subbudu.com » இணையம்

கிறுக்கல் அவார்ட்ஸ் 2010
வழக்கம் போல் – ’இந்த வருடத்தின் சிறந்த’  சேர்த்துக் கொள்ளவும்

புத்தகம்

ஆங்கிலப் புத்தகம் 1 –  The Big Switch – Nicholas Carr

ஆங்கிலப் புத்தகம் 2 –  At Home: A Short History of Private Life – Bill Bryson

சொந்தக் கதை – Autobiography of Mark Twain – நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு நான்-லீனியர் முயற்சி

நோட்டபிள் புத்தகம் – இன்றைய காந்தி – ஜெயமோகன்

தமிழ் சினிமா

ட்ரைலர் – வா. கு. கட்டிங்

படம் – ஆயிரத்தில் ஒருவன்

நோட்டபிள் படம் – அங்காடித் தெரு

சுமார்ப் படம் – சிங்கம், ராவணன், மதராஸப்பட்டிணம்

காமெடிப் படம் – தமிழ்ப் படம்

ஸ்டண்ட் – நான் மகான் அல்ல

நாயகன் – கார்த்தி(ஆயிரத்தில் ஒருவன்)

நாயகி – அஞ்சலி (அங்காடித் தெரு)

காமெடியன் – சந்தானம் (பாஸ் எ பாஸ்கரன்)

துணை நடிகர் – பார்த்திபன்

பாடல் – ஓ ஈசா(ஆயிரத்தில் ஒருவன்)

படமாக்கப்பட்ட பாடல் – மன்னிப்பாயா

குத்துப் பாடல் – காதல் வந்தாலே(சிங்கம்)

இசையமைப்பாளர் –  ஜி.வி.பிரகாஷ்

பாடகர் – விஜய் யேசுதாஸ் ( தாய் தின்ற மண்ணே)

பாடகி – ஆண்ட்ரியா, ஷ்ரேயா கோஷல்(மன்னிப்பாயா)

பாடல் வரிகள் – வைரமுத்து ( கயல் விளையாடும் வயல்வெளித் தேடி)

நோட்டபிள் பாடல் – ஆரோமலே – அல்போன்ஸ் ஜோசப்,  கைதப்ராம் நம்பூதிரி, ரஹ்மான்

எடிட்டிங் – ஆண்டனி(வி.தா.வ,  வா.கு.க)

ஒளிப்பதிவு – ராம்ஜி(ஆயிரத்தில் ஒருவன்), சந்தோஷ் சிவன் – மணிகண்டன் (ராவணன்)

எழுத்து/இயக்கம் – செல்வராகவன்

நோட்டபிள் இயக்குநர் – சுசீந்திரன் (நான் மகான் அல்ல)

பாலிவுட் சினிமா

படம் – Ishqiya

சுமார்ப் படம் – Karthik calling Karthik

நோட்டபிள் படம் – Peepli [Live]

ஹாலிவுட் சினிமா

படம் – Inception (கனவுத் தொழிற்சாலை)

காமெடிப் படம் – Date Night

சுமார்ப் படம் – - Shutter Island

மற்றவை

டெக்னாலஜி –  Augmented Reality

மொக்கை விளையாட்டு – Farmville

மறதி நியூஸ் –  மத்திய அரசு பட்ஜெட், செந்தமிழ் மாநாடு

இன்ன பிற – இருபது கோடி விளையாட்டு
போன வார தமிழ் பேப்பரில் வெளியான இன்ன பிற பத்தி.

தி அட்லாண்டிக்கின் ஆண்டுச் சிறப்பிதழான fiction 2010  படிக்கக் கிடைத்தது.  இந்த ஆண்டு கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில், இவ்வருடத்தின் சிறந்த கட்டுரைகளில் ஒன்று என இதில் இடம்பெற்றிருக்கும் Joyce Carol Oatesன்(JCP) உடையதைச் சொல்லலாம். ரொம்பவே காதலித்த கணவர் ரேமண்ட் ஸ்மித் இறந்த ஒரு வாரத்தில், அந்த சோகத்தை மறக்கத் தன் பேராசிரியர் வேலைக்குச் சென்ற முதல் நாளைப் பற்றிய ஒரு குறுங்கட்டுரை.

ஜாய்ஸ் குழந்தையிலிருந்தே எழுத்தாளர். நாற்பது வருடங்களாக எழுத்துப் பிரபலம். ப்ரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் எழுத்து வாத்தியார் என எழுத்துக்கும் எழுத்துப் பிரபலங்களுக்கும் நெருக்கம். ஜாய்ஸின் எழுத்தை ரசித்துப் படித்திருக்கிறேன். அவரின் 1000ம் பக்க தின டைரியை வாயரிசத்தின் அருகே நின்று வாசித்திருக்கிறேன். எழுத்தாளரை எழுதச் செய்வது எது என்பதை பற்றி அதன் பல பக்கங்களில் இருந்து கொஞ்சம் புரிந்து கொண்டேன்.

என்னதான் பிரபலமாக இருந்தாலும், தன் பர்சனல் விஷயங்களை வெளியே பேசாத ‘அந்தக் கால’ப் பெண்மணி. இதனால் கணவர் இறந்த விஷயம் அவரது மாணவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எப்போதும்போலப் பாடமெடுக்கச் செல்கிறார். அன்றைய பாடம் – கதை எழுதும் கலை. வரி வரியாக எல்லோருடனும் கதையைப் படித்து முடித்து, பின்பு அதைப் பற்றி உரையாடுவதுதான் அன்றைய திட்டம். அன்றைய கதை – ஹெமிங்வேயின் முதல் கதைத் தொகுதியிலிருக்கும் நான்கே பக்க நீளமுள்ள Indian Camp. அந்த தினத்திற்கு ஏற்றாற்போல ஓர் இறப்பைப் பற்றிய சிறுகதை.

அந்தச் சில மணிநேரங்கள் என்றும்போல் கழிகின்றன. மாணவர்களுடன் உரையாடும்போது எந்த விதமான அநாவசிய ரியாக்‌ஷனும் காட்டாமல் இருக்கிறார் ஜாய்ஸ்.  அவர்கள் சந்தேகப்படும்படி ஒன்றும் நடக்கவில்லை.  அந்தப் பாடம் முடிந்து அறைக்குத் திரும்பும்போது வாசலில் இரு மாணவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். “Professor Oates, We heard about your husband and want to say how sorry we are…If there is anything we can do…” என்கிறவர்களுக்கு,  நன்றி- எல்லாம் சுகம் என்றி மழுப்பிவிட்டு உள்ளே வந்துவிடுகிறார். When they leave, I shut my office door. I am shaking. I am so deeply moved. But mostly shocked. Thinking they must have known all along today. They must all know.  இதில் ஒரு சிறுகதையிருக்கிறது.

ஜாய்ஸும் அவரது கணவரும் கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக நடத்திக் கொண்டிருந்த இலக்கிய சிறுபத்திரிகையான Ontario Reviewவை கணவர் மறைவிற்குப் பிறகு நிறுத்துகிறார். ஆனால் அதற்கு முன் பல கட்டுரைகளும் கதைகளும் வீட்டிற்கு வந்திருக்கின்றன. என்ன செய்வது? அவர்களுக்கெல்லாம், “எடிட்டர் ரேமண்ட் ஸ்மித்தின் எதிர்பாராத மரணத்தினால் இனிமேல் இந்தப் பத்திரிகை வராது. மன்னிக்கவும்” என்று லெட்டர் எழுதுகிறார். அனுப்புவதற்கு முன்னர், அதைத் திரும்பப் படிக்கும் போது ’எதிர்பாராத மரணம்’ என்று எழுதியிருப்பது கொஞ்சம் யோசிக்கச் செய்கிறது.  இந்தப் பத்திரிக்கைக்கு அனுப்பினால் போடுவார்கள் என்று அனுப்பிய எழுத்தாள அன்னியர்களுக்கு ரேமண்டின் மரணம் எப்படி எதிர்பாராததாகும். மனைவியான தனக்குத்தானே இது எதிர்பாராதது என்று கொஞ்சம் கலங்கிவிட்டு, எதிர்பாராத மரணம் என்பதை மரணம் என்று மாற்றி அனுப்புகிறார். மீண்டும் ஒரு சிறுகதை.

ooOOOOoo

மேலே சொன்ன ஹெமிங்வேயின் இந்தியன் காம்ப் ஒரு சிறந்த கதை. அது வெளிவந்த 1925ல் ரொம்பப் பேசப்பட்டது. எர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) அமெரிக்கர். 1920களில் ஐரோப்பாவுக்கு டிரைவராகச் சென்றவர் டொரண்டோ ஸ்டார் பத்திரிகைக்கு நிருபராகி, பின்பு பாரிஸில் செட்டில் ஆகி, எழுத்தாளராகி, பிரபலமாகி, நான்கு மங்கைகளை மணந்து,  1954ல் கிழவனும் கடலும் என்ற நாவலுக்காக நோபல் பரிசு பெற்றபின்தான் அடங்கினார். அமெரிக்கர்களின் எழுத்தாள ஹீரோ.

இந்தியன் காம்ப் கதை மிஷிகன் மாகாணத்தில் நடக்கிறது. நிக் ஆடம்ஸ் என்ற சிறுவனின் டாக்டர் தந்தையை ஒரு கடினமான குழந்தை பிறப்பு கேஸுக்காகக் கூப்பிட்டு அனுப்புகிறார்கள். ஒரு பங்க் பெட்டின் கீழ்ப் பகுதியில் அந்த அமெரிக்க-இந்தியப் பெண் குழந்தை பெறத் தவித்துக் கொண்டிருக்கிறாள். அதன் மேல்புறத்தில் அவள் கணவன் கத்தியால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான். நிக் இந்த பயங்கரத்தைப் பார்க்கிறான். அதன் பின் அவன் தந்தை அவனை வெளியே போகச் சொல்கிறார். அவன் தந்தை அந்த இந்தியனின் கழுத்தைத் தூக்கி வெட்டுக்காயத்தை ஆராய்வதையும் பார்க்கிறான். படகிற்குத் திரும்பிச் செல்லும்போது, நிக் அந்த இந்தியனின் தற்கொலைக்குக் காரணம் கேட்க, டாக்டர் சொல்கிறார், “I don’t know, Nick. He couldn’t stand things, I guess.”

இத்தனை பட்டவர்த்தமான தற்கொலைக்கு எந்த விதக் காரணமும் சொல்லப்படவில்லை, தத்துவார்த்தமான உரையாடலும் இல்லை. இதுதான் ஹெமிங்வே.  இதனை ஹெமிங்வே, ஐஸ்பெர்க் தியரி எனக் குறிப்பிட்டார். அதாவது உண்மைகள் மேலே மிதந்து கொண்டிருக்க, அதன் பின்புலமும் குறியீடுகளும் மறைமுகமாகத் தெரிவிக்கப்படும் எழுத்துக்கலை.

இந்தக் கதையைப் போலவே ஜூலை 1961ல், தனக்குப் பிடித்தமான துப்பாக்கியைத் தன் தலைக்குக் கொடுத்தார். தற்கொலை. ஹெமிங்வேவின் A Moveable Feast பற்றித் தனியே சொல்லவேண்டும். அது அவருடைய கடைசிப் புத்தகம். பிறகு.

ooOOOOoo

தினமும் யாராவது ஒரு நண்பர் facebookல் மெயிலனுப்பி மாட்டையோ, முட்டைகளையோ, கோழிக் குஞ்சுகளையோ பரிசளித்திருப்பதாகக் கூறுகிறார். திறந்து பார்த்தால் Zyngaவின் Farmville எனும் விளையாட்டு அழைப்பு. அதாவது வர்ச்சுவல் உழவராகி உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் நிலத்தை உழுது பயிரிட்டுக் காப்பாற்ற வேண்டும். ரொம்பவும் சுலபமான விளையாட்டு. மவுஸைத் தட்டிக்கொண்டே இருந்தால் போதும். நம்பர்கள் மாற நெல் சாகுபடி செய்துவிடலாம். இத்தனையும் facebookல். கிட்டத்தட்ட 7 கோடி பேர் விளையாடும் உழவர் சந்தை.

இது கன்னாபின்னாவென்று பிரபலமாகி Zyngaவிற்கு கூகிள்காரர்கள் 20 கோடி டாலர்கள் அளித்திருக்கிறார்கள். மற்ற விளையாட்டு கம்பெனிக்காரர்கள் காதில் புகை. அவர்களின் குற்றச்சாட்டு, “வெறும் மவுஸைத் தட்டிக் கொண்டே, எந்த விதமான சுவாரசியமும் இல்லாத இந்த மாதிரி விளையாட்டுகள் அதிகமாகி, இந்தத் துறையிலுள்ள கற்பனைத் திறனை காணாமல் செய்து விடும்” என்பதுதான். இதே மாதிரி இன்னும் சில வருடங்களில் கோடம்பாக்கத் தெருக்களில் ரோபோக்கள் அலைக்கழிக்கப்பட்டு வேலைக்கு ஆளெடுக்கும் க்யூக்களில் நிற்கப் போகின்றன. ஜாக்கிரதை.

ooOOOO00

நான் மகான் அல்ல. நகநுனியில் எழுதிவிடக்கூடிய கதை. அதை இரண்டு மணி நேரப் படமாக எடுத்ததே பெரிய விஷயம். அதிலும் முதல் 90 நிமிடத்திற்கு ஒன்றுமே நடக்கவில்லை. கதை கால் இஞ்ச் நகரக் கூட அடம்பிடிக்கிறது. ஆனாலும் பொறுமையாக எந்தவித சினிமாத்தனமும் (கிளைக் காதல் கதையைத் தவிர) இல்லாமல், பிரமாதமாகச் செய்திருக்கிறார்கள். கடைசி அரை மணி நேரத்திற்கு வெறும் அட! மட்டுமே சொல்ல முடிந்தது. அதுவும் அந்த நாலு பேரும் சுற்றி வர, கார்த்தி ஏறெடுத்து பார்க்கும்போது யுவனின் எலக்ட்ரிக் கிட்டார் அதகளம் பண்ணுகிறது. யதார்த்தமான க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள்.

கொஞ்சம் கூட ஹீரோத்தனம் இல்லாமல் திரைக்கதை அமைப்பதற்கும் அதில் நடிப்பதற்கும் தைரியம் வேண்டும். டைரக்டர் சுசீந்திரனுக்கு இந்த வருட ஸ்பெஷல் பாராட்டு.

ooOOOOoo

கொலுவுக்குக் கூப்பிட்டிருந்த நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். தெருவடைச்சானாக கார்கள் நின்றுகொண்டிருக்க, திருவல்லிக்கேணி ஸ்பெஷல் ப்ளாஸ்டிக் தோரணங்களும் மாவிலைகளும் தொங்கவிடப்பட்டிருந்த அவர் வீட்டினுள் ஏகக் கூட்டம்.

முன் அறையில் சரிகை வேட்டி போர்த்தப்பட்ட படிகள் வைத்து, அழகான பொம்மைகள் கூட்டம்.  உள்ளே போய் சுண்டலும், பைனாப்பிள் கேசரியும் எடுத்துக் கொண்டேன். அங்கே ஆண்கள் H1B, EAD கவலைகளை பேசிக்கொண்டிருக்க, “ஏய் படம் பார்த்தியாப்பா?”, “அத்து சொன்னோல்லியோ, don’t jump கண்ணா”, பெண்கள் சிலர் கேரம் போர்ட் ஆட, சிறுவர்கள் சிலந்தி ரோபோ பொம்மைகளை ரிமோட்டால் இயக்க, பட்டுப் பாவாடை குட்டிப் பெண்கள்  தாவித் தாவி குதித்துக்கொண்டிருக்க, முன் அறையிலிருந்த கொலு வரிசை ரங்கநாதரும் கருமாரி அம்மனும் சீரான பளிச் கருப்பு கலரடிக்கப்பட்டு ஆதிசேஷனுக்குத் தங்க முலாம் பூசப்பட்டு, மூன்றாம் படியில் அமைதியாக உட்கார்ந்திருக்க, அது நடந்தது.  இந்த குதூகலமான களேபரத்திலும் கிருஷ்ண பஜன் பாடி தம்புரா வாசித்துக்கொண்டிருந்த மீரா பொம்மை சட்டென தலை திருப்பிச் சிரித்தது. நிஜமா!

ooOOOOoo

அலைபாயுதே!
நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த வரவேற்பை வைத்து கூகிள் வேவ்வை கொஞ்சம் வேவு பார்க்க முடிந்தது. முதலில், நண்பர்கள் இல்லாமல் வேவ் வீண். நண்பர்களுடன் கூடிப் பேசுவதற்கும், விவாதம் செய்வதற்கும், எதையாவது டிசைன் செய்வதற்கும் கூகிளின் அடுத்த தலைமுறை தகவல் பரிமாற்ற இஞ்சின். இதைத் தவிர ரியல் டைம் டாகுமெண்டேஷன் போன்ற விஷயங்கள்.

இதெல்லாம் இமெயிலிலும், இன்ஸ்டண்ட் மெஸஞ்சரிலும்(ஐஎம்) சாத்தியமே. சாட்டில் இல்லாத எதை இதில் கண்டீர் ஐயா என்று கேட்கலாம். சாட்டில் உங்களுடன் பேசும் நண்பர் டைப் செய்யும் போது, அவர் இப்போது டைப் செய்கிறார் என்று ஒரு செய்தி உங்களுடைய சாட் விண்டோவில் தெரியும். வேவ்வில் அவர் என்ன டைப்பிக் கொண்டு இருக்கிறார் என்று கூட தெரியும்.

யோசித்துப் பாருங்கள், கேர்ள் ப்ரண்டுடன் வேவிக்(தமிழ் கூறும் நல்லுகத்திற்கு மற்றுமொரு அகராதி வார்த்தை) கொண்டிருக்கும் போது, “தீபாவளிக்கு எங்க கூட்டிக்கிட்டு போகப்போறடா?” என்று கேட்க, ஆதவனுக்கு பர்ஸ்ட் ஷோ போக நினைத்துக் கொண்டிருக்கும் நீங்கள், “சத்தியமா எங்கேயும் இல்ல” என்று டைப் அடிக்கும் போது தான் உரைக்கும் நீங்கள் டைப் அடிப்பது அப்படியே அங்கே தெரியும் என்று. என்னதான் அதை மாற்றி, “சத்தியமா எங்கே வேணும்னாலும்” என்று அடித்தாலும், உங்களுடைய உயிருக்கு பாதுகாப்பில்லை.இந்த மாதிரி இன்னொரு முனையில் எழுதிக் கொண்டிருப்பவரை second guess பண்ண வைக்கும் ஒரு வஸ்துவை கண்டுபிடித்த ப்ரகஸ்பதியை என்ன செய்யலாம்.

யோசித்துப் பார்த்தால், கூகிளுக்குத் தான் இது ரொம்பவும் முக்கியம். யார் எந்த விஷயத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார், பேசிக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தால் தங்களுடைய விளம்பரங்களை இன்னமும் சரியாக குறி பார்த்து வழங்க முடியும். கார் பற்றி வேவும் நண்பர்களுக்கு, பேசிக் கொண்டிருக்கும் போதே, அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து, அவரவரின் வீட்டின் அருகே இருக்கக் கூடிய கார் விற்பனையாளர்களின் சலுகை விளம்பரத்தை அளிக்க முடியும். கூகிளின் பற்பல இணைய சர்வீஸ்களுக்கும் காரணம், வரி விளம்பரங்கள்.

போகப் போக வேவ் போன்ற விஷயங்கள் வாழ்க்கை முறையாகிப் போகலாம். ஆனால் அவசர உலகத்தை, டைப் செய்யக் கூட விடாமல் மேலும் அவரசமாக்கிய கூகில் வேவிற்க்கு ஒரு தற்காலிக அபவுட்டேர்ன்.

ப்ளாகிங் redux
ப்ளாகிங் அன்றும்…..இன்றும்.

சுஜாதா ஒரு முரண்நோக்கு
தமிழிலக்கியத்தில் முத்தெடுக்கும் மகானுபாவர்கள் சிலர், சுஜாதாவின் மறைவிற்கு பின், வெகுஜன வணிகத்தளத்தில் தனக்கும் இனி இடம் கிடைக்கலாம் என்று நினைத்தவர் பலர். அதற்கு முதல்படியாக, சுஜாதாவைப் பற்றி ஒரு நல்ல அஞ்சலி எழுதி, அவரை தனது ஆசானாக காட்டிக்கொண்டு, வெகுஜன ஊடகத்தில் ஆதாயம் தேட ஆரம்பித்தார்கள். சுஜாதா இருக்கும்வரை ஓரிரு வார்த்தைகள் கூட எழுதாதவர்கள், திடிரென்று, கையில் கிடைத்த கணையாழியின் கடைசி பக்கங்களை படித்து விட்டு, நான் அவருடைய வாரிசு தான். அவருடைய நடையும், கருத்தாக்கமும் அவருக்கு பிறகு எனக்குத் தான் உண்டு என்று எழுதிய அ.கைகள் பலர். சுஜாதா பாணியில், அவர்களை பசித்த புலி பதம் பார்க்கட்டும்.

இதற்கு நேர் எதிராக, சுஜாதாவின் மறைவிற்கு பின்னும் அவர் மேலுள்ள கோபங்களை கொட்டித் தீர்த்தனர் பலர். அப்படி ஒரு கோபக் கொட்டித்தீர்த்தலாகத் தான், காலச்சுவடு கண்ணணின், சுஜாதா ஒரு முரண்நோக்கு, என்று அஞ்சலியை பார்க்க முடிகிறது.

“சார்!! உங்களுக்கு தான் அப்படி தோணுது, ஏன்னா உங்களுக்கு சுஜாதாவை ரொம்ப பிடிக்கும்”, என்று சொல்பவர்கள், கண்ணனின் இந்த கட்டுரையை படித்துப் பார்க்கலாம். அவர் கூறும் முரண்நோக்குக்காண காரணங்கள் அக்கட்டுரையில் கிடைப்பதரிது. துணுக்குத் தோரணமாகவே எனக்குத் தோன்றுகிறது.

தீவிர இலக்கியத் தளத்திலிருந்து வெகுஜன எழுத்திற்கும் வணிக சினிமாவிற்கும் நகர்ந்துவிட்டவர்களும் நகர்வதற்குக் கொதி போட்டுக்கொண்டிருப்பவர்களும் சுஜாதாமீதும் அவர் மறைவுக்குப் பின்னர் அவர் எழுத்தின் மீதும் கொண்ட திடீர் கரிசனம், ந ட்சத்திர ஒளி அவர்கள் விமர்சனக் கண்களைப் புண்ணாக்கிவிட்டதன் அடையாளம். இலக்கியத் தளத்தில் சுஜாதாவின் இடத்தை அவரது எழுத்தின் தரம் தீர்மானிக்கும். அதிகாரமும் நட்சத்திர ஆதரவும் அதிக காலம் அவருக்கு முட்டுக்கொடுக்க முடியும் எனத் தோன்றவில்லை.

என் பார்வையில் அறிவியல் தமிழை முன்னெடுப்பதே சுஜாதாவுக்குச் செலுத்தப்படும் ஆக்கபூர்வமான அஞ்சலியாக இருக்கும். அந்த முன்னெடுப்பு கடந்த சில பத்தாண்டுகளாக அறிவியல் என்ற ‘முழு உண்மை’மீது எழுப்பப்பட்ட கேள்விகளையும் விவாதங்களையும் – சுஜாதா முற்றாகப் புறக்கணித்த அல்லது அறிந்துகொள்ளாத உரையாடல் இது – உள்ளடக்கியதாக இ ருக்க வேண்டும். தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் இயங்கும் மரண வியாபாரிகளின் ஆட்டங்கள் முடிந்த பிறகு இந்தப் பணியை அவரது ஆத்மார்த்தமான அன்பர்கள் முன்னெடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

கடைசி இரண்டு பத்திகளில் கண்ணன் சொல்லும் விஷயம் புரிகிறது. மரண வியாபாரிகளின்[Merchants of Death] என்று யாரை சொல்கிறார் என்று தான் புரியவில்லை. புரிந்தால் சொல்லுங்கள்.

தசாவதாரத்தில் சுஜாதாவின் பங்குப் பற்றி சில சமயங்களில், கற்றதும் பெற்றதும் கட்டுரையில் அவரே குறிப்பிட்டிருந்தார். சுஜாதா எழுதியதிலிருந்து பார்த்தால், படத்தின் கதை திரைக்கதையோடும் நெருக்கமாக இருந்தார் என்று தெரிகிறது.

படத்தின் பூஜை விளம்பரத்தில், சுஜாதாவும் கிரேஸி மோகனும் இருந்தார்கள். படத்தின் டைட்டிலில் இருவரும் இல்லை. படம் வரும் போது சுஜாதாவும் இல்லை. கமல் காரணம் சொல்வாரா என்று தெரியாது. வேண்டுமானால் தேசிகனை கேட்டுப் பார்க்கலாம். அல்லது பெருமாளைத் தான்.

சுஜாதாலஜி தளத்திற்கு உள்ளடக்கங்கள் திரட்டிக் கொண்டிருக்கிறேன். பேசாமல் தளத்தை wiki ஆக்கி விட்டால், என்னுடைய நேரமின்மையால் இக்காரியம் பாதிக்கப்படாது என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் சுஜாதாவின் எழுத்துக்களுக்கு நேர்மையாக எழுதப்படும் எதிர்மறை விமர்சனங்களுக்கும் இடம் கிடைக்கும்.

இயந்திரா 4 – டுவிட்டர் குழப்பங்கள்
டுவிட்டர் உபயோகிப்பதில் குழப்பங்கள் இருப்பதை பரவலாக காண முடிகிறது. ப்ளாகர் தளத்தை தொடங்கி, பல்லாயிரம் கணிப்பொறியாளர்கள் வலைப்பதிவுகளில் அபாயகரமான அளவு நேரம் தொலைப்பதற்கு வித்திட்ட ஜன்மங்கள்[1,2], ப்ளாகரை கூகிளிற்கு விற்றுவிட்டு, அடுத்த நே.தொ முயற்சி தான் டுவிட்டர்.

நூற்றி நாற்பதே எழுத்துக்களில், வார்த்தைகளில் அல்ல, எழுத்துக்களில், நீங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உலகுக்கு உரைப்பதே டுவிட்டர். ஒரு குறும் வலைப்பதிவுச் சாதனம். பல் தேய்க்கலாம், மூக்கை சிந்தலாம், ஐஸ் க்யூப்பை மெல்லலாம், படிக்கலாம், பந்தாடலாம், மோட்டு வளையை அளக்கலாம், ப்ளாகலாம் என்று என்ன ‘முக்கியமான’ விஷயமாயிருந்தாலும், உங்களை பின்தொடரும்(follow) நண்பர்களுக்கோ, விஷமிகளுக்கோ உரக்கச் சொல்லும் சாதனம். மிக முக்கியமான செய்தி, உங்களின் டுவிட்டர் எழுத்துக்கள் எல்லாம், உடனுக்குடன் உங்களை பின் தொடர்பவர்களுக்கு மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்ஸாக போய்விடும்.

Who the hells wants to follow to me , என்று கேட்பவர்களுக்கு ஒரு அரியசிறிய செய்தி. டுவிட்டரில் தற்போது இருப்பது சில மில்லியன் பயனர்கள். நாளொன்றுக்கு சில மில்லியன் டுவிட்ஸ்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். டுவிட்டரை சுற்றி ஒரு டுவிட்டர் ecosystemமே வந்து விட்டது. ஆகவே உங்களை பின்தொடர்வதற்கு நீங்கள் ஜார்ஜ் க்ளூனியாகவோ, ஜெனிபர் லோபஸாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட டுவிட்டர் அக்கவுண்டுகளை வைத்துக் கொண்டு, ஒன்றில் நான் கோயம்புத்தூரில் பஸ்சில் சைட் அடித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் மற்றொன்றில் கோயம்பேட்டில் காய்கறி பேரம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றும் டுவிட்டர் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

140 எழுத்துக்களில் ஒரு விஷயத்தை பற்றி சொல்லுவது கிட்டத்தட்ட சாகசம்(சாகஸம் என்று சொல்வது பிடித்திருக்கிறது, தமிழ் காமிக்ஸ்களில் எழுதப்படுவது இப்படித்தான்). யார் தெச்ச சட்டை எங்க தாத்தா தெச்ச சட்டை தாத்தா தெச்ச சட்டையில பார்த்தா மூணு முட்டை யார் தெச்ச சட்டை எங்க தாத்தா தெச்ச சட்டை தாத்தா தெச்ச சட்டையில பார்த்தா மூணு முட்டை என்று இரண்டு முறை தொடர்ந்து எழுதினாலே 166 எழுத்துக்கள் ஆகிவிடுகின்றன. ஆகவே சுருங்கச் சொல்வது என்பது கஷ்டமாயிருந்தாலும் கிட்டத்தட்ட பழக்க/வழக்கமாகிவிட்டது. Diminishing rate of attention spanஐ எற்படுத்திய வலைப்பதிவுகளுக்குப் போட்டியாக 140 எழுத்துக்களுக்கு மேல் படிக்கத் தேவையில்ல்லாத அவசரப் புரட்சியின் தற்கால கருவி தான் டுவிட்டர்.  டுவிட்டரின் தலைவர் ஜாக் டார்ஸி, டுவிட்டருக்கான் ஒரு பரிசை வாங்கும் போது சொன்னவை இவை, “We’d like to thank you in 140 characters or less. And we just did!”.

குழப்பங்கள் தான் சில/பலரை டுவிட்டரில் இருந்து ஓட வைக்கிறது. டுவிட்டரின் ஆதாரமான கேள்விகளுக்கு மக்கள் விடை எழுதுவது கிட்டத்தட்ட வழக்கொழிந்து விட்டது. What are you doing ? என்பதற்கு யாரும் பதிலளிப்பதில்லை, என்னையும் சேர்த்து. Kangal Irandal is over-rated. Lack of good numbers in contemporary tamil cinema made this a hit. Raja should be back என்று நான் சமீபத்தில் ஒரு டுவிட் எழுதினேன். இதற்கும் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கும் என்ன சம்பந்தம். கண்கள் இரண்டால் பாட்டை கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று எழுதி, இதை பின்னால் எழுதினால் 140 எழுத்துக்கள் முடிந்துவிடும் என்பதால், சுருங்கச் சொல்லப் போய், விளைவு டுவிட்டர் அதன் ஆரம்ப விஷயத்திலிருந்து தள்ளிப் போய் விட்டது. அடுத்த டுவிட் செய்வதற்கு முன், டுவிட்டரின் கேள்விக்குத் தான் பதிலளிக்கிறீர்களா என்று ஒருமுறை உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

முன்னால் சொன்ன மாதிரி ஒரு குறும் வலைப்பதிவுச் சாதனமாகிப் போய், நீங்கள் எழுதுவதற்கு மற்றவர்கள் எழுதும் பதில் டுவிட்கள் எல்லாம் சேர்ந்து ஒரு களேபரமாக ஆகி, அதைப் படிக்கும் உங்களின் பாசக்கார பின்தொடர்பவர்கள் குழம்பிப் போய் பின்னங்கால் பிடரியில் பட ஓடுகிறார்கள். மிகச் சமீபமாக தமிழ் வலைப்பதிவுலக ஆர்வலர்கள் எல்லோருமாக டுவிட்டருக்கு படையெடுத்து, யூனிகோடில் டுவிட்டரை சுளுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மகா குழப்பம்ஸ்.

இன்னும் கொஞ்ச நாளில் டுவிட்டரில் என்னவெல்லாம் நடக்கும் என்று சற்றே யோசித்துப் பார்த்தால் -

லியோ தல்ஸ்தோயின் அன்னா கரினினா தலையணை சைஸ் புத்த்கத்தை, தினம் ஒரு டுவிட்டராக பிரித்து தரும் வலைத்தளங்கள் வரலாம். அதிலுள்ள 350,296 வார்த்தைகளை தினம் ஒரு டுவிட்டராக வருவதற்குள் உங்களின் பேரன் வெர்ஜின் ஸ்பேஸ்ஷிப்பேறி வீனஸ் கிரகத்திலிருந்து டாட்டா காட்டுவான்.

ஒரே டுவிட்டர் மெசேஜில் காதல் கடிதமெழுதுவதெப்படி என்று வலைதளங்கள் புழக்கத்திற்கு வரலாம். டுவிட்டரிலேயே மீட் செய்து திருமணம் செய்து கொண்ட்வர்கள் ஜாயிண்ட்-டுவிட்ஸ் செய்வார்கள்.

Watching Simran cry on Jaya Tv என்று தாய்க்குலங்கள் மெகாசீரியல் முன்னேறங்களை மினிடுவிட்டராக எழுதி பகிர்ந்து கொள்ளலாம்.

தினம் வரும் ஆயிரமாயிரம் டுவிட்டர்களிலிருந்து, டாப்-டென் டுவிட்டர்கள் என்று தேர்தெடுத்து நியுயார்க் டைம்ஸ் செய்தித்தாளில் வெளியிடும்.

அம்பயர் போங்கடிக்கிறார் என்று தோனி மைதானத்திலிருந்து டுவிட்ஸ் அனுப்பலாம்.

வட சென்னை மாமூக்கள், போட்டுத் தள்ளுவதற்கு முன், Approaching the target in the Royapettah T.stall. Wait for the next tweet என்று நகங்கடிக்க செய்கிற மாதிரி குற்ற-டுவிட்டுகள் அனுப்பலாம்.

ஆக இந்த டுவிட்டர் தொந்தரவுகள் அடங்குவதாக காணோம். முடிந்தவரையில் ஓதுங்கி நின்று அவ்வப்போது எட்டிப் பார்ப்பதே சாலச் சிறந்தாக தோன்றுகிறது.

பி.கு – இந்த பதிவில் இருக்கும் எழுத்துக்கள் 4,806. டுவிட்டர் மெசேஜாக்கினால் மொத்தம் 34.5 டுவிட்டர்கள். உங்கள் இஷ்டம்.

படிப்பது – ஸ்லேட்
நேற்றைக்கு ஸ்லேட்[Slate] படித்துக் கொண்டிருக்கும் போது, அதைப் பற்றி முன்னமே சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றியது.

இணையத்தில் ஓடியாடி தேடிப்பிடித்து படிக்கும் பழக்கம் கொஞ்சம் போரடிக்க ஆரம்பித்த போது, அதாவது இப்போது இருக்கும் அளவுக்கு தேடல் வசதியோ, வலைப்பதிவுகளோ இல்லாத 1999ல், அருந்ததி ராய் பற்றி தேடும் போது, லக்ஷ்மி கோபாலகிருஷ்ணன் எழுதிய Booker Snooker பத்தி கண்ணில் பட அறிமுகமானது தான் ஸ்லேட். குமுதம் ஆனந்த விகடனுக்கு பிறகு இன்னமும் விடாமல் படித்துக் கொண்டிருப்பது ஸ்லேட் மட்டும் தான். தினமும் படிக்க முடியாவிட்டாலும், நம்மூர் மாமாக்கள் சொல்வது போல, ஹெட்லைனாவது பார்த்து விடுவேன். இதைப் போலவே இன்னும் ஒன்றிரண்டு மின்னிதழ்கள்[Salon, Plastic] முன்பு படித்து கொண்டிருந்தேன். சுருக்கமாய், அமெரிக்காவின் ஒரே ஒரு no-nonsense மின்னிதழ் ஸ்லேட் தான்.

மின்னிதழ் என்றால் சி.என்.என் போலவோ என்.டி.டிவி மாதிரியோ, செய்திகளை உடனுக்குடன் தந்து காசு பார்க்கும் தளமல்ல. எந்த செய்தி நிறுவனத்துடன் இணையாமல் சுதந்திரமாக, சில எடிட்டர்களின் மேற்பார்வையுடன் பிரசுரிக்கப்படும் மின்னிதழ் அல்லது செய்தி சஞ்சிகை. இப்படி நிருபர்கள் அல்லாத எழுத்தாளர்களால் எழுதப்படும் மின்னிதழ்களை படிக்கும் போது அறிமுகமான வலைப்பதிவுகள் வசீகரமான ஒரு யோசனையாக தெரிந்தன. இப்போதும் அப்படித்தான் என்று சொல்ல முடியாது.

Slateல் வெறும் செய்தியாக எதை தேடினாலும் கிடைக்காது. ஒரு செய்தியை சார்ந்த காமெண்டரிகளால் ஆனதே ஸ்லேட். எந்த ஒரு செய்தியைப் பற்றியும் அபிப்பிராயம் கொண்டவர்களால் எழுதப்படுகிறது.  உதாரணத்திற்கு அணுசக்தி ஒப்பந்தத்தை பற்றியோ, இந்தியாவின் பணவீக்கத்தை பற்றியோ அபிபிராயங்கள் கொண்ட ஒரு எழுத்தாளர் அதைப் பற்றி ஆராய்ந்து எழுதும் பத்திகள். கிட்டத்தட்ட வலைப்பதிவுகள் மாதிரி. ஆனால் அதுவும் அல்ல. செய்திப் பத்திரிக்கைகளுக்கும் வலைப்பதிவுகளுக்கும் நடுவே எங்கேயோ இருக்கிறது ஸ்லேட்டின் ராஜ்ஜியம்.

ஸ்லேட்டில் ரொம்பவும் பிடித்தது அதீத பாசாங்குகள் இல்லாமல் எழுதப்படும் டெக்னாலஜி மற்றும் கலை விமர்சனங்கள். பயணக்கட்டுரைகளோ கடைத்தெரு சமாச்சாரங்களோ எல்லாவற்றையும் பற்றி ஸ்லேட்டில் விஷயமுண்டு. சில சமீபத்திய உதாரணங்கள் – 1 2, 3,4 & 5.

இவை எல்லாவற்றிகும் மேலாக ஸ்லேட்டின் கார்டூன்கள். ஒவ்வொரு பத்திக்கும் கிழே கொடுக்கப்படும் Related on the Web என்கிற சுவாரசியமான பத்தியும் படிக்கப்பட வேண்டியன. ஸ்லேட்டை RSS செய்தியோடை மூலம் உங்களின் RSS ரீடரில் படிக்கலாம்.

மைக்ரோசாப்ட்டிடம் இருந்து ஸ்லேட்டை சமீபத்தில் தான் வாஷிங்கடன் போஸ்டு வாங்கியது. அப்படி வாங்கியிருந்தாலும், எந்த குறுக்கீடும் இன்றி ஸ்லேட் சுதந்திரமாக செயல்பட காரணம், ஸ்லேட்டின் விளம்பரங்கள்.

தமிழில் மட்டும் ஸ்லேட் போல ஒரு மின்னிதழ் எழுதி காசு பார்க்க முடியாது.அதனால் இந்தியாவிற்கு ஸ்லேட்டை போல ஒரு மின்னிதழ் தேவை. சுதந்திரமாகவும் பிரபலமாகவும் இருக்கும் மின்னிதழ்கள் இந்தியாவில் இல்லவே இல்லை. ஸ்லேட்டை போல எதாவது இருந்தால் சொல்லுங்கள் படிக்கிறேன்.

பி.கு – தேடிப் பார்த்ததில் ஸ்லேட்டு.காம் – slatu.com இன்னமும் இருக்கிறது. தமிழில் எழுதலாம். slatulu.com கூட இருக்கிறது. தெலுங்கில்.

கிறுக்கல் 2.0
ஆக ஒரு வழியாக மூவபிள் டைப்பிலிருந்து(MT)  வேர்ட்ப்ரஸ்ஸுக்கு(WP) கிறுக்கலையும், அந்தப் பக்கத்தையும் ஜாகை மாற்றியாகிவிட்டது. கிறுக்கலுக்கு இது முதல் மாற்றம். அந்தப் பக்கத்திற்கு இது மூன்றாவது.

நான்கு வருடங்களாக பயன்படுத்திய மென்பொருளை அப்படியே தூக்கிப் போட முடியவில்லை. அதாவது, மூவபிள் டைப்பில் நான் நாளொரு மேனியாக கட்டிய டெம்பிளேடுகைள விட்டுவிட முடியாமல், அதற்காக மெனக்கெட்டு(மெனகட்டு ?) அதே look and feelலோடு வேர்ட்பிரஸ்ஸிலும் கட்ட கொஞ்ச நாளாகிவிட்டது.

மூவபிள் டைப்பில் வலைப்பதிவு செய்வது நன்றாகவே இருந்த போதிலும், சமீபத்திய வெளியிடான MT 4.0 இருந்த பிரச்சனைகளால், பல பதிவுகள் எழுதும் போதே காணாமல் போய் விட்டன. கிறுக்கலில் எழுதி வைத்திருந்த சில பதிவுகள் பூச்சி பூச்சியாக மாறின. அதனால் எழுதுவதை கிடப்பில் போட்டு விட்டு, ஒரு ரெண்டு வாரம் லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு வேர்ட்பிரஸ் டெவலப்பராகி விட்டேன். இனி எல்லாம் சுகமே !!

2002ன் ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் வலைப்பதிவு எழுத ஆரம்பித்த போது இதைப் போல வலைப்பதிவு மென்பொருள்கள் உபயோகத்தில் இல்லை. அப்படியே இருந்திருந்தாலும் எழுத ஆள் இல்லை.

இணையத்திலேயே எழுதி அப்படியே பட்டனைத் தட்டி(one-button publishing) பதிவு செய்யலாம் என்கிற விஷயம் தான் ப்ளாகரில் என்னை ரொம்பவும் கவர்ந்தது. அதற்காகவே மட்டும் தான் எழுத தொடங்கினேன். முதலில் வைத்திருந்தது ரொம்பவும் காடியான கலர்கள் கொண்ட, ரொம்பவே கிரேஸியான டெம்பிளேட். அது பிடிக்காமல் முதல் மூன்று மாதத்தில் மாற்றி விட்டேன். அதற்குப் பிறகு வந்தது தான் இந்த டிஸைன். இது 2005ல் கொஞ்சம் தளுக்காக மாற்றப்பட்டது. பின்பு போன வருடம் வரை இது நிலைத்துப் போனது.

2006ல் கிறுக்கல் எழுதலாம் என்று ஆரம்பித்த போது, ஒரு எளிமையான டிஸைன் தேவலாம் என்று தோன்றியது. மூவபிள் டைப்பில் இருந்த minimalist என்ற டிஸைன் ரொம்பவும் பிடித்துப் போக, அதை எடுத்து இன்னமும் எளிமைப்படுத்தி உருவானது தான் இந்த டிஸைன். நண்பர்கள் சிலருக்கு பிடிக்காமல் போனாலும், இதை வைத்துக் கொண்டிருக்க காரணம், எளிமை.

தேவைக்கு அதிகமான சைட்பார் விஷயங்களுடன், தேவைக்கு மிக அதிகமான விளம்பரங்களுடன் இருக்கும் சில் வலைப்பதிவுகளில் எது பதிவு எது மற்றது என்று தெரியாமல் போய்விட்ட காலத்தில், ஒரு ideal blog  எப்படி இருக்க வேண்டும் என்று கொஞ்சம் கோபத்தோடு நினைத்து கட்டியது தான் இந்த கிறுக்கல் டிஸைன்.

மேலும் தற்போது வலைப்பதிவுகளை படிப்பவர்கள், RSS செய்தியோடை மூலமாகத் தான் படிக்கிறார்கள்.  படிப்பவர்கள் இனி அந்தந்த தளங்களுக்கு சென்று படிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. Content is the king. ஆக டிஸைன் எப்படி இருந்தால் என்ன.

இந்த தளத்திற்கு இது மூன்றாவது வருடம். போன இரண்டு வருடங்களில் ஒன்றும் பெரியதாக எழுதி கிழித்து விடாததால், இந்த வருடம் இந்தப் பக்கத்தில் எழுதினாலே போதும் என்பது தான் எண்ணம்.