subbudu.com » இயந்திரா

சென்சார் தேவையா?
ஐபேடின் இரண்டாவது அத்தியாயம் ஆரம்பித்து விட்டது. வழக்கம் போல் கருப்பு டீஷர்ட் போட்டுக் கொண்டு, மெடிக்கல் லீவில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் வந்து பேசிவிட்டு, பேனை பெருமாளாக்கி விட்டு போனார். ஆண்ட்ராயிடை கூகிள்காரர்கள் குடைந்து கொண்டு இருக்கிறார்கள். திறந்தவுடன் அவ்வப்போது மறித்துப் போகிறதாம்.  மைக்ரோசாப்ட்காரர்களும் பின்தொடர்ந்து வருகிறார்கள் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது. இம்மாதிரியான பலகை கணினிக்களின் காலமிது.

ஊரு ரெண்டுபட்டால் என்று அமெசான்காரர்கள் எந்த ஆபரேடிங் ஸிஸ்டத்திற்கும் தன் கிண்டில் சாஃப்ட்வேரை ரெடி செய்து கொண்டு விடுகிறார்கள். ஐஓஎஸ்யிலும் ஆண்ட்ராயிடிலும் விண்டோஸிலும் ஓடுகிறது. அமெசானின் கிண்டில் இ-புத்தக படிப்பானிலும் இருக்கிறது. சமீபத்தில் இ-புத்தகங்களின் விற்பனை பேப்பர் புத்தகங்களை தாண்டி விட்டது என அறிவித்திருக்கிறார்கள்.

மின்புத்தகத்தில் இருக்கும் பாதகங்கள் சாதகங்களை மறைத்துவிடும் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன்.  போன வாரம் கிண்டிலில் ஆஸ்கர் வைல்டின் The Importance of Being Earnest என்ற குட்டி நாடகத்தை வாசித்தேன்.  மின் புத்தகங்கள் இம்மாதிரி நாவல்கள், நாடகங்கள் போன்ற இலக்கியங்கள் படிக்க உதவும் என்றே தோன்றுகிறது. முன்னும் பின்னும் அடிக்கடி திருப்பிப் பார்த்து படிக்கும் பாட புத்தகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் படிப்பதில் சிரம்ங்கள் இன்னமும் இருப்பதாக நினைக்கிறேன்.  யார் நினைத்தாலும்/விட்டாலும் பேப்பர் புத்தகத்திலிருந்து ஒரு இருபது வருடங்களிலாவது ஒரேடியாக மாறிவிடுவோம்.

0000

இந்திய சினிமாவிற்கு(உங்கள் துப்பாக்கியை கையிலெடுக்கவும்!)  சென்ஸார் தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஹாலிவுட் போல ரேட்டிங் சிஸ்டம் உதவலாம். ஆனால் ஹாலிவுட்டிலேயே இதை மாற்றி விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியவில் இயங்கும் சென்ஸார் வழக்கம் ஹாலிவுட்டிலிருந்தே வந்தது. ஆனால் அங்கேயோ 1968லேயே சென்ஸார் போய் ரேட்டிங் வந்து விட்டது. அதாவது முதலில் படத்தை பார்க்கிற எந்த கமிட்டியும் வறுத்த வேர்கடலையை கொறித்துக் கொண்டே நாயகியின் தொப்புளையோ, நாயகன் பேசும் நாராசமான வசனங்களையோ கட் செய்ய முடியாது.  தேசத்தில் இருப்பவர்கள் எதை பார்க்க வேண்டும் எதை கேட்க வேண்டும் என்பதை இருட்டு ரூமில் முடிவெடுக்க முடியாது. ஒரு கலைஞன் தான் எடுக்க நினைப்பதை எடுப்பதற்கும் அதை மற்றவர்கள் காண்பதற்கும் உரிமை இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் ரத்தம் இருக்கிறது, ஆறுபது கெட்ட வார்த்தைகள் இருக்கின்றன என படம் பார்த்து விட்டு ரேட்டிங் கொடுத்து விடுகிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பார்க்க அனுமதிப்பதற்கு இந்த ரேட்டிங்கள் உதவியாய் இருக்கின்றன.

இதை இந்தியாவிலும் செய்யலாம். தியேட்டர்களில் கொஞ்சம் கெடுபிடியாய் R(Restricted) ரேட்டிங் உள்ள படங்களுக்கு குழந்தைகளை அழைத்து வந்தால் உள்ளே விடாமல் திருப்பி அனுப்பி விடலாம். அப்படி இல்லையென்றால் இன்னமும் பத்து வருடங்களிலாவது ரேட்டிங் சிஸ்டம் போய் வேறெதாவது வந்து விடும். நேரடியாய் அதற்கு தாவி விடலாம்.  சமீபத்தில் ஆரண்யகாண்டம் என்ற படத்தில் கமல் ரஜினியை பற்றி வரும் வசனங்களை கட் செய்ய பரிந்துரைத்திருக்கிறார்களாம். நல்ல தமாஷ்.

0000

வாழ்கையில் எல்லாவற்றையும் விளையாட்டாய் மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.  Four Square என்னும் இணையதளத்திற்கு உங்கள் போனின் முலமாக சென்றால், நீங்கள் தற்போது எங்கு நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை GPS மூலம் அறிந்து கொள்ளும். அடிக்கடி ஒரு பொது இடத்திற்கு, உதாரணமாக அசோக் நகர் சரவணபவன்,  சென்று வருகிறீர்கள் என்றால்,  எப்போதெல்லாம் அங்கே போகிறீர்களோ அப்போதெல்லாம் Four Square  போய் வந்தால் அது கணக்கு வைத்துக் கொள்கிறது.  இதே போல் எல்லோரும் செய்கிறார்கள். மற்றவர்களை விட நீங்களே அங்கே அதிகம் போகிறீர்கள் என்றால், உங்களை அசோக் நகர் சரவணபவனின் மேயராக, விளையாட்டாக, Four Square நியமிக்கிறது. ஃபேஸ்புக்கில் உங்கள் நண்பர்களிடம் ஜெர்க் விட உபயோகமாக இருக்கும்.

இதேபோல் குழந்தைத்தனமாக இல்லாமல் உபயோகமாக வாழ்க்கையை விளையாட்டாக மாற்ற முடியுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். நல்ல உதாரணம் – அமெரிக்காவில் எல்லோர் வீட்டின் கரெண்டையும் கணக்கெடுத்து, அவர்களின் வீட்டின் அளவு, இருக்கும் எலக்ட்ரானிக் சாமான்கள், இருக்கும் இடம், தட்பவெப்பத்திற்கு ஏற்ப யார் குறைவாய் மின்சாரத்தை உபயோகிக்கிறார்கள் என்று கணக்கெடுத்து விளையாடுவது. அதையும் ஃபேஸ்புக்கில் பீற்றிக் கொள்ளலாம். நாடெங்கிலும் கரெண்டாவது மிச்சமாகும்.  இந்தியாவில் டிவி பார்ப்பதை கணக்கெடுக்கலாம்.

0000

ராபர்ட் ப்ராஸ்டின் கவிதைகளை ரொம்பவே பொறுமையாக படித்துக் கொண்டு வருகிறேன்.  இன்னமும் முடித்தபாடில்லை. ப்ராஸ்டின் Stopping By Woods on a Snowy Evening கவிதை நேருவினால் இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு க்ளீஷேவாகிவிட்டது.  அதையும் தாண்டி ப்ராஸ்ட் மழையில் நனைந்தபடி, இரவில் நடந்தபடி, புல்லில் படுத்தபடி, ஆற்றில் கால் விட்டபடி கன்னாபின்னாவென்று நல்ல கவிதைகளை எழுதித் தள்ளி இருக்கிறார்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இந்தக் கவிதையில் இருக்கிற அ-நேரடித்தன்மையை பாருங்கள். நெருப்பு மற்றும் பனிக்கட்டிகளுக்கு பதிலாக நீங்கள் எதை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். இது பைபிளைப் பற்றியது என்றும் உலக ஷேமத்தை பற்றிய கவலை என்றும் ”இல்லை இல்லை, இதைத் தான் சொன்னார்” என்றும் இன்று வரை விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இப்படி தொடர்ச்சியாக ஒரு எழுத்தாளனை/கவிஞனை படிக்கும் போது அவரின் எண்ணங்கள் சுலபமாக புரிகிற மாதிரி இருக்கும். ஒரேடியாக ப்ராஸ்ட் எழுதிய கவிதைகளை படிக்கும் போது எனக்கு இந்தக் கவிதை அவர் மனைவியின் மறைவைப் பற்றி பேசுவதாகவும் தோன்றுகிறது.

Fire and Ice – Robert Frost

Some say the world will end in fire,Some say in ice.

From what I’ve tasted of desire

I hold with those who favor fire.

But if it had to perish twice,

I think I know enough of hate

To know that for destruction ice

Is also great

And would suffice.

கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக எழுதிக் கொண்டிருக்கும் இந்த பத்தியை கொஞ்சம் இடைவெளிவிட்டு தொடர நினைத்திருக்கிறோம். மூன்று மாதங்கள் கழித்து தேர்தல், கிரிக்கெட்,  சுமாரான திரைப்படங்கள் மற்றும் நேரம் தொலைக்கும் இன்னபிற விஷயங்களை பேசலாம். இப்போதைக்கு  பை.

- இன்ன பிற பத்தி – March 15, 2011

பிரசண்டேஷன் தேவையா?
Stress எனப்படுவது என்ன நாம் யோசிக்கும் முன், ஸ்ட்ரஸ் பற்றி ஒரு நாளில் எத்தனை முறை கதைக்கிறோம் என்று யோசித்துப் பார்க்கலாம். ஆபீஸின் வாட்டர் கூலர் பேச்சுகளில், காபி குடித்துக் கொண்டே, லிப்டில் பயணிக்கும் போது, இஸ்திரி போடுகையில், மனைவியிடம், மானேஜரிடம், பங்குச் சந்தையில், பட்ஜெட் வேடிக்கையில் எனப் பலப்பல முறை ஸ்ட்ரஸ் ஆகிறோம் மற்றும் அதைப் பற்றி பேசுகிறோம். மனச் சோர்வு என்பது Stressன் சுமாரான தமிழாக்கம் மட்டுமே. மனத்தை தாண்டி பாதிக்கப்படுவதை விவரிக்காமல் விட்டுவிட்டது தான் மிகப்பெரிய தப்பு எனத் தோன்றுகிறது.

ஒரு மானோ வரிக்குதிரையோ மேய்ந்து கொண்டிருக்கிறது அல்லது வழக்கம்போல வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவைகள் ஒரு நாளில் மூன்று மணிநேரம் மட்டுமே தனக்கு தேவையான உணவு காலரிகளை தேடி அலைகிறது. மற்ற நேரம் வானத்தைப் பார்த்தபடியோ தன் மற்ற உறவினர்களை கொஞ்சியபடியோ செலவழிக்கிறது.  இந்த மானை இரை தேடி வரும் ஒரு சிறுத்தை துரத்தும் போது, விட்டதை போட்டு விட்டு உயிருக்கு ஓடும் அந்த ஓட்டம் தான் ஸ்ட்ரஸ். அது தான் அந்த மானுக்கு ஏற்படும் மிகப்பெரிய stressful situation.

அந்த நொடியில் அம்மானின் ஏற்படும் உடல் இயக்கத்தை சற்றே வேகம் குறைத்துப் பார்க்கலாம். சிறுத்தையை ஓரக்கண்ணில் பார்க்கும் வினாடியில் மானின் மூளை ஓடு எனக் கட்டளையிட, மற்ற அத்தனை உடல் இயக்கங்களும் சட்டென நின்று விடுகின்றன.  பசியோ உறக்கமோ மற்ற உடல் இச்சைகளோ தடைப்பட்டு அத்தனை ரசாயனங்களும் ஒன்று சேர்ந்து வேலை செய்வது நுரையீரலுக்கு ஆக்ஸிஜனை அனுப்புவதற்க்காகத்தான்.  அதன் மூலம் உடலெங்கும் ரத்தம் அனுப்பப்பட்டு தசை நார்கள் வேகமாக நகர மான் ஓட்டமாய் ஓடுகிறது. ஆக இந்த மிகக் கடினமான ஓட்டத்திற்காக மற்ற இயக்கங்கள் வழிவிடுகின்றன. ஓட்டத்திற்கு பிறகு…பிறகு என்பது அந்த மானுக்கு இருந்தால் சிறுத்தையிடம் இருந்து தப்பித்த இரண்டு அல்லது மூன்றாம் நிமிடத்தில் உடல் இயக்கங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுகிறது. ஸ்ட்ரஸ் போய் விடுகிறது.

நம்போல் எப்போதும் ஸ்ட்ரஸில் இருக்கும் ஒரு மனிதனின் உடல் எந்த மாதிரி கடும் உழைப்பிற்கு உள்ளாகும் என யூகித்தால் கூட ஸ்ட்ரஸ் வந்து விடும்.  மானின் அந்த பத்து நிமிட ஸ்ட்ரஸ் மனிதனுக்கு ஆறு மாதம் இருந்தால் கூட அவன் உடம்பிற்கு மேலும் இரண்டு வருடங்கள் வயதாகிவிடுவதாக சொல்லுகிறார்கள்.  அமெரிக்காவில் ஸ்ட்ரஸ் என்பதால் அல்சர் வருவாதாய்த் தான் அறுபதுகளில் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.  இருபது வருடங்கள் கழித்து தான் அதன் காரணம் புரிந்தது.  ஸ்ட்ரஸ் இருக்கும் போது மேலே சொன்ன உடல் இயக்கங்கள் தடைபடும் போது உடல் தடுப்பாற்றல் இழந்து எல்லாவிதமான பாக்டீரியாக்களும் வைரஸ்களும் உள்ளே நுழைய அல்சர் உட்பட எல்லா நோய்களும் வந்து விடுகின்றன.

கம்ப்யூட்டரும் கையுமாய் எதற்காகவோ எப்போதும் வேகமாய் நகர்ந்து கொண்டே பதட்டமாய் நடமாடுகிற இக்காலத்தில் ஸ்ட்ரஸ் என்பது இல்லையென்றால் ஒரு மாதிரி பார்க்கிறார்கள். எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு, நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்து கொண்டே, சதா இரண்டு கைகளால் சாப்பிடுபவனை நாமோ,” எப்படி சார் உங்களுக்கு இவ்ளோ டைம் இருக்கு” எனக் கேட்டு அவனை பெருமைப்படுத்தி சீக்கிரமே மேலே அனுப்ப தயாராக்குகிறோம்.  இதைத் தான் மனச்சோர்வு என்று சொல்வதை விடுத்து மகா-சோர்வு என உண்மை உரைக்கச் சொல்லாம். மகாசோர்வை ஒழித்துக் கட்ட முதல் கட்டம் அதைப்பற்றி அறிந்து கொள்ளுதல் தான். தனக்கு மகாசோர்வு ஏற்படும் தருணங்களை புரிந்து கொள்ளுதலும் அதை கழட்டி விடுவது எப்படி என முடிவெடுப்பதற்கு முக்கியம்.

0000

”நாளைக்கு ஒரு ப்ரசண்டேஷன் பண்ணனும் நீங்க…” என்று முடிக்கும் முன் உடனே பவர்பாயிண்டை திறந்து வைத்துக் கொண்டு மோட்டுவளைக் கவிஞர் போல யோசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.  பவர்பாயிண்டை சரியாக உபயோகிக்காமல் அதை வைத்துக் கொண்டு யோசிப்பதன் விளைவு தான் தாங்க முடியாத கருத்துரை,  வரவேற்புரை, பொழிப்புரை மற்றும் இன்னபிற உரைகள்.

பவர்பாயிண்ட் என்பது கடைசியில் வருவது. முதலில் வரவேண்டியது என்ன சொல்லப்போகிறோம், எப்படி சொல்லப்போகிறோம், ஏன் சொல்லப் போகிறோம் போன்ற தனக்கான கேள்விகள். இக்கேள்விகளை டிஜிட்டல் அல்லாத முறையில் விடையளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு வெள்ளைப் பலகையிலோ, போஸ்-இட்களிலோ எழுதப்படும் ப்ரசண்டேஷன்கள் திருத்தப்பட்டு கடைசியிலேயே பவர்பாயிண்டில் வரையப்படுகின்றன. இம்மாதிரி ப்ரசண்டேஷன் செய்வதற்காக நம்மை தயார்ப்படுத்தும் ஏராளமான புத்தகங்கள் மற்றும் டிசைன் பள்ளிகள் இருந்தும் மோசமான ப்ரசண்டேஷன்கள் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.  இதை சுலமாக்க நான்கு விதிகளை பயன்படுத்தலாம் என நினைக்கிறேன்.

முதலாவது,  சிங்கிள் டீ குடித்துக் கொண்டே, சொல்லப் போகிற விஷயம் என்ன என தீர்மானிப்பதும் மற்றும் உங்களின் நண்பர்கள் அல்லது குழுவுடன் விவாதிப்பது. அதாவது brainstorming.

2வது, மேலே சேர்க்கப்பட்ட எண்ணங்களை ஒரு முகப்படுத்துவது. உங்கள் வழங்குதலின்(presentation) முக்கிய கருத்து ஒன்றை தீர்மானிப்பது.  இரண்டு மூன்று இருபது கருத்துக்கள் சொன்னால் புரியாமல் போய்விடும். ஆக ஒரு ப்ரண்டேஷனுக்கு ஒரு முக்கிய கருத்து. அம்புடுதேன்.

மூன்றாவது, எப்படி வழங்கப் போகிறோம் எனத் தீர்மானிப்பது. Storyboarding. வெள்ளைத் தாளில் சொல்ல வருவதை கையினால் படம் போட்டு எழுதிக் கொள்வது. இது இல்லாமல் பவர் பாயிண்டை திறப்பது, ஸ்கிரிப்ட் இல்லாமல் ஷூட்டிங் போவது போல் அபாயகரமானது.  இந்த வகையில் முன்னும் பின்னும் மாற்றி மாற்றி வைத்து ஒரு வழியாக ப்ரசண்டேஷனின் வடிவம் வந்து விடுகிறது.

கடைசியாக பவர்பாயிண்டடுகள், கலர்கள், படங்கள், அனிமேஷன்கள் ஆகியன. அனிமேஷன் இல்லமல் புல்லட்டுகள் இல்லாமல் அதிகமாய் எழுதாமல் வெறும் படங்களாலேயே சொல்லப்படும் வழங்குதல்கள் தான் ரசிக்கப்படுகின்றன என்கிறார்கள். கதை கேட்டு வளர்ந்த ஜென்மங்கள் நாம். இது எல்லா வழங்குதல்களிலும் சாத்தியம் எனச் சொல்ல முடியாது. முடிகிற போது செய்யாதது தான் குற்றம்.

இவை எல்லாவற்றையும் தாண்டி ப்ரசண்டேஷன் என்றால் எதாவது படம் காட்டித் தான் பேச வேண்டும் என்பது அல்ல. முதலில் ப்ரசண்டேஷனே தேவையா என்ற கேள்வியை கேட்கலாம். வெறும் ஈமெயில் மெமோ அனுப்பினால் போதாதா? அல்லது ஒரு அறையில் ஒன்று கூடி பேசிவிடலாமா? இவையெல்லாம் முடியாதென்றால் வருகிறவர்களின் நேரத்தை மதித்தாவது எளிமையாக ப்ரசண்டேஷன் செய்ய முயற்சிப்பது ஒரு மினிமம் கடமை.

- இன்ன பிற பத்தி  March 1, 2011.

கடிகாரத்தை காணவில்லை
இந்த வருடம் டெக்னாலஜி பற்றி ஜல்லியடிக்க சில வார்த்தைகள்.

Cloud Computing (க்ளவுட் கம்ப்யூட்டிங்) – மேகக் கணினிச் சேவை என்று கூட அழகாகச் சொல்லலாம். ஆனால் ஐ.டி ஆட்கள் பயந்து போய் விடுவார்கள்.  கேள்விப்பட்டிருக்கிறீர்களோ இல்லையோ, இந்த கட்டுரையை இணையத்தில் படித்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக ஒரு முறையாவது டெக்னாலஜி மேகம் உங்கள் வாழ்வைத் தொட்டிருக்கிறது.

இந்த வருடம் நம்மை தொடப் போவது பர்சனல் க்ளவுட் எனப்படும் உங்களுக்கே உங்களுக்கான ஒரு தனி மேகம். அதாவது உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து வைத்திருக்கக்கூடிய பல வகையான புகைப்படங்கள், விடியோ மற்றும் அனைத்து பைல்களையும் இணையத்தில் சேமித்து வைக்கிற சேவை.  இப்படி ஸ்டோர் செய்வதினால் வரும் வருடங்களில் நீங்கள் உங்கள் கணினியை பேக்-அப் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பது முதல் நல்ல விஷயம். ஆக நீங்கள் எடுக்கிற ஆயிரமாயிரம் போட்டோக்களை உங்களுக்காக அவர்களின் டேட்டாசெண்டரில் சேமித்து வைக்கப் போகிறார்கள் க்ளவுட் கம்ப்யூட்டிங் கம்பெனிகள்.

இதற்காக பிரத்யேகமான மென்பொருள்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் வருகைக்குப் பிறகு, கணினிகள் டம்ப் டெர்மினல்களாகக்கூடும் (dumb terminal). அதாவது இணையத்துக்கு உங்களை கனெக்ட் செய்யும் உலாவி மட்டுமே இருக்கக்கூடிய ஒரு இயந்திரம். மற்றபடி நீங்கள் எக்ஸலில் வேலை செய்வதோ, படம் பார்ப்பதோ, பேக்-மேன் விளையாடுவதோ எல்லாமே இணையத்தில் தான். இதற்காக முப்பெரும் டெக்-தேவர்களான மைக்ரோசாஃப்ட், கூகிள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளன. உங்களை, கணினியை விட்டுவைக்க மாட்டார்கள். தயாராகுங்கள்.

Augmented Reality (ஆக்மெண்டட் ரியாலிடி) – டெக்னாலஜியில் வேலை பார்க்கும் ஐந்து பேரை இப்படி என்றால் என்ன என்று கேட்டால் ஆறு விதமாய் பதில் சொல்வார்கள்.  ரொம்பவும் எளிமையாக சொல்ல வேண்டுமானால், க்ராபிக்ஸை நம் வாழ்வில் கலக்கும் ஒரு பெருந்திட்டம் தான் ஆக்.ரியாலிடி. டெர்மினேட்டர். …ஏன் நம் எந்திரனில் கூட ரோபோவின் கண்கள் மூலம் பார்க்கும் போது அது பார்க்கும் ஆளின் எடை, பெயர் விலாச விவரங்கள் தெரிகிற ஸீன் ஞாபகம் இருக்கிறதா? அதே போல் உங்களாலும் செய்ய முடியும், கூடிய சீக்கிரம். அதாவது நம் நிஜ வாழ்வில் க்ராபிக்ஸையும்,  அதன் சத்தங்களையும் வாசனைகளையும் சூப்பர் இம்போஸ் செய்யப் போகிறார்கள்.

2009 TED எனப்படும் விஞ்ஞானக் கருத்தரங்கில் ப்ரணவ் மிஸ்திரி செய்து காண்பித்த வித்தைதான் இந்த இயலைத் தொடங்கி வைத்தது.  உங்களிடம் ஐ-போன் இருந்தால், அதிலுள்ள ஒரு அப்ளிகேஷனின் மூலம், நீங்களும் இந்த AR விளையாட்டை விளையாடலாம். அதாவது உங்களின் செல்போனை ஓப்பன் செய்து எதாவது ஒரு பில்டிங்கை நோக்கி காட்டினால், இந்த அப்ளிகேஷன், அந்த கட்டிடத்திலுள்ள கம்பெனிகள் எவை, எந்த மாடியில் மதிய உணவு கிடைக்கலாம், எந்த மாடியில் புகைக்கலாம் என்றெல்லாம் சொல்லிவிடும். அல்லது உங்கள் போனை ஒரு ரோடை நோக்கிக் காண்பித்தால், உங்கள் நண்பர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று வரைபடத்தில் காண்பித்து விடும். இதெல்லாம் ஆரம்பம் தான், ப்ரணவ் காண்பித்த விஷயங்கள் வந்து விட்டால், கணினி என்பதே தேவைப்படாது போலிருக்கிறது.  மைக்ரோசாப்டின் Aug. Reality விளம்பரம்.

இவை தவிர HTML5, வெப்ஸ்டோர், Quora,  கூகிளின் சோஷியல் நெட்வொர்க், விண்டோஸ் டேப்லட், இணையத்துக்கும் டிவிக்கும் திருமணம், Net Neutrality, 3டி டிவி,   clean tech,  மின் புத்தகங்கள் படிப்பான் போன்றவைகளை கேள்விப்பட்டிருந்தால் இணையத்தில் ஜல்லியடிக்கலாம். டுவிட்டர்-பேஸ்புக் தெரிந்திருந்தால் போதும். ஒரு பத்து பேராவது உங்களை தொடரவேண்டியது அவசியம்.  குட்லக்.

0000

நேரத்திற்கு நேரமாகிவிட்டது. இது புத்தகச் சந்தையில் வரப் போகும் புத்தகமல்ல, கைக்-கடிகாரத்தின் நேரம் முடிந்து விட்டது.  அதாவது இந்தக் கால இளைஞர்களிடம் மணிக்கட்டை காட்டி என்ன என்று வினவினால் பேந்தப் பேந்த முழிக்கிறார்கள். கைக் கடிகாரங்கள் இல்லாத கரங்கள் அவை.  இவர்கள் அலாரம் வைப்பதோ ஐ-போன் time app-ல் தான்.

கடிகாரம் கட்டுவது என்பது இக்காலத்தில் அழகிற்காகத்தான். யோசித்துப் பார்த்தால் நம்மைச் சுற்றி கணினி, செல்போன் என்று நேரம் காட்டுகிற விஷயங்கள் பல வந்து விட்டன, ஆகையால் கைக்-கடிகாரம் கட்டுவது குறைந்து போய்விட்டது என்கிறார்கள். கடிகாரக் கடைகள் இனிமேல் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கின்றன.

என் முதல் கைக்கடிகாரம், ஐந்தாம் வகுப்பின்போது அத்தைமார்கள் வாங்கிக் கொடுத்தது. அதைப் போட்டுக்கொண்டதாக ஞாபகம் இல்லை. எங்கே போயிற்று என்றும் தெரியவில்லை. பன்னிரண்டாம் வகுப்பின்போதுதான், நானாக விரும்பி கடிகாரம் கட்டியது. Allwyn கம்பெனியின் Trendy ப்ராண்ட் கைக்கடிகாரங்கள். அவற்றின் டி.வி விளம்பரங்களில் மயங்கிப்போய் வாங்கினேன். பிறகுதான் தெரிந்தது அந்த விளம்பரங்களின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என்று.  அந்த நீல வாட்சுக்கு அ-மேச்சிங்காக வெள்ளை ஸ்ட்ராப் போட்டிருந்தேன். பிறகு சிவப்பிற்கு மாறி வீட்டினரைத் திகைக்க வைத்தேன். அது நின்று போனபின் ஒன்றிரண்டு டைட்டன் வாங்கியிருக்கிறேன். ஏழு வருடங்களுக்குமுன் கைக்கடிகாரத்தை கட்டுவதை நிறுத்தி விட்டேன். யாராவது ரொம்பவும் சொன்னால் ஒழிய அவற்றை தொடுவதில்லை.  என் கைக்கடிகாரத் தேவை நின்று போய் நாளாகி விட்டது.

டைட்டன் கடை ஃப்ரான்சைஸ் எடுக்க நினைத்திருந்தால் கொஞ்ச ’நேரம்’ யோசியுங்கள், உங்கள் செல்போனில் மணி பார்த்தபடி.

0000

இந்த வாரம் சென்னை புத்தகச் சந்தை ஆரம்பிக்கிறது. நண்பர் வெங்கட் இதன் பொருட்டு வரும் அத்தனை செய்திகளையும், வலைப்பதிவுகளையும், புத்தக விலைப்பட்டியல்களையும் இங்கே சேமித்துக் கொண்டிருக்கிறார். தேவைப்பட்டால் ஒரு லுக் விடலாம்.

கல்லூரி படிக்கும்போது,  புத்தகச் சந்தைக்குச் சென்று பனியன் கழட்டாத குறையாக புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். கொஞ்ச வருடங்களுக்குப் பின் படித்த புத்தகங்களை விட படிக்காத புத்தகங்கள் என்னிடம் அதிகமாகி விட்டன. அதன் பின் கண்டிப்பாய் படிக்க போகிறேன் என்று எண்ணும் புத்தகங்களை மட்டும்தான் வாங்குகிறேன். படித்ததும் சிலவற்றைக் கொடுத்து விடுகிறேன்.

புத்தகச் சந்தையில் செய்யப்படும் impulse buy ரொம்பவும் அதிகம். சும்மா அட்டைப்படம் பார்த்தே மயங்கிப்போய் வாங்குபவர் என்றால், முதல் நாள் போய் அட்டைப் படங்களை பொம்மை பாருங்கள், அடுத்த நாள் செல்லும் போது நினைவிருக்கும் புத்தகங்களை மட்டுமே வாங்குங்கள். அல்லது இணையத்தில் கொஞ்சம் உலாவி எந்தெந்த புத்தகங்கள் எப்படி என்று பார்த்து விட்டு பிறகு வாங்கிப் படியுங்கள்.  திடீரென்று எல்லா புத்தகங்களையும் வாங்குவது யாருக்கும் உதவாது. பதிப்பாளருக்கு இந்த வருடம் வருமானமாய் தோன்றலாம், ஆனால் அடுத்த வருடம் நீங்கள் சந்தைப் பக்கமே போக மாட்டீர்கள்.

மற்றபடி முக்கியமாய் – வீட்டிலுள்ள குழந்தைகளை கண்டிப்பாய் கூட்டிச் செல்லுங்கள்.  அவர்களுக்கு இதைவிடப் பெரிய உபகாரம் வேறொன்றுமில்லை.

- இன்னபிற பத்தி.

கிறுக்கல் அவார்ட்ஸ் 2010
வழக்கம் போல் – ’இந்த வருடத்தின் சிறந்த’  சேர்த்துக் கொள்ளவும்

புத்தகம்

ஆங்கிலப் புத்தகம் 1 –  The Big Switch – Nicholas Carr

ஆங்கிலப் புத்தகம் 2 –  At Home: A Short History of Private Life – Bill Bryson

சொந்தக் கதை – Autobiography of Mark Twain – நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு நான்-லீனியர் முயற்சி

நோட்டபிள் புத்தகம் – இன்றைய காந்தி – ஜெயமோகன்

தமிழ் சினிமா

ட்ரைலர் – வா. கு. கட்டிங்

படம் – ஆயிரத்தில் ஒருவன்

நோட்டபிள் படம் – அங்காடித் தெரு

சுமார்ப் படம் – சிங்கம், ராவணன், மதராஸப்பட்டிணம்

காமெடிப் படம் – தமிழ்ப் படம்

ஸ்டண்ட் – நான் மகான் அல்ல

நாயகன் – கார்த்தி(ஆயிரத்தில் ஒருவன்)

நாயகி – அஞ்சலி (அங்காடித் தெரு)

காமெடியன் – சந்தானம் (பாஸ் எ பாஸ்கரன்)

துணை நடிகர் – பார்த்திபன்

பாடல் – ஓ ஈசா(ஆயிரத்தில் ஒருவன்)

படமாக்கப்பட்ட பாடல் – மன்னிப்பாயா

குத்துப் பாடல் – காதல் வந்தாலே(சிங்கம்)

இசையமைப்பாளர் –  ஜி.வி.பிரகாஷ்

பாடகர் – விஜய் யேசுதாஸ் ( தாய் தின்ற மண்ணே)

பாடகி – ஆண்ட்ரியா, ஷ்ரேயா கோஷல்(மன்னிப்பாயா)

பாடல் வரிகள் – வைரமுத்து ( கயல் விளையாடும் வயல்வெளித் தேடி)

நோட்டபிள் பாடல் – ஆரோமலே – அல்போன்ஸ் ஜோசப்,  கைதப்ராம் நம்பூதிரி, ரஹ்மான்

எடிட்டிங் – ஆண்டனி(வி.தா.வ,  வா.கு.க)

ஒளிப்பதிவு – ராம்ஜி(ஆயிரத்தில் ஒருவன்), சந்தோஷ் சிவன் – மணிகண்டன் (ராவணன்)

எழுத்து/இயக்கம் – செல்வராகவன்

நோட்டபிள் இயக்குநர் – சுசீந்திரன் (நான் மகான் அல்ல)

பாலிவுட் சினிமா

படம் – Ishqiya

சுமார்ப் படம் – Karthik calling Karthik

நோட்டபிள் படம் – Peepli [Live]

ஹாலிவுட் சினிமா

படம் – Inception (கனவுத் தொழிற்சாலை)

காமெடிப் படம் – Date Night

சுமார்ப் படம் – - Shutter Island

மற்றவை

டெக்னாலஜி –  Augmented Reality

மொக்கை விளையாட்டு – Farmville

மறதி நியூஸ் –  மத்திய அரசு பட்ஜெட், செந்தமிழ் மாநாடு

ஐயய்யோ ஒரு சாதனை!
டான் கில்பர்ட் மற்றும் டான் எரய்லி போன்ற சோஷலாஜிஸ்ட்டுகள் மனித மனங்களை பற்றிச் சொல்லும் சில விஷயங்கள் யோசிக்க வைக்கின்றன.  மனிதன் நடுநிலையுடன் யோசிக்கிறான் என்று நாம் நம்புகிறோம். ஆனால் எல்லோரும் அப்படி இல்லை. தனக்கு தேவையான விஷயங்களில் கூட அசமஞ்சமாகத் தான் செயல்படுகிறான். இரண்டு பிரபல உதாரணங்கள்-

உங்கள் பர்ஸில் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டும் ஒரு ஐம்பது ரூபாய் சினிமா டிக்கெட்டும் இருக்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சத்யம் தியேட்டரை சென்று அடையும் போது டிக்கெட் காணாமல் போய் விடுகிறது. கையில் இருக்கும் ஐம்பது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி பார்பீர்களா இல்லையா?

இந்த முறை உங்களிடம் இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகள் இருக்கின்றன. சத்யத்தை அடையும் போது, ஒரு ஐம்பது ரூபாய் காணாமல் போய் விடுகிறது. இப்போது என்ன செய்வீர்கள், கையில் இருக்கும் ஐம்பது ரூபாயை வைத்துக் கொண்டு டிக்கெட் வாங்குவீர்களா இல்லை வறுத்த வேர்க்கடலை கொறித்துக் கொண்டே திரும்பி வந்து விடுவீர்களா?

இதைப் பலரிடம் கேட்டுப் பார்த்த டான் கண்டுபிடித்தது, முதல் உதாரணத்தில், பலர் சினிமா பார்க்காமல் திரும்பி வந்து விடுவேன் என்றார்கள். ஏன் என்று வினவிய போது,  மீண்டும் ஒரு முறை ஐம்பது ரூபாய் சினிமா டிக்கெட்டிற்குக் கொடுக்க விருப்பமில்லை என்றார்கள். அடுத்த உதாரணத்தில் கையில் இருக்கும் ஐம்பது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவேன் என்றார்கள்.

இரண்டு உதாரணங்களிலும் காணாமல் போனது இரண்டு பேப்பர்கள் தான். ஒன்றில் சத்யம் என்று போட்டிருக்கிற ஒரு ஐம்பது ரூபாய் டிக்கெட். அடுத்ததில் காந்தி படம் போட்ட ரூபாய். ஆனால் மனித மனமோ முதல் உதாரணத்தில் டிக்கெட் விலையை இரட்டடிப்பாக ஆக்கிக் கொள்கிறது, அடுத்த முறை தன் விதியை நொந்து கொள்கிறது.

இதே போல் அடுத்த ஒரு சிச்சுவேஷன், நீங்கள் வாங்க நினைத்த கார் ஸ்டீரியோ உங்கள் வீட்டின் அருகே தி.நகரில் ஆயிரம் ரூபாய்க்கும் பாரீஸ் கார்னரில் தொள்ளாயிரத்திற்கு கிடைக்கிறது.  எங்கே வாங்குவீர்கள்? கொஞ்ச நாள் கழித்து நீங்கள் வாங்க நினைக்கும் கம்ப்யூட்டர், தி.நகரில் 50,000க்கும் பாரீஸ் கார்னரில் 49,900க்கும் கிடைக்கிறது. எங்கே வாங்குவீர்கள்?

மக்கள் சொன்ன பதிலும், நீங்கள் நினைத்த பதிலும் ஒன்றே தான்.  கார் ஸ்டீரியோவிற்கு பாரீஸ் கார்னருக்கும், கம்ப்யூட்டருக்கு தி.நகருக்கும் செல்வதாய்ச் சொன்னார்கள்.  இரண்டிலும் விலை வித்தியாசம் ஒன்றே தான், நூறு ரூபாய்.  அதே நூறு ரூபாய். இரண்டையும் முடிவு செய்வது உங்கள் மனம்.

ஆக மனிதர்களும் அவர்கள் மனங்களும் கால்குலேட்டர்கள் அல்ல.  இதில் நன்மையை விட தீமை தான் அதிகமாக இருக்கிறது.  என்ன தான் யோசித்து முடிவெடுக்கும் மனிதர் கூட கார் ஓட்டிக் கொண்டே டெக்ஸ் செய்கிறார், ரெட் லைட்டைச் சட்டென தாண்ட முயல்கிறார்.  மனிதர்கள் கால்குலேட்டர்களாய் இருந்தால், விபத்துகள் நடக்க வாய்ப்பேயில்லை. காரில் airbag  இத்தியாதி எல்லாம் தேவையில்லை.

0000

காரைப் பத்தி பேசும்போது, கடந்த நூறு வருடங்களில் ஆட்டோமொபைல் டெக்னாலஜி கிட்டத்தட்ட வளரவேயில்லை. கிட்டத்தட்ட.  ஆட்டோமொபைல் எனும் வார்த்தையில் மொபைல் உண்மையாகிவிட்டது. கார் போன்ற வாகனங்களால் நாம் இடம் பெயர்கிறோம். ஆனால் ஆட்டோவாக இல்லை. அதாவது இன்னமும் ஓர் ஆட்டோமொபைலை ஓட்ட ஆசாமி தேவைப்படுகிறார்.

மக்கள் வாங்கக் கூடிய விலையில் முதல் காரை தயாரித்த ஹென்றி போர்ட்(Henry Ford) சொன்ன ஒரு விஷயம் – “If I asked my customers what they want, they simply would have said a faster horse.”   எங்கள் கம்பெனி போய் மார்க்கெட் வாக்கெடுப்பு எடுத்திருந்தால் வேகமான குதிரைகளை தான் எங்கள் வாடிக்கையாளர்கள் கேட்டிருப்பார்கள். கார் வேண்டும் என்று சொல்லியிருக்க மாட்டார்கள். ஆகவே தான் யாரையும் கேட்காமல் நாங்களாகவே மக்களுக்குத் தேவையானதைக் கண்டுபிடித்தோம் என்றார். ஆனால் அதற்குப் பின்னர் கடந்த நூறு ஆண்டுகளாக நான் அந்தக் காரை வேகமாக செலுத்துவது பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். தேவை அடுத்த ஹென்றி போர்ட் மற்றும் உண்மையான ஆட்டோ மொபைல்.

இந்தக் காரை கண்டுபிடிக்கும் முன் ஒரு நாள் தனது எஞ்சினியர்களை கூப்பிட்டு அனுப்பினார் போர்ட்.  அவர் சொன்னது -” I dream of a machine that runs on wheels and is driven by an engine. Go find it” இந்த மாதிரியான அடுத்த ஒரு visionary-க்காகத் தான் உலகம் இன்னமும் கார் ஓட்டிக் கொண்டிருக்கிறது.

0000

சமீபத்தில் படித்த Program or be Programmed என்னும் புத்தகத்தில் இது சுவாரஸ்யமான விஷயமாகப்பட்டது. எல்லோரும் சாப்ட்வேர் ப்ரோக்கிராமிங் கற்றுக் கொள்ள வேண்டும் எனும் சிந்தனை. இருக்கிற எஞ்ஜினியர்கெல்லாம் முதலில் வேலையிருக்கிறதா என்ற கேள்வியை தள்ளி வைத்துப் பார்த்தால், இதில் கொஞ்சம் நன்மையிருக்கிறது.

எனக்கு ப்ரோக்கிராமிங் சொல்லிக் கொடுத்த வாத்தியார் முதலில் சொன்னது, உங்களுக்கு கொடுக்கப்பட்ட ப்ரோக்கிராமிங் கேள்வி ஒரு கண்ணாடி போல.   முதலில் கீழே போட்டு உடைத்து விடுங்கள். உடைந்த சில்லுகளை ஆராய்ந்து பாருங்கள், ப்ரோகிராம் எழுத உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்.  எல்லா விஷயங்களும் இப்படித்தான். எல்லா கடினக்காரியங்களையும் சிறு சிறு கடினங்களாக ஆராய்ந்து முடிவெடுத்தால் அந்த பெரிய விஷயத்திற்கு முடிவு கிடைத்து விடும். இதே மாதிரி சிந்திப்பதற்குத் தான் ப்ரோக்கிராமிங் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் டக்லஸ் ரஷ்ஆஃப்.

இதையும் தாண்டி நம்மை சுற்றியுள்ள விஞ்ஞான உலகை அறிந்து கொள்ள ப்ரோக்கிராமிங் உதவும் என்று வாதிடுகிறார். புத்தகம் விற்று தீர்ந்தாகிவிட்டது.

0000

இந்த வருடத்தின் சிறந்த என்று போட்டு வரும் டிவி நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும் நேரமிது. முந்திக் கொள்கிறேன். இந்த வருடத்தின் சிறந்த தமிழிசை அமைப்பாளர் – ஜி.வி. பிரகாஷ்.

போன வருடமே இசை வெளிவந்து விட்டது என்றாலும் ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியானது இந்த வருடம் என்பதால் அதிலிருந்து ஆரம்பிக்கலாம்.   அதோ அந்தப் பறவை ரீமிக்ஸை தவிர்த்து மற்ற எல்லா பாடல்களும் பிரமாதமான காம்பொசிஷன்கள்.  ரொம்பவும் பிடித்தது, ஓ ஈசா பாடல்.

வ.கு.கட்டிங் படத்தில் உன்னைக் கண் தேடுதே பாடல் ரொம்பவே கடினமான பாடல். கேட்டுப் பாருங்கள், ஆரம்ப கால ஏ.ஆர். ஆர் தெரிவார்.

சமீபத்தில் வெளியான தனுஷ்-வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தில் அய்யய்யோ(பாட்டின் பெயர் தான்) பாடல் ஒரு சாதனை. ரொம்பவே சாதாரணமாகத் தோன்றினாலும் இரண்டுமுறை கேட்டால் எஸ்.பி.பியின் குரலுக்கு மீண்டும் ஆட்படுவீர்கள். மீண்டும் மீண்டும் கேட்பீர்கள்.  ஆங்காங்கே இஞ்சி இடுப்பழகு தெரியலாம்.  ஒத்த சொல்லால மற்றும் யாத்தே எனும் பாடல்களும் அட சொல்ல வைக்கின்றன.

இந்த வருடம் பிடித்த வேறு சில பாடல்கள்:  ஷ்ரேயா கோஷல் – ரஹ்மான் – மன்னிப்பாயா, ஆண்ட்ரியா-அஜீஷ் – இது வரை இல்லாத,  கார்த்திக் – உசுரே போகுதே மற்றும் ஆண்ட்ரியா – Who’s the Hero?(மன்மதன் அம்பு). மற்றபடி அழகான ஹீரோயின்களும் வெகு அழகாக பாடுகிறார்கள் என்பது தான் இந்த வருடத்தின் வகைப்படுத்த முடியாத சாதனை.

– இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.

இன்ன பிற – பன்றிகள், பறவைகள் மற்றும் புத்தகங்கள்
போன வார தமிழ் பேப்பரில் வெளியான இன்ன பிற பத்தி.

முதலில் ஒரு அரேபிய சிறு-சிறுகதை, அதற்கு முன் ஒரு கேள்வி. ஒரே ஒரு நாவலில் உலகப்புகழ் பெற்ற Harper Lee என்னும் பெண் எழுத்தாளரைத் தெரிந்திருக்கலாம்.  அவரின் ஒரே நாவலான To Kill a Mocking Bird-ஐ நீங்கள் படித்திருக்கக்கூடும்.  அவருக்கு முன்னமே ஒரே-நாவல் பெண் பிரபலம் ஒருவர் இருந்தார். யார்?

பாக்தாத் நகரில் வசித்துவந்த ஒரு சுல்தான் அவரது வேலைக்காரர்களில் ஒருவனை காய்கறிகள் வாங்கிவர மார்க்கெட்டுக்கு அனுப்பினார். போன சிறிது நேரத்தில் திரும்பிவந்த வேலையாள் பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்தான், “சுல்தான், மார்க்கெட் கூட்டத்தில் ஒரு பெண் என்னை நெருக்கித் தள்ளினாள். அவள் யார் என்று திரும்பிப் பார்த்தால் சாவு தேவதை. அவள் என்னைப் பயமுறுத்துகிறமாதிரி பார்த்தவுடன் ஓட்டமாக வந்துவிட்டேன். நீங்கள் தயவுசெய்து உங்களுடைய குதிரை ஒன்றைக் கொடுத்தால், என் விதியைத் தவிர்க்க, இந்நகரத்தை விட்டுப் போய்விடுகிறேன். சமாராவுக்குப் போய்விட்டால் சாவு தேவதை என்னைக் கண்டுபிடிக்க இயலாது.” சுல்தானும் அவனுக்கு மனமிரங்கி குதிரையைத் தர, முடிந்த அளவுக்கு வேகமாகக் குதிரையை முட்டித் தள்ளி ஓட்டிக்கொண்டு போய்விட்டான் வேலைக்காரன்.

அவன் சென்றவுடன் சுல்தான் மார்கெட்டுக்கு வந்து சேர்ந்தபோதுதான், கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த என்னைப் பார்த்தார். “காலையில் என் வேலையாளை எதற்காக பயமுறுத்தும் பார்வை பார்த்தாய்?”

“ஐயோ அது பயமுறுத்தும் பார்வை இல்லையே, ஆச்சரியமான பார்வை. அவனை பாக்தாதில் பார்த்ததில் எனக்கோ வியப்பு. இன்றிரவு சமாராவில் அல்லவா அவனைச் சந்திப்பதாக ஏற்பாடு” என்றேன்.

இந்தக் கதையை இயற்றியவர் பெயர் தெரியாது. ஆனால் இத்தனை குறைவான வாக்கியங்களில் என்ன ஒரு பிரமாதமான கதை. இந்தக் கதையை ஜெஃப்ரி ஆர்ச்சர் முதற்கொண்டு சிறு-சிறு கதைகள் எழுதும் எழுத்தாளர்கள் அனைவரும் எடுத்துக் காட்டிவிட்டார்கள். தமிழில் இவ்வாறான, சுஜாதா சொன்னதுபோல, சி.சி கதைகள் வருவதே இல்லை. வாராந்திரிகளில் வரும் ஒரு பக்கக் கதையை எதிலுமே சேர்த்துக்கொள்ளக்கூடாது.

சி.சி.கதைகளை Flash Fiction அல்லது Micro Fiction என்கிறார்கள். அவற்றை எழுத, சில எழுதப்படா விதிமுறைகள் உண்டு. கதையை கதை முடியும்போது ஆரம்பித்தல் அவசியம். அதாவது ‘கடைசியில் கதையில் நுழை, சீக்கிரமாக வெளியேறு’ என்னும் விதி. கடைசி வரி அதிர்ச்சி முக்கியம். கண்டிப்பாக ஒரே ஒரு நிகழ்வுத் தொடர்பாக இருத்தல் வேண்டும். சிறுவனாக இருப்பதில் ஆரம்பித்து ஹீரோயினை மணம் செய்யும் வரையில் 5 வரிகளில் சொன்னாலும் இதில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது. சுவாரஸ்யமான கதைக்களன் ஒரு ப்ளஸ். ஒரு போர் நடக்கும் தெருவிலோ, அன்னிய உலகின் ஒரு சூரிய அஸ்தமனத்திலோ கதை நடக்கலாம். நல்ல சிறுகதைகள் என்றுமே மறக்கப்படுவதில்லை. இன்றைக்கு இருக்கும் கவனக் கலைப்புகளுக்கு நடுவே வாசகரைப் படிக்கவைக்க இம்மாதிரி சி.சி.கதைகள் தேவைப்படுகின்றன. Kurt Vonnegut சொன்னமாதிரி, “Use the time of a total stranger in such a way that he or she will not feel the time was wasted.”

அன்பர்கள் பெஞ்சு நாற்காலிகளை விட்டெறியாத பட்சத்தில் குறிப்பெடுத்து வைத்திருக்கும் சி.சி.கதைகளை இங்கே எழுதுகிறேன்.

oo0000oo

இ-புத்தகங்களின் விற்பனை அதிகமாயிருப்பதாகப் படித்தேன். கொஞ்ச நாட்களுக்குமுன்புவரை, ‘படித்தால் மாண்ட மரத்தின் பேப்பரில் ப்ரிண்ட் செய்யப்பட்டதை அன்றி வேறொன்றையும் படிப்பதாயில்லை’ என்று இருந்தவர்களும் கொஞ்சம் மாறியிருக்கிறார்கள். கிண்டில் போன்ற இயந்திர புத்தகப் படிப்பான்களை யூஸ் செய்தவுடன் திடீரென்று புத்தக ஆர்வம் பிய்த்துக்கொள்வதாக வேறு சொல்கிறார்கள். எப்படியோ இணைய/டிவி மேய்வதைக் காட்டிலும் இது ஷேமம்.

கிண்டிலின் விலை குறைந்து கட்டெறும்பாக ஆகிவிட்டது. இன்னும் கொஞ்ச நாளில் யூஸ் அண்ட் த்ரோ இ-புத்தகங்கள் வந்துவிடும். கடைக்கு போய் ராணி வாங்குவதற்கு பதிலாக ராணி என்ற அட்டை போட்ட வஸ்துவை வாங்கித் திறந்து பார்த்தால் எல்சிடி திரையில் குருவியார் கேள்வி பதில் ஓடும். மூடி வைக்கும் முன் அடுத்த வார பி.டி.சாமி ராணி முத்துவுக்கு இ-ஆர்டர் கொடுத்துவிடலாம். பேப்பர்காரர் இ-பேப்பர்காரர் என்று மலையாள வாசனையுடன் அழைக்கப்படுவார்.

iPad  போன்றவற்றுக்கும் Kindle வகையறாவுக்கும் ஆதாரமான வித்தியாசங்கள் இருக்கின்றன. iPad என்பது ஒரு கைக்கணினி. ஆகையால் இ-புத்தகத்தின் முன்னுரை படிக்குமுன் மெயில் செக் பண்ணப்போய் எதாவது facebook அக்கப்போரில் ஆஜராகி வெளிவரும் முன்னர் தூக்கம் வரலாம். கிண்டிலில் இவையெல்லாம் செய்ய முடியா. புத்தகம் அல்லது பேப்பர் மட்டுமே படிக்கமுடியும். ஆகையால் இணையத் தொல்லைகள் கம்மி.

இவையிரண்டின் ஆடியன்ஸும் வெவ்வேறு ஆசாமிகள். iPad-ன் இணையக் கடையில் மக்கள் அதிகமாக வாங்குவது,  Angry Birds என்னும் ஒரு விளையாட்டு. பன்றிகள் தங்களின் முட்டைகளை தூக்கிக்கொண்டு போய்விட்டதால் கோபப்படும் பறவைகள் தங்களை உண்டிக்கோலில் வைத்துக்கொண்டு எறியச் சொல்கின்றன. விளையாடுபவர் அதை இழுத்து அடித்தால் அவை சென்று பன்றிகளை தாக்குகின்றன. இதே கிண்டிலின் இணையக் கடையில் பெஸ்ட்செல்லராக இருப்பது, Steig Larsson எழுதிய The Girl with a Dragon Tatoo என்னும் புத்தகம். புரிகிறதா?

oo0000oo

கார்பரேட்டுகள் அறவழியில் நடக்கிறார்களா என்பது சம்பந்தமான ஒரு டிவி நிகழச்சியை ரசித்துப் பார்த்தேன். சாட்டிலைட் சானல் பட்டிமன்றம் போல் காச்மூச்சென்று கத்தாமல், மற்றவன் மனைவியைச் சண்டைக்கு இழுக்காமல் தலைப்புடன் ஒட்டிப் பேசினார்கள். என்னதான் கார்ப்பரேட் என்றாலும், லாபத்துக்கு மட்டுமே செயல்படும் ஸ்தாபனமாக இருந்தாலும், ethics என்பது அவர்களுக்கும் உண்டு. காரணம் தனி மனிதனைப்போல் இந்த சொசைட்டியில் அவர்களும் ஒர் அங்கம் என்பதால்.

லாபத்துக்கு ஓடும்போதும் காம்படிஷனுக்கு ஆட்படும்போதும் ஆங்காங்கே நெறி தவறுவது இப்போதெல்லாம் தப்பாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனாலும் corporate ethics  என்பதற்கு ஒரு சமீபத்திய உதாரணம் Pixar Animation Studios. Wall-E என்னும் படம் எடுத்துக்கொண்டிருந்த நேரம் ட்ரைலர் ரிலிஸ் செய்துவிட்டார்கள் ஆனால் படத்தின் கதை விவாதத்தில் ஒரு தொய்வு ஏற்பட்டது. படத்தில் வேலை செய்யும் அனிமேட்டர்களை எப்படி inspire செய்வது என்று கையைப் பிசைந்துகொண்டிருந்தார்கள் Pixarகாரர்கள்.

கிட்டத்தட்ட அதே சமயம் கோர்ட்னி என்னும் ஒரு பெண், தினமும் Wall-E ட்ரைலரைப் பார்ப்பதாகவும் அதில் வரும் அந்தக் குட்டி ரோபோ அழும்போது தினமும் அழுவதாகவும் தன்னுடைய வலைப்பதிவில் எழுதியிருந்தார்.  தான் அழும் அந்த வீடியோவையும் யூ-ட்யூபில் போட்டிருந்தார். இதை எப்படியோ படித்த/பார்த்த Pixar டீம், தாங்கள் எடுக்கும் படங்கள் எப்படியெல்லாம் மனிதர்களைத் தொடுகின்றன என்று நினைத்தார்கள். தினமும் காலையில் அந்தப் பெண் அழும் வீடியோவைப் பார்த்தார்கள், இன்ஸ்பயர் ஆனார்கள். படம் வெளிவந்தது.

இந்தப் படம் வர மிகவும் உதவிய அவளையும் அவள் பாய் ப்ரண்டையும் விமானத்தில் கூட்டிவந்து, ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கவைத்து,  படத்தின் டீமுடன் ஒரு ஸ்பெஷல் ஷோ போட்டார்கள் (http://blog.moviefone.com/2008/07/02/pixar-honors-the-girl-who-cried-at-the-wall-e-teaser/ ).  இத்தனையும் எந்தவித விளம்பரமும் இல்லாமல். அதற்குப்பின் அந்தப் பெண் அதைப் பற்றி வலைப்பதிவில் எழுதியவுடன்தான் வெளியுலகத்துக்குத் தெரிய வந்தது.

யாருக்கும் தெரியாதபோதும், எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி எதையாவது செய்வீர்களா? உங்கள் மானேஜர் லீவில் இருந்த அன்றும் எப்போதும்போல் வேலை செய்வீர்களா?  ரொம்ப சிம்பிளாக, அதுதான் ethics.

oo0000oo

விடை: Wuthering Heights எழுதிய ப்ராண்ட்டி சகோதிரிகளில் ஒருவரான எமிலி ப்ராண்ட்டி (Emily Bronte). ப்ளாஷ்பேக்களின் முலமாக முன்பும் பின்புமாகச் சொல்லப்பட்ட பிரபல நாவல்.

அலைபாயுதே!
நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த வரவேற்பை வைத்து கூகிள் வேவ்வை கொஞ்சம் வேவு பார்க்க முடிந்தது. முதலில், நண்பர்கள் இல்லாமல் வேவ் வீண். நண்பர்களுடன் கூடிப் பேசுவதற்கும், விவாதம் செய்வதற்கும், எதையாவது டிசைன் செய்வதற்கும் கூகிளின் அடுத்த தலைமுறை தகவல் பரிமாற்ற இஞ்சின். இதைத் தவிர ரியல் டைம் டாகுமெண்டேஷன் போன்ற விஷயங்கள்.

இதெல்லாம் இமெயிலிலும், இன்ஸ்டண்ட் மெஸஞ்சரிலும்(ஐஎம்) சாத்தியமே. சாட்டில் இல்லாத எதை இதில் கண்டீர் ஐயா என்று கேட்கலாம். சாட்டில் உங்களுடன் பேசும் நண்பர் டைப் செய்யும் போது, அவர் இப்போது டைப் செய்கிறார் என்று ஒரு செய்தி உங்களுடைய சாட் விண்டோவில் தெரியும். வேவ்வில் அவர் என்ன டைப்பிக் கொண்டு இருக்கிறார் என்று கூட தெரியும்.

யோசித்துப் பாருங்கள், கேர்ள் ப்ரண்டுடன் வேவிக்(தமிழ் கூறும் நல்லுகத்திற்கு மற்றுமொரு அகராதி வார்த்தை) கொண்டிருக்கும் போது, “தீபாவளிக்கு எங்க கூட்டிக்கிட்டு போகப்போறடா?” என்று கேட்க, ஆதவனுக்கு பர்ஸ்ட் ஷோ போக நினைத்துக் கொண்டிருக்கும் நீங்கள், “சத்தியமா எங்கேயும் இல்ல” என்று டைப் அடிக்கும் போது தான் உரைக்கும் நீங்கள் டைப் அடிப்பது அப்படியே அங்கே தெரியும் என்று. என்னதான் அதை மாற்றி, “சத்தியமா எங்கே வேணும்னாலும்” என்று அடித்தாலும், உங்களுடைய உயிருக்கு பாதுகாப்பில்லை.இந்த மாதிரி இன்னொரு முனையில் எழுதிக் கொண்டிருப்பவரை second guess பண்ண வைக்கும் ஒரு வஸ்துவை கண்டுபிடித்த ப்ரகஸ்பதியை என்ன செய்யலாம்.

யோசித்துப் பார்த்தால், கூகிளுக்குத் தான் இது ரொம்பவும் முக்கியம். யார் எந்த விஷயத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார், பேசிக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தால் தங்களுடைய விளம்பரங்களை இன்னமும் சரியாக குறி பார்த்து வழங்க முடியும். கார் பற்றி வேவும் நண்பர்களுக்கு, பேசிக் கொண்டிருக்கும் போதே, அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து, அவரவரின் வீட்டின் அருகே இருக்கக் கூடிய கார் விற்பனையாளர்களின் சலுகை விளம்பரத்தை அளிக்க முடியும். கூகிளின் பற்பல இணைய சர்வீஸ்களுக்கும் காரணம், வரி விளம்பரங்கள்.

போகப் போக வேவ் போன்ற விஷயங்கள் வாழ்க்கை முறையாகிப் போகலாம். ஆனால் அவசர உலகத்தை, டைப் செய்யக் கூட விடாமல் மேலும் அவரசமாக்கிய கூகில் வேவிற்க்கு ஒரு தற்காலிக அபவுட்டேர்ன்.

இயந்திரா 4 – டுவிட்டர் குழப்பங்கள்
டுவிட்டர் உபயோகிப்பதில் குழப்பங்கள் இருப்பதை பரவலாக காண முடிகிறது. ப்ளாகர் தளத்தை தொடங்கி, பல்லாயிரம் கணிப்பொறியாளர்கள் வலைப்பதிவுகளில் அபாயகரமான அளவு நேரம் தொலைப்பதற்கு வித்திட்ட ஜன்மங்கள்[1,2], ப்ளாகரை கூகிளிற்கு விற்றுவிட்டு, அடுத்த நே.தொ முயற்சி தான் டுவிட்டர்.

நூற்றி நாற்பதே எழுத்துக்களில், வார்த்தைகளில் அல்ல, எழுத்துக்களில், நீங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உலகுக்கு உரைப்பதே டுவிட்டர். ஒரு குறும் வலைப்பதிவுச் சாதனம். பல் தேய்க்கலாம், மூக்கை சிந்தலாம், ஐஸ் க்யூப்பை மெல்லலாம், படிக்கலாம், பந்தாடலாம், மோட்டு வளையை அளக்கலாம், ப்ளாகலாம் என்று என்ன ‘முக்கியமான’ விஷயமாயிருந்தாலும், உங்களை பின்தொடரும்(follow) நண்பர்களுக்கோ, விஷமிகளுக்கோ உரக்கச் சொல்லும் சாதனம். மிக முக்கியமான செய்தி, உங்களின் டுவிட்டர் எழுத்துக்கள் எல்லாம், உடனுக்குடன் உங்களை பின் தொடர்பவர்களுக்கு மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்ஸாக போய்விடும்.

Who the hells wants to follow to me , என்று கேட்பவர்களுக்கு ஒரு அரியசிறிய செய்தி. டுவிட்டரில் தற்போது இருப்பது சில மில்லியன் பயனர்கள். நாளொன்றுக்கு சில மில்லியன் டுவிட்ஸ்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். டுவிட்டரை சுற்றி ஒரு டுவிட்டர் ecosystemமே வந்து விட்டது. ஆகவே உங்களை பின்தொடர்வதற்கு நீங்கள் ஜார்ஜ் க்ளூனியாகவோ, ஜெனிபர் லோபஸாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட டுவிட்டர் அக்கவுண்டுகளை வைத்துக் கொண்டு, ஒன்றில் நான் கோயம்புத்தூரில் பஸ்சில் சைட் அடித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் மற்றொன்றில் கோயம்பேட்டில் காய்கறி பேரம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றும் டுவிட்டர் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

140 எழுத்துக்களில் ஒரு விஷயத்தை பற்றி சொல்லுவது கிட்டத்தட்ட சாகசம்(சாகஸம் என்று சொல்வது பிடித்திருக்கிறது, தமிழ் காமிக்ஸ்களில் எழுதப்படுவது இப்படித்தான்). யார் தெச்ச சட்டை எங்க தாத்தா தெச்ச சட்டை தாத்தா தெச்ச சட்டையில பார்த்தா மூணு முட்டை யார் தெச்ச சட்டை எங்க தாத்தா தெச்ச சட்டை தாத்தா தெச்ச சட்டையில பார்த்தா மூணு முட்டை என்று இரண்டு முறை தொடர்ந்து எழுதினாலே 166 எழுத்துக்கள் ஆகிவிடுகின்றன. ஆகவே சுருங்கச் சொல்வது என்பது கஷ்டமாயிருந்தாலும் கிட்டத்தட்ட பழக்க/வழக்கமாகிவிட்டது. Diminishing rate of attention spanஐ எற்படுத்திய வலைப்பதிவுகளுக்குப் போட்டியாக 140 எழுத்துக்களுக்கு மேல் படிக்கத் தேவையில்ல்லாத அவசரப் புரட்சியின் தற்கால கருவி தான் டுவிட்டர்.  டுவிட்டரின் தலைவர் ஜாக் டார்ஸி, டுவிட்டருக்கான் ஒரு பரிசை வாங்கும் போது சொன்னவை இவை, “We’d like to thank you in 140 characters or less. And we just did!”.

குழப்பங்கள் தான் சில/பலரை டுவிட்டரில் இருந்து ஓட வைக்கிறது. டுவிட்டரின் ஆதாரமான கேள்விகளுக்கு மக்கள் விடை எழுதுவது கிட்டத்தட்ட வழக்கொழிந்து விட்டது. What are you doing ? என்பதற்கு யாரும் பதிலளிப்பதில்லை, என்னையும் சேர்த்து. Kangal Irandal is over-rated. Lack of good numbers in contemporary tamil cinema made this a hit. Raja should be back என்று நான் சமீபத்தில் ஒரு டுவிட் எழுதினேன். இதற்கும் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கும் என்ன சம்பந்தம். கண்கள் இரண்டால் பாட்டை கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று எழுதி, இதை பின்னால் எழுதினால் 140 எழுத்துக்கள் முடிந்துவிடும் என்பதால், சுருங்கச் சொல்லப் போய், விளைவு டுவிட்டர் அதன் ஆரம்ப விஷயத்திலிருந்து தள்ளிப் போய் விட்டது. அடுத்த டுவிட் செய்வதற்கு முன், டுவிட்டரின் கேள்விக்குத் தான் பதிலளிக்கிறீர்களா என்று ஒருமுறை உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

முன்னால் சொன்ன மாதிரி ஒரு குறும் வலைப்பதிவுச் சாதனமாகிப் போய், நீங்கள் எழுதுவதற்கு மற்றவர்கள் எழுதும் பதில் டுவிட்கள் எல்லாம் சேர்ந்து ஒரு களேபரமாக ஆகி, அதைப் படிக்கும் உங்களின் பாசக்கார பின்தொடர்பவர்கள் குழம்பிப் போய் பின்னங்கால் பிடரியில் பட ஓடுகிறார்கள். மிகச் சமீபமாக தமிழ் வலைப்பதிவுலக ஆர்வலர்கள் எல்லோருமாக டுவிட்டருக்கு படையெடுத்து, யூனிகோடில் டுவிட்டரை சுளுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மகா குழப்பம்ஸ்.

இன்னும் கொஞ்ச நாளில் டுவிட்டரில் என்னவெல்லாம் நடக்கும் என்று சற்றே யோசித்துப் பார்த்தால் -

லியோ தல்ஸ்தோயின் அன்னா கரினினா தலையணை சைஸ் புத்த்கத்தை, தினம் ஒரு டுவிட்டராக பிரித்து தரும் வலைத்தளங்கள் வரலாம். அதிலுள்ள 350,296 வார்த்தைகளை தினம் ஒரு டுவிட்டராக வருவதற்குள் உங்களின் பேரன் வெர்ஜின் ஸ்பேஸ்ஷிப்பேறி வீனஸ் கிரகத்திலிருந்து டாட்டா காட்டுவான்.

ஒரே டுவிட்டர் மெசேஜில் காதல் கடிதமெழுதுவதெப்படி என்று வலைதளங்கள் புழக்கத்திற்கு வரலாம். டுவிட்டரிலேயே மீட் செய்து திருமணம் செய்து கொண்ட்வர்கள் ஜாயிண்ட்-டுவிட்ஸ் செய்வார்கள்.

Watching Simran cry on Jaya Tv என்று தாய்க்குலங்கள் மெகாசீரியல் முன்னேறங்களை மினிடுவிட்டராக எழுதி பகிர்ந்து கொள்ளலாம்.

தினம் வரும் ஆயிரமாயிரம் டுவிட்டர்களிலிருந்து, டாப்-டென் டுவிட்டர்கள் என்று தேர்தெடுத்து நியுயார்க் டைம்ஸ் செய்தித்தாளில் வெளியிடும்.

அம்பயர் போங்கடிக்கிறார் என்று தோனி மைதானத்திலிருந்து டுவிட்ஸ் அனுப்பலாம்.

வட சென்னை மாமூக்கள், போட்டுத் தள்ளுவதற்கு முன், Approaching the target in the Royapettah T.stall. Wait for the next tweet என்று நகங்கடிக்க செய்கிற மாதிரி குற்ற-டுவிட்டுகள் அனுப்பலாம்.

ஆக இந்த டுவிட்டர் தொந்தரவுகள் அடங்குவதாக காணோம். முடிந்தவரையில் ஓதுங்கி நின்று அவ்வப்போது எட்டிப் பார்ப்பதே சாலச் சிறந்தாக தோன்றுகிறது.

பி.கு – இந்த பதிவில் இருக்கும் எழுத்துக்கள் 4,806. டுவிட்டர் மெசேஜாக்கினால் மொத்தம் 34.5 டுவிட்டர்கள். உங்கள் இஷ்டம்.

இயந்திரா 3 – ப்ளர்ப்
blurb (blûrb)

n.

A brief publicity notice, as on a book jacket.

blurb whore

n.

A writer who provides flattering comments about a book or movie in exchange for meals, travel, or some other perk.

போன மாதம் நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எத்தனை பேர், “நல்லாருக்கு”, என்று யாரோ சொல்லியோ எங்கோ படித்தோ, புத்தகம் ஒன்றை வாங்கினீர்கள். அப்படியானால், நீங்களும் ஒரு ப்ளர்ப்வாசி தான். காது வழிச் செய்தியும் கிட்டத்தட்ட ப்ளர்ப்(blurb) தான். கிட்டத்தட்ட.

புத்தகங்களின் மேல் பின் அட்டையிலும், முதலிரண்டு பக்கங்களிலும் அடிக்கடி புள்ளிகள் வைத்து எழுதப்படும், அந்த புத்தகத்தை/ஆசிரியரைப் பற்றிய பில்டப் தான் ப்ளர்ப்.

நான் ஒரு ப்ளர்ப் ரசிகன். கையில் கிடைக்கிற எந்த புத்தகங்களானாலும் அதன் ப்ளர்புகளை முதலில் படித்துவிடுவேன். ஆனாலும் ப்ளர்புகளினால் இருக்கும் பயன்களை சந்தேகிக்கிற ஆசாமி. சிலவற்றில் கதையே தெரிந்துவிடும். சிலது எளிதில் பிடிபடாது. பலவற்றில் இது பில்டப் என்று தெரிந்துவிடும். பல ப்ளர்புகளின் உண்மையை அறிய அந்த புத்தகத்தை படிக்க வேண்டி வரும். இப்படி படித்து படித்து தான், யார் உண்மையான விமர்சனவாதி, யார் டகால்டி என்று இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. முன்பெல்லாம், டூ தம்ஸ் அப் என்று யாராவது சொன்னால் போதும், படத்தைப் பார்த்து விடுவேன். இப்போதெல்லாம், டாப் 10, டாப் 12.26 என்றெல்லாம் போடுகிற கணக்குகளை மதிப்பதில்லை. அப்படி போடுபவர் கபடநாடக வேஷதாரி, நம்பாதீர்கள்.

ப்ளர்ப் என்ற வார்த்தையின் எட்டிமாலஜி ரொம்பவும் சுவாரசியம். ப்ளர்ப் உருவாகி நூறு வருடம்(1907) தான் ஆகிறது. ஷேக்ஸ்பியர் நாடகத்துக்கும் சார்லஸ் டிக்கின்ஸின் புத்தகங்களுக்கும் யாரும் ப்ளர்ப் எழுதிய மாதிரி தெரியவில்லை. கெலெட் பர்ஜிஸ்(Gelett Burgess) என்னும் அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர், Are you a bromide ? என்னும் தன்னுடைய பிரபல புத்தகத்தின், சிறப்பு பதிப்பின் போது,  அதன் அட்டையில்(dust jacket) மிஸ் ப்லிண்டா ப்ளர்ப் என்னும் ஒரு கற்பனைப் பெண்ணின் படத்தை வரைந்து, அந்த புத்தகத்தை ஹைப் செய்து ஓரிரு வாக்கியங்கள் எழுதியிருந்தார்.

பிறகு புத்தகங்களில் இந்த மாதிரி வரும், ஓரிரு வரி விளம்பரங்களுக்கு, அந்த பெண்ணின் பெயரே, நிலைத்து விட்டது.

ஆங்கில மற்றும் உலக மொழிகளில் பிரபலமான அளவு தமிழில் ப்ளர்ப் பிரபலமாகவில்லை தான். அப்படி ஆகுமா என்பதும் மில்லியன் டாலர் கேள்வி. பல தமிழ் எழுத்தாளர்கள் தான் எழுதியதையே மீண்டும் படித்து படித்து மீண்டும் அதையே எழுதிக் கொண்டிருக்கிறார்கள். வேண்டுமானால், அவர்களே அவர்களின் அடுத்த புத்தகத்தின் ப்ளர்ப்பை எழுதிக்கொள்ளலாம்.

இவை தவிர நம்மூர் பத்திரிக்கைகள் அப்படி ஒன்றும் ப்ளர்ப் போடுகிற அளவுக்கு புத்தக விமர்சனம் செய்வதில்லை. புத்தகத்தின் பின் அட்டையை படித்து விட்டு புத்தக விமர்சனம் எழுதுபவர்கள் தான் அதிகம். அப்படி ஒரு இரண்டு வரிகளை எழுதிவிட்டு, புத்தகம் கிடைக்குமிடம், புத்தக பதிப்பாளர், விலை பத்து ரூபாய் என்று எழுதி முடித்து விடுகிறார்கள். இதைப் பற்றி முன்னமே எழுதியிருக்கிறேன். தமிழ் புத்தகங்களில் போடுகிற அளவுக்கு juicyயாக விமர்சனங்களும் வருவதில்லை.

கடைசியாக தமிழில் நான் படித்த ப்ளர்ப், சுப்ரமண்யராஜுவின் கதைகள் என்ற கிழக்குப் பதிப்பக புத்தகத்தில் தான். அது கூட, சுஜாதா வேறோரு தருணத்தில், “சிறந்த பத்து சிறுகதைகளை தேடிக் கொண்டிருக்கின்றேன், அவைகளில் சுப்ரமண்யராஜுவின் கதையும் ஒன்று” என்ற வரி தான். இது தவிர அசோகமித்திரன் ராஜுவின் மரணத்திற்கு பிறகு எழுதிய கட்டுரையில் வந்த வரிகளும் ப்ளர்பாகின.

அமெரிக்க புத்தக பதிப்பக உலகமே இந்த ப்ளர்புகளை நம்பித்தான் இருக்கின்றது. ஒரு புத்தகம் எழுதப்பட்டவுடன், அதன் manuscriptஐ, அந்த புத்தகத்தின் துறையை சேர்ந்த பல பிரபலங்களுக்கும் அனுப்புகிறார்கள். அவர்களில் ஒரு சிலர் படித்துவிட்டு எழுதியனுப்பும் சில பத்திகளிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தகளை புத்திசாலித்தனமாக கோர்த்து, ப்ளர்புகள் உருவாக்கப்படுகின்றன. இதற்காகவே பல ப்ளர்ப் எழுத்தாளர்களை, பதிப்பகங்கள் வைத்திருக்கின்றன.

அப்படி இல்லாமல் போனால், ஒரு அரை டஜன் ப்ளர்ப்புகளை எழுதி அனுப்பி, இவைகளில் ஏதாவதொன்றை செலக்ட் செய்ய சொல்லி மெயிலனுப்புகிறார்கள். ஒரு ப்ளர்ப் எழுதப்பட, அந்த பிரபலங்களுக்கு காபி/டிபன் என்று ஏராளமாய் செலவழிக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு பிரபல எகனாமிக்ஸ் புத்தக ஆசிரியருக்கு வந்த ஒரு ப்ளர்ப் வேண்டிக் கடிதம்,

If you find ________ and ________’s ideas as compelling and inspiring as we do, a quote from you that we could print on the jacket would make a world of difference. I would be happy to help craft a quote if you prefer. My contact info is below.

தற்போது படித்துக் கொண்டிருக்கும், Bill Brysonனின் The Life and Times of a Thunderbolt Kidல் எழுதப்பட்டிருக்கும் ப்ளர்பில் ஒன்று,

“The book, which is very funny…is an excercise in hyperbole, the ideal trope for the United States during this time of gragantuan confidence in progress.” – Katherine A. Powers, Boston Globe

இது மாதிரி எழுதப்படும் ப்ளர்ப்புகள் புத்தக அட்டையில், போஸ்டர்களில் பிரிண்ட் செய்யப்பட்டு, கடைகளில் விற்கப்படுகின்றன. ப்ளர்புகளை படித்து விட்டு பிடித்து விட்டால், ஆயிரக்கணக்கில் புத்தக விற்பனை அதிகரிக்கிறது. கிட்டத்தட்ட எல்லா பிரபல ஆங்கில எழுத்தாளர்களின் புத்தக அட்டையிலும் “No. 1 New York Best Selling Author”  என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும். இதுவும் ஒரு வகையான ப்ளர்ப் தான்.

அது சரி, தமிழில் ப்ளர்புக்கு சரியான தமிழ் வார்த்தை இதுவரை இல்லை. அல்லது எனக்குத் தெரியவில்லை.  வேண்டுமானால், இலக்கியம் + விளம்பரம் = இலம்பரம் எனலாம். பேஷனாய் இல்லை எனக் குறை கூறுபவர்கள், கெலெட் பர்ஜிஸ்ஸின் கல்லறைக் கதவைத் தட்டி, ப்ளர்ப்பிற்கு தமிழ் வார்த்தைக் கேட்கலாம்.

இயந்திராவிற்கும் புத்தக ப்ளர்ப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்களுக்கு – இயந்திர-விஞ்ஞான-வியாபார உலகத்தை பற்றி ஓரு தொடர் எழுத ஆரம்பித்த போது, கிடைத்த பெயர் தான் இயந்திரா.

அவ்வப்போது நமிதா பற்றியும் நாசா பற்றியும் கொஞ்சம் சுதந்திரமாக எழுதிப் பார்க்க நினைத்த பத்தி தான் இது.

இயந்திரா 2 – வீ – வீ – வீ
ஜிங்கிள் ஆல் த வே(Jingle all the way) என்ற படத்தில் ஆர்னால்டு ஷ்வாஸ்னிகர், தன் மகனின் கிறிஸ்துமஸ் பரிசாக கொடுப்பதற்கு டர்போ மேன் என்றொரு பொம்மையை தேடி ஊரெல்லாம் அலைவார். அதைப் போலவே உண்மையாக வருடத்திற்கு ஒரு பொம்மையையோ அல்லது வேறெதாவது பரிசுப் பொருளையோ தேடி அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பலர் இந்த மாதிரி கடை கடையாக ஏறி இறங்குகிறார்கள். தான் தேடிய பரிசுப் பொருள் கிடைத்துவிட்டால் சந்தோஷப்படுகிறார்கள். இல்லாவிட்டால் பணம் இருப்பவர்கள் என்ன செலவழித்தாவது வாங்கிவிடுகிறார்கள்.

2007ன் டாய் அல்லது பரிசுப்பொருள் நிண்டெண்டோவின் வீ(Nintendo Wii) என்றொரு விடியோ கேம் சிஸ்டம். எக்ஸ் பாக்ஸ் போல ஒரு குடும்பத்திற்கான விளையாட்டு சாதனம். இதன் விற்பனை விலை 250 டாலர், கிட்டத்தட்ட பத்தாயிரம் இந்திய ரூபாய்க்கள். இன்றெல்லாம் சியாட்டல் கடைவிதியில் நீங்கள் அலைந்து திரிந்தாலும் வீ கிடைக்காது. கிடைத்தால் பிடுங்கிக் கொண்டு யாராவது ஓடி விடுவார்கள். அப்படியே கிடைத்தாலும் அதை நீங்கள் உபயோகிக்காமல் ஈபே(e-bay)2யில் ஏலம் விட்டால் 580 டாலருக்கு வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். இரண்டு மடங்கு பணம் கொடுத்தாவது, தன் மகனுக்கோ மகளுக்கோ பரிசாய் வாங்க ரெடி. அந்த அளவுக்கு கிராக்கி.

இந்த வீ சாதனத்தின் அமைப்பே சற்று புதுமையானது. இது வர வந்துள்ள வீடியோ கேம் சிஸ்டங்களில் இல்லாத புதுமைகள் தான் அதிகம். வீடியோ கேம்களில் இது ஏழாவது தலைமுறை. இது தான் உலகில் உள்ள லேட்டஸ்ட் கேமிங் சிஸ்டம். Wiiயை Paradigm Shift என்கிறார்கள். இந்த வீ கேமிங் சாதனத்தில், ஓரு டிவிடி சைஸ் சிஸ்டம் யூனிட்டும் ஒரு சென்ஸார் ஸ்டிரிப்பும், ஒரு ரிமோட் கண்ட்ரோலும் வருகின்றன. இந்த சிஸ்டம் யூனிட்ட்டை டிவியில் கனெக்ட் சேய்து விட்டு, அந்த infra-red sensor ஸ்டிரிப்பை டிவியின் முன் வைத்து விட்டு, ரிமோட் கண்ட்ரோலால் Wiiயை இயக்கலாம்.

இதுவரை வந்துள்ள சிஸ்டங்களில் நீங்கள் உட்கார்ந்த இடத்திலிருந்தே பட்டனை அழுத்திக் கொண்டு ஆடலாம். Wiiயில் மட்டும் தான் நீங்கள் விளையாடும் விளையாட்டைப் போலவே ஆக்-ஷன் செய்தால் தான் இயக்க முடியும். அதாவது, வீயில் டென்னிஸ் விளையாடும் போது, வீயின் ரிமோட் ஒன்றை கையில் பிடித்து, டென்னிஸ் மட்டையை பிடித்துக் கொண்டு அடிப்பது போல டீவியை நோக்கி மூவ்மெண்ட் செய்ய வேண்டும். பந்து வருவதற்கும் உங்கள் ஆக்-ஷனுக்கும் சரியாக இருந்தால், டீவியில் பந்து மட்டையில் பட்டுச் செல்லும். ஒரே வீ சிஸ்டத்தில் பல ரிமோட்களை இயக்கலாம்.. ஆகையால் ஒரு டென்னிஸ் விளையாட்டில் வீட்டில் உள்ள நான்கு பேர் டபிள்ள்ஸ் விளையாடலாம்.

இதையே போல் பாக்ஸிங் செய்தால், அதே வீ ரிமோட்டைப் பிடித்துக் கொண்டு முகத்தை கைகளால் மறைத்துக் கொண்டு, எதிராளியின் முகத்தில் குத்து விடலாம். யோசித்துப் பார்த்தால் இதன் புதுமை புரியும். நண்பர் ஒருவரின் வீயில் பல மணிநேரம் விளையாடியிருக்கிறேன், Wii கண்டிப்பாக ஒரு paradigm shift தான்.

வெளியே பார்க்கும் போது எளிமையாக, ரிமோட்டை பிடித்துக் கொண்டு விளையாடக் கூடியதாக இருந்தாலும், உள்ளே இருக்கும் இயந்திரா கொஞ்சம் கடினமானது தான்.

அந்த இன்ஃப்ரா ரெட் சென்ஸாரை டிவியின் முன் வைத்தவுடன், அது உங்கள் கையிலுள்ள ரிமோட்டை ஒரு 3டி ஸ்பேஸில் கணக்கிடுகிறது. அதாவது x,y,z என்னும் மூன்று தளங்களில் ரிமோட்டின் ஆரம்பப் புள்ளியை குறித்துக் கொள்கிறது. இதன் வழியாகத் தான் நீங்கள் ரிமோட்டில் yes, no, quit என்று க்ளிக் செய்வது வீ சிஸ்டத்திற்கு தெரிகிறது. இதைத் தவிர இந்த இன்ஃப்ரா ரெட் சென்ஸாருக்கு வேறு வேலை இல்லை.

வீயின் முக்கியமான விஷயமே அதன் ரிமோட் தான். இந்த ரிமோட், வீயின் சிஸ்டத்துடன் போசுவது ப்ளூ டூத்(blue tooth)இன் வழியாகத் தான். ப்ளூ டூத் ஒரு முப்பதடிக்குள் இயங்கும்

டென்னிஸ் விளையாடும் போது, ரிமோட்டில் உள்ள அக்ஸிலரேட்டர் சென்ஸார் (acclerator sensor) சமாராசத்தின் மூலம் தான் நீங்கள் மட்டையை சுழற்ற நினைக்கிறீர்களா அல்லது ஓங்கி அடிக்கிறீர்களா என்று Wii சிஸ்டம் அறிகிறது.

இந்த ஆக்ஸிலரோமீட்டர் என்ற சிப்பில், ஒரு சிலிகான் கம்பி, இரண்டு capacitatorகளுக்கு இடையே வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு capacitatorகளுக்கும் சரியான அளவில் வால்டேஜ் வழங்கப்பட, நீங்கள் ரிமோட்டை கையில் பிடித்து சுழற்றும் போது, இந்த சிலிக்கான் கம்பிகள் நகர்கின்றன. அப்போது அது ஒரு capacitatorருக்கு அருகில் செல்ல, அந்த capacitatorன் வால்டேஜ் அதிகமாகின்றது. இந்த வால்டேஜ் வித்தியாசத்தை வைத்து எவ்வளவு தூரம் நகர்த்தப்பட்டிருக்கிறது என்று கணக்கிடப்படுகிறது. இது ரிமோட்டில் உள்ள ப்ளூடூத் வழியாக் வீ சிஸ்டத்தை அடைகிறது.

உங்களின் இந்த மூவ்வெண்டை தனது டேட்டாபேஸில் உள்ள சில ஆயிரம் மூவ்வெண்டுகளுடன் சரிபார்த்தது எந்த மூவ்மெண்டுக்கு அருகில் உள்ளதோ அந்த மூவ்மெண்ட் உங்கள் திரையில் நடக்கிறது.

இந்த ஆக்ஸிலரோமீட்டரை MEMS(micro electro mechanical systems) என்கிறார்கள். இவைகள் ஐந்து நானோமீட்டர் அளவுக்கான அசைவுகளை கூட கணக்கிடக் கூடியவை. ஐந்து நானோமீட்டர் என்பது நினைத்ப் பார்க்க முடியாத அளவு சிறியது. உங்களின் ஒரு முடியின் அளவு 200 நானோமீட்டர்கள்.

பல சாதனங்களிலும் இன்று இந்த ஆக்ஸிலரோமீட்டர் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் காரின் நடுவிலும் இது இருக்கிறது. இது x,y,z என்ற தளங்களில் உங்கள் காரை கண்க்கிடுகிறது. ப்ரூஸ் வில்லிஸின் Life Free Die Hard படம் போல தலைக் குப்புற உங்கள கார் உருண்டோடும் அடுத்த கணப்பொழுதில், இந்த ஆக்ஸிலரோமீட்டர்கள் அந்த அசைவை கண்க்கிட்டு, air bagsசை இயக்குகின்றன.

இப்போது வரும் பல லேப்டாப் கம்ப்யூட்டர்களில் உள்ள ஆக்ஸிலரோமீட்டர்கள், லேப்டாப் கீழே விழப்போனால், அது கீழே விழுவதற்குள் அதன் harddiskகுகளை அணைத்து விடுகின்றன. இப்படியாக தற்போதைய புது ஹீரோ ஆக்ஸிலரோமீட்டர்கள் தான்.

Wiiயில் வாரத்திற்க்கு பல விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இன்னும் கிரிக்கெட் வந்தபாடில்லை. இதற்கு காரணம் இது இப்போது தான் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் இரண்டோரு ஆண்டுகளில் உலகின் பல நாடுகளிலும் கிடைக்கலாம். இந்தியாவிலும் வீ கிடைக்கும். கிடைத்தால் கண்டிப்பாய் வாங்கி விளையாடிப் பாருங்கள்.

இப்பொழுதே வேண்டுமென்றால், ஹூஸ்டனிலோ மினியாபோலிஸிலோ இருக்கும் உங்கள் கஸினை வாங்கி வரச் சொல்லுங்கள். கிரிக்கெட்டும் வீயில் வந்து விட்டால், நீங்கள நின்று கொண்டே போலிங் போட உங்கள் அப்பா பேட்டிங் செய்யலாம்.

Puliyaamaram Wii Cricket Team, Arrow Head Wii Cricket Team என்றெல்லாம் டீம் ஆரம்பிக்கப் போகிறார்கள். கண்டிப்பாய் வீ பைத்தியம் இந்தியாவுக்கு வரப் போகிறது. Wii வாங்க பணம் சேர்க்க ஆரம்பியுங்கள்.