subbudu.com » பயாஸ்கோப்

Missing the appetite
I’m not a targeted viewer for the Hunger Games movie. Yet I decided to watch it on the opening weekend and it was as expected, not very interesting. Having read a couple of similar game-of-death books and even watched a very comparable movie back in the day, to me, hunger games is a missed opportunity. It is very obvious that the producers decided to reduce a violent hungry movie into a PG 13 to laugh their way to the bank and it seems like ‘the odds are ever in their favor’. In that process they killed the possibility to make it into a spine-chilling thriller.

Here is how the screenwriter’s palette looked like – a dystopian post-apocalyptic world, an emotional family sub-plot, worker class revolution, gothic political rulers, game-of-death, a forest where every inch is monitored through video cameras and ofcouse designed-on-demand AutoCAD wild animals. The movie’s payback does not match the build-up to it. Mel Gibson would have aced through a story like this, just like how he managed to pull-off an apocalypto.

I was actually bought into the movie during the first 20 minutes and then as they delayed and delayed the start of the game, it seemed to me like they were going in for a kill but what do I know, just read the first line of the post again.

Enthiran – An Impressive Dry Run
[ Image: Vikatan]

Shankar talks about the Enthiran that could have been and shares a sneak peak here in Vikatan.

வெற்றிமாறனும் விஷால் பரத்வாஜும்
தற்போதெல்லாம் வெள்ளியன்று படம் வெளிவந்து எல்லா தியேட்டர்களையும் நிறைத்துக் கொள்ள தமிழுலகம் சனி, ஞாயிறுக்குள் பார்த்துவிட சினிமா விமர்சனம் என்ற வஸ்து தேவையில்லை என்றே தோன்றுகிறது. அதனால் விகடன் உட்பட எல்லா வாராந்திரிகளும் ஒரே நேரத்தில் மூன்று நான்கு படங்களுக்கு விமர்சனம் எழுதிவிடுகின்றன. படம் பார்க்க விமர்சனம் படித்ததெல்லாம் போய், படம் பார்த்து வந்து பொறுமையிருந்தால் பிறகு படிக்கிறார்கள் இல்லையென்றால் டுவிட்டரில் 140க்குள் எதையாவது எழுதி வைத்த பின் மறந்து போய் விடுகிறார்கள்.

இங்கே அமெரிக்காவின் கடைக்கோடியிலோ நிலைமை வேறு மாதிரி. இந்தப் படம் ஹிட்டைத் தவிர வேறொன்றும் ஆகாது என்ற காரெண்டி உள்ள படங்களை மட்டும் யாராவது எடுத்து தியேட்டரில் போட்டு விடுவார்கள். அதில் கூட அவ்வப்போது உத்தமபுத்திர தப்புக்கள் நடப்பதுண்டு. சில சமயம் இதற்கு ஏதிர்ப்பதமாக – ஆயிரத்தில் ஒருவன் படம் ஒரு சனிக்கிழமையன்று ஒரே ஒரு ஷோ திரையிடப்பட்டது. அந்த மாதிரி ஒரு பிரமாதமான படத்தை நானும் பதினெட்டு பேரும் பார்த்துக் கொண்டு இருந்தோம்.

இந்தியாவில் இப்படி பல முறை தனியாக படம் பார்த்த அனுபவம் உண்டு. ஹே ராமின் முதல் நாள் மாலைக் காட்சிக்கு ஆபிஸில் சொல்லிவிட்டு போனேன். தேவியில் பாண்டு வாத்திய பேரிசை, ரசிக கண்மணிகளின் சரம், ஆங்காங்கே ”பத்து-நுப்பது பத்து-நுப்பது வாய்ங்க்கோ வாய்ங்க்கோ” ப்ளாக் டிக்கெட் ஆசாமிகளை கடந்து உள்ளே போனால் கமல் எதோ ஜட்கா வண்டியில் பவனி வந்து கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். படம் பார்த்து சிலாகித்துப் போய் ஒரிரு வாரங்களுக்கு பின் நண்பர்களை பேசி சமாளித்து  ஹேராம் பார்க்க கூட்டி வந்தேன். தேவி பாரடைஸ் தியேட்டரின் உள்ளே இருபத்தைந்து பேர், இருக்கிற மின்விசிறிகளை எண்ணிக் கொண்டிருந்தார்கள்.  இதே போல் உட்லாண்ட்ஸில் இருவர் படம் ரிலீஸ் ஆகிய மூன்று வாரங்களுக்கு பின் கல்லூரி நண்பர்களை கூட்டிப் போனேன். அடிக்காத குறை. எண்ணிப் பார்த்தால் கூட என்னையும் சேர்த்து முப்பது பேர். கூட்டம் இல்லாததால் படம் பார்த்துக் கொண்டிருந்த போது குளிர் அதிகமாகி பத்து டிக்கெட்டுகள் ஜகா. என் நண்பர்கள் ஆளுக்கு ஒரு மூலையாக தூங்கி போய்விட நான் ரசித்துக் கொண்டிருந்தேன்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மட்டும் பத்து இருபது நாட்களுக்கு படம் ஓடும். மற்ற ஊர்களில், அதாவது இந்த மாதிரி வடமேற்கு மூலையில் இருக்கும் சியாட்டலில் ஒரு ஷோ, மிஞ்சிப் போனால் நாலு ஷோ. அதுவும் இந்தியாவில் வந்த இரண்டு மூன்று வாரம் கழித்தே வரும். நான் பார்த்து விமர்சனம் எழுதுவதற்குள் அதைப் பற்றிய சுவாரசியம் குறைந்து போய்விடுகிறது. இதில் ஒரு நல்ல விஷயமும் அடக்கம், படம் வந்த முதல் நாளே கதையை விமர்சனத்தில் கோடிட்டு கூட காட்ட முடியாது. ஆனால் எல்லோரும் படம் பார்த்த பின்னர் விரிவாக உட்கார்ந்து அலசி ஆராயலாம். இதற்கேற்ற ஒரு சூழ்நிலை வேண்டும். அதுவும் தமிழில் ஆரோக்கியமாக இல்லையோ என்றே தோன்றுகிறது.

திரும்பவும் அமெரிக்காவுக்கு வரலாம். ஆக, இப்படி தியேட்டரில் வராத படங்களின் டிவிடி வந்தால் தான் படம் பார்க்க முடியும். படம் இந்தியாவில் வெளியான ஒரிரு வாரங்கள் கழித்து, ஸ்ருதிலயம் என்னும் ஒரு கம்பெனியின் டிவிடி வெளிவரும். அது அடாசு ப்ரிண்டாக இருக்க வாய்ப்புண்டு. அதற்கு பிறகு இரண்டு மாதங்கள் கழித்து லோட்டஸ் என்ற கம்பெனியின் பிரகாசமான டிவிடி வெளிவரும். இது எந்த அளவுக்கு ஒரிஜனல் டிவிடி என்ற கேள்விகளெல்லாம் இங்கே இல்லை. அமெரிக்காவில் இருக்கும் இந்தியக் கடைகளில் டிவிடி, அதை உரசிப் பார்க்காமல் வாங்கி வந்து பார்த்து விடுவார்கள் அமெரிக்க தமிழர்கள்.

0000

So we’ll live, And pray, and sing, and tell old tales, and laugh at gilded butterflies என்று ஷேக்ஸ்பியரின் கிங் லியர் சொல்லுவதாய் இருக்கும் வரிகளைப் போன்ற ஒரு கடைசிக் கவிதை முடிவு, ஆடுகளத்தில். கதாநாயகன் தன் காதலியுடன் ஒரு வழியாக தப்பித்து லாரியேறி ஊரை விட்டு போகும் காட்சியில் தெரிவது தான் வெற்றிமாறனின் வெற்றி. Everything gone wrong  கதை. அதில் கடைசியில் யாருமே ஒன்றுமே செய்ய முடியாது என்ற பட்சத்தில் தப்பிப்பதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவு, ரியலிஸ்டிக். ஆனாலும் கடைசிக் காட்சியில் அந்த லாரி கண்ணை விட்டு மறைந்து போக ஆலம் விழுதெல்லாம் தெரிகிறது. ஒருவேளை டைரக்டரின் டச்சோ என்னவோ?

ஆ.களத்தை பற்றி பேசுவதற்கு முன், கிங் லியரை ஷேக்ஸ்பியரின் மிகத் திறமையான படைப்பு என்று கிட்டத்தட்ட எல்லோரும் ஒத்துக் கொண்டு விட்டார்கள். அந்த மாதிரி ஒரு ட்ராஜெடி முடிவை, பதினேழாம் நூற்றாண்டில் எதிர்கொள்வதற்கு கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்திருக்கும்.  இன்னமும் எல்லா பெரிய நடிகர்களும் ஒரு முறையாவது கிங்லியராக நடிக்கும் வாய்ப்பிற்கு தவமிருக்கிறார்கள். தமிழில் கூட சமீபத்தில் அசல் என்ற படத்தில் கிங்லியரை கொஞ்சம் உல்டா அடித்திருந்தார்கள். கி.லியரில் அவருக்கு மூன்று பெண்கள், இங்கே ஆண்பிள்ளைகள். கடைப் பெண் கார்டெலியாவாக இங்கே அஜித் குமார். அசல் அசலல்ல.

ஆடுகளத்தின் கதை, ஏற்கனவே பல முறை சொல்லப்பட்ட துரோகக் கதை. ஆனால் துரோகத்தின் சாத்தியக்கூறுகள் பலப்பல. எத்தனை முறை இப்படியான கதையைப் பார்த்தாலும்/படித்தாலும் ஒரு திடுக்கிடல் வரத்தான் செய்கிறது. அந்த பெரிய மனிதரை(!) துரோக உணர்ச்சி ஆக்கிரமிப்பதை, காமிரா சற்றும் விலகாது படம் பிடிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக சகுனி சூழ்ச்சிகள் நடைப்பெற இனி யார் நினைத்தாலும் தடுக்க முடியாத படி துரோகம் அறுவாளைத் தூக்கிக் கொண்டு அலைய, சீட்டு நுனி லயிப்பிற்கு குறைவில்லை. தனுஷும் அவர் கூட வரும் ’சாவல்’ பார்ட்டியும் நகமும் சதையும், கடைசியில் ரத்தமும் கொண்ட மனிதர்களாக வலம் வருகிறார்கள். உதாரணத்திற்கு தனுஷின் அம்மா, பேட்டைக்காரனின் மனைவி என பல ரியல்-லைப் காரெக்டர்கள்.

வெற்றி மாறனின் இரண்டாவது படமும் அவரின் முதல் படத்தைப் போலவே இருக்கிறது. படத்தின் முக்கிய பகுதி ஓரிரவில் நடக்கிறது, கதையின் கடைசியை முன்னமே கொஞ்சம் காட்டி விடுகிறார், பின்பு கதை ப்ளாஷ்பேக்கில் போகிறது, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கு வருகிறது. இம்மாதிரியாக நான்-லீனியராக கதை சொல்வதில் சில நன்மை/தீமைகள் இருக்கின்றன. இந்த இரண்டு படங்களிலும் நல்ல வேலையாக இது சம்பந்தப்பட்ட குறை தெரியவில்லை.  படத்தில் அந்தக் காதல் தேவையேயில்லை என்று தோன்றினாலும் அதில்லாமல் கல்லா கட்டுவது கடினம்.கடைசியாக டைட்டிலில் இந்தப் படம் எடுக்க உதவிய படங்கள் லிஸ்டில் தேவர் மகன் விருமாண்டி Babel எல்லாம் இருக்கிறது. புத்தகங்களில் கிரிகோரி ராபர்ட்ஸின் Shanthaaram  மற்றும் Roots தென்படுகின்றன. இலக்கியம் படிப்பதன் அவசியம் ஆங்காங்கே படத்தில் தெரிகிறது.

“நீ இந்தப் பையன லவ் பண்றியா இல்ல அவனையா?” என்று கதாநாயகியை கேள்வி கேட்கும் போது இசைக்கும் அந்த ஜில்லிடும் தீம் மியூஸிக் பிரமாதம். ஜி.வி பிரகாஷ் எங்கிருந்து இன்ஸ்பயர் ஆனார் என்று சொல்லியிருக்கலாம். ஒத்த சொல்லால பாடல் எல்லோரையும் சகட்டு மேனிக்கு ஆட வைத்திருக்கிறது. கதர் ஜிப்பா ஜோல்னாப்பை வகையராவுக்கு பிடித்த மாதிரியும் டப்பா கட்டு கட்டும் லுங்கி மாம்ஸ்களுக்கும் பிடித்த மாதிரியும் படமெடுக்கும் வெற்றிமாறனுக்கும் விஷால் பரத்வாஜுக்கும் வித்தியாசம் அதிகமில்லை.

- இன்ன பிற பத்தி – March 8, 2011

இன்னொரு தல்
அமெரிக்காவில் பணம் கொழிக்கும் பல விஷயங்களில் ஒன்று Parenting.  சாப்பிடுதல், தூங்குதல் போல இதுவும் ஒரு தல், குழந்தை வளர்த்தல். ஓயாது செய்யவேண்டியதாக மார்க்கெட்டிங் செய்யப்பட்டு ஏராளமான பெற்றோர்களின் இருதயத்திற்குப் பங்கம் விளைவிக்கும் விஷயம். இந்தியாவிலும் இது ஒரு ஸ்ட்ரெஸ் மிகுந்த விஷயமானதுதான் சோகமே.

நாற்பது ஆண்டுகளுக்குமுன் உலகெங்கும் பெற்றோர்கள் இருந்தார்கள், குழந்தைகள் இருந்தார்கள், பெற்றார்கள், வளர்ந்தன, சனிக்கிழமைகளில் கடை-கண்ணிக்குப் போய் வந்தார்கள், பந்து தூக்கி எறிந்தார்கள், மூக்கைச் சிந்திவிட்டார்கள், சண்டை போட்டார்கள், பாடம் சொல்லித் தந்தார்கள், கடுக்கண் இட்டார்கள், மணந்துகொண்டு சென்றார்கள்.  1960களுக்குப் பின்னர் பெண்களும் வேலைக்கு போவது அதிகரிக்தபோது குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் கடமையை இரு பெற்றோர்களும் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட அங்கிருந்துதான் ஆரம்பித்தது வினை.

மார்க்கெட்டிங் ஆசாமிகளுக்கும் குழந்தை டாக்டர்களுக்கும் சாக்குக் கிடைத்து, குழந்தை வளர்த்தல் என்ற விஷயம் ’பிறந்தது’. பின்னர் ஏராளமான புத்தகங்களும், ட்ரைனிங் க்ளாஸ்களும் தோன்றி,  தேவையில்லாததை வாங்கவைத்து, நீச்சல், கிடார், கராட்டே,பந்து எறிதல், நண்டு பொரித்தல் என்று எல்லா க்ளாஸ்களிலும் பிள்ளைகளைச் சேர்த்து, அதற்குமேல் மற்ற நேரமெல்லாம் பாடங்களைத் திணித்து, குழந்தைகளும் பெற்றோர்களும் ஒருவிதமான செயற்கை உறவில் திளைத்து,  பதினெட்டுக்குப்பிறகு விட்டால் போதுமென மற்றொருவரிடமிருந்து ஓடி ஒளிகிறார்கள்.

இதை இப்போது மாற்றமுடியாது, இது ஒரு sociological phenomenon.  ஆனால் குழந்தை வளர்ப்பில் வரும் மனச் சோர்வைக் குறைக்கலாம் என்றே நினைக்கிறேன்.  பொறுப்பில்லாத பெற்றோரும் ஆர்வக்கோளாறுப் பெற்றோரும் எல்லாக் காலங்களிலும் இருந்திருக்கிறார்கள்.  இவர்களுக்கு நடுவே இயல்பாக இருப்பதற்கு ஸ்வீட்ஸ்பாட் ஒன்று இருக்கவேண்டும். கண்டுபிடித்தால் சொல்லுங்கள்.

0000

ஆஸ்திரேலிய ஓபனில் ஆண்கள் இறுதிப் போட்டி பிசுபிசுத்துப் போக, பெண்களின் பைனல்ஸ் கொஞ்சம் நகம் கடிக்கவைத்தது.பெரிய ஆள்கள் எல்லாம் தோற்றுப் போய், ஆசியாவிலிருந்து முதன்முறையாகக் கடைசிப் போட்டிக்கு வந்திருந்த லி நாவும், காணாமல் போய் மீண்டும் திரும்பி வந்திருந்த கிம் கிளிஸ்டர்ஸும் அசத்தினார்கள். முதல் செட்டில் தோற்றுப் போய் இரண்டாம் செட்டில் லூப் ஷாட்டெல்லாம் அடித்து விளையாடிய கிம் கிளிஸ்டர்ஸ் சைனாவின் கனவை இன்னும் ஒரு நான்கைந்து மாதங்களுக்குத் தள்ளிப் போட்டார். தோற்றுவிடப்போகிறோம் என்று தெரிந்தவுடன் ரசிகர்கள் கத்துகிறார்கள் என்றெல்லாம் புகார் செய்த லி நா நெருக்கடிக்கு ஆள்பட்டது தெளிவாகத் தெரிந்தது.

ஆனாலும் லி நா இரண்டாம் பரிசை வாங்கியபோது ரொம்பவும் இயல்பாகச் சிரித்து பேசிக் கொண்டே இருந்தவர், “That guy in yellow t-shirt, he is my husband, I tell him, whether you are fat or skinny, handsome or ugly, I will always follow you, I always love you” என்று எல்லோர் மனத்தையும் கவர்ந்து சென்றார்.

0000

தமிழ் சினிமாமட்டுமில்லை, சினிமாப் பாட்டும் பல கோடிகள் கொழிக்கும் ஒரு வியாபாரம். பாட்டுப் புஸ்தகம் விற்பவரிலிருந்து இசையமைப்பவர், பாட்டெழுதுபவர், பாடுபவர்,  ஹார்மொனி பாடுபவர், கஞ்சிரா வாசிப்பவர், சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோ நிகழ்த்துபவர்வரை அது ஒரு தனி இயந்திரம். தமிழ் சினிமாப் பாட்டு என்பதே இல்லாமல் போய்விட்டால் பலப்பல பேரின் வேலை போய்விடும்.

கெளதம் மேனனின் அடுத்த படத்தில் பாட்டில்லையாம். மேற்சொன்ன அத்தனைப் பேரும் கொதித்துப்போயிருக்கிறார்கள்.  காரணம், சினிமாப் பாட்டு நம் வாழ்வில் ஒன்றாக கலந்து விட்டது. சினிமாப் பாட்டு சாராயம் என்று எழுதிய பாலகுமாரன்கூட ’காஃபி வித் அனு’வில் ’எங்கிருந்தோ வந்தான்’ பாடிவிட்டுப் போனார்.

பாட்டும் இசையும் வாழ்வின் இனிமைகளில் ஒன்று. ஆக அதில்லாமல் இருக்கமுடியாதென்றாலும் சினிமாப் பாடல்மட்டும்தான் என்ற நிலை கொஞ்சம் கடினம். தமிழ் பாப்மட்டும் வென்றிருந்தால் சினிமாப் பாட்டின் ஆக்கிரமிப்பு குறைந்திருக்கும்.  நமக்கும் வேறொருவிதமான புது இசை கிடைத்திருக்கும். மால்குடி சுபா, சுரேஷ் பீட்டர்ஸ்,  அனுராதா ஸ்ரீராம், பிரேம்ஜி, தேவன் எனச் சகலரும் தமிழ் பாப்பில் முயன்று ஓய்ந்து போய்விட்டார்கள். பீட்டர்ஸ் ’மின்னல்’ என ஒரு பிரமாதமான ஆல்பம் செய்திருந்தார். அது தோற்றபோதுதான் தமிழ் பாப் என்று ஒன்று இருக்கப்போவதில்லை என்று தெளிவாகத் தெரிந்தது.  அதனால் நாலு ஃபைட், அஞ்சு பாட்டு ஃபார்முலாவிலிருந்து விடிவுகாலம் இன்னமும் கிடைத்தபாடில்லை.

சமீபத்தில் ’வானம்’ படத்தில் ”எவன்டி ஒன்னைப் பெத்தான் பெத்தான், அவன் கையில கிடைச்சா செத்தான் செத்தான்” என்று சிம்பு பாடி யுவன் இசையமைத்த பாட்டு கேட்டவுடன் பாலகுமாரன் சொன்னதுதான் ஞாபகம் வந்தது.  Bad Arrack.

0000

இனிமேல் தமிழ் சினிமாவில் கதைத் திருட்டு நடப்பது கடினம். நந்தலாலா கதை இதிலிருந்துதான் சுடப்பட்டது என்று யாரோ சொன்னதுதான் தாமதம்,  இரண்டு பேர் டிவிடி எடுத்து அந்த ஜப்பானியப் படத்தை பார்த்துவிட்டார்கள். தட்டச்சு தெரிந்த மற்ற அத்தனை பேரும், ’அட, அந்த ஜப்பானியப் படமா? அதையெல்லாம் எப்பவோ பாத்து அனலைஸ் பண்ணியாச்சு’ என்று கதை விட்டுத் தனது பண்டிதத்தனத்தை காட்டிக்கொண்டார்கள்.  ரொம்ப தாங்க்ஸ்.

படம் நன்றாகவே இருந்தாலும் டைரக்டரின் டச் என்று ஒரேயடியாகக் கால்களை காட்டியபடியே எடுக்கப்பட்ட காட்சிகளும், எல்லாக் காரெக்டர்களும் பேசாமல் தலை குனிந்து நிற்பதும் கொஞ்சம் டூமச். இளையராஜாவின் இசையில் முதல் மரியாதை, நாடோடித் தென்றல் வரிசையில் இந்தப் பின்னணி இசையும் பிரமாதமான ஒன்று. மிஷ்கினின் லேசாகக் கீச்சும் குரல் அந்த கதாப்பாத்திரத்துக்கு ஒத்துப்போகிறது. இசையில்லாமல் ஆங்காங்கே விடப்பட்டிருக்கும் மெளனமான நொடிகளும், சொல்லாமல் விடப்பட்ட சில விஷயங்களும், மிக எளிமையான திரைக்கதையும்தான் மிஷ்கினைத் தொடர்ந்து எதிர்பார்க்கவைக்கின்றன.

0000

பெற்றோர்களைப் பற்றி மேலே இருப்பதை எழுதியபோது ஆக்டன் நாஷ் எழுதியிருந்த ஒரு குறும்புக் கவிதை ஞாபகம் வந்தது. தேடி எடுத்தேன். ’First Child… Second Child’ என்ற இந்தக் கவிதையில் வழக்கம் போல் ஆக்டன் நாஷின் வார்த்தை விளையாட்டும் உண்டு.

FIRST

This child is a marvel, a matchless wonder.

A staggering child, a child astounding,

Dazzling, diaperless, dumbfounding,

Stupendous, miraculous, unsurpassed,

A child to stagger and flabbergast,

Bright as a button, sharp as a thorn,

And the only perfect one ever born.

SECOND

Arrived this evening at half-past nine.

Everybody is doing fine.

Is it a boy, or quite the reverse?

You can call in the morning and ask the nurse.

பன்சாலிப்பூர்
போன வாரம் எழுதியிருந்த eclectic writing பற்றி இன்னமும் கொஞ்சம் கதைக்கலாம். அன்பர் ஒருவர் “நீர் சொல்ல வருவது வேலிக்கு ஓணான் சாட்சியாக இருக்கிறது. எதை வேண்டுமானாலும் எழுத இது ஒரு சாக்கு” என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இருக்கலாம், யோசித்துப் பார்த்தால் அதட்டல் தொனியோடு வரும் குறுக்கு வழிப் புத்தகங்களுக்கும் ’அழகி கொலை’ என மூன்றாவது பாராவில் மூன்று வரி எழுதிவிட்டுப் பாதி பக்கத்துக்குப் பாடியின் பயமுறுத்தும் போட்டோ போடுகிற தினசரிகளுக்கும் நடுவே பத்திரிக்கைகளைதான் சாமானியர்கள் அதிகம் படிக்கிறார்கள்.  காரணம் அவற்றை அணுக முடிகிறது என்பதுதான்.  ஏற்கனவே சொன்னமாதிரி எத்தனை பதற்றமான /சந்தோஷமான சூழ்நிலையிலும் படித்துவிட்டுப் போகக்கூடிய எளிய கட்டுரைகளைதான் மனித மனங்கள் விரும்புகின்றன. நான் சொன்னால் அடிக்க வருவீர்கள் என்பதால் சமுகவியலாளர்களைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறேன்.

உதாரணத்துக்கு எகனாமிஸ்ட் ஜார்ஜ் லோவென்ஸ்டைன் செய்து காண்பித்த ஓர் ஆய்வு. அதில் கலந்து கொண்டவர்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கப்பட்டது:

’இன்றிரவு பார்ப்பதற்கு ஒரு படமும், பின்னொரு நாள் பார்ப்பதற்கு ஒரு படமும் தேர்ந்தெடுங்கள்’.

ரொம்பவும் யோசித்து குழப்படி செய்யாமல் மக்கள் இன்றிரவு பார்ப்பதற்குத் தேர்ந்தெடுத்த படங்கள் காமெடிப் படங்கள் அல்லது ப்ளாக்பஸ்டர்கள். அதாவது பஞ்சதந்திரம் மற்றும் எந்திரன். மற்றொரு நாள் பார்ப்பதற்கு பத்திரமாகச் சேர்த்து வைத்த படங்கள் முக்கியமானவை – இருவர், ஹே ராம் மற்றும் நந்தலாலா போன்ற படங்கள்.

இதில் விஷயம் என்னவென்றால் அந்த ‘நல்ல’ படங்களைப் பார்க்கும் நாள் வரும்போது காவலனோ, சிறுத்தையோ, ஒட்டகச்சிவிங்கியோ ஏதாவதுஒரு காமெடி / ப்.பஸ்டர் படம் வந்துவிடும் ‘இன்று போய் நாளை வா’ கதைதான்.

இதன் பாடம் மக்கள் philistines  என்பதல்ல, அவர்களின் தேர்ந்தெடுப்புகள் எல்லா நேரத்திலும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. எத்தனை பேர் ‘இந்த ஞாயித்துக்கிழமை எல்லா பில்லையும் டாலி செஞ்சு பாங்க் பாலன்ஸைக் கணக்கு பண்ணிடலாம்’ என்று நினைத்துக்கொண்டு வேட்டியை மடித்துக் கட்டிவிட்டு, கடைசியில் டிவி முன் தவமிருக்கிறார்கள். மக்களின் ஆசைகள் குறுகிய கால, நீண்ட காலத் திட்டங்களுக்கு நடுவே ஊசலாடிக்கொண்டிருக்கின்றன.

ஆக, சொல்ல வந்தது eclectic writing என்பது சுவாரசியமாக எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதுகிறேன் பேர்வழி என்ற சாக்கில் மக்களை நம்பவைத்துச் சற்றே கடினமான விஷயத்தையும் மக்களின் மனத்தினுள் கடத்தும் சாகசம். I rest my case, யுவர் ஆனர்.

0000

ஒத்திப்போடுதல் நமது வாழ்வுடன் இரண்டறக் கலந்த செயல். மேலே சொன்ன நல்ல படமா / லைட் படமா ஆய்வில் வந்த முடிவுக்குக்கூடக் காரணம் ஒத்திப்போடுதல்(Procrastination)தான். கேம் தியரி ஆய்வாளர் ஜேம்ஸ் ஷெல்லிங் இதை ’உங்கள் மனத்தில் இருக்கும் ’divided self’ செய்யும் காரியம்’  என்கிறார். நீங்கள் ஏதாவது ஒன்றை முடிவு செய்யும்போது உங்கள் மனத்தில் ஒரு பாராளுமன்றம் கூடுகிறது. ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் வாதிடுகின்றன. அதாவது குறுகிய கால ஆசைகள் கொண்ட மனத்தின் ஒரு பாதியும், நீண்ட நாள் குறிக்கோள்கள் கொண்ட உங்களின் மற்றொரு பாதியும் திட்டித் தீர்த்துக்கொண்டு கடைசியில் அனேகமாக வெற்றி பெறுவது குறுகிய கால ஆசையே.

நாளையிலிருந்து ஜாகிங் செய்யணும்,  அடுத்த வாரம் முதல் சிகரெட்டுக்குத் தடா,  இதுதான் என்னோட லாஸ்ட் குவார்டர் மாமே என்று எத்தனையோ நீண்ட நாள் குறிக்கோள்கள் உங்களுக்கு முன் இருக்கும் ஷிவாஸ் ரிகலின் உடனடி கிக்கினால் தள்ளிப்போடப்படுகின்றன.

ஒத்திப்போடுதலை ஒத்திப்போடுவதற்கு ஓர் எளிமையான வழி, நமக்குள்ள தேர்வுரிமைகளை எளிமையாக்குதல். அதாவது 110 சானல்கள் இருந்தாலும், அவற்றை இரண்டு மணி நேரம் மாற்றி மாற்றிப் பார்த்தாலும் வராத திருப்தி, இரண்டே இரண்டு சானல்களை வைத்துக் கொண்டு பிடித்ததைப் பார்க்கும் திருப்தியை போலதான்.

உங்கள் கூகிள் ரீடரில் எத்தனை வலைப்பதிவுகள் படிக்கப்படாமல் கிடக்கின்றன? அவற்றைப் ’பிறகு படிக்கலாம்’ என்று தள்ளிப்போடாமல், தயவு தாட்சண்யம் பார்க்காமல் நீக்கிவிடுங்கள். மிச்சமிருப்பதுமட்டும்தான் நீங்கள் விரும்புவது.

0000

மேலே இருக்கும் இரண்டு விஷயங்கள் இப்படி ஒரே கோட்டில் இணையப்போகின்றன என்று எனக்கு முன்னமே தெரிந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.

0000

சஞ்சய் லீலா பன்சாலியின் படங்கள் பன்சாலிப்பூர் என்ற இடத்தில்தான் நிகழ்கின்றன என்று இணையத்தில் நக்கலடித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் ரசிக்கும் சில இயக்குநர்களில் பன்சாலியும் ஒருவர்.  குருதத்போல மக்களிடம் இருந்து ஒதுங்கிப்போய்ப் படமெடுக்கும் இயக்குநர்.

போன வருடக் கடைசியில் வெளிவந்த Guzaarish(வேண்டுதல்) என்னும் படத்தைச் சமீபமாகப் பார்த்தேன்.  Quadriplegia என்னும் ஒருவிதமான பக்கவாத நோயினால் அவதிப்படும் மேஜிக் நிபுணன் தன்னை வலியின்றிக் கொன்றுவிடுமாறு கோர்ட்டில் மனுச் செய்கிறான்.

Euthanasia அல்லது Mercy Killing என்ற சற்றே சர்ச்சைக்கிடமான விஷயம் உலகத்தில் ஆங்காங்கே ஆதரிக்கப்பட்டுவருகிறது. இந்தியாவில் இன்னமும் இது சட்டமாக்கப்படவில்லை. ஆகவே இப்படி வரும் ஒரு வேண்டுதலைக் கோர்ட்டும், அவனைச் சுற்றி இருப்பவர்களும் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை உங்கள் டிவி / டிவிடியில் காண்க. ஏனென்றால் நல்ல படங்கள் ஓடுவதில்லை என்ற தியரிப்படி இதுவும் தியேட்டரை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டுவிட்டது.

பன்சாலியின் படங்கள் நடக்கும் இடங்கள் எங்கிருக்கின்றன என நினைக்கவைக்கும்படி ஓர் ஊரில் கதை நடக்கிறது. இந்தக் கதை கோவாவில் நடந்தாலும் அந்த வீடும் இப்படி 1910களில் வாழ்ந்தவர்கள்போல ஐரோப்பிய உடையணிந்த மனிதர்களும் இன்னமும் அங்கே இருக்கிறார்களா என்ன? ஓர் அழகுணர்ச்சிக்காகவே பன்சாலி இப்படிச் செய்கிறார் என்றாலும் மக்கள் இதை ஒரு குறையாக சொல்லிப் படத்தை டிஸ்கவுண்ட் செய்துவிடுகிறார்கள்.

உணர்ச்சியூட்டும் இசை, துல்லியமான ஒளிப்பதிவு, மிகச் சாதுர்யமான வசனங்கள் என எல்லாத் துறைகளிலும் படம் ஜொலிக்கிறது. கழுத்தைமட்டுமே அசைக்கமுடிந்தாலும் அதில்கூட அவார்டு சாகசம் காட்டும் ரித்திக் ரோஷனும், ’சுக்கு முளகு தட்டி என்ன சூப் வச்சு குடியா’ என்று தமிழ்நாட்டில் தட்டிப்போட்டுவிட்டுப் போய்ப் பாந்தமாக அருமையாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராயும், பன்சாலியும், அவருடைய எழுத்தாளர் பவானி ஐயரும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

இடுப்பு மடிப்புகளையும் ’ஐ லவ் யூ’ பாடல்களையும் காட்டுக் கத்தல் காமெடிகளையும்மட்டுமே எத்தனை நாள்தான் பார்த்துக் கொண்டிருப்பது? ஒத்திப்போடாமல் பார்த்துவிடுங்கள்.

0000

குழப்படி கேஸ்
மன்மதன் அம்பு பார்த்துக் கொண்டிருக்கும்போது தான் தோன்றிற்று, கமல் மணி ரத்னம் போன்ற திரைக்கதாசிரியர்கள், தமிழ் சினிமாவின் வழக்கமான அபத்தத் தொடக்கத்தினை சற்றே மாற்றிக் கொண்டு வருகிறார்கள். ஆற்றங்கரையில் பொழுது புலர்ந்து, சூரியன் உதித்து, பறவைகள் பறந்து, இலைகள் அசைந்து ஆரம்பிக்கும் படங்கள் வருவது நின்று சில காலம் ஆகிற்று. ஆனாலும் ஒரு கதாபாத்திரத்தை அறிமுகம் செய்ய எடுத்துக் கொள்ளப்படும் ஆயத்தங்கள் குறையவில்லை. ராவணனிலும் ம.அ.விலும் படமும் கதையும் சடுதியில் ஆரம்பிக்கின்றன. என்ன ஏது என புரிய சற்றே நேரமெடுத்தாலும் படத்துக்குள் போய்விடுகிறோம். கமலைத் தவிர மற்ற காரெக்டர்கள் டக்கென அறிமுகமாகி சட்டென மனதில் பதிந்து விடுகின்றன. நிற்க. இதற்கு மேல் ஏறக்குறைய, ஆமாம் ஏறக்குறைய, எல்லாமே குறைகளின் பட்டியல் தான்.  படிக்க விரும்பாதவர்கள், வலது மேல்புறம் இருக்கும் இண்டூ குறிக்கு குறி வைக்கலாம்.

படத்தின் கதை தமிழ் சினிமாவின் சாஸ்வதமான பார்முலாக்களில் ஒன்று.  கட்டிக்கப் போகும் பெண்ணைத் சந்தேகப்படும் டு-பி கணவனும்,  அவளை பல்வேறு காரணங்களுக்காக துரத்தி, சிரித்து, அழுது ஒருவழியாய் மணம் செய்யும் ஹீரோவும் தொல்பொருள் கண்டுபிடிப்புகள். ஆரம்பத்தைத் தவிர திரைக்கதையில் புதிதாக ஒன்றுமேயில்லை. இதையே முழுமையான காமெடியாக செய்திருக்கலாம் என்றாலும் கமல் தேர்ந்தெடுத்திருப்பது ஒரு மாதிரியான ப்ளாக் காமெடி தான். கதையில் ஒரு எமோஷனல் உபகதையும், காமெடி கதையும் உடன் பயணிக்கின்றன. காமெடி சீன்களில் ஹீரோ காமெடியாய் நடித்தாலும் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் சோகம் சிரிப்பை மட்டுப்படுத்துகிறது. இவ்வகை கதையைத் தான் எடுக்க வேண்டும் என நினைப்பது தப்பல்ல, ஆனாலும் விளம்பரமும் கதையும் வெவ்வேறு ஜான்ராவைக் குறிப்பதனால் குழப்படி கேஸ் என மக்கள் திண்டாடுவது தெரிகிறது. மும்பை எக்ஸ்ப்ரஸுக்கு பிறகு இது இரண்டாவது முறை.

இருபதாவது முறை என்றும் படத்தில் ஒன்று இருக்கிறது. கதையில் இறந்து போன மனைவியோ காதலியோ, கமலுக்கு அமைவது. விக்ரமில் ஆரம்பித்து, வேட்டையாடு விளையாடு வரை என்று இணையத்தில் லிஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கமலின் தனி வாழ்க்கைச் சோகம் அவரையும் தாண்டி அவர்தம் படத்தில் வழிகிறதோ என தோன்றுகிறது. அவ்வை சண்முகி, விருமாண்டி, வசூல்ராஜா போன்ற படங்களின் பாடல்களில் கொஞ்சம் சோகச் சரித்திரம் எட்டிப் பார்த்தன.

எதிர்பாராத விதமாய் வந்து விழும் கதாபாத்திரம் என்று எதுவுமே இல்லை. வாயாடி குழந்தை, கான்செர் நண்பன்,  குடிகார சந்தேகப் பிராணியான ஆண்டி-ஹீரோ என எல்லோரும் கார்ட்போர்ட் காரெக்டர்கள். எந்த கதாபாத்திரமும் முன்னுக்கு பின் முரணாக நடப்பதில்லை. ஹீரோ ஏமாற்றுவதற்கு ஒரு சரியான காரணம் இருக்கிறது, ஒரு சோக ப்ளாஷ்பேக் இருக்கிறது.  இந்த ப்ளாஷ்பேக்கில் வரும் ஒரு ரிவர்ஸ் ஸ்லோமோஷன் பாடல் ஒன்று தான் நிமிர்ந்து உட்காரச் செய்கிறது. என்ன தான் இதற்கு பல ஹாலிவுட் மற்றும் அலைபாயுதே உதாரணங்களைக்  காட்டினாலும், இத்தகைய கிளைக்கதைக்கு இவ்வகை தயாரிப்பு ஏக பொருத்தம்.

பாரீஸ் விமான நிலையக் காட்சிகளில் மனுஷ் நந்தன் கலக்குகிறார். ஆனால் கடைசி வெனிஸ் காட்சிகளில், அவற்றில் நடிப்பவர்களின் சன் க்ளாஸ்களில் சினிமா ஷூட்டிங் ரிப்லெக்டர்களும், காமிராவும் அதன் அருகில் நிற்பவர்களும் தெரிவது துரதிஷ்டம்.

இவை தவிர கமலுக்கு வயசாகி விட்டதும், குழந்தைகளுக்கு கமல் எடுக்கும் கோலோசியம் பாடமும், மாதவனின் காரியர் அசம்பாவிதமும், திரைக்கதை ஓட்டைகளும், கவிதா பிரதாபங்களும் இன்னபிற விஷயங்களும் ஏகமாய் இருந்தாலும், தமிழ்நாட்டில் எல்லோரும் கமல்/ரஜினி படங்களை ஒரு முறையேனும் பார்த்துவிடும் சங்கல்பம் செய்து கொண்டிருப்பதால், அதிகம் விவாதிக்காமல் இருந்து விடலாம்.

000

சமீபத்தில் பார்த்த மற்றொரு சுமார்ப் படம், டெவில். மனோஜ் நைட் ஷ்மாளன் தயாரிக்கும் முப்பெரும் படங்களில் முதல் படம். நகர வாழ்க்கையில் அமானுஷ்யத்தை கலக்கும் முயற்சி.

நகரத்தின் நடுவில் இருக்கும் ஒரு அடுக்கு மாடிக் கட்டடத்தின் லிப்ட் நடுவழியில் நின்று விடுகிறது. காமிரா மூலம் செக்யூரிடியும் போலீஸும் உள்ளே நடப்பதைப் பார்த்தபடி இருக்கிறார்கள். உதவி செய்யப் போகிறவர்கள் சாகிறார்கள். லிப்டின் உள்ளே ஐந்து பேர். போலீஸ் அவர்களைப் பற்றி ஆராயும் போது தான் எல்லோரும் ஒருவிதத்தில் குற்றவாளிகள் எனத் தெரிகிறது. உள்ளே இருக்கும் பேய்(!) ஒவ்வொருவராய் கொல்கிறது. யாராவது தப்பித்தார்களா என்பது மிச்சக் கதை. இவ்வகைப் படங்களில் முதல் பாதி பயமுறுத்தினாலும் முடிவு சுமாராய்த்தான் இருந்தாக வேண்டும் என்பது இவ்வகைக் கதைகளின் கதி. படுபயங்கரமான முடிவுடைய பேய்ப் படங்கள் மிகக் குறைவு. க்யூப்ரிக்கின் The Shining  கூட so so முடிவு தான்.

- இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.

கிறுக்கல் அவார்ட்ஸ் 2010
வழக்கம் போல் – ’இந்த வருடத்தின் சிறந்த’  சேர்த்துக் கொள்ளவும்

புத்தகம்

ஆங்கிலப் புத்தகம் 1 –  The Big Switch – Nicholas Carr

ஆங்கிலப் புத்தகம் 2 –  At Home: A Short History of Private Life – Bill Bryson

சொந்தக் கதை – Autobiography of Mark Twain – நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு நான்-லீனியர் முயற்சி

நோட்டபிள் புத்தகம் – இன்றைய காந்தி – ஜெயமோகன்

தமிழ் சினிமா

ட்ரைலர் – வா. கு. கட்டிங்

படம் – ஆயிரத்தில் ஒருவன்

நோட்டபிள் படம் – அங்காடித் தெரு

சுமார்ப் படம் – சிங்கம், ராவணன், மதராஸப்பட்டிணம்

காமெடிப் படம் – தமிழ்ப் படம்

ஸ்டண்ட் – நான் மகான் அல்ல

நாயகன் – கார்த்தி(ஆயிரத்தில் ஒருவன்)

நாயகி – அஞ்சலி (அங்காடித் தெரு)

காமெடியன் – சந்தானம் (பாஸ் எ பாஸ்கரன்)

துணை நடிகர் – பார்த்திபன்

பாடல் – ஓ ஈசா(ஆயிரத்தில் ஒருவன்)

படமாக்கப்பட்ட பாடல் – மன்னிப்பாயா

குத்துப் பாடல் – காதல் வந்தாலே(சிங்கம்)

இசையமைப்பாளர் –  ஜி.வி.பிரகாஷ்

பாடகர் – விஜய் யேசுதாஸ் ( தாய் தின்ற மண்ணே)

பாடகி – ஆண்ட்ரியா, ஷ்ரேயா கோஷல்(மன்னிப்பாயா)

பாடல் வரிகள் – வைரமுத்து ( கயல் விளையாடும் வயல்வெளித் தேடி)

நோட்டபிள் பாடல் – ஆரோமலே – அல்போன்ஸ் ஜோசப்,  கைதப்ராம் நம்பூதிரி, ரஹ்மான்

எடிட்டிங் – ஆண்டனி(வி.தா.வ,  வா.கு.க)

ஒளிப்பதிவு – ராம்ஜி(ஆயிரத்தில் ஒருவன்), சந்தோஷ் சிவன் – மணிகண்டன் (ராவணன்)

எழுத்து/இயக்கம் – செல்வராகவன்

நோட்டபிள் இயக்குநர் – சுசீந்திரன் (நான் மகான் அல்ல)

பாலிவுட் சினிமா

படம் – Ishqiya

சுமார்ப் படம் – Karthik calling Karthik

நோட்டபிள் படம் – Peepli [Live]

ஹாலிவுட் சினிமா

படம் – Inception (கனவுத் தொழிற்சாலை)

காமெடிப் படம் – Date Night

சுமார்ப் படம் – - Shutter Island

மற்றவை

டெக்னாலஜி –  Augmented Reality

மொக்கை விளையாட்டு – Farmville

மறதி நியூஸ் –  மத்திய அரசு பட்ஜெட், செந்தமிழ் மாநாடு

சின்னத் தீர்மானங்கள்
சினிமாவை நன்கு அறிந்தவர்கள் என்று நான் எண்ணும் சில நண்பர்கள் கூட அவ்வப்போது இயக்குநர் மணிரத்னத்தைத் திட்டித் தீர்ப்பதைப் பார்க்கிறேன்.  காரணத்தை அறிய முற்பட்டால், சென்ஷேனல் விஷயத்தை படத்துக்கு பின்புலமாக வைத்துக் கொண்டு, பணம் பண்ணி, விஷயத்துக்கு சரியான முடிவு சொல்லாமல் எஸ்கேப் ஆகிறார் என்பது தான்.  மணி செய்த விஷயங்களை மறந்து போய்த் தாக்குகிறார்கள். அவர்தான் சினிமாவில் மகேந்திரன் ஆரம்பித்து வைத்த ஸட்டிலிடியை தொடர்ந்தார்.

கதை எழுதுவது ஒரு கதாசிரியனின் உரிமை. அவனுடையது மட்டுமே. அதை அவன் எங்கே வேண்டுமானாலும் நடக்கிற மாதிரி எழுதலாம். மகாபாரதத்தில் எஸ்.வி சேகர் போய் மாட்டிக் கொள்கிற நாடகம் மாதிரி, சுவாரசியமான பின்புலங்களில் கதைச்சத்து அதிகமில்லாத கதையைச் சொல்லலாம். அது கதைக்கு முக்கியத்துவத்தை அதிகரிக்கும்.  இதைத் தான் மணி ஒவ்வொரு படத்திலும் செய்கிறார். பிள்ளையைப் பரிகொடுக்கும் தாயின் சோகத்தை சொல்லும் கதையில் அவர் இலங்கையைப் பின்புலமாக வைத்தால்,  அவர் அந்தப் பிரச்னைக்கு முடிவு சொல்ல வேண்டும் என்பது எந்த நியாயம். அப்படி சொல்பவர்களெல்லாம் என்றைக்காவது அரசியல்வாதியின் வீட்டுக் கதைவைத் தட்டி பிரச்னைக்கு முடிவு தேடுங்கள் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் மணி ரத்னம் மட்டும் காஷ்மீர் என்று சொல்லி விட்டால், யூ.என் தலைவர் போல் முடிவையும் சொல்லி விட வேண்டும் என்பது கையாலாகாத்தனம்.

படம் பிடிக்கவில்லை என்றால் இனியொரு முறை அதைப் பார்க்காமல் இருக்கலாம், அல்லது மற்றவர்களிடம் அதைப் பற்றிச் சொல்லலாம், அதை விடுத்து கதாசிரியன் இதைச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்வது அவனது உரிமைகளில் தலையிடுவது போல்.

நான் சமீபத்தில் எழுத நினைத்திருக்கும் ஒரு கதை நடப்பது, மான்ஹாட்டன் நகரத்தில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஒரு லிவ்-இன் ஜோடியைப் பற்றியது. ஒரு நாள் முன்னிரவில் நடக்கும் அந்தக் கதையில், அந்த ஆண் தனக்கும் மற்றொரு பெண்ணிற்கும் இருக்கும் ரகசிய உறவை அன்று சொல்லிவிடுவது என்று இரண்டு நாட்களாக நினைத்திருக்கிறான்.  அவன் காதலியோ தன்னைத் திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்கத் தயராய் இருக்கிறாள்.

அன்று காலை நடக்கும் ஒரு சம்பவம் இருவரின் வாயையும் அடைத்து விடுகிறது.  அன்று சாயந்திரம் இருவரும் சமைத்து சாப்பிட்டு விட்டு பால்கனியில்  சென்று அமர்கிறார்கள். இருவருக்கும் இடையேயும் ஒரு மயான அமைதி நிலவுகிறது.  தூரத்தில் பெரும் கரும்புகை தெரிகிறது. டி,வியில் நியூஸ் ஓடிக் கொண்டிருக்கிறது. மேலேறும் புகையைப் பார்த்திருக்க அமர்ந்திருப்பவர்கள் கொஞ்ச நேரத்தில் கட்டிக் கொள்கிறார்கள்.  ஏதும் பேசாமல் அந்தப் புகை அவர்களை ஒன்று சேர்த்து வைக்கிறது.

அந்தப் புகையின் காரணம் 9/11 என்று புரிந்திருக்கலாம். இப்படி ஒரு கதை எழுதுபவனை, ”9/11க்கு ஒரு முடிவு சொல்லி விட்டுப் போ, இல்லாவிட்டால் கதை வேஸ்டுமா” என்றால் எப்படியோ அப்படித்தான் மணிரத்ன விஷயமும். யோசித்து பாருங்கள்.

0000

கதையைப் பற்றிப் பேசும்போது,  தற்போதெல்லாம் நல்ல தமிழ்க் கதை வருவதேயில்லை என்று சொல்லிக் கொள்ளும் வாசகர்களுடன்(விமர்சகர்களுடன் அல்ல) நானும் சேர்ந்து கொள்கிறேன். கிட்டத்தட்ட உண்மை தான்.  என்ன தான் இலக்கியம்,கலை, ரசனை என்றெல்லாம் ரொமாண்டிக்காகக் கனவு கண்டாலும் இது ஒரு மாதிரி டிமாண்ட்/சப்ளைகளுக்கு உட்பட்ட மார்க்கெட் தான். விகடனும், குமுதமும், கல்கியும், குங்குமமும் எல்லாமே ஒரு மாதிரி கதைகளைத் தான் தேர்வு செய்கின்றன. அதிக வித்தியாசமில்லை. எல்லா மாகஸின்களிலும் அவ்வப்போது நல்ல கதைகள் வருகின்றன. கழுகு போல் வாராவாரம் காத்திருக்க வாசகர்கள் ரெடியில்லை என்பதுதான் உண்மை. தேவை – சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் 2010 என்ற தொகுப்பு. பல நூறு கதைகளைப் படித்து சிறந்த 25 கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தர நான் ரெடி.

இதற்கு நடுவே இலக்கிய சர்ச்சைகள் என்ற கொசுத் தொல்லைகள் நல்ல கதைகள் வருவதைத் தவிர்க்கின்றன.  பக்கம் பக்கமாகத் திட்டித் தீர்க்கிறார்கள்,  ஆளுக்கு ஒரு பக்கம் சேர்ந்து கொண்டு கோதாவில் இறங்குகிறார்கள். இந்த விமர்சகர்களைப் படித்து யாரும் எந்தப் புத்தகத்தையோ படித்ததாகவோ, கிழித்ததாகவோ வரலாறு இல்லை. எல்லோரும் அவர்களுக்கு தேவையானதைப் படிக்கிறார்கள் அல்லது நிராகரிக்கிறார்கள்.  இதை மேதைவிலாச விமர்சகர்கள் புரிந்து கொண்டாலே உலக ஷேமம்.  இந்த இலக்கிய குஸ்தியில் தற்போது கூட்டத்துக்கு ஆள் சேர்பது போன்ற அரசியல் தந்திரங்கள் வந்து விட்டன. இனி லாரிகளும் பிரியாணி பொட்டலங்களும் தான் பாக்கி. நமக்கும் இவ்வித கிறுக்குத்தனங்கள் புரிவதால், இந்த வருடத்துடன் இவர்களின் போஸ்ட்-மாடர்னிஸ புல்ஷிட்டுகளை ஸ்டாப் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

0000

இந்த வருடம் நான் படித்த சிறந்த தமிழ்ப் புத்தமாக நான் நினைப்பது – சீனா – விலகும் திரை.  ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பல்லவி ஐயர். தமிழில் மொழி பெயர்த்தவர் ராமன் ராஜா. போன வருட புத்தக சந்தையில் வாங்கிய இந்தப் புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்தது ஒரு பிரபலம். சியாட்டலில் தரையிரங்கும் முன் படித்து முடித்து விட்டேன்.

தன் காதலனுடன் சீனாவிற்கு வேலைக்காகச் செல்லும் பல்லவி ஐயர், சீனாவில் வாழ்ந்த அந்த ஐந்தாண்டுகளின் கதை. இரண்டு முக்கியமான  விஷயங்கள், சீனாவைப் பற்றி ஏற்கனவே கொஞ்சம் படித்திருந்தாலும், இதில் புதிதாகப் பட்டது பல்லவி என்னும் அந்த ஆங்கில ஆசிரியை/நிருபரின் பார்வை. எதைத் தேர்ந்தெடுத்து சொல்வது என்பதில் அவர் காட்டியிருக்கக் கூடிய தேர்ச்சி. இரண்டாவது, அதை அவர் சொன்ன விதம், பயன்படுத்தப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள். மிதமான நகைச்சுவை.

இரண்டாவது காரணத்தைத் தான் சந்தேகமாக பார்க்கிறேன்.  இந்த வார்த்தைகளை இப்படி சரளமாக மிகச் சரியாக வந்து விழுந்ததற்கு காரணம் பல்லவியா ராமன் ராஜாவா? என்னவாக இருந்தாலும் இந்தப் புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பைப் படிக்கவில்லை. படிக்கிற எண்ணமுமில்லை.  காரணம், தமிழாக்கத்தில் ஒரு பிரமாதமான உதாரணம் இந்தப் புத்தகம். காரணம் மிகச் சரளமான நடை. ஆனால் எனக்கு முக்கியமாகப் பட்டது ரா.ராஜாவின் வொக்காபுலேரி. ராமன் ராஜா கண்டிப்பாக ஒரு revelation.

00000

வருட ஆரம்பத்தில் எடுக்கப்படும் ரெசல்யூஷன்களைப் பற்றி கொஞ்சம் சினிகலாகவே பார்க்கிறோம்.  ஜனவரி 2ம் தேதி எல்லோரும் ஜிம்மில் ஓட 7ம் தேதி அந்தக் கூட்டம் பாதியாக மாற, 15ம் தேதிக்குள் எல்லாவற்றையும் அடுத்த வருட ஆரம்பத்திற்கு மூட்டை கட்டி வைத்து விட்டு சக்கரைப் பொங்கலால் தொந்தி வளர்க்கிறார்கள்.  இது உண்மை தான்.

ஆனால் சின்னச் சின்னதாய் முடிவுகள் எடுத்தால் நிறைவேற்ற முடியும் என்று நினைக்கிறேன்.  இனிமேல் மோர் சாதத்திற்கு உப்பு போட்டு சாப்பிடப் போவதில்லை, தலைக்கு தலைகாணி வைத்துக் கொள்வதில்லை, ஜீன்ஸானாலும் கசக்கிக் கட்டு, நாளுக்கு 10 பக்கம் படிப்பது போன்ற விஷயங்கள் உருப்படியானவை. நாளையிலிருந்து சீரியல் பார்க்கப் போவதில்லை, நோ ஆபீஸ் பாலிடிக்ஸ் போன்றவைகள் பயங்கரம். நடக்காது.

இவைகளுக்கு நடுவே ஒரு ஸ்வீட் ஸ்பாட் இருக்கிறது. மார்ச் மாதத்திற்குள் எத்தனை சேர்த்து வைத்திருக்கிறோம் என்று கணக்கெடுப்பது,  ஏப்ரலுக்குள் அட்லீஸ்ட் ஒரு பயிற்சி வகுப்பிற்காகவாவது போவது, பிறந்த நாளுக்கு முன் தேவையில்லாத டஜன் சுடிதார்களை தேவையானவர்களுக்கு கொடுப்பது போன்ற மைல்கற்கள் உடைய முடிவுகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த முடிவுகளை உடனே ஃபேஸ்புக்கில் ஏற்றிவிடாமல், இவை முடியும் என மனதால் நம்புவது நல்லது.

இந்த மனதால் நம்புவது என்பது பற்றி ஒரு ஆயிரம் வார்த்தைகளில் எழுத முடியும். ஆனால் ஒரு முடிவு எடுக்கும் போது சற்றே உற்று நோக்கினால் அது நல்லதா கெட்டதா என்பது கிட்டத்தட்ட தெரிந்து விடும். இங்கே கொடுக்கப் பட்டிருக்கும் பூவா தலையா போட்டோவைப் போலத்தான்.

ஆகவே வருட ஆரம்பத்தில் நீங்கள் பெரும் முடிவுகள் எடுக்கக் கூடாது என்று சொல்ல வரவில்லை. பெரும் முடிவுகளுக்கு வருட ஆரம்பங்கள் ரொம்ப தூரம் என நினைக்கிறேன். நீங்கள் அர்விந்த் அடிகா ஆக வேண்டும் என்றாலும், ஐஸ்வர்யா ராய் ஆக வேண்டும் என்றாலும் உடனே நினைக்க ஆரம்பிக்கலாம். யோசித்துப் பார்த்தால் அடுத்த ஐஸ்வர்யா ராய் எங்கோ மூக்கொழுக விளையாடிக் கொண்டிருக்கிறாள். அடுத்த சல்மான் ரஷ்டி, எங்கேயோ புஷ்டியாக சாப்பிட்டுவிட்டு டின்- டின் படித்துக் கொண்டிருக்கிறான்.

இதற்கு மேல் சொன்னால் ஆசிரியர், இந்தப் பத்தி எதோ சுய-முயற்சிப் பயிற்சியாகிக் கொண்டிருக்கிறது என்று நினைத்து கத்திரி போட்டுவிடுவார் என்பதால் இத்துடன் நிறுத்…

– இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.

இந்த வாரம் எப்படி?
ரத்த சரித்திரத்தின் முதல் பகுதியை இந்தியில் பார்த்தேன். இம்மாதிரி கேங்ஸ்டர் படங்களில் திடீரென்று யார் யாரை சுடுகிறார்கள்,  கூறு போடுகிறார்கள், வெட்டிச் சாய்கிறார்கள் என்று புரிவதற்கு முன் இடைவேளை வந்து விடும். இதில் சின்ன மாற்றம் , படம் முடிந்தே போய் விடுகிறது. மார்ட்டின் ஸ்கார்ஸஸி இத்தகைய படங்களில் பேச்சின் மூலம் கதையை நகர்த்தி, பயமுறுத்தி, டக்கென்று கொன்று விடுவார்கள். இதில் நேரெதிர்.

சுவாரசியமாய் ஒன்றுமேயில்லை.  ரத்தத்தை பார்த்து விட்டு தூங்கப் போக முடியாது என்பதால் வீடு வந்து ஒரு நூறு பக்கம் படித்து விட்டே தூங்கப் போனேன்.  அடுத்த பகுதியில் சூர்யா வருகிறார் என்று டைட்டிலுக்கு முன் ட்ரைலர் போட்டார்கள். பார்க்கலாம்.  ரத்தக் களறி சண்டைக்கு நடுவே நாகேந்திரஹாராய என்று உமாச்சி பாட்டை எல்லாம் போடுவது ரொம்பவும் மெல்லிழைவாக மனித மனங்களில் வன்முறையை நியாயப்படுத்தும் என்பதை இயக்குநர் அறிவாரா?

0000

பாவை பிரபந்தங்கள் பாடும் மாதமிது.  சென்னை வெள்ளாளத் தெருவில் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலுக்கு அருகில் வசித்தவன் என்பதால் மார்கழியில் திருப்பாவை சொல்லச் செல்லும் அம்மாவுடன் கோவிலுக்கு போன ஞாபகங்கள் இன்னமும் மிச்சமிருக்கின்றன. திருப்பாவை என்பதை விட சுடச்சுட வெண்பொங்கல் வாசனை தான் என்னை ஈர்த்தது என்று சொல்ல வேண்டும்.  கோவிலுக்கு போகாத நாட்களில், அம்மா தொன்னையில் வெண் அல்லது சக்கரைப் பொங்கலோ வாங்கி வருவாள். மட மடவென எழுந்து பல் தேய்க்கிற மாதிரி தேய்த்து, கிச்சனில் நுழைந்து ஒரே அமுக்.

பத்தாவது படிக்கும் போது நண்பனின் காதலை ஆதரிக்க ஒரு குழாமாக போன போது தான் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் தினப்படி விஷயமானது. சுபா என்கிற அந்தப் பெண் ஆஞ்சநேயரை சுற்றும் போது எண்ணைக் கையால் அருகில் இருந்த சுவற்றில் ஒரு புள்ளி வைக்க, சுரேஷ் என்கிற என் நண்பன் அடுத்த புள்ளி வைக்க, தினமும் 108 புள்ளிகள் முடிய நாங்கள் எண்ணிக் கொண்டிருந்தோம். இதற்கு நடுவில் யாரோ ஒரு சிறுவன் வந்து அவன் ஹால் டிக்கெட் நம்பரை எழுதி விட்டு போவான். இப்படியே எண்களாலும் கோடுகளாலும் சூழப்பட்டிருந்த ஆஞ்சநேயருக்கு வெண்ணெயையும் தாண்டி மூச்சடைத்துப் போயிருக்கும்.

சட்டென்று ஒரு டைவர்ஷன். திருப்பாவை எப்படி மனப்பாடம் ஆகிற்று என்று இன்னமும் தெரியவில்லை. காலை சமையல் செய்து கொண்டே கிச்சனில் இருந்து பாடும் அம்மாவும் காரணமாய் இருந்திருக்கலாம். ஆடி மாத லவுட்ஸ்பீக்கரில் இருந்து தாயே கருமாரி என்று எல்.ஆர்.ஈஸ்வரி பாடியதும், எங்கள் வீட்டு மர்ஃபி டேப்ரிக்கார்டரில் இருந்து வந்த பெங்களூர் ரமணி அம்மாளின் கணீர் குரலும் மனனம் ஆயின. நானாகவே ரொம்பவும் விரும்பிக் கேட்ட டிவோஷனல் பாடல்களை பாடியது ஒன்று எம்.எஸ் அல்லது பித்துக்குளி முருகதாஸ். வீட்டில் அடிக்கடி ஒலிக்கும் டி.எம்.எஸ்ஸின் கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் பாடல்களும், நாகூர் ஹனிஃபாவின் இறைவனிடம் கையேந்தும் குரலும் பின்னர் பிடித்துப் போயின.

பள்ளியில் படிக்கும் காலத்தில், தினத்தந்தியில் அன்றைய திருப்பவையையும் திருவெம்பாவையையும்,  ஐந்து வரி தெளிவுரையோடு ஒரு கட்டம் கட்டி போடுவார்கள்.   திருப்பாவை அறிந்திருந்ததால் திருவெம்பாவையை திரும்பத் திரும்பப் படித்தேன். எம்பாவாய் வார்த்தையை காப்பியடித்தது ஆண்டாளா மாணிக்க வாசகரா என்று சந்தேகத்தோடு உலாத்தியதுண்டு. ஆண்/பெண் வித்தியாசங்கள் இருந்தும், திருவெம்பாவையின் பத்தொன்பதாம் பாடலில் தான் இரண்டிற்கும் ஒற்றுமை தெரிந்தன. இப்போது படித்தாலும், அந்த ஒற்றுமைகள் வாழ்கின்றன.  இது திருப்பாவையா, திருவெம்பாவையா என்று தெரியாமல் படித்தால், கண்டிப்பாய் குழம்பிப் போவீர்கள்.

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று

அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்

எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்

எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க

எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க

கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க

இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்

எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

0000

வாரப் பத்திரிக்கைகளில் Most read/emailed என்று செக்‌ஷன்கள் வைத்துப் பார்த்தால் டாப் டென்னில் வருவது எவை என்பதை யோசித்துப் பார்க்கலாம்.

1. இந்த வாரம் எப்படி?

2. எதாவது ஒரு பெயர்ச்சிப் பலன்.

3. கோலிவுட் ரவுண்ட்-அப்

4. _____ நடிகருக்கு பிறந்த குழந்தைப் படங்கள்

5. ______ நடிகை திரும்ப நடிக்க வரும் முன்னர் வரும் மணியோசை

6. எதாவது ஒரு கருத்துக் கணிப்பு

இப்படியாக முக்கிய செய்திகளில் முக்கியமாக இருப்பது ஜோசிய ஹேஷ்யங்கள். வருடத்தின் முதல் வாரத்தில் இந்த வருடம் எப்படி இருக்கும் என்று மாத வாரியாக எழுதும் ஜோசியர்கள், வார ஜோசியம் எழுதும் பொழுது வருட முதலில் எழுதியதை ரெஃபர் செய்து எழுதுகிறார்களா? இப்படி சமீபத்தில் தேடிப் பார்த்த பொழுது, அக்டோபர் மாதத்தில் அமேசிங் வைபவம் ஒன்றும் வேலை சார்ந்த கவலை ஒன்றும் வரலாம் என்று எழுதியிருந்தார் ஒரு ஜோதிடர். அக்டோபர் மாதத்தில் வார வாரம் என்ன எழுதியிருக்கிறார் என்று படித்துப் பார்த்த பொழுது இரண்டுக்கும் ஆறல்ல அறுபது வித்தியாசங்கள் தெரிந்தன. இம்மாதிரி ஜோசியங்கள் ஒருவேளை வானிலை மாதிரி மாறிக் கொண்டே இருக்கும் போலிருக்கிறது.

இவை எதனால், எவரால், எப்படி எழுதப்படுகின்றன என்பதை எல்லோரும் அறிவோம். ஆனாலும் எல்லோரும் வருங்காலத்தை எட்டிப் பார்க்கிற ஆர்வத்தில் இருக்கிறோம் என்பது தான் மனித இயல்பாய் இருக்கிறது. இந்த பத்திரிகையிலும் இப்படியெல்லாம் போட்டால் pageviews பிய்த்துக் கொண்டு பறக்கும் என்பதால், ஆசிரியரை இவற்றை பரிசீலிக்குமாறு மெயிலனுப்பியிருக்கிறேன். நீங்களும் பரிந்துரைக்கலாம்.

0000

சமீபத்தில் ஜூலியன் அசாஞ்ச் பற்றி நாராயணன் எழுதியிருந்த கட்டுரை மிகையாக அவரை ஒரு ஹீரோவாக மட்டுமே காட்டி இருப்பதாய் எனக்கு தோன்றினாலும், கட்டுரைக்குப் பின் இருந்த கடின உழைப்பு தெரிந்தது. பிடித்திருந்தது.  ரெண்டு நாள் பேப்பர் படிக்காமல் போனால் இப்படி ஏதாவது ஒரு பெரிய விஷயம் நடக்கும் நாட்களில் நாமிருக்கிறோம்.  அப்படியிருக்க இந்த மாதிரி சுருக்கமான ஆனால் தெளிவான விவரிப்புகள் ரொம்பவும் முக்கியம். இவைகளை எழுத ஆள் அதிகமில்லை.

இந்த மாதிரி ஒரு 1000 வார்த்தை கட்டுரை எழுத அவர் குறைந்தது ஆறிலிருந்து பத்து மணிநேரம் வெறும் படிக்க மட்டுமே செலவழித்திருக்கலாம்.  இதற்கு பிறகு படித்ததில் இருந்து விவரங்களை தவிர்த்து கருத்துக் கூறுகளை மட்டும் உள்ளடக்கிய ஒரு கட்டுரை எழுதுவதற்கு முன் முழி பிதுங்கி விட்டிருக்கும்.

இம்மாதிரி கட்டுரைகளை முதலில் படிக்கவும்,  பிடித்திருந்தால் ஓரிரு வார்த்தைகளில் ஒரு மெயிலோ/கமெண்டோ அனுப்பலாம், தப்பில்லை.

– இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.

ஒரு படமும் சில பழைய ரிக்கார்டுகளும்
‘இந்த வருடத்தின் சிறந்த’ லிஸ்ட்டில் அடுத்தது, சிறந்த தமிழ்ப் படம். என்ன தான் டப் செய்தாலும் தமிழ் நாடு தாண்டி இந்தக் கதை புரியாது என்று தெரிந்தும் மூன்று வருடங்களில் எடுக்கப்பட்ட பெரிய ரிஸ்க். ஆயிரத்தில் ஒருவன்.  கடைசியில் காட்பாடி தாண்டி ஆந்திராவில் பிய்த்துக் கொண்டு ஓட,  தமிழ் கூறும் நல்லுலகம் கதை புரியவில்லை என்ற பழைய ரிக்கார்ட்டை தேய்த்துக் கொண்டிருந்தது.

இந்த மாதிரி 263 நாட்கள் படம் எடுத்தார்கள், 32 கோடி செலவு செய்தார்கள் என்ற நம்பர் சாதனைகளைத் தாண்டி, இந்தப் படம் பார்க்கும் போது என்னை ஆக்கிரமித்து கொண்டு விட்டது.  அதாவது என்னையும் மறந்து முத்து, அனிதா மற்றும் லாவண்யாவுடன் நானும் கடல் மலைகளை தாண்டிச் சென்றேன், சோழ இளவரசனை(!) சந்தித்தேன், பைத்தியம் பிடிக்க ஓடினேன்,  சங்கம் வளர்த்த பாண்டியர்களை கடிந்து கொண்டேன், தஞ்சைக்காக ஏங்கினேன். நல்ல படம் என்பது பார்க்கும் உங்களை எதாவது வகையில் மூவ் செய்ய வேண்டும். தியேட்டரை விட்டு ஓட வைக்க வேண்டும் என்பதல்ல. எதாவது வகையில் பாதிக்க வேண்டும்.

ஆயிரத்தில் ஓருவனின் எழுத்தும் ஆக்கமும் தமிழ் சினிமாவில் ஒரு அரிய சாதனை. தனக்கு முன் இருந்த அத்தனை தமிழ் ப்ளாக்பஸ்டர் இயக்குநர்களையும் ஒரேடியாக அசுரத்தனமாக தாண்டி சென்ற செல்வாவிற்கு இவ்வருட சிறந்த திரைக்கதையாசிரியர் விருது.  இவ்விருது எல்லாம் கொடுத்து செல்வராகவனை ஏமாற்றி விடாமல், டிவிடி வாங்கி படத்தை ஒருமுறையோ மீண்டும் ஒருமுறையோ பார்த்து விட்டு டுவிட்டரில் வாழ்த்தினால் சந்தோஷப்படுவார். இதைத் தவிர செய்ய வேண்டியது, இந்த மாதிரி அபாரத் திறமைகளை இந்திப் பக்கம் போய்விடாமல் பார்த்து கொள்வது.

0000

இந்த வாரம் ஒரு சிறுகதை.

“ஸ்ச்ச்….ஆஃப் பண்ணிட்டு வந்திருக்கணும், இத்தன்னேரம் வீடு எரிஞ்சுண்டு இருக்கும்”

“ ஆமா…இதையே சொல்லிட்டு வா, நீ தானே போட்ட, அப்புறம் என்ன”

“நான் தான் ரோட்ட விட்டு திரும்பும் போதே சொன்னேல்ல போய் ஆஃப் பண்ணிட்டு வரேன்னு, நீ தான் சகுனம் அது இதுன்னு. உனக்கு ஷாப்பிங் வரணும், எதையாவது தேவையில்லாதத வாங்கணும்” என்று சொல்லிக் கொண்டே ஷாப்பிங் கார்ட்டை வேகமாக தள்ளினான் கல்யாண்.

”டாட் ஸ்லோ டாட், பயமாயிருக்கு” என்று மிரண்டாள் விது. முன்னே முனகிக் கொண்டே போய்க் கொண்டிருந்த சுபா, விது சொன்னது கேட்டு திரும்பினாள்.

“அப்பா சாமி, ஆள விடு…என் குழந்தைய ஒன்னும் பண்ணாத போ போய்டு வா” என்று சுபா கும்பிடு போட, மேஸீஸ் கடையில் கிறிஸ்துமஸ் துணி எடுக்க வந்தவர்கள் பாஷை புரியாமல் திரும்பிப் பார்த்தார்கள்.

கல்யாண் பல்லைக் கடித்தான். “ நிக்காத போய்ண்டே இரு.. எல்லாரும் பாக்கறாங்க… எவனாவது 911ன்னு கூப்பிட்டுறப் போறான். அப்புறம் சிங்கி தான் அடிக்கணும்” என்று கார்ட்டை தள்ளிக் கொண்டு நடந்தான்.

“கொஞ்சம் நிறுத்து. நானும் என் பொண்ணும் எப்படியாவது போய்க்கறோம். நீ போய் உன் எரிஞ்சுட்டு இருக்கிற வீட்டை பார்த்துக்கோ.  முடிஞ்சா பாஸ்போர்ட்டை எடுத்து வை.  இந்த மிஷிகன் விண்டர் தாங்க முடியல. நாங்க மெட்ராஸுக்கு போறோம். நீ வீட்ட கட்டிண்டு அழு” நடந்து கொண்டே சொன்ன சுபா, கல்யாணின் கையை தட்டி விட்டு, கார்ட்டை பிடித்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள். கார்ட்டில் உட்கார்ந்திருந்த விது இந்த களேபாரத்திலும் மக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

கிட்டத்தட்ட நாற்பத்தி ஆறு நிமிடங்களுக்கு முன், வீட்டை விட்டு ஷாப்பிங்கிற்கு கிளம்புவதற்கு முன், ஜாக்கெட் க்ளவுஸ் எல்லாம் போட்டு கொண்டு, வெளியே வீட்டின் மேல் படரவைத்திருந்த ஹாலிடே லைட்ஸின் ப்ளக்கை போட்டான் கல்யாண்.  கொஞ்சம் தள்ளிப் போய் நின்று அந்த தொங்கும் சீரியல் விளக்குகளின் அழகை சுமார் 8 செகண்டுகளுக்கு பார்த்துக் கொண்டிருக்க, சுபாவும் விது ரெடியாகிவிட, ஓடிப் போய் காரை ஸ்டார்ட் செய்து ஹீட்டரை போட்டான்.  காரை எடுத்து கொண்டு ரோட்டை திரும்பும் போது அவனுக்கு உரைத்தது.  அந்த லைட்டுகளை ஆஃப் செய்து விட்டு வந்திருக்கலாம்.

“ஐ திங்க் லைட்ட ஆஃப் பண்ணிட்டு வந்திருக்கணும். மழை வரா மாதிரியிருக்கு, எதாவது வயர் கியர் ஷார்ட் ஆகி வீடு பத்திக்கும்” என்றவனை தலையில் அடித்துக் கொண்டு தள்ளிக் கொண்டு வந்தாள் சுபா.  வரும் வழியிலெல்லாம் கரண்டைப் பற்றியும், அமெரிக்க மர வீடுகளை பற்றியும் லெக்ட்சர் அடித்துக் கொண்டு வந்தவனை செய்வதறியாது பார்த்துக் கொண்டு வந்தாள். விது வெளியே தெரியும் கார்களை எண்ணிக் கொண்டிருந்தாள். ஐம்பதுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிலிருந்து எண்ண ஆரம்பித்தாள்.

ஷாப்பிங் கார்ட்டை தள்ளிக்கொண்டு போய் கண்ணை விட்டு மறைந்து போனாள் சுபா.  ரொம்ப தூரமில்லை, ஒரு பதினேழு மைல்கள் தான், சீக்கிரம் போய்விட்டு லைட்டை அணைத்துவிட்டு வந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டே கல்யாண் கார் பார்க்கிங்கை நோக்கி நடந்தான்.

மால் முழுவதும் ஏராளமான சீரியல் லைட் செட்டுகள் போட்டிருந்தார்கள். ”இதெல்லாம் ஷார்ட் ஆகாம நம்ம வீட்டு லைட் மட்டும் எப்படி ஷார்ட் ஆகும். ஒருவேளை சுபா சொல்ற மாதிரி எனக்கு OCD வியாதி தான் போல இருக்கு” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டே நடந்தான்.

காரை ஸ்டார்ட் செய்து ஹெட்லைட்டை ஆன் செய்தான். பளிச்சென்று எதிரில் இருந்த கண்ணாடியில் அதன் பிரகாசம் தெரித்து கல்யாணின் கண்ணில் அடித்தது. ரிவர்ஸ் எடுக்கும் போது செல்போன் வைப்ரேட் ஆனது. அப்படியே ரிவர்ஸை மாற்றி காரை மீண்டும் பார்க்கிங் செய்தான். ஃபோனை எடுத்து பார்த்த போது, சுபாவின் மிஸ்டு கால் என்று தெரிந்தது.

ஃபோனைப் பார்த்தவுடன் தான் கல்யாணுக்கு அந்த ஐடியா தோன்றியது. “வீட்டுக்கு போன் பண்ணிப் பார்க்கலாம், லைட் ஷார்ட் ஆகி வீடு எரிஞ்சிண்டு இருந்தா, ஃபோனும் எரிஞ்சு போயிருக்கும், அதனால ரிங் போகாது. அப்படியே ரிங் போனா எவ்ரிதிங் ஈஸ் குட்”

வீட்டு நம்பரை அழுத்தினான். வீட்டில் ரிங் அடித்து ஓய்ந்தது. ”வாவ், ஆஸ்ஸம்” என்று சற்று சத்தமாய் சொல்லிக் கொண்டான். காரை அப்படியே விட்டு விட்டு, மீண்டும் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

சுபாவின் செல்லுக்கு ஒரு ஃபோன் போட்டான். “சுபா கண்ணு சாரிம்மா…. என்னது? நான் எங்கயும் போகல. நீ எங்க இருக்க சொல்லு, காபஷீனோ வாங்கிட்டு வரேன்” என்று துள்ளினான்.

காபி கடையில் லைனில் நிற்கும் போது, மீண்டும் சந்தேகம் வர, மீண்டும் வீட்டிற்கு ஒரு போன் போட்டு பார்த்துடலாம் என்று எண்ணி தன் செல்போனின் வீட்டு நம்பரை அழுத்த, செல்போனின் இருந்து புறப்பட்ட ரேடியோ அலைவரிசைகள் அருகில் இருந்த செல்போன் டவரை சென்றடைய, அது சாட்டிலைட்டுடன் தொடர்பு கொள்ள, அங்கிருந்து புறப்பட்ட கதிர்கள் வீட்டு டெலிபோன் நிறுவனத்தை தொடர்பு கொள்ள, ரேடியோ அலைகள் மாறி ஆறு மெகா ஹெட்ர்ஸ் வீரியத்தில் சும்மா சுற்றிக் கொண்டிருந்த எலக்ட்ரான்ஸை தாக்கி அவைகள் சட்டென பயணிக்க, கல்யாணின் வீட்டில் இருந்த கேபிள் மோடத்துடன் இணைக்கப்பட்டிருந்த டெலிபோனை அடைந்தவுடன் அது ரிங் அடிக்க அரம்பிக்க, “ஸ்..யப்பா வேலை முடிந்தது” என்று மீண்டும் திரும்பிப் போய் கல்யாண் காதுகளை எப்படியோ அடைந்தன.

பெருமூச்சுடன் போனை கட் செய்த கல்யாணுக்கு தெரியாத விஷயம் ஒன்று –  புயலாய் விரைந்த எலக்ட்ரான்ஸ்களில் ஒன்றே ஒன்று வெகுவேகமாய் சென்று டெலிபோனைத் தாக்க, ஐந்து வருடங்களாக யூஸ் செய்யப்பட்ட அந்த டெலிபோன் ரிங் அடிக்க ஆரம்பித்தாலும், அந்த மெகா வேகத்தை தாங்க முடியாமல் சின்னதாய் தீப்பொறியாய் வெளியேறி வயரை காயப்படுத்த, தீ மெலிதாக ஆனால் சீராக பரவிக் கொண்டிருந்தது.

– இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.