெண்மணி செய்யும் டாக் ஷோ கொஞ்சம் ப்ராக்டிகலாக தெரிந்தது. ஷோவின் நடுவே எலன் தினம் ஒரு டான்ஸ் ஆடுகிறார், இதைத் தவிர அச்சு பிச்சு கேள்விகள் கேட்பதில்லை, வேண்டுமென்றே ட்ராமா செய்வதில்லை எனப் பட்டது. எதுவாக இருந்தாலும் பகலில் டிவி பார்ப்பது உங்கள் IQவிற்கு ஆபத்து.

இரவுகளின் டாக் ஷோக்கள் 8 மணிக்கு ஜான் ஸ்டுவேர்டில் (Jon Stewart)  ஆரம்பித்து Conan O’Brien, Jay Leno என எல்லோரும் ஜோக் அடிக்கிறார்கள். ஜோக் அடிக்கப்படுபவர்கள் அ.சியல்வாதிகள், ஹாலிவுட்காரர்கள் மற்றும் சாமானியர்கள். ஆக அமெரிக்காவில் யாரையும் விட்டு வைப்பதில்லை.  இப்படி தன்னைப் பற்றியே ஜோக் அடித்துக் கொள்வது, அந்த சகிப்புத்தன்மை இந்த நாட்டின் ஆரோக்கியத்துக்கு நல்லது. நக்கல் கொஞ்சம் அதிகமாகிப் போய் யாராவது கேஸ் போட்டால் அந்தந்த சானல்கள் பார்த்துக் கொள்கின்றன.  இவர்கள் சிலரின் ஷோக்களை நான்கைந்து வருடங்களாக பார்த்துக் கொண்டு வருகிறேன். ஜே லெனோ மாதிரி ஜோக்கை ரசித்துக் கொண்டே அடிப்பவர் யாரும் இலர். என்னுடைய பேவரைட்.  கொஞ்சம் பி.பி குறைந்த மாதிரி தெரிகிறது.

000000

இந்தப் பத்தியை பற்றி கொஞ்சம் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.  இது eclectic writing எனும் வகையை சேர்ந்தது. அதாவது கலவை எழுத்து என்று சுமாராய் தமிழில் சொல்லலாம். இதைப் பற்றித்தான் என்றில்லாமல் எதைப் பற்றி வேண்டுமானாலும் எவ்வளவு ஆழமாகவோ மேலோட்டமாகவோ எழுதப்படும் ஒரு பத்தி. இதைத் தமிழில் சிலர் எழுதியிருந்தாலும் பிரபலமாக்கியது சுஜாதா தான். ஆங்கிலத்தில் மிகவும் ரசித்து படிக்கப்படும் ஒரு எழுத்து வகை. இவ்வகை பத்திகளை படிக்க ஒருவர் எந்த மனநிலையிலும் இருக்கலாம். பிசியான ஆபிஸ் லஞ்சுகளிலும், காபி ஷாப்களிலும், ஷேர் ஆட்டோக்களிலும் பெண்கள் கல்லூரி பஸ் நிலையங்களிலும் படிக்கக் கூடிய அளவிற்கு லைட் ரீடிங் வகையை சார்ந்தது.

அமெரிக்காவில் இவ்வகை eclectic எழுத்தாளர்கள் ஒரு வரியில் கூட சில செய்திகளை சொல்வார்கள், ஐம்பது வரிகளிலும் இழுத்து ஆடிப்பார்கள். அது சொல்லப்படும் விஷயத்தை ஒட்டியது.  ஒரு முறை ஒரு எழுத்தாளர் பத்தியை ஆரம்பித்த ஐந்தாவது வரியில், இந்த வாரம் உங்களுக்கு விடுமுறை தருகிறேன், படித்தது போதும் என்று அந்த வாரப் பத்தியை அத்தோடு நிறுத்தி விட்டார். ஆக எடிட்டர் என்ற ஒரு நல்ல மனிதரைத் தாண்டி வாசகர்களுடன் நேரடியாக உறவாடும் வகையை சார்ந்தது.  இந்த மாதிரி ஒரு பத்தியை அந்த காலத்தில் வாரப் பத்திரிகைகளில் அனுமதித்தார்கள் என்றால் அந்தந்த எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்தரம் புரிகிறதா?  அவர்களும் சுதந்தரத்தை பயன்படுத்தி குப்பையாக்காதது தான் முக்கிய காரணம்.

ஹிந்துவின் கடைசி பக்கத்தில் வரும் ஆர்ட் புக்வால்ட் ஞாபகம் இருக்கலாம். ஆர். கே.நாராயணை நினைவு படுத்தும் சாயல். இவரின் எழுத்தை எக்லெடிக் வகையில் சேர்க்க முடியாது என்று சிலர் சொன்னாலும் மிகப் பிரபலமான eclectic  columnist இவராகத் தான் இருக்க முடியும். இவர் எழுத்தின் உச்சத்தில் இருந்த போது உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 550 நாளிதழ்கள் இவரது வாரப் பத்தியை பிரசுரித்தன. சுத்தமான காமெடி ஜென்மம். இவரின் எழுத்து புரிய கொஞ்ச அமெரிக்க அரசியல் தெரிந்திருத்தல் அவசியம். தன் கடைசி நாள்வரை எழுதிக் கொண்டிருந்தார்.  வாஷிங்டன் போஸ்டில் Goodbye, My Friends என்று இவர் எழுதிய கடைசி பத்தி எதிர்ப்பார்த்தபடி மிக பிரசித்தம். கொஞ்சம் முயற்சித்தால், You Can Fool All of the People All the Time  எனும் இவரின் புத்தகத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். பேசப்படும் விஷயம் பழையதாய் இருந்தாலும் சுவாரசியம் கொஞ்ச நஞ்சமல்ல.

00000

அல்செய்மரின் வியாதி என்று அமெரிக்க மீடியா ரொம்பவே கூக்குரலிட்டாலும் நானும் எதோ பணக்காரர்களின் வியாதி போலும் என்று விட்டுவிட்டேன். 2006ல் நண்பர்(ரொம்பவே வயதான)  ஒருவரின் மனைவி இறந்ததை பற்றி அவரிடம் உரையாடும் போது தான் இந்த வியாதியின் பயங்கரம் புரிந்தது. சமீபத்தில் படித்த Finding Life in the Land of Alzheimer’s எனும் புத்தகத்திலும் இப்படியே.

அல்செய்மரின் வியாதி எனும் பெயர் புதிதாய் இருந்தாலும் இது இந்தியாவில் புதிதல்ல. நமக்கெல்லாம் தெரிந்த டிமென்ஷியா தான். அலோய்ஸ் அல்செய்மா எனும் ஜெர்மனிய நியூரோ டாக்டர் இதை அழுத்தமாக விளக்க அவரின் பெயரே நிலைத்து விட்டது.  65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே அதிகமாய் வரும் இவ்வகை டிமென்ஷியாவில் ஞாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் விலகுகின்றன.  மறக்கிறார்கள். மறந்து மறந்து மரிக்கிறார்கள். இதற்கு முற்றிலுமாக குணப்படுவதற்கு மருந்தில்லை, தள்ளிப் போடவும் முடிவதில்லை, வந்து விட்டால் மறதி தான். எதோ ஒரு ஆராய்ச்சியில் அல்செய்மர் வந்த பிரபலங்களை அனலைஸ் செய்த போது மிக அதிகமாக இருந்தது எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்கள்.  பள்ளியில் இருந்த போது ரசித்துப் படித்த எனிட் ப்ளைடன் என்ற எழுத்தாளரும் அல்செய்மர் வந்து தான் காலமானார்.

இதில் பயங்கரம் என்பது இவ்வகை நோயாளிகளை பார்த்துக் கொள்ளும் கணவனோ மனைவிக்கோ தான். இன்றைய நிலவரப்படி, நோயாளிகளை விட அவர்களை பார்த்துக் கொண்டு அவர்களின் மறதியுடன் போராடும் கடினத்தை தாங்கிக் கொண்டுள்ளவர் நோயாளிகளுக்கு முன் இறந்து விடுகிறார்கள் என்பது.

இவ்வியாதியில் ஞாபகங்கள் விலகுவதும் பயங்கரம் தான். அதாவது, கணினித் துறையில் சொல்வது போல Last In First Out Stack. கடைசியாக நடந்த விஷயங்கள் முதலில் மறந்து விடும் என்கிறார்கள். கடைசியாய் பிறந்த குழந்தையை ஒரு பெண்மணி மறந்து விட்டார். தன் முதல் பையனை மட்டும் ஞாபகம் வைத்திருந்தார். மற்றோரு மனைவி தன் கண் முண் நடமாடும் கணவனை மறந்து விட்டார். ஆனால் ஸ்டீவ் எனும் பெயரில் இருந்த தனக்கு அன்பான கணவன் ஒருவர் இருந்தார் என்று தன் கணவரிடமே சொல்லிக் கொண்டிருந்தார்.  அல்செய்மர் நோயாளிகள் ஞாபகத்தில் இளைமையாகிக் கொண்டே போகிறார்கள் என்பதற்கு காரணம் இது தான். பலரின் ஞாபக செல்களில் இருந்து கடைசியாய் கரைவது அவர்களின் தாய்.  கவித்துவம் என்று சொல்லலாமா?

00000

கிறுக்கல் அவார்ட்ஸ் 2010
வழக்கம் போல் – ’இந்த வருடத்தின் சிறந்த’  சேர்த்துக் கொள்ளவும்

புத்தகம்

ஆங்கிலப் புத்தகம் 1 –  The Big Switch – Nicholas Carr

ஆங்கிலப் புத்தகம் 2 –  At Home: A Short History of Private Life – Bill Bryson

சொந்தக் கதை – Autobiography of Mark Twain – நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு நான்-லீனியர் முயற்சி

நோட்டபிள் புத்தகம் – இன்றைய காந்தி – ஜெயமோகன்

தமிழ் சினிமா

ட்ரைலர் – வா. கு. கட்டிங்

படம் – ஆயிரத்தில் ஒருவன்

நோட்டபிள் படம் – அங்காடித் தெரு

சுமார்ப் படம் – சிங்கம், ராவணன், மதராஸப்பட்டிணம்

காமெடிப் படம் – தமிழ்ப் படம்

ஸ்டண்ட் – நான் மகான் அல்ல

நாயகன் – கார்த்தி(ஆயிரத்தில் ஒருவன்)

நாயகி – அஞ்சலி (அங்காடித் தெரு)

காமெடியன் – சந்தானம் (பாஸ் எ பாஸ்கரன்)

துணை நடிகர் – பார்த்திபன்

பாடல் – ஓ ஈசா(ஆயிரத்தில் ஒருவன்)

படமாக்கப்பட்ட பாடல் – மன்னிப்பாயா

குத்துப் பாடல் – காதல் வந்தாலே(சிங்கம்)

இசையமைப்பாளர் –  ஜி.வி.பிரகாஷ்

பாடகர் – விஜய் யேசுதாஸ் ( தாய் தின்ற மண்ணே)

பாடகி – ஆண்ட்ரியா, ஷ்ரேயா கோஷல்(மன்னிப்பாயா)

பாடல் வரிகள் – வைரமுத்து ( கயல் விளையாடும் வயல்வெளித் தேடி)

நோட்டபிள் பாடல் – ஆரோமலே – அல்போன்ஸ் ஜோசப்,  கைதப்ராம் நம்பூதிரி, ரஹ்மான்

எடிட்டிங் – ஆண்டனி(வி.தா.வ,  வா.கு.க)

ஒளிப்பதிவு – ராம்ஜி(ஆயிரத்தில் ஒருவன்), சந்தோஷ் சிவன் – மணிகண்டன் (ராவணன்)

எழுத்து/இயக்கம் – செல்வராகவன்

நோட்டபிள் இயக்குநர் – சுசீந்திரன் (நான் மகான் அல்ல)

பாலிவுட் சினிமா

படம் – Ishqiya

சுமார்ப் படம் – Karthik calling Karthik

நோட்டபிள் படம் – Peepli [Live]

ஹாலிவுட் சினிமா

படம் – Inception (கனவுத் தொழிற்சாலை)

காமெடிப் படம் – Date Night

சுமார்ப் படம் – - Shutter Island

மற்றவை

டெக்னாலஜி –  Augmented Reality

மொக்கை விளையாட்டு – Farmville

மறதி நியூஸ் –  மத்திய அரசு பட்ஜெட், செந்தமிழ் மாநாடு

இயேசுநாதரும் பி.சி. ஸ்ரீராமும்
இப்போதெல்லாம் டிசம்பர் சீசன் போய் நவம்பராகி விட்டது.  பட்டாசு வாசனை போவதற்கு முன் கச்சேரி காண்டீன்களில் அடுப்பு பற்றவைத்தாகி விட்டது.  வழக்கமாக நவம்பரில் ஷோபனா, அனிதா ரத்னம் போன்றவர்களின் alternative dance festival தான் நடைபெறும். ஸ்ரீநிதி கூட டிசம்பரில் தான் நிகழ்ச்சி செய்வார்.  ஓப்பனிங் வீக்கெண்டில் கல்லா ஃபுல்லாக்கும் தமிழ் சினிமா மார்க்கெட்டிங் போல, கடந்த சில வருடங்களாக ஒரேடியாக நவம்பரிலேயே தம்புரா சகிதம் ஆஜராகிவிடுகிறார்கள்.

சென்னையில் சீசன் ஆரம்பிக்கிற நேரமாகிவிட்டது என்று தெரிவதற்கு இந்து பேப்பர் படித்தல் முக்கியம்.  இந்துவும் சமீபமாக நவம்பர் பெஸ்ட் போன்ற விழாக்களை ஸ்பான்ஸர் செய்கிறார்கள். இந்தப் படங்களை பார்த்தால் கச்சேரிகளின் who’s who  தெரியவரும்.  இதில் ப்ரம்ம கான சபா தலைவர் நல்லி செட்டியார் தான் மிஸ்ஸிங்.

சென்னை வாழ் தமிழ் மகா குடிமகனுக்கு சாஸ்திரிய இசையில் ஆர்வமெல்லாம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. கண்கள் இரண்டால் பாட்டு வந்த பொழுது ரீதிகெளளை ராகத்தை பற்றி தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று எல்லோரும் பேச ஆரம்பித்தவுடன் கொஞ்சம் ஏமாந்துதான் போய்விட்டோம்.  வருடத்திற்கு சுமார் இரண்டு சதவிகித சென்னைவாசிகள் மட்டுமே ஒரு கச்சேரியாவது கேட்கிறார்கள் என்று பட்சி சொல்கிறது.  மற்றவர்கள் எல்லாம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறார்கள். இரண்டை நாலாக்க  நாமெல்லோருக்கும் சில யோசனைகள் -

நம்பர் ஒன் – சிந்து பைரவியிலிருந்து சொல்லி வரும் விஷயம், தமிழில் கொஞ்சமாவது பாடுங்கள். அட்லீஸ்ட் 33% ஆவது தமிழில் இருக்கவேண்டும் என்று சபா மேலாளர்கள் அட்வான்ஸ் கொடுக்கும்போது பேசிக் வைக்கலாம்.  முன்னமே சொன்ன அவாள் இசை அவங்க இவங்க இசை ஆவதற்கு இது ரொம்பவும் முக்கியம். மேலும் ப்ராக்டிகலாகப் பார்த்தால், தமிழில் பாடினால் புரிகிறது.  புரியாத இசையை ரசிக்க அதை ரொம்ப நேரம் கேட்க வேண்டும். இந்த diminishing  attention span கலாசாரத்தில் இது ரொம்பவும் கடினம்.

டிசம்பரை ஹாலிடே சீசனாக பாவித்து குடும்பத்துடன் ஓரிரு நாட்கள் டிவி, சினிமா அல்லாத எதோ ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்குச் சென்று வரலாம். இசைதான் என்றில்லை, கூத்துப் பட்டறை நாடகமோ, க்ரேஸியின் துணுக்குத் தோரணமோ, கதா காலட்சேபமோ, பல இருக்கின்றன. இரண்டொரு நாட்கள் சீரியல்களைத் தவற விட்டால் எந்தக் கதையும் ஓடிப்போய் விடாது.

குழந்தைகளை பாட்டு க்ளாசில் சேர்த்தால் மட்டும் போதாது. அவர்களை சீசனுக்கு இரண்டு மூன்று கச்சேரிக்காவது அழைத்துப் போங்கள். குருசரண், சு.ரகுநாதன் கச்சேரி தான் என்றில்லை. அவற்றின் டிக்கெட் கட்டுப்படியாகாமல் போகலாம். மதியம் இரண்டிலிருந்து நான்குவரை நடக்கும் இலவச கச்சேரிகளுக்குக் கூட்டிக் கொண்டு போகலாம். காண்டீன் மூக்கை தொலைக்காது, பட்டுப் புடைவை கண்ணை டாலடிக்காது, நடுநடுவே சீட்டனுப்பும் காமெடியெல்லாம் இல்லாது புதியவர்களின்  இசையை  சுகமாக ரசிக்கலாம்.

கச்சேரி முடிந்தவுடன் பின்பக்கமாக எஸ்கேப் ஆகாமல், சபையிலிருந்து இறங்கி வந்து கொஞ்சம் ரசிகாஸுடன் கலந்து பேசிய பின் கலைஞர்கள் வீடு திரும்பலாம் அல்லது அடுத்த கச்சேரிக்குத் தொண்டையை ரெடி செய்யலாம்.  போன வருடம் மியூஸிக் அகாடமியில் ஒரு கச்சேரி முடிந்தவுடன் அடித்து பிடித்துக்கொண்டு சஞ்சய் சுப்பிரமணியன் காரில் விரைந்ததைப் பார்க்க முடிந்தது. அவரின் பின்னே ஒரு பத்து பேராவது பேசலாம் என்று வந்து கொண்டிருந்தார்கள்.  இத்தனை ஓட்டமாய் வருபவர் கண்டிப்பாக தீவிர ரசிகராக இருந்தே ஆகவேண்டும். சில நிமிடங்கள் நின்று பேசிப் போயிருந்தால் அந்தப் பத்து இதயங்களை வென்றிருப்பார்.

சின்னஞ்சிறு கிளியே என்று அதே கிளியை எல்லா சபாவிலும் கூப்பிடாமல் பல்வேறு பாட்டுகளையும் வோக்கலிஸ்ட் தேர்ந்தெடுக்கலாம். அதே மாதிரி தங்களுடைய முத்திரைகளைத் தாண்டி எல்லா இசை நுணுக்கங்களையும் அணுகிப் பார்க்கலாம். அருணா சாயிராமுக்கு எத்தனை சீட்டு வந்தாலும் ஒரு கச்சேரியிலாவது அபங் பாடாமல் இருக்கலாம்.

மற்றபடி -

டி.டி.கே ரோடு ஏவிஎம் சங்கரா ஹாலில் நடக்கும் இசை/புத்தக/வீடியோ கண்காட்சிக்கு சென்று வாருங்கள். தனியார் கண்காட்சிதான் என்றாலும் இது போல எல்லா இசை சிடிக்களையும் ஒரே இடத்தில் பார்ப்பது கடினம். அதே நேரத்தில், நானும் கர்னாடிக் கேட்கிறேன் பேர்வழி என்று இரண்டாயிரம் ரூபாய்க்கு சீடி வாங்கி எல்லாவற்றிலும் தூசி படிய வைப்பதிலும் உபயோகமில்லை.

மக்மல் பூரி எந்த காண்டீனில் கிடைக்கிறது என்று தேடி சாப்பிடலாம். போன வருடம் நாரத கான சபாவில் கிடைத்தது.

n.shree just started, seems like a bad throat day. still awaiting the abheri classic – murugan song. #kutcheri போன்ற டுவிட்களை கச்சேரியின் இடைவேளையில் செய்யலாம்.  இரண்டு சாதகங்கள் – பின் தொடரும் நண்பர்களிடம் கொஞ்சம் ஜெர்க் விடலாம்.  கச்சேரிக்கு செல்வது ‘the in-thing” என்ற ஒரு ஃபாஷனை உருவாக்கலாம்.

0000

தாங்ஸ் கிவ்விங் தினத்திற்கு அமெரிக்கா ரெடியாகிக் கொண்டிருக்கிறது. கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் மதச் சடங்காக ஆரம்பித்தது பின்பு சமூக வழக்கமாக ஆனது.  வான் கோழி பிரியாணி, மேஸீஸ் பரேட், அமெரிக்கன் கால்பந்து போட்டிகள்,  ப்ளாக் ப்ரைடே ஷாப்பிங் என்று இவைகளைத் தாண்டி தாங்க்ஸ் கிவ்விங்கிற்கு வேறுசில நல்ல காரணங்கள் உண்டு.

அதாவது அது ஒரு குடும்பப் பண்டிகை. எங்கெங்கோ இருக்கும் குடும்ப அங்கத்தினர்கள் எல்லோரும் வருடத்திற்கு ஒரு நாளாவது ஒரே இடத்தில் கூடிப் பேசி கடவுளுக்கும் மற்றவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு அமைதிப் பண்டிகை.  இதனால் எல்லா ப்ளைட் டிக்கெட்களும் விற்று தீர்ந்தாகிவிட்டது.  எல்லோரும் லீவில் போய் விடுவார்கள். இனி ஜனவரி வரை ஆபிஸ்களில் ஈ தான்.

0000

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/9lcE6hCDVnw?fs=1&hl=en_US&color1=0x3a3a3a&color2=0x999999"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/9lcE6hCDVnw?fs=1&hl=en_US&color1=0x3a3a3a&color2=0x999999" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>

”I know…its a management school and I must be talking to you about compromises and how to manage. You don’t have to. You don’t have to compromise, you still can make money. I’m a standing proof” சொன்னவர் கமலஹாசன். கேட்டவர்கள் மேனேஜ்மெண்ட் கல்லூரி மாணவர்கள்.

இந்த youtube வீடியோ இன்னமும் ரொம்ப பிரபலமாகவில்லை. சீக்கிரம் ஆகிவிடும். பார்த்துவிடுங்கள்.

0000

2007ம் வருடம் மே மாதம் சியாட்டல்-கொரியா-பம்பாய் மூலம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். சென்னைக்கு அடுத்த விமானம் காலை 6:30க்குதான் என்பதால், ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன்.  எதற்காகவோ தலை தூக்கி பார்த்தபோது,  விமான நிலைய நுழைவாயிலில் ஒருவர் கைகளை அகல விரித்து சிலுவையில் அறையப்படும் இயேசு நாதரைப் போல போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.  செக்யூரிடி செக் செய்யும்போது அவர் கைகளை அகல விரிக்க, ஒரு போலீஸ்காரர் அவரின் மேல் அந்த பாம் டிடக்டரை தேய்த்துக் சோதனை செய்து கொண்டிருந்தார்.

பார்த்துக் கொண்டிருந்த எனக்கு கொஞ்சம் சிரிப்பாய் வந்தது. அவர் யார் என்று கொஞ்சம் யூகித்து விட்டேன். அவரும் செக் முடிந்து மிக மெதுவாக நடந்து எனக்கு ஒரு நான்கு ஸீட் தள்ளி அமர்ந்து எதோ படிக்கலானார்.  அடர்ந்த தாடி, ஜோல்னா போல ஒரு பை, கண்ணாடி, வெட்டாத சற்றே அழக்கடைந்த நகம், வாரப்படாத தலை, தூங்காத கண்கள் ரெண்டு. பி.சி.ஸ்ரீராம்.

ரசிகனான நான் அந்த நான்கு சீட்டுகளை தாண்டி அவரின் அருகே சென்று அமர்ந்து அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு முன் அவர் செக்யூரிடி செக்கின் போது யேசு கிரிஸ்துவாக தோற்றமளித்தை சொன்னவுடன்,  கையை பிடித்து அருகில் அமர்த்திக் கொண்டார்.  அடுத்த இரண்டு மணி நேரமும் தீர்க்கமாகக் கண்களை பார்த்து பேசினார். ரொம்பவே intensiveவாக கவனித்தார். ப்ளைட் கிளம்ப நேரமான போது, ‘டோண்ட் ஒர்ரி நானும் அதே ப்ளைட் தான்” என்றார். எல்லோரும் ப்ளைட் ஏறியவுடன் என்னையும் அழைத்துக் கொண்டு, எதோ மெட்ரோ பஸ் ஏறுகிற லாவகத்துடன்,  ப்ளைட் வாசலுக்கு போனார்.

ப்ளைட்டில் அருகே உட்காரச் சொன்னார். நான் தான், “ சார் இடம் மாத்தி உட்காந்தா…அதோ அந்த ஏர் ஹோஸ்டஸ் கோவிச்சுப்பாங்க” என்று சொல்லி என் இடத்தில் அமர்ந்து விட்டேன். காரணம் அவர் தூங்கி இரண்டு நாட்களாகி விட்டது என்றதுதான்.  அதற்கு முன் அந்த ஏர் ஹோஸ்டஸை கூப்பிட்டு, பேனா வாங்கி, என் டிக்கெட்டின் பின் போன் நம்பரை எழுதித் தந்தார். ”போன் பண்ணுங்க கண்டிப்பா திரும்பவும் மீட் பண்ணலாம்” என்றார். ப்ளைட் இறங்கும் போதும் ஐபாட் கேட்டுக் கொண்டே கர்னாடக ராகம் எதையோ முணுமுணுத்துக் கொண்டு இறங்கினார்.

அவருடன் பேசிக் கொண்டிருந்த அந்த இரண்டு மணி நேரமும் அவரின் தலையைத் தின்று விட்டேன். அக்னி நட்சத்திரம் படத்தை எடுக்கும் போது இருந்த அவரின் மற்றும் மணி ரத்னத்தின் மனநிலையும், நாயகன் பட கடினங்களையும் கேட்க கேட்க கிட்டத்தட்ட ஒரு டூ-வே பேட்டி போல இருந்தது.  சீனி கம் திரைப்படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைக்காக பம்பாய் வந்ததாகச் சொன்னார். இணையம் பற்றி அதிகம் கேட்டார். அதில் ஈடுபட ஆர்வம் காட்டினார். என்னுடைய புகைப்பட ஆர்வத்தைப் பற்றி சொன்னேன். ப்ளிக்கரைப் பற்றியும், குறும்பட எண்ணங்களைப் பற்றியும் பேசினோம். சுவாரசியமாய் இருந்தது. அவருக்கும் இருந்தது என்றார். டிவியில் அவரின் பேட்டியை பார்க்கும் போது பொறுமை இல்லாது போனதுண்டு. நேரடியாகப் பேசியபோது அவர் பேசியபடியே நிறைய யோசிக்கிறார் என்பது புரிந்தது.  சென்னைக்கு வந்தவுடன் குடும்பத்தினரிடம் இந்த விஷயத்தை சொன்ன போது. ““சினிமா கினிமான்னு போய்ட போறான்”  என்று குசேலர் கதை ருக்மணியாகத் தடுத்து விட்டார்கள். கோலிவுட் ஒரு அருமையான கேமராமேனை இழந்தது அன்று தான்.

போன வாரம் அவர் மகள் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த செய்தியை பார்த்து ரொம்பவே வருத்தப்பட்டேன். அந்த நல்ல மனிதருக்கு இந்த தசரத சோகம் அநியாயம்.

– இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.

இன்ன பிற – நாராயண் இருந்த வீடு
போன வார தமிழ் பேப்பரில் வெளியான இன்ன பிற பத்தி.

சியாட்டல் ரொம்பவே பரந்த மனப்பான்மை கொண்ட நகரம். அதைப் போலவே Indie Films  என்னும் தனியார் எடுக்கும் திரைப்படங்களுக்கு இங்கே ஏக ஆர்வம்.  சினிமா ஆர்வம் கொண்ட இந்திய இளைஞ-ஞிகளும் அதிகம். பார்க்கிற ஆர்வம் போக திரைப்படம் எடுப்பதற்கும்.  போன வருடம் இப்படி ஒரு இந்தியக் குழுவை என் நண்பர் எப்படியோ கண்டுபிடித்தார்.  இவர்கள் எல்லாம் வீக்கெண்ட் இரவுகளில் யாராவது ஒரு வீட்டில் தங்கி எதாவது ஒரு ‘நல்ல’  சினிமா பார்த்து,  அதைப் பற்றி விவாதித்துகொண்டிருக்கிறார்கள் என்று என்னையும் வரச் சொன்னார்.

ஓரிரு மாதங்கள் கழித்துப் போனேன். அன்றைக்குப் பார்த்து அந்தக் குழுவில் இருந்த ஒருவர் தேர்ந்தெடுத்திருந்த ‘பனாரஸ்’ என்ற இந்திப் படம் படு போர். படம் முடிந்தவுடன் பயங்கரமாக இந்திய சினிமாவை திட்டும் விவாதம். விவாதத்தின் முடிவில், ‘இவங்கெல்லாம் படமெடுக்கறாங்க,  நாமேகூட ஒரு குறும் படமெடுத்து பார்க்கலாம்’ என்ற ஒரு முடிவு. அங்கிருந்த மற்றொரு பெண், தான் கேள்விப்பட்ட ஒரு நிஜ வாழ்க்கைக் கதையை சொல்ல, எல்லோரும் தம் ஐடியாக்களை சேர்க்க, கதை கிட்டத்தட்ட ரெடி. சற்றே கடினமான கதை. படித்தால் அல்லது பார்த்தால் மட்டுமே புரியக்கூடிய கதை. மற்றவர்கள் சொன்னால் மொத்தக் கதையும் புரிவது கடினம். இருபது நிமிடப் படமாக எடுக்க முடிவு செய்தார்கள்.  விட்டால் ஆச்சு என்று நான் ஒதுங்கிக்கொண்டேன்.

இரண்டு வாரங்களுக்குப் பின் திரைக்கதை ஆசாமி கேமராமேனாக மாறி ஜகா வாங்க, நான் எழுதித் தருவதாக ஒப்புக்கொண்டேன். ஓரிரவு உட்கார்ந்து அந்தக் கதையை கொஞ்சம் மாற்றி திரைக்கதையாக்கி, முதல் பாதியை எழுதிவிட்டேன். மற்றொரு நாள் மறு பாதியும் எழுதிவிட, அந்தக் கடினக் கதை தன்னையே விடுவித்துக்கொண்டு சுலபமாகிப் போய்விட்டது. மொத்தம் 42 பக்கங்கள். திரைப்பட இலக்கணத்தில் ஸ்கிரிப்டின் ஒரு பக்கம் ஒரு நிமிடப் படமாகும் என்பது தியரி. இருபது நிமிடப் படம் என்று ஆரம்பித்து நாற்பது நிமிடத்தில் போய் நிற்பதால் இயக்குநரும், உப-இயக்குநரும், எடிட்டரும் சேர்ந்து அங்கே இங்கே கட் செய்து ஒரு முப்பது பக்கத்துக்குக் கொண்டுவந்தார்கள். ’கார்த்திக்கும் நானும்’ என்னும் அந்தக் குறும்படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி.

அப்புறம் ஒரு முப்பது நாற்பது பேர்களைப் பேசவைத்து, அழவைத்து,  கண்ணடிக்கவைத்து ரெக்கார்ட் செய்து, கேமரா டெஸ்ட் செய்து, கடைசியாக ஹிரோயின்களும் ஹீரோவும் ரெடி. ஆறு மாதங்களாக எல்லோருக்கும் ஒத்துப்போகும் நேரத்தில் ஷூட் செய்கிறார்கள். போன மாதம் கார்த்திக்கும் அந்தப் பெண்ணும் சந்திக்கும் ஒரு பார்க் சீனை ஷூட்டிங் பார்க்கப் போயிருந்தேன். நகரத்தின் நடுவே ஒரு கூட்டமான பார்க்கில் போவோர் வருவோர் பார்க்க ஷூட்டிங். முதலில் ஏகமாகக் காற்றடித்து ஒலிப்பதிவில் மக்கர். அதற்கப்புறம் சூரியன் மறைய ஆரம்பித்துவிட ஒளிப்பதிவில் மக்கர். நடுவே ஹீரோ ஸ்டார்பக்ஸ் காப்பி கேட்க, ஹீரோயினுக்குக் குளிர மட மடவென, ஷூட் செய்து தள்ளி பேக்-அப் சொன்னார்கள்.

க்ளைமாக்ஸ் காட்சியும் ஒரு பார்ட்டி சீனும் மட்டுமே பாக்கி என்று போன வாரம் இயக்குனர் மெயில் அனுப்பியிருந்தார். நடுவே ஹீரோயினாக நடிக்கும் பெண் இந்தியா போய் வந்தார். ஹீரோ இளைஞன் ப்ளோரிடா போய்விட்டார். எடுத்த வரையில் இன்னும் ஃபர்ஸ்ட் கட் ரெடியாகவில்லை. இயக்குநருக்குக் கதை கிட்டத்தட்ட மறந்துவிட்டது. இப்படி, படமெடுக்கும் பிரசவ வலி புரிகிறது.

எப்படியும் இன்னும் ஓரிரு மாதங்களில் வந்துவிடும். எதாவது விழாவுக்கு அனுப்பிவிடுவார்கள். காசு கேட்காமல் யூட்யூபில் போடுவார்கள். சொல்கிறேன்.

oo0000oo

சூர்யா அட்டைப்படம் போட்ட வருட விகடன் தீபாவளி மலர் 2010-த்துக்குப் பணம் செலுத்திவிட்டேன். ஏறுமயிலேறி ஏர்மெயிலில் வந்துகொண்டிருக்கும். நானூறு பக்கங்கள் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். நல்ல வேளை, அதில் எத்தனை கலர் பக்கங்கள் என்றெல்லாம் போடவில்லை.

ரொம்ப வருடங்களுக்குப்பின் போன வருடத்தின் தீபாவளி மலர் பிடித்திருந்தது. எழுத்தாளர்களின் மனைவிகளைக் கதை எழுத வைத்திருந்தார்கள்.  அருளுரை,  சினிமா பேட்டிகள் என்பதை எல்லாம் தாண்டி அதைப்போல ஏதாவது வித்தியாசமாகச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

oo0000oo

மார்கழி மாசம் இந்தியா வந்திருந்தபோது, கிட்டத்தட்ட பதினேழு வருடங்கள் பிறந்து வளர்ந்த புரசைவாக்கத்தில் இருந்த நண்பன் வீட்டுக்குப் போயிருந்தேன். புரசையைத் தெருத் தெருவாகச் சுற்றித் திரிந்திருக்கிறேன்.  ஏகப்பட்ட நண்பர்கள் இருந்தார்கள். இப்போது பம்பாயிலோ, மஸ்கட்டிலோ, வெஸ்ட்மின்ஸ்டரிலோ, மினியாபோலிஸிலோ இருக்கிறார்கள்.  ஆனால் இன்னமும் வெள்ளாளத் தெரு அப்படியே இருக்கிறது.  சில வருடம் கழித்துச் செல்வதால், ரோடு ரொம்பவும் குறுகியதாகத் தோன்றியது. செல்வ வினாயகரும் கங்காதீஸ்வரரும் பிரசித்தமாகியிருக்கிறார்கள். குளங்களைக் காணவில்லை.

மணிகண்டனும் நானும் பைக்கில் கிளம்பி நாங்கள் படித்த பள்ளிக்குப் போனோம். அங்கேயேதான் இருக்கிறானே தவிர அவனும் சில வருடங்கள் கழித்துத்தான் அந்தப் பக்கம் வருவதாகச் சொன்னான். ஸ்கூலின் முன்னாடி பெரிய சுவர் எழுப்பி, உள்ளே இருந்த தூங்குமூஞ்சி மரங்களை வெட்டி, இன்னுமொரு பெரிய கட்டடம் எழுப்பி விளையாட இடமில்லாமல் செய்திருக்கிறார்கள்.  ஒரு போட்டோ எடுக்கச் சொன்னபோது, “ஏதாவது புள்ள புடிக்கறவங்கன்னு நினைக்கப் போறாங்க” என்று கேமராவைக் கையால் மூடினான். சிரித்துக்கொண்டே Aunty shopபில் லெமன் ட்ராப் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டோம்.

வெள்ளாளத் தெருவில் நானிருந்த வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளியிருந்த வீடு பெயர் போனது.  ராசிபுரம் கிருஷ்ணசாமி ஐயர் நாராயண சாமியின் வீடு.  ஆர்.கே. நாராயண் என்றால் ஊர் அறியும். ஆர்ப்பாட்டமில்லாத யதார்த்தக் கதை எழுத்தாளர். சுவாமியும் நண்பர்களும் புத்தகத்தை இன்று படித்தாலும் அவருக்கு நோபல் கொடுக்கப்படாததன் அரசியல் புரியாது. அவரின் My Days புத்தகம் ஒரு ஆட்டோபயோகிரபிகல் மைல்கல். இணையத்தில் கொஞ்சம் தேடினால் சங்கர் நாக் இயக்கிய மால்குடி டேஸை பார்க்கலாம்.  ஜும்பா லஹரி எழுதிய நாரயணின் நாட்களும் படிக்கலாம்.

அவர் வெள்ளாளத் தெருவின் முதல் வீட்டில்தான் வளர்ந்தார். பின்பு மைசூர் போய் எழுத்தாளர் ஆனார். அவரிருந்த வீட்டை சில வருடங்களூக்குமுன் இடித்துக் கட்டினார்கள். தற்போது சரவண பவன் இருக்கிறது.  நான் மணிகண்டனைத் தள்ளிக்கொண்டுபோய் அங்கே காப்பி குடிக்கும்போது, RKN-னை ஒரு மடக்கில் நினைத்துக்கொண்டேன்.

oo0000oo

க்ரந்தா(Granta) என்னும் இலக்கிய காலாண்டிதழின் சென்ற பதிப்பு செக்ஸ் ஸ்பெஷல். அதனால் இந்த மாதிரி ஒரு பர்ஸின் போட்டோவைப் போட்டு (பர்ஸ் மட்டும் தெரிந்தால் இதற்குமேல் படிக்காதீர்கள்), பிரபல எழுத்தாளர்களை செக்ஸைச் சுற்றி நடக்கும் கதைகளை எழுதவைத்திருக்கிறார்கள்.  இதிலிருக்கும் மூன்று கதைகளை வைத்துக் குறும்படங்கள்கூட எடுத்துவிட்டிருக்கிறார்கள்.

ராபர்ட் பொலானோ எழுதிய “The RedHead”  என்னும் கதை பதினெட்டு வயதுப் பெண்ணுக்கும் ஒரு போதை மருந்து ஒழிப்பு போலீஸ் ஆபிசருக்கும் இடையே நடக்கும் ரொம்பவே தொந்தரவு செய்யக்கூடிய கதை. இதைப்போல தமிழில் கதைகள், எழுத்தாளரின் உயிருக்கு உத்தரவாதத்தோடு, காலச்சுவடிலோ, உயிர்மையிலோ வருவதெப்போது?

oo0000oo

சிகாகோ அட்டாமிக் விஞ்ஞானிகளின் குழு ஒன்று 1947-ல் The Doomsday Clock  என்னும் ஒரு கடிகாரத்தை அமைத்தார்கள். அதாவது உலகம் நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு அழியப்போகிறது என்று வைத்துக் கொண்டால் இப்போது மணி என்ன என்று நியமிக்கும் குழு இவர்கள்.  கடிகாரம் ஒரு குறியீடுதான்.  உலகில் தற்போது நடக்கும் சாதக பாதக நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு அதற்கேற்றாற்போல இந்தக் கடிகாரத்தின் முட்களை நகர்த்தி வைக்கிறார்கள்.  உலக அமைதி, இயற்கை அழிவுகள் எனச் சில பிரபல நிகழ்ச்சிகள்தான் இதை தீர்மானிக்கின்றன.

1947-ல் 11:53 pm என்று ஆரம்பித்தார்கள். அதற்குப் பின் இந்தக் கடிகாரம் முன்னும் பின்னும் போய் வந்து கொண்டிருக்கிறது.  1949-ல் ரஷ்யா அணுகுண்டு தயார் செய்தபோது மணி 11:57-க்கு நகர்த்திவைக்கப்பட்டது. 1953-ல் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் பகை உச்சியில் இருந்தபோது 11:58 க்கு போய்விட்டு 1991-ல் 11:43 என்று அமைதியாகியது. கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி இந்த வருடம் நடந்த அணுகுண்டு ஒப்பந்தத்தினால் 11:54 என்று இறங்கியிருக்கிறது.  இதற்கு மற்றொரு காரணம் எந்திரன் ரிலீஸ் என்றும் சொல்கிறார்கள். நம்பலாம்.

oo0000oo

இன்ன பிற – ஆயிரம் முகம் கொண்ட நாயகன்
போன வாரம் தமிழ் பேப்பரில் வெளியான இன்ன பிற தொடர்.

கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு முன்னால் ஜோசப் காம்ப்பெல் எழுதிய ‘A hero with thousand faces’ என்னும் புத்தகத்தில் நாமறிந்த நாயகனைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார். பல கலாசாரங்களையும் மதங்களையும்,  அவை சொல்லும் ஆயிரமாயிரம் மரபுக்கதைகளையும் படித்து எல்லா நாயகர்களுக்கும் ஓர் ஒற்றுமை இருப்பதைக் கண்டார். அதை வைத்து ஒரு ஹீரோவின் இலக்கணத்தை எழுதி விட்டார். அதாவது எல்லா நாயகர்களுக்கும் if-else கண்டிஷன், for loop உட்பட ஓர் அல்காரிதம் இருக்கிறது. இந்திரன் சந்திரனிலிருந்து எந்திரன் வரை இதே இலக்கணம்தான், ஆங்காங்கே சில இடைவெளியும் சில தாவல்களும் மட்டும்தான் வித்தியாசம். இந்த இலக்கணத்தை ஒற்றைப் புராணம் (mono myth) என்றழைத்தார்.

அதாவது ஒரு நாயகனின் பயணத்தில் சில மைல்கல்கள் உள்ளன. டுவிட்டர் வேகத்தில் சொன்னால் – ஒரு நாயகன் சாமானிய உலகத்திலிருந்து இயல்பை கடந்த ஆச்சரியங்கள் நிறைந்த உலகத்தில் நுழைகிறான். அங்கே அற்புத ஆற்றல்கள் வெளிப்பட்டு ஒரு முடிவான வெற்றி வெல்லப்படுகிறது. நாயகன் அந்த மாய உலகத்திலிருந்து மீண்டு தன் சகமனிதனுக்கு வரமளிக்கும் சக்தி கொண்டவனாகிறான். கிருஷ்ணர், புத்தர், கிறிஸ்து என்று எல்லாருடைய கதைகளும் இதில் அடக்கம். இந்த  ஒற்றைப்புராணத் தியரியை அடிப்படையாகக் கொண்டு பல புத்தகங்களும் படங்களும்  வெளிவந்தன, வந்துக்கொண்டிருக்கின்றன. ஸ்டார்வார்ஸ்  ஜார்ஜ் லூகாஸிலிருந்து ஹாரி பாட்டர் ஜேகே ரவுலிங் வரை இதுதான் இன்ஸ்பிரேஷன்.

காம்ப்பெல் ஒரு கப்பல் பயணத்தில் நம் அடையாறு கிருஷ்ணமூர்த்தியை (ஜேகே) சந்தித்தார்.  ஜேகே அவருக்கு இந்திய கலாசாரத்தையும் அதன் தத்துவ ஞான மரபையும் விவரிக்க அதில்  ரொம்பவே சொக்கிப்போய் கத்தோலிக்கராய் இருப்பதைத் துறந்தார். அவர் இறக்கும் வரை ஹிந்து மற்றும் இந்தியத் தத்துவத்தின் மேலும் ரொம்பவும் ஆர்வமாயிருந்தார். காம்பெல்லின் இந்த நாயக ஆராய்ச்சிக்கு ஜேகே மிக முக்கியக் காரணம்.

இந்தப் புத்தகத்தில் காம்ப்பெல் சொல்ல வருவது எப்பொழுது புராணத்தில் இருக்கும் கவித்தன்மையை கேள்வி கேட்க ஆரம்பிகிறோமோ அப்போது அந்த புராணம் மறித்துப் போகிறது. கிருஷ்ணன் ‘அஸ்வத்தாமா அத குஞ்சரஹ’ சொல்லச் சொன்னது சரியா, கிறிஸ்து தண்ணீரில் நடந்தாரா என்று கேட்கும்போதே அவர் மூழ்கிவிடுகிறார். ரஜினிவிஜயஷாருக்கமிதாப ஹீரோக்களும் அவர்கள் செய்யும் வீரதீர செயல்களையும்  கேள்வி கேட்பதாகாதென இதனால் அறிக.

OOO

சொக்கன் எழுதிய ரஹ்மான் – ஜெய்ஹோ புத்தகத்தை வீட்டின் எல்லா அறைகளிலும் கொஞ்சமாக படித்து முடித்தேன். முடித்த இடம் குளியலறை. 90களில் ரஹ்மான் இசை வர ஆரம்பித்ததிலிருந்து அவரைப் பற்றி நிறைய அறிந்திருந்ததால், இந்தப் புத்தகம் ஒரு வாக் டவுன் த மெமரி லேன் போலத் தோன்றியதில் ஆச்சரியமில்லை. திலீப் என்ற அந்தச் சிறுவன்  ரஹ்மானாகிய புராணம்தான் புதிதாயிருந்தது. இத்தனை தகவல்கள் இருக்கும் புத்தகத்தில்  ஒரே ஒரு தகவல் பிழையைத்தான் தேற்ற முடிந்தது, அதுவும் இப்போது மறந்து விட்டது. இதற்காக சொக்கனுக்கு ஷொட்டு.

இம்மாதிரி வேகமாய் நகரும் பயோகிராபிகள் அ-புனைவுகள் எழுதுவது ஒரு கலை. அதுவும் பயோகிராபிகளுக்கு மெனக்கெடல்கள் பல. மனைவி வீட்டில் இல்லாத ஒரு நாளில், சுஜாதாவின் வாழ்க்கைக் குறிப்பை எழுதுகிறேன் பேர்வழி என்று வீடெல்லாம் அவர் புத்தகங்களைப் புரட்டிப் போட்டு, அது ஒரு பக்கம், ஃபாஸ்ட் ஃபுட் டப்பாக்கள் ஒரு பக்கம் என அந்த புத்தகங்களிலிருந்து ஒரு இரண்டு பக்க குறிப்பெழுதுவதற்குள் முழி பிதுங்கி விட்டது. அதை சுஜாதா படித்து விட்டு, “ஓகே… அங்கங்க கொஞ்சம் தப்பு இருக்கு” என்று சொன்னதாக ஒரு சமயம் தேசிகன் சொன்னார்.

OOO

டால்பின் தண்ணீரில் குதிப்பதைக் கவனித்ததுண்டா? முதல் முறை மேலெழுந்து குதித்து தண்ணீருக்குள் மூழ்கி ஓரிரு வினாடிகள் கழித்து சற்றே மேலே தலைகாட்டி மீண்டும் தண்ணீருக்குள் மூழ்கும். இதற்கும் அமெரிக்க பொருளாதாரத்திற்கும் என்ன சம்பந்தம். அதுவும் டால்பினைப்போல மேலெழுந்து ரிசஷனாகி திரும்பவும் மேலே வருகிற போது ரிசஷனாவதுதான். இதைத்தான்  டபுள் டிப் என்று கடந்த இரு மாதங்களாக இடஞ்சுட்டிப் பொருள் விளக்கமளிக்கிறார்கள்.

ரிசஷன் போனாலும் வந்தாலும் கவலைப்படாமல் சூரியன் போய் குளிர் வர ஆரம்பித்தாயிற்று. இனி மூன்று மாதங்களுக்கு வீடு வாங்குவோர் யாரும் இலர். மால்களில் கைப்பிடித்து கோக் குடித்துக் கொண்டிருப்பார்கள் அல்லது 60 இஞ்ச் பிரகாசத்தில் தன்னை மறத்தல் மட்டுமே. எல்லா சீரியல்களும் இலையுதிர்காலத்திற்கு ரெடி. ஆறு ஆண்டுகளாக வெளிவந்து சக்கைபோடு (தமிழ்-தினசரித் தமிழ்) போட்டுக்கொண்டிருக்கும் டெஸ்பரேட் அவுஸ்வொய்ப்ஸ் என்னும் சீரியலை கொண்டு செய்வதரியாது டைரக்டர் முழிப்பது தெரிகிறது. ஒரு காலனியில் இருக்கும் 5-6 பெண்மணிகளின் சுவாரசிய வாழ்க்கைதான் கதை. இப்படிப் போய்க் கொண்டிருந்தது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு டைரக்டர் ஆர்வமிழந்து,  அடுத்த வீட்டுக் கணவனையும் பையனையும் பெண்ணையும் மற்ற வீட்டுக்காரர்கள் துரத்துவதும், ஆபிஸ் போகிறேன் பேர்வழி என்று பக்கத்து வீடுகளில் கெட்ட காரியம் பண்ணவைத்து  மீதிக் கதையை பூசி மொழுகிறார். இதைப் போல நம்மூர் மெகாசீரியல் வகையறாக்கள் ‘சுவாரசியமாய்’ போய்விடும் அபாயமுண்டு.

OOO

“We were discussing string theory and its infinite possibilities on human existence till 3 am while listening to Miles Davis but now it’s time for Rajini” என்று சிலர் ஜெர்க் விடுவதை காது கொடுத்து கேட்டீர்களா?

சமீபமாக  ரஜினி பற்றிய ஒரு செயற்கைக் கவர்ச்சி பரவி வருவதைப் பார்க்க முடிகிறது. அதாவது என்னதான் தான் இண்டலெக்சுவலாக இருந்தாலும் என்னுடைய ரிலாக்சேஷன் ரஜினிதான் என்கிறார்கள். ஒரு காலத்தில் ரஜினியின் படங்களை விழுந்தடித்துக் கொண்டு பார்த்தவன் என்ற முறையில் இதிலுள்ள மயக்கம் புரிகிறது. ஓப்பன் மேகஸினில் மனு ஜோசப் எழுதியுள்ள The Revenge of Rajinikanth கட்டுரையில் சில விஷயங்களில் உண்மையிருக்கின்றன.

இத்தனை சொல்லிவிட்டு அந்த ஹூமனாய்டைப் பற்றிச் சொல்ல விட்டுவிட்டால் எப்படி. இன்றைக்கு எந்திரன் பார்க்கப் போயிருந்த போது, ரஜினியின் எட்டடி கட்-அவுட்டும், மாலையும், activation date: 10:01:10 என்று ப்ரிண்ட் செய்யப்பட்ட எந்திரன் டீஷர்ட்டையும் பார்க்க முடிந்தது. கட்-அவுட்டின் கீழ் உபயதாரரின் பெயரும் அச்சிடப்பட்டிருந்தது என்பது உப தகவல். அதன் அருகில் நின்று கொண்டு ஃபோட்டோ எடுத்துக் கொண்ட அனைவரும் உடனடியாக ஃபேஸ்புக்கிற்கு அப்லோட் செய்தது வம்புத் தகவல்.

கதையில் ஆங்காங்குதான் சுஜாதா தெரிகிறார் என்று எழுதியவர்களுக்கு – எனக்குத் தெரிந்து படம் முழுக்க வியாபித்திருக்கிறார். தலை நிறைய சடாமுடியுடன் முடிவெட்ட வரும் ரஜினியிடம், “என்ன சார் ஐயப்பாவா?” என்று கேட்கும் நாவிதனிடம், “வேலைப்பா” என்பதும், ராகம் திருத்தும் ரோபோவும், கொசு ரங்குஸ்கியிலும், “என்னங்க இது போரிட வாங்கன்னா பொயட்டரி சொல்லுது இந்த ரோபோ” என்று சொல்லும் ஆர்மி ஆபிஸர் வரை சுஜாதாலஜி. இந்த சமுதாயத்தில் ஒரு மனித ரோபோ இருந்தால் எப்படி என்ற கேள்விக்கு முதல் பாதியில் க்ரியேடிவாக பதில் சொல்லுகிறார் ஷங்கர். அவ்வை சண்முகியில் கமல்-ரவிகுமார் செய்யாமல் விட்ட க்ரியேடிவ் விஷயங்களைப் போல், இந்த சந்தர்ப்பத்தைத் தவறவிடாத ஷங்கர் கெட்டிக்காரர். இதே போல் தியேட்டருக்கு பணம் கொடுத்து வந்து என்னை சுவாரசியப்படுத்து, அழவை, சிரிக்கவை, பிரமிக்கவை என்று சொல்லும் பார்வையாளனை ஏமாற்றாமல் யதார்த்தம், அ-யதார்த்தம், காதல், ரசனை என்று சரியான கலவைச் சமன்பாட்டைத் தன்வசப்படுத்தி விட்டார். ஆனால் இரண்டாம் பாதி ரொம்பவே இரைச்சல்.  குழந்தைகளெல்லாம் அழ ஆரம்பித்து வெளியே போன தந்தையர்கள் வரும் முன் முடிந்து போனது அரிமா அரிமா.

மக்களுக்கு பிடித்துப்போன  ஒரு கதாபாத்திரம் பின்பாதியில் மாறிப்போய், கிட்டத்தட்ட காணாமல் போய் கடைசியில் மீண்டும் வருவதும், அதன்பின் வரும் க்ளைமாக்ஸில் அதை எமோஷனலாகப் பயன்படுத்த முயல்வதும் திரைக்கதை கவனக்குறை. டாட்.

வழக்கம் போல்
ஒவ்வொரு முறையும் இந்த பகுதியில் நிறைய எழுத வேண்டும் என்பது போல் இந்த முறை நினைக்கவில்லை. அதைவிட அதிகமாக. நாள்தோறும் ஐந்து நிமிடத்திற்கு எதாவது தவறாமல் எழுதுவது என்று சென்னையில் இருந்து திரும்பும் போது நினைத்துக் கொண்டேன். சியாட்டல் வந்தவுடன் வழக்கம் போல் வேலை வீடு சினிமா புத்தகம் என்று நேரம் ஓடிவிட அவ்வப்போது கிறுக்கிய சில சிறுசிறு கதைகளைத் தவிர வேறொன்றையும் கிழித்துவிடவில்லை.

மார்கழிச் சென்னை சுகமாயிருந்தது. நண்பர்கள், குடும்பம், கொஞ்சம் கச்சேரி இசை, நிறைய புத்தகங்கள், பலப்பல புது அனுபவங்கள் என்று நாற்பது நாட்கள் ஓடிவிட்டன. கேரளாவில் ஆளப்புழா கோட்டயம் என கொஞ்சம் சுற்றினேன். கோவையை எட்டிப் பார்த்தேன். வாழ்வின் ஒரு மிக முக்கியமான அனுபவம் கிடைத்தது. தி.நகரை காலால் சுற்றி வந்தேன். சென்னை ரொம்பவே மாறியிருந்தது என்று க்ளீஷேவாக ஆரம்பித்து எழுதலாம் என்றிருக்கிறேன்.

உங்களைப் பற்றி வெளியே சொல்ல கொஞ்சம் தயங்கும் மூன்று விஷயங்கள் நினைத்துக் கொள்ளவும் என்று எழுதியபடி யாரோ ஒரு பிரகஸ்பதி எழுதிய ஸ்பாம் மெயில் கிடைத்தது.  ரொம்ப நாள் காணாமல் போய் திரும்பி எழுத வரும் போது, இம்மாதிரியான் ஐஸ் ப்ரேக்கர்கள் உதவலாம். ஆகவே, ஒன்று – காலையில் என்னதான் நேரம் இல்லாமல் இருந்தாலும் ஷவரில் நுழைந்து விட்டால் நேரம் பற்றிய ப்ரக்ஞை போய் விடுகிறது. பாத்ரூமில் கொட்டும் தண்ணீரை யோசிக்க ஆரம்பித்து எதாவது ப்ரைம் நம்பர் கணக்கிலோ புதுமைப்பித்தன் கதை முடிவிலோ போய் நிற்கிறது. இங்கே எழுதப்பட்ட கதை கூட அங்கே தான் தோன்றியது. இரண்டு – ஹாலிவுட்டில் ஹாலிடே படங்கள் என்று ஒரு ஜானர் உண்டு. அதாவது கிறிஸ்துமஸ் சமயத்தில் நடக்கும் குடும்ப, ரொமாண்டிக் அல்லது காமெடிக் கதைகள். மற்ற சுமார்ப் படங்களை தாங்க முடியாத எனக்கு இப்படங்கள் பிடிக்கின்றன. இன்று கூட ’இட்ஸ் ஆல் அபவுட் ஹாலிடேஸ்’ என்ற ரொம்பவே போர் படத்தையும் பார்த்து முடித்துவிட்டேன்.  ஒரே பண்டிகையை வைத்து இத்தனை கதைகளா? மூன்று – சட்டென ஏதும் தோன்றாததால்…பின்னர்.