subbudu.com » மனிதர்கள்

பெரும்பள்ளம்
எகிப்தில் நடக்கின்ற மக்கள் புரட்சியை பார்க்கும் போது பிரமிப்பாய் இருக்கிறது. பஸ் பிடித்து போய் பேக்கரியிலோ டுரிஸ்ட் கைடாகவோ வேலை பார்த்து வந்த சாமானியர்கள் திடிரென்று பேசி வைத்த மாதிரி வேலையை உதறிவிட்டு, மனைவி பிள்ளைகளை வீட்டில் அடைத்து விட்டு டஹ்ரீர் ஸ்குயரில் புரட்சி செய்ய ஆரம்பித்தது அவர்களின் கோபத்தை காட்டியது.

மக்கள் புரட்சி என்றால் பிரஞ்சுப் புரட்சியைப் போல் சாவகாசமாய் வருடக்கணக்காக நடக்க வேண்டும் என்பதல்ல. கடந்த 10 தினங்களில் அங்கும் ட்யுனிஷ்யாவிலும் நடந்தைவை உலகை சற்றே மாற்றக் கூடியவை. நான்கு நாட்களுக்கு உலுலாக்காட்டியாக் போய்க் கொண்டிருந்த இந்த புரட்சி ஊர்வலங்களைப் பார்த்து அரசு பயந்து போய் விட்டது நன்றாக தெரிந்தது. அதற்கு பிறகு நடந்தது தான் பயங்கரம். யாரோ போய் கைரோவில் இருந்த சிறைச்சாலையை திறந்துவிட 17,000 கைதிகள் வெளியே தப்பி ஓட, பிடித்தது தீ. இந்த கைதிகளில் அரசு ’சந்தேகத்தின் பேரில்’ பிடித்துப் போட்ட நல்லவர்களும் அடக்கம். ஆக நல்லவர்களும் அல்லாதவர்களும் ஒரே நேரமாக வெளியே வர ஏற்கனவே இருந்த பதட்டம் அதிகமாகி ஒரே களேபாரம். புரட்சி செய்து கொண்டிருந்த மக்கள் கொஞ்சம் பேர் வீடு திரும்பி தத்தம் காலனிக்கு பாதுகாப்பாய் இருக்க மற்றவர்கள் இன்னமும் விடிய விடிய புரட்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

புரட்சி நல்லதா கெட்டதா என்பதை அந்நாட்டவர்களிடம் விட்டு விடலாம். நம்நாட்டில் இம்மாதிரி ஏன் நடக்காது என்றாவது யோசித்துப் பார்க்கலாம். எகிப்தில் முபாரக் என்றொருவர் தான் இருக்கிறார். லஞ்சம் நம்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு தேசிய குணமாகியிருக்கும் இந்நாட்களில் யாரை எதிர்த்து புரட்சி செய்வோம்? ப்ளாக் டிக்கெட்டில் இருந்து, ப்ளாடுக்கு பட்டா வாங்குவது, பம்பு தண்ணிக்கு குழாயை வீட்டுக்கு இழுப்பது, குழந்தைக்கு ஸ்கூல் டொனேஷன் என்று எல்லோரும் எதோ விதங்களில் கறைப்பட்டுப் போய் இருக்கிறோம். அப்படியே புரட்சி பண்ணுகிறோம் என்று ஜெமினி பிரிட்ஜுக்கு அடியில் போய் நின்று கோஷமிடும் போது, உண்மை நெருட திரும்பி வந்து விடுவோம். ஆக புரட்சியும் கூட உதவாதென்றால் என்றால், சிம்பிளாக, சுயேச்சையில் நிற்கும் ஐஐடி மாணவன் யாருக்காவது ஓட்டாவது போட்டு கறை கழுவலாம்.

இத்தனை நாட்களாக சூப்பர் சிங்கர் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ”எகிப்துல என்னாச்சு சார்” என்று கேட்பவர்களுக்கு எழுதிப் புரியவைக்கவே முடியாது. பார்த்துக் கொள்ளுங்கள்.

0000

இந்த எகிப்துப் புரட்சியில் ஈடுபட்டு முக்கிய அமைப்பாளர்களை இந்த சத்தமெல்லாம் ஓய்ந்து விட்ட போது, “அந்த நாட்கள் எப்படி இருந்தது?” என்று கேட்டுப் பார்த்தால், “கருப்பாய் அடி வயிற்றை கவ்வுகிற பயமாய் இருந்தது” என்று சொல்லுவார்கள். வேலையிருக்குமா இருக்காதா, பாஸ் ஆவோமா மாட்டோமா என்ற நாட்கள் நமக்கும் நடந்திருக்கலாம், அப்போது நமக்கு எப்படி இருந்தது என்று கேட்டுப் பார்த்தாலும் இப்படித் தான் பதில் சொல்லுவோம். இதைத் தான், பெரும்பள்ளம் அல்லது Pit என்கிறார்கள்.

உங்கள் வேலையில் தினம் தினம் இம்மாதிரி தோன்றுகிறதா? அமாம் என்றால் நீங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இம்மாதிரி அடிவயிற்று பயம் இல்லையென்றால் உங்களில் comfort zoneல் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். சிறந்த தலைமைப் பண்புள்ளவர்கள் மீண்டும் மீண்டும் இம்மாதிரி பெரும்பள்ளங்களைத் தேடிப்போய் விழுந்து, மீண்டும் மேலெழுந்து வருகிறார்கள். கேட்டால் சேலன்ஞ் என்கிறார்கள். கேள்விப்பட்டதுண்டா?

சமீபத்தில் Validation என்றொரு குறும்படம் பார்த்தேன். இம்மாதிரி கட்டிப்புடி வைத்தியங்களுக்கு நாமெல்லோரும் ஏங்குகிறோம். இதுவும் ஒரு சிறந்த தலைமைப் பண்பு தான் என்று தோன்றுகிறது. பதினாறு நிமிடங்களும் பார்க்க முடியவிட்டாலும் முதலிரண்டு நிமிடங்களையாவது பார்த்து விடுங்கள்.

0000

10 000 000 000 மிருகங்கள். அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு பத்து பில்லியன் மிருகங்கள் உண்பதற்காக கொல்லப்படுகின்றன. இவைகளில் வான்கோழி, கோழிகள் மட்டும் கிட்டத்தட்ட ஒன்பது பில்லியன். மாடுகள் கிட்டத்தட்ட 33 மில்லியன்கள். அதாவது மூன்று கோடியே முப்பது லட்சம்.

Fast Food Nation எனும் புத்தகத்தில் இம்மாதிரி உணவு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் மிருகங்களை எப்படி கொல்லுகிறார்கள் என்று படித்த பொழுது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இந்த வார ஓப்ரா ஷோவில் மாடுகளை கொன்று உணவு Ground Beef தயாரிக்கும் தொழிற்சாலையில் எடுத்த வீடியோவைப் பார்த்து எல்லோரும் அதிர்ந்து போய் விட்டார்கள். என்ன தான் நாங்கள் இம்மிருகங்களை ஒழுங்காக பராமரித்து மரியாதையுடன் தான் கொல்கிறோம் என்றெல்லாம் அவர்கள் சொன்னாலும், கொலை கொலை தான் என்று பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். Inside a Slaughterhouse என்னும் இந்த ஆறு நிமிட வீடியோ உங்களின் வாழ்வை மாற்றக் கூடியது. ஜாக்கிரதை.

வீட்டுக் கதை
சில மாதங்களுக்குப்பின் மீண்டும் கலிஃபோர்னியா வருகிறேன். சின்ன வயதில் கேட்ட மூன்று நாட்டவர்கள் வானத்தில் பறக்கும்போதே தங்களது நாட்டைக் கண்டுபிடிக்கும் (அதாவது இந்தியாவைக் கிண்டலடிக்கும்) ஜோக்கைப்போல் கலிபோர்னியாவின்மேல் பறக்கும்போதே சிலிக்கான் வாசனை மூக்கைத் தொலைக்கிறது. ப்ளேனில் எல்லோரும் திடிரென்று #include <stdio .h> என்றெல்லாம் ப்ரோக்ராம் உளறுகிறார்கள்.

விமானம் சான் ஃப்ரான்சிஸ்கோவில் எப்போதும் படர்ந்திருக்கும் மேகத்தைக் கிழித்தபடி அதிவேகமாக நகர்ந்து சான் ஹொசே ஸ்டேஷனில் இறங்கிவிடுகிறது.  ரோடெல்லாம் தங்கமும் வைடூரியமும் கிடைக்கும் என்று நினைத்தலாகாது. பொட்டைக் காடாக எல்லா இடத்திலும் வானம் தெரியும் பாலைவனமாக இருந்த இடத்தில் திடீரென்று ஒரு முப்பது வருடங்களில் உலகம்முழுவதிலும் இருந்து டெக்னாலஜி ப்ரஜைகள் வந்து அடைத்துக்கொண்டிருக்கும் ஓர் artificial சொர்க்கம். எங்கெங்கும் பணச் செழிப்பு தெரிகிறது. ரேச்சல் வெங்கடாசலம் என்றெல்லாம் பெயர்கள் காணக் கிடைக்கிறது.  சரவணபவன் இருக்கிறது. தக்காளி ரசத்தை சூப் என்கிறார்கள். மினி டிபன் முதற்கொண்டு அடை அவியல், கைமா இட்லிவரை எல்லாம் கிடைக்கிறது. ஏப்பம் உள்பட. எந்தக் கம்பெனி போனாலும் வந்தாலும் இந்தியன் ஸ்டோர்கள் மாறுவதே இல்லை. காய்ந்துபோன டஜன் கறிவேப்பிலைகளை ப்ளாஸ்டிக் பையில் போட்டு ஒரு டாலருக்கு விற்றுவிடுகிறார்கள்.

இங்கிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ்தான் அமெரிக்காவிலேயே rudest நகரமாம். சாண்டா க்ளாராவில் பெல்ட் போடாத கார் ட்ரைவர்கள் வருகிறேன் வருகிறேன் என்று சித்த ஞாழி காக்கவிட்டு 101 ஹைவேயில் கம்ப்யூட்டர் இன்ஜினியர்களுடன் மல்லுக்கட்டி ப்ளேனை எடுக்கும்முன் எப்படியோ கொண்டுவந்து போட்டுவிடுகிறார்கள்.

0000

போன வருடம் படித்த ஆங்கில வரிசையில் எனக்குப் பிடித்த புத்தகம் பில் ப்ரைசன் (Bill Bryson) எழுதிய At Home – A Short History of Private Life என்ற புத்தகம். பில் ப்ரைசன் ஓர் ஆதர்ச எழுத்தாளர். படிக்கும் ஒவ்வொருவரிடமும் 1-1 பேசுகிறமாதிரி எழுதக்கூடியவர். ப்ரபஞ்சத்தில் இருந்து பெருவெடிப்பு, கல் மனிதன் எனக் கடினமான விஷயங்களை A Short history of nearly everythingல் விளக்கியிருப்பவர். ஓவ்வொரு புத்தகத்திலும் புதியவைகளைமட்டுமே எழுதக்கூடியவர்.

ஐம்பதுகளில் இருந்த அமெரிக்காவைப் பற்றி இவர் எழுதிய சுயசரிதையான The Life and Times of the Thunderbolt Kid எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஓரிரு அத்தியாயங்களை இரண்டு மூன்று முறைகூடப் படித்திருக்கிறேன். விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். ஓரிருவருக்குப் பிறந்தநாள் பரிசாக இந்தப் புத்தகத்தை அளித்திருக்கிறேன்.படித்தால் உங்களின் குழந்தைப் பருவத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பீர்கள். படித்தபடியே சிரிப்பு வரவில்லை என்றால் நீங்கள் டாக்டரை நாடவேண்டிவரலாம்.

தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் ப்ரைசனின் வீட்டில் ஒரு நாள் எங்கிருந்தோ தண்ணீர் ஒழுகுகிறது. அவர் ஆட்டிக்(Attic) என்னும் வீட்டின் உட்கூரையின்மேலிருக்கும் அறையில் ஏறிப் பார்க்கிறார்.  முதன்முறையாக அந்த அறைக்கு வரும் அவருக்குத் தோன்றுவது, உலகத்தைப் பற்றியெல்லாம் பேசும் எனக்கு என் வீட்டைப் பற்றியே தெரியாத விஷயங்கள் எத்தனை இருக்கிறது!

இதையடுத்து அவர் தன் வீட்டில் இருக்கும் ஒவ்வோர் அறையாக நம்மை அழைத்துச்செல்கிறார். அந்த அறையின் பின்னணியில் இருக்கும் வரலாறை ஆராய்ந்து விளக்குகிறார். இப்படி உருவானதுதான் இந்தப் புத்தகம் At Home – A Short History of Private Life.

டைனிங் டேபிளில் ஏன் உப்பும் மிளகும்மட்டும் வைக்கிறார்கள், forkல் ஏன் நான்கு பற்கள்மட்டும் இருக்கிறது, பாத்ரூம் உருவானது எப்படி எனச் சுவாரசியமான, ஆனால் அதிகம் பிரசித்தம் இல்லாத விஷயங்களை ஆராய்கிறார். ப்ரசன் சொல்லவருவது உங்கள் வீட்டிற்கும் வரலாறுக்கும் சம்பந்தமில்லை என நினைக்காதீர்கள். வரலாறு கடைசியாக முடிவது வீட்டில்தான்!

ரோமானியர்கள்தான் குளியலறைப் பழக்கத்தைக் கொண்டுவந்தார்கள். அதற்குமுன் கிரேக்கர்கள் Gymnasium என்றோர் இடத்தை வைத்திருந்தார்கள். Gymnasium என்றால் ’ஆடையில்லாத அறை’ என்று அர்த்தம். கொஞ்சம் உடலை வியர்க்கவிட்டுவிட்டுக் குளித்த இடம்தான் அது. அவர்களோடு ஒப்பிடும்போது ரோமானியர்கள் கொஞ்சம் சொகுசானவர்கள். அவர்கள் குளியறை பல ஏக்கர்களுக்குப் பரந்து விரிந்தது. அதனுள் சலூன், நூலகம், ப்யூட்டி பார்லர், டென்னிஸ் கோர்ட், ரெட் லைட் ஏரியா என்று பலதும் இருந்ததாம்.  நகரத்தில் நடுவில் இருந்த இந்தக் காமென் குளியலறைதான் அவர்களின் டைம் பாஸ். கொடுத்துவைத்தவர்கள்!

ரொம்பவும் அபாயகரமான அறை அல்லது இடம் மாடிப்படிதான்.  அமெரிக்காவில் வருடத்திற்குப் பன்னிரெண்டாயிரம் பேர் கீழே விழுகிறார்கள். மீண்டும் எழுவதே இல்லை. அவர்கள் விழுவது படிகட்டிலா, மொட்டை மாடியிலிருந்தா, அல்லது மரக் கிளையிலிருந்தா எனத் தெரிவதில்லை. இங்கிலாந்தில் வருடத்திற்குச் சுமார் மூன்று லட்சம் பேர் படிகட்டிலிருந்து விழுந்து டாக்டர் க்ளினிக் செல்கிறார்கள். இந்த மாடிப் படி பற்றியே MIT ப்ரொஃபஸர் ஒருவர் ஆராய்ச்சி செய்திருக்கிறார். இதன்படி இந்த நம்பர்கள் ரொம்பவே குறைந்தவை என்கிறார் அவர். கார் விபத்திற்கு அடுத்தபடி அதிகமாக நடக்கும் விபத்து இந்த மாடிப்படிச் சறுக்கல்தான்.

ஆனாலும் மற்ற இடங்களுக்குச் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாடிப்படிகளுக்குச் செய்யப்படுவதில்லை என்பதுதான் சோகமே.  நியுயார்க்கில் ஒரு

சப்வேயில் சறுக்காமல் இருக்கப் போடப்பட்டிருந்த ரப்பர் படிகட்டுகள் எங்கு ஆரம்பிக்கின்றன என்று தெளிவாக தெரியவில்லை. அதனால் சுமார் ஆறு வாரங்களில் 1400 பேர் விழுந்துவிட்டிருந்தார்கள். அப்புறம் அதை விழுந்தடித்துக்(!)கொண்டு மாற்றினார்கள்.

கிட்டத்தட்ட எல்லோரும் ஏதாவது தருணத்தில் மாடிப்படியில் இருந்து சறுக்கி விழுகிறார்கள்.  2,222 முறைகளில் ஒரு முறையாவது கண்டிப்பாக நீங்கள் ஒரு படியாவது தவறுவீர்களாம். 63,000 முறைகளில் ஒரு முறையாவது ஒரு சின்ன விபத்தாவது நேருகிறதாம். முப்பது லட்சம் முறைகளில் ஒரு முறையாவது ஹாஸ்பிட்டலுக்கு செல்ல நேர்கிறதாம்.  திருமணமாகாதவர்களும் கொஞ்சம் ஒல்லியானவர்களும் அதிகம் விழுகிறார்களாம்.  ஒருமுறை சறுக்கினீர்கள் என்றால் மீண்டும் சறுக்கும் வாய்ப்பு அதிகமாகிறதாம்.  ஏறுவதைவிட இறங்கும்போதுதான் விபத்துகள் அதிகம் நடக்கிறதாம். நல்ல ஆரய்ச்சி, ந.ப.

இப்படிக் கீழே விழுவதை ஒரு ஸ்லோ-மோஷனில் ஓட்டிப் பார்க்கலாம். படிகட்டில் இறங்குவதே ஒருவிதக் கீழே விழுதல்தான். என்ன, நாம் கொஞ்சம் கண்ட்ரோலில் இருக்கிறோம். ஆகவே விழாமல் இறங்குகிறோம். சட்டென அடுத்த படி சறுக்கிவிட்டால் இந்த மனிதன் இறங்கவில்லை, சறுக்க ஆரம்பித்திருக்கிறான் என மூளைக்குப் புரிந்து உங்கள் ரிஃப்ளக்ஸ் இயக்கத்தில் இறங்க ஆகும் நேரம் 190 மில்லி செகண்டுகள்.  இந்தப் பூதாகர இடைவெளியில் நீங்கள் சரியாக ஏழு இஞ்ச்கள் இறங்கியிருப்பீர்கள். விழலாம், அல்லது விழாமல் சுதாரித்துக்கொண்டும்விடலாம்.

இப்படியான மாடிப்படியில் அதிகம் கவனமாக இருக்கவேண்டிய இடம் முதலும் முடிவும்தான். மூன்றில் ஒரு விபத்து முதல் படியிலோ கடைசிப் படியிலோ நடக்கிறது. மிச்ச இரண்டு பங்குகள் முதல் மூன்று படிகளிலோ கடைசி மூன்று படிகளிலோ நடக்கிறது. ஆக நடுவில் மோட்டு வளையத்தை பார்த்தபடி நடக்கலாம். திடிரென்று ஒரு படி இருக்கக்கூடிய இடங்களும் நான்குக்கும் குறைவான படிகள் இருக்கக்கூடிய பிரதேசங்களிலும் அஜாக்கிரதை அதிகம் இருக்கிறது.

பெட்ரூம் பற்றிக்கூடச் சுவாரசியமான பல குறிப்புகள் இருக்கின்றன. எஜமானர்கள் தூங்கும் படுக்கைகளின் கால் பகுதியில் வேலைக்காரர்கள் படுத்து உறங்கியிருக்கிறார்கள். மன்னர் ஐந்தாம் ஹென்றி அவர் மனைவியுடன் கூடியபோது அவருடைய சமையல்காரரும் வேலைக்காரரும் உடன் இருந்ததாகத் தெளிவான குறிப்புகள் இருக்கின்றன. படுக்கையின் மேல் திரைச்சீலை ஒன்று இருந்திருக்கலாம் என்று சந்தேகத்துடன் எழுதிய குறிப்பும் மங்கலாக இருக்கிறது

0000</stdio>

மறந்து போனவை
டிசம்பரின் கடையிறுதி வாரங்களில் ஆபிஸில் லீவு சொல்லி விட்டு, வீட்டில் இருந்தேன். சுவாரஸ்யமாக எதாவது தென்படுகிறதா என்று டிவியை மேய்ந்தேன். அமெரிக்கத் தாய்மார்கள் எப்படித்தான் மதிய நேர டெலிவிஷனைப் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.  எல்லா முக்கிய சானல்களிலும் பொழுதெல்லாம் பேசித் தொலைக்கிறார்கள். பெண்களுக்கான டாக்-ஷோவாம். ராவிலும் இதே தொல்லை. லேட்-நைட் ஷோ. ஹூஹும் நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை, அவையும் டாக்-ஷோக்கள் தான். பேசுவது ஆண்கள்.

எல்லா டாக்-ஷோக்களும் ப்ரைம் டைம் ஷோ மாதிரி மார்க்கெட்டிங் செய்யப்பட்டு, அதற்கேற்ற மாதிரி பேச்சுக்கள் திசை திருப்பப்பட்டு, டிவி சீரியல் மாதிரி கமெர்ஷியல் ப்ரேக்குகளுக்காக கரெக்டாக கொக்கிக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. பதில் ப்ரெக் கே பாஸ்.

என்.பி.சியில் வரும் ஓப்ரா வின்ப்ரே ஷோவிற்கு இது கடைசி சீசன்.  மனுஷி ரிடையர்டாகி விடுவார் என்று பார்த்தால், பெப்பே. ஒரு மணிநேர ஷோவுக்கு OWN(Oprah Winfrey Network) என்று ஒரு சானலே ஆரம்பித்து விட்டார். ஆடின காலும் பேசின வாயும் என்று பழமொழியை மாற்றி விடலாம். தாய்க்குலங்களின் பேராதரவோடு 25 வருடமாக பேசிக் கொண்டிருக்கிறார் ஓப்ரா. ஆங்காங்கே நல்ல விஷயங்கள் செய்தாலும், பேசப்படும் விஷயங்களை விரல்களால் எண்ணிவிடலாம். கைவிட்ட கணவனும், கடன் தொல்லையில் மூழ்கியவர்களும் அவர்களை மீட்க எடுக்கப்படும் முயற்சிகளும், குண்டாவது மற்றும் ஒல்லியாவது மற்றும் ஒன்றும் ஆகாகது எப்படி எனப்படும் ஹவ்-டூ வகை விஷயங்கள்.

நான் பார்த்த ஒரு மதிய ஷோவில், ஹாரி பாட்டர் கதாசிரியர் ஜெ.கே, ரவுலிங்கை ஸ்காட்லாண்டில் சந்தித்து உரையாடினார். ஓப்ரா வாய்க்கு அவல் கிடைக்குமா என முடிந்த மட்டும் தேட, ரவுலிங்கோ நேரெதிர்.  மொத்தத்தில் அந்த பேட்டி சுத்த வேஸ்ட்.   ரவுலிங் ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை, பாவம் ஓப்ரா.

ஓப்ரா ஒரு புக்-கிளப் வைத்திருக்கிறார், அவற்றில் பரிந்துரைக்கப்படும் புத்தகங்கள், ஜெயமோகனின் உலோக வேகத்தை தூசி ஆக்கி விடக்கூடியவை.  சமீபத்திய பரிந்துரை, டிக்கின்ஸின் The Tale of Two Cities. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

நான்சி க்ரேஸ் என்று ‘ரொம்பப் பேசும்’ ஒரு வக்கீல் மாலை நேரங்களில் தொலைந்து போன சிறுவர்களின் கேஸ்களை சத்தமாக பேசியபடியே ஆராய்கிறார்.  மற்ற நேரங்களில் ப்ரைவேட் கோர்ட் நடத்துகிறார். அதை ஒளிபரப்பவும் செய்கிறார்கள். மற்ற குடும்பங்களின் சண்டையை நாமும் அந்த குடும்ப கோர்ட்டுகளில் பார்க்க நேர்கிறது.  மெகா சிரியலாய் இருந்தால் என்ன கோர்ட்டாக இருந்தால் என்ன, நமக்கு தேவை அண்டை குடும்பங்களின் கண்ணீர் வம்புகள்.  ரொம்ப சந்தோஷம்.

இதற்கு நடுவில் ஜெர்ரி ஸ்பிரிங்கர் எனும் ஒரு செக்ஸ் வம்பு டாக் ஷோவும் உண்டு.  இந்த ஷோவில் சக்காளத்தி சண்டை நடக்கிறது. திடீரென்று இரண்டு பெண்மணிகளும் அல்லது இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணுக்காகவோ/ஆணுக்காகவோ தலை மயிரை பிடித்துக் கொள்கிறார்கள். எனக்கு சென்னையின் மெட்ரோ பம்பு சண்டை ஞாபகம் வந்தது, குடம் தான் இல்லை, மற்றபடி அதே குழாயடி கூத்து. Pun Intended.

இவைகளின் நடுவே எலன் டிசெனரஸ் எனும் ஒரு பெண்மணி செய்யும் டாக் ஷோ கொஞ்சம் ப்ராக்டிகலாக தெரிந்தது. ஷோவின் நடுவே எலன் தினம் ஒரு டான்ஸ் ஆடுகிறார், இதைத் தவிர அச்சு பிச்சு கேள்விகள் கேட்பதில்லை, வேண்டுமென்றே ட்ராமா செய்வதில்லை எனப் பட்டது. எதுவாக இருந்தாலும் பகலில் டிவி பார்ப்பது உங்கள் IQவிற்கு ஆபத்து.

இரவுகளின் டாக் ஷோக்கள் 8 மணிக்கு ஜான் ஸ்டுவேர்டில் (Jon Stewart)  ஆரம்பித்து Conan O’Brien, Jay Leno என எல்லோரும் ஜோக் அடிக்கிறார்கள். ஜோக் அடிக்கப்படுபவர்கள் அ.சியல்வாதிகள், ஹாலிவுட்காரர்கள் மற்றும் சாமானியர்கள். ஆக அமெரிக்காவில் யாரையும் விட்டு வைப்பதில்லை.  இப்படி தன்னைப் பற்றியே ஜோக் அடித்துக் கொள்வது, அந்த சகிப்புத்தன்மை இந்த நாட்டின் ஆரோக்கியத்துக்கு நல்லது. நக்கல் கொஞ்சம் அதிகமாகிப் போய் யாராவது கேஸ் போட்டால் அந்தந்த சானல்கள் பார்த்துக் கொள்கின்றன.  இவர்கள் சிலரின் ஷோக்களை நான்கைந்து வருடங்களாக பார்த்துக் கொண்டு வருகிறேன். ஜே லெனோ மாதிரி ஜோக்கை ரசித்துக் கொண்டே அடிப்பவர் யாரும் இலர். என்னுடைய பேவரைட்.  கொஞ்சம் பி.பி குறைந்த மாதிரி தெரிகிறது.

000000

இந்தப் பத்தியை பற்றி கொஞ்சம் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.  இது eclectic writing எனும் வகையை சேர்ந்தது. அதாவது கலவை எழுத்து என்று சுமாராய் தமிழில் சொல்லலாம். இதைப் பற்றித்தான் என்றில்லாமல் எதைப் பற்றி வேண்டுமானாலும் எவ்வளவு ஆழமாகவோ மேலோட்டமாகவோ எழுதப்படும் ஒரு பத்தி. இதைத் தமிழில் சிலர் எழுதியிருந்தாலும் பிரபலமாக்கியது சுஜாதா தான். ஆங்கிலத்தில் மிகவும் ரசித்து படிக்கப்படும் ஒரு எழுத்து வகை. இவ்வகை பத்திகளை படிக்க ஒருவர் எந்த மனநிலையிலும் இருக்கலாம். பிசியான ஆபிஸ் லஞ்சுகளிலும், காபி ஷாப்களிலும், ஷேர் ஆட்டோக்களிலும் பெண்கள் கல்லூரி பஸ் நிலையங்களிலும் படிக்கக் கூடிய அளவிற்கு லைட் ரீடிங் வகையை சார்ந்தது.

அமெரிக்காவில் இவ்வகை eclectic எழுத்தாளர்கள் ஒரு வரியில் கூட சில செய்திகளை சொல்வார்கள், ஐம்பது வரிகளிலும் இழுத்து ஆடிப்பார்கள். அது சொல்லப்படும் விஷயத்தை ஒட்டியது.  ஒரு முறை ஒரு எழுத்தாளர் பத்தியை ஆரம்பித்த ஐந்தாவது வரியில், இந்த வாரம் உங்களுக்கு விடுமுறை தருகிறேன், படித்தது போதும் என்று அந்த வாரப் பத்தியை அத்தோடு நிறுத்தி விட்டார். ஆக எடிட்டர் என்ற ஒரு நல்ல மனிதரைத் தாண்டி வாசகர்களுடன் நேரடியாக உறவாடும் வகையை சார்ந்தது.  இந்த மாதிரி ஒரு பத்தியை அந்த காலத்தில் வாரப் பத்திரிகைகளில் அனுமதித்தார்கள் என்றால் அந்தந்த எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்தரம் புரிகிறதா?  அவர்களும் சுதந்தரத்தை பயன்படுத்தி குப்பையாக்காதது தான் முக்கிய காரணம்.

ஹிந்துவின் கடைசி பக்கத்தில் வரும் ஆர்ட் புக்வால்ட் ஞாபகம் இருக்கலாம். ஆர். கே.நாராயணை நினைவு படுத்தும் சாயல். இவரின் எழுத்தை எக்லெடிக் வகையில் சேர்க்க முடியாது என்று சிலர் சொன்னாலும் மிகப் பிரபலமான eclectic  columnist இவராகத் தான் இருக்க முடியும். இவர் எழுத்தின் உச்சத்தில் இருந்த போது உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 550 நாளிதழ்கள் இவரது வாரப் பத்தியை பிரசுரித்தன. சுத்தமான காமெடி ஜென்மம். இவரின் எழுத்து புரிய கொஞ்ச அமெரிக்க அரசியல் தெரிந்திருத்தல் அவசியம். தன் கடைசி நாள்வரை எழுதிக் கொண்டிருந்தார்.  வாஷிங்டன் போஸ்டில் Goodbye, My Friends என்று இவர் எழுதிய கடைசி பத்தி எதிர்ப்பார்த்தபடி மிக பிரசித்தம். கொஞ்சம் முயற்சித்தால், You Can Fool All of the People All the Time  எனும் இவரின் புத்தகத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். பேசப்படும் விஷயம் பழையதாய் இருந்தாலும் சுவாரசியம் கொஞ்ச நஞ்சமல்ல.

00000

அல்செய்மரின் வியாதி என்று அமெரிக்க மீடியா ரொம்பவே கூக்குரலிட்டாலும் நானும் எதோ பணக்காரர்களின் வியாதி போலும் என்று விட்டுவிட்டேன். 2006ல் நண்பர்(ரொம்பவே வயதான)  ஒருவரின் மனைவி இறந்ததை பற்றி அவரிடம் உரையாடும் போது தான் இந்த வியாதியின் பயங்கரம் புரிந்தது. சமீபத்தில் படித்த Finding Life in the Land of Alzheimer’s எனும் புத்தகத்திலும் இப்படியே.

அல்செய்மரின் வியாதி எனும் பெயர் புதிதாய் இருந்தாலும் இது இந்தியாவில் புதிதல்ல. நமக்கெல்லாம் தெரிந்த டிமென்ஷியா தான். அலோய்ஸ் அல்செய்மா எனும் ஜெர்மனிய நியூரோ டாக்டர் இதை அழுத்தமாக விளக்க அவரின் பெயரே நிலைத்து விட்டது.  65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே அதிகமாய் வரும் இவ்வகை டிமென்ஷியாவில் ஞாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் விலகுகின்றன.  மறக்கிறார்கள். மறந்து மறந்து மரிக்கிறார்கள். இதற்கு முற்றிலுமாக குணப்படுவதற்கு மருந்தில்லை, தள்ளிப் போடவும் முடிவதில்லை, வந்து விட்டால் மறதி தான். எதோ ஒரு ஆராய்ச்சியில் அல்செய்மர் வந்த பிரபலங்களை அனலைஸ் செய்த போது மிக அதிகமாக இருந்தது எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்கள்.  பள்ளியில் இருந்த போது ரசித்துப் படித்த எனிட் ப்ளைடன் என்ற எழுத்தாளரும் அல்செய்மர் வந்து தான் காலமானார்.

இதில் பயங்கரம் என்பது இவ்வகை நோயாளிகளை பார்த்துக் கொள்ளும் கணவனோ மனைவிக்கோ தான். இன்றைய நிலவரப்படி, நோயாளிகளை விட அவர்களை பார்த்துக் கொண்டு அவர்களின் மறதியுடன் போராடும் கடினத்தை தாங்கிக் கொண்டுள்ளவர் நோயாளிகளுக்கு முன் இறந்து விடுகிறார்கள் என்பது.

இவ்வியாதியில் ஞாபகங்கள் விலகுவதும் பயங்கரம் தான். அதாவது, கணினித் துறையில் சொல்வது போல Last In First Out Stack. கடைசியாக நடந்த விஷயங்கள் முதலில் மறந்து விடும் என்கிறார்கள். கடைசியாய் பிறந்த குழந்தையை ஒரு பெண்மணி மறந்து விட்டார். தன் முதல் பையனை மட்டும் ஞாபகம் வைத்திருந்தார். மற்றோரு மனைவி தன் கண் முண் நடமாடும் கணவனை மறந்து விட்டார். ஆனால் ஸ்டீவ் எனும் பெயரில் இருந்த தனக்கு அன்பான கணவன் ஒருவர் இருந்தார் என்று தன் கணவரிடமே சொல்லிக் கொண்டிருந்தார்.  அல்செய்மர் நோயாளிகள் ஞாபகத்தில் இளைமையாகிக் கொண்டே போகிறார்கள் என்பதற்கு காரணம் இது தான். பலரின் ஞாபக செல்களில் இருந்து கடைசியாய் கரைவது அவர்களின் தாய்.  கவித்துவம் என்று சொல்லலாமா?

00000

கிறுக்கல் அவார்ட்ஸ் 2010
வழக்கம் போல் – ’இந்த வருடத்தின் சிறந்த’  சேர்த்துக் கொள்ளவும்

புத்தகம்

ஆங்கிலப் புத்தகம் 1 –  The Big Switch – Nicholas Carr

ஆங்கிலப் புத்தகம் 2 –  At Home: A Short History of Private Life – Bill Bryson

சொந்தக் கதை – Autobiography of Mark Twain – நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு நான்-லீனியர் முயற்சி

நோட்டபிள் புத்தகம் – இன்றைய காந்தி – ஜெயமோகன்

தமிழ் சினிமா

ட்ரைலர் – வா. கு. கட்டிங்

படம் – ஆயிரத்தில் ஒருவன்

நோட்டபிள் படம் – அங்காடித் தெரு

சுமார்ப் படம் – சிங்கம், ராவணன், மதராஸப்பட்டிணம்

காமெடிப் படம் – தமிழ்ப் படம்

ஸ்டண்ட் – நான் மகான் அல்ல

நாயகன் – கார்த்தி(ஆயிரத்தில் ஒருவன்)

நாயகி – அஞ்சலி (அங்காடித் தெரு)

காமெடியன் – சந்தானம் (பாஸ் எ பாஸ்கரன்)

துணை நடிகர் – பார்த்திபன்

பாடல் – ஓ ஈசா(ஆயிரத்தில் ஒருவன்)

படமாக்கப்பட்ட பாடல் – மன்னிப்பாயா

குத்துப் பாடல் – காதல் வந்தாலே(சிங்கம்)

இசையமைப்பாளர் –  ஜி.வி.பிரகாஷ்

பாடகர் – விஜய் யேசுதாஸ் ( தாய் தின்ற மண்ணே)

பாடகி – ஆண்ட்ரியா, ஷ்ரேயா கோஷல்(மன்னிப்பாயா)

பாடல் வரிகள் – வைரமுத்து ( கயல் விளையாடும் வயல்வெளித் தேடி)

நோட்டபிள் பாடல் – ஆரோமலே – அல்போன்ஸ் ஜோசப்,  கைதப்ராம் நம்பூதிரி, ரஹ்மான்

எடிட்டிங் – ஆண்டனி(வி.தா.வ,  வா.கு.க)

ஒளிப்பதிவு – ராம்ஜி(ஆயிரத்தில் ஒருவன்), சந்தோஷ் சிவன் – மணிகண்டன் (ராவணன்)

எழுத்து/இயக்கம் – செல்வராகவன்

நோட்டபிள் இயக்குநர் – சுசீந்திரன் (நான் மகான் அல்ல)

பாலிவுட் சினிமா

படம் – Ishqiya

சுமார்ப் படம் – Karthik calling Karthik

நோட்டபிள் படம் – Peepli [Live]

ஹாலிவுட் சினிமா

படம் – Inception (கனவுத் தொழிற்சாலை)

காமெடிப் படம் – Date Night

சுமார்ப் படம் – - Shutter Island

மற்றவை

டெக்னாலஜி –  Augmented Reality

மொக்கை விளையாட்டு – Farmville

மறதி நியூஸ் –  மத்திய அரசு பட்ஜெட், செந்தமிழ் மாநாடு

சின்னத் தீர்மானங்கள்
சினிமாவை நன்கு அறிந்தவர்கள் என்று நான் எண்ணும் சில நண்பர்கள் கூட அவ்வப்போது இயக்குநர் மணிரத்னத்தைத் திட்டித் தீர்ப்பதைப் பார்க்கிறேன்.  காரணத்தை அறிய முற்பட்டால், சென்ஷேனல் விஷயத்தை படத்துக்கு பின்புலமாக வைத்துக் கொண்டு, பணம் பண்ணி, விஷயத்துக்கு சரியான முடிவு சொல்லாமல் எஸ்கேப் ஆகிறார் என்பது தான்.  மணி செய்த விஷயங்களை மறந்து போய்த் தாக்குகிறார்கள். அவர்தான் சினிமாவில் மகேந்திரன் ஆரம்பித்து வைத்த ஸட்டிலிடியை தொடர்ந்தார்.

கதை எழுதுவது ஒரு கதாசிரியனின் உரிமை. அவனுடையது மட்டுமே. அதை அவன் எங்கே வேண்டுமானாலும் நடக்கிற மாதிரி எழுதலாம். மகாபாரதத்தில் எஸ்.வி சேகர் போய் மாட்டிக் கொள்கிற நாடகம் மாதிரி, சுவாரசியமான பின்புலங்களில் கதைச்சத்து அதிகமில்லாத கதையைச் சொல்லலாம். அது கதைக்கு முக்கியத்துவத்தை அதிகரிக்கும்.  இதைத் தான் மணி ஒவ்வொரு படத்திலும் செய்கிறார். பிள்ளையைப் பரிகொடுக்கும் தாயின் சோகத்தை சொல்லும் கதையில் அவர் இலங்கையைப் பின்புலமாக வைத்தால்,  அவர் அந்தப் பிரச்னைக்கு முடிவு சொல்ல வேண்டும் என்பது எந்த நியாயம். அப்படி சொல்பவர்களெல்லாம் என்றைக்காவது அரசியல்வாதியின் வீட்டுக் கதைவைத் தட்டி பிரச்னைக்கு முடிவு தேடுங்கள் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் மணி ரத்னம் மட்டும் காஷ்மீர் என்று சொல்லி விட்டால், யூ.என் தலைவர் போல் முடிவையும் சொல்லி விட வேண்டும் என்பது கையாலாகாத்தனம்.

படம் பிடிக்கவில்லை என்றால் இனியொரு முறை அதைப் பார்க்காமல் இருக்கலாம், அல்லது மற்றவர்களிடம் அதைப் பற்றிச் சொல்லலாம், அதை விடுத்து கதாசிரியன் இதைச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்வது அவனது உரிமைகளில் தலையிடுவது போல்.

நான் சமீபத்தில் எழுத நினைத்திருக்கும் ஒரு கதை நடப்பது, மான்ஹாட்டன் நகரத்தில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஒரு லிவ்-இன் ஜோடியைப் பற்றியது. ஒரு நாள் முன்னிரவில் நடக்கும் அந்தக் கதையில், அந்த ஆண் தனக்கும் மற்றொரு பெண்ணிற்கும் இருக்கும் ரகசிய உறவை அன்று சொல்லிவிடுவது என்று இரண்டு நாட்களாக நினைத்திருக்கிறான்.  அவன் காதலியோ தன்னைத் திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்கத் தயராய் இருக்கிறாள்.

அன்று காலை நடக்கும் ஒரு சம்பவம் இருவரின் வாயையும் அடைத்து விடுகிறது.  அன்று சாயந்திரம் இருவரும் சமைத்து சாப்பிட்டு விட்டு பால்கனியில்  சென்று அமர்கிறார்கள். இருவருக்கும் இடையேயும் ஒரு மயான அமைதி நிலவுகிறது.  தூரத்தில் பெரும் கரும்புகை தெரிகிறது. டி,வியில் நியூஸ் ஓடிக் கொண்டிருக்கிறது. மேலேறும் புகையைப் பார்த்திருக்க அமர்ந்திருப்பவர்கள் கொஞ்ச நேரத்தில் கட்டிக் கொள்கிறார்கள்.  ஏதும் பேசாமல் அந்தப் புகை அவர்களை ஒன்று சேர்த்து வைக்கிறது.

அந்தப் புகையின் காரணம் 9/11 என்று புரிந்திருக்கலாம். இப்படி ஒரு கதை எழுதுபவனை, ”9/11க்கு ஒரு முடிவு சொல்லி விட்டுப் போ, இல்லாவிட்டால் கதை வேஸ்டுமா” என்றால் எப்படியோ அப்படித்தான் மணிரத்ன விஷயமும். யோசித்து பாருங்கள்.

0000

கதையைப் பற்றிப் பேசும்போது,  தற்போதெல்லாம் நல்ல தமிழ்க் கதை வருவதேயில்லை என்று சொல்லிக் கொள்ளும் வாசகர்களுடன்(விமர்சகர்களுடன் அல்ல) நானும் சேர்ந்து கொள்கிறேன். கிட்டத்தட்ட உண்மை தான்.  என்ன தான் இலக்கியம்,கலை, ரசனை என்றெல்லாம் ரொமாண்டிக்காகக் கனவு கண்டாலும் இது ஒரு மாதிரி டிமாண்ட்/சப்ளைகளுக்கு உட்பட்ட மார்க்கெட் தான். விகடனும், குமுதமும், கல்கியும், குங்குமமும் எல்லாமே ஒரு மாதிரி கதைகளைத் தான் தேர்வு செய்கின்றன. அதிக வித்தியாசமில்லை. எல்லா மாகஸின்களிலும் அவ்வப்போது நல்ல கதைகள் வருகின்றன. கழுகு போல் வாராவாரம் காத்திருக்க வாசகர்கள் ரெடியில்லை என்பதுதான் உண்மை. தேவை – சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் 2010 என்ற தொகுப்பு. பல நூறு கதைகளைப் படித்து சிறந்த 25 கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தர நான் ரெடி.

இதற்கு நடுவே இலக்கிய சர்ச்சைகள் என்ற கொசுத் தொல்லைகள் நல்ல கதைகள் வருவதைத் தவிர்க்கின்றன.  பக்கம் பக்கமாகத் திட்டித் தீர்க்கிறார்கள்,  ஆளுக்கு ஒரு பக்கம் சேர்ந்து கொண்டு கோதாவில் இறங்குகிறார்கள். இந்த விமர்சகர்களைப் படித்து யாரும் எந்தப் புத்தகத்தையோ படித்ததாகவோ, கிழித்ததாகவோ வரலாறு இல்லை. எல்லோரும் அவர்களுக்கு தேவையானதைப் படிக்கிறார்கள் அல்லது நிராகரிக்கிறார்கள்.  இதை மேதைவிலாச விமர்சகர்கள் புரிந்து கொண்டாலே உலக ஷேமம்.  இந்த இலக்கிய குஸ்தியில் தற்போது கூட்டத்துக்கு ஆள் சேர்பது போன்ற அரசியல் தந்திரங்கள் வந்து விட்டன. இனி லாரிகளும் பிரியாணி பொட்டலங்களும் தான் பாக்கி. நமக்கும் இவ்வித கிறுக்குத்தனங்கள் புரிவதால், இந்த வருடத்துடன் இவர்களின் போஸ்ட்-மாடர்னிஸ புல்ஷிட்டுகளை ஸ்டாப் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

0000

இந்த வருடம் நான் படித்த சிறந்த தமிழ்ப் புத்தமாக நான் நினைப்பது – சீனா – விலகும் திரை.  ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பல்லவி ஐயர். தமிழில் மொழி பெயர்த்தவர் ராமன் ராஜா. போன வருட புத்தக சந்தையில் வாங்கிய இந்தப் புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்தது ஒரு பிரபலம். சியாட்டலில் தரையிரங்கும் முன் படித்து முடித்து விட்டேன்.

தன் காதலனுடன் சீனாவிற்கு வேலைக்காகச் செல்லும் பல்லவி ஐயர், சீனாவில் வாழ்ந்த அந்த ஐந்தாண்டுகளின் கதை. இரண்டு முக்கியமான  விஷயங்கள், சீனாவைப் பற்றி ஏற்கனவே கொஞ்சம் படித்திருந்தாலும், இதில் புதிதாகப் பட்டது பல்லவி என்னும் அந்த ஆங்கில ஆசிரியை/நிருபரின் பார்வை. எதைத் தேர்ந்தெடுத்து சொல்வது என்பதில் அவர் காட்டியிருக்கக் கூடிய தேர்ச்சி. இரண்டாவது, அதை அவர் சொன்ன விதம், பயன்படுத்தப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள். மிதமான நகைச்சுவை.

இரண்டாவது காரணத்தைத் தான் சந்தேகமாக பார்க்கிறேன்.  இந்த வார்த்தைகளை இப்படி சரளமாக மிகச் சரியாக வந்து விழுந்ததற்கு காரணம் பல்லவியா ராமன் ராஜாவா? என்னவாக இருந்தாலும் இந்தப் புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பைப் படிக்கவில்லை. படிக்கிற எண்ணமுமில்லை.  காரணம், தமிழாக்கத்தில் ஒரு பிரமாதமான உதாரணம் இந்தப் புத்தகம். காரணம் மிகச் சரளமான நடை. ஆனால் எனக்கு முக்கியமாகப் பட்டது ரா.ராஜாவின் வொக்காபுலேரி. ராமன் ராஜா கண்டிப்பாக ஒரு revelation.

00000

வருட ஆரம்பத்தில் எடுக்கப்படும் ரெசல்யூஷன்களைப் பற்றி கொஞ்சம் சினிகலாகவே பார்க்கிறோம்.  ஜனவரி 2ம் தேதி எல்லோரும் ஜிம்மில் ஓட 7ம் தேதி அந்தக் கூட்டம் பாதியாக மாற, 15ம் தேதிக்குள் எல்லாவற்றையும் அடுத்த வருட ஆரம்பத்திற்கு மூட்டை கட்டி வைத்து விட்டு சக்கரைப் பொங்கலால் தொந்தி வளர்க்கிறார்கள்.  இது உண்மை தான்.

ஆனால் சின்னச் சின்னதாய் முடிவுகள் எடுத்தால் நிறைவேற்ற முடியும் என்று நினைக்கிறேன்.  இனிமேல் மோர் சாதத்திற்கு உப்பு போட்டு சாப்பிடப் போவதில்லை, தலைக்கு தலைகாணி வைத்துக் கொள்வதில்லை, ஜீன்ஸானாலும் கசக்கிக் கட்டு, நாளுக்கு 10 பக்கம் படிப்பது போன்ற விஷயங்கள் உருப்படியானவை. நாளையிலிருந்து சீரியல் பார்க்கப் போவதில்லை, நோ ஆபீஸ் பாலிடிக்ஸ் போன்றவைகள் பயங்கரம். நடக்காது.

இவைகளுக்கு நடுவே ஒரு ஸ்வீட் ஸ்பாட் இருக்கிறது. மார்ச் மாதத்திற்குள் எத்தனை சேர்த்து வைத்திருக்கிறோம் என்று கணக்கெடுப்பது,  ஏப்ரலுக்குள் அட்லீஸ்ட் ஒரு பயிற்சி வகுப்பிற்காகவாவது போவது, பிறந்த நாளுக்கு முன் தேவையில்லாத டஜன் சுடிதார்களை தேவையானவர்களுக்கு கொடுப்பது போன்ற மைல்கற்கள் உடைய முடிவுகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த முடிவுகளை உடனே ஃபேஸ்புக்கில் ஏற்றிவிடாமல், இவை முடியும் என மனதால் நம்புவது நல்லது.

இந்த மனதால் நம்புவது என்பது பற்றி ஒரு ஆயிரம் வார்த்தைகளில் எழுத முடியும். ஆனால் ஒரு முடிவு எடுக்கும் போது சற்றே உற்று நோக்கினால் அது நல்லதா கெட்டதா என்பது கிட்டத்தட்ட தெரிந்து விடும். இங்கே கொடுக்கப் பட்டிருக்கும் பூவா தலையா போட்டோவைப் போலத்தான்.

ஆகவே வருட ஆரம்பத்தில் நீங்கள் பெரும் முடிவுகள் எடுக்கக் கூடாது என்று சொல்ல வரவில்லை. பெரும் முடிவுகளுக்கு வருட ஆரம்பங்கள் ரொம்ப தூரம் என நினைக்கிறேன். நீங்கள் அர்விந்த் அடிகா ஆக வேண்டும் என்றாலும், ஐஸ்வர்யா ராய் ஆக வேண்டும் என்றாலும் உடனே நினைக்க ஆரம்பிக்கலாம். யோசித்துப் பார்த்தால் அடுத்த ஐஸ்வர்யா ராய் எங்கோ மூக்கொழுக விளையாடிக் கொண்டிருக்கிறாள். அடுத்த சல்மான் ரஷ்டி, எங்கேயோ புஷ்டியாக சாப்பிட்டுவிட்டு டின்- டின் படித்துக் கொண்டிருக்கிறான்.

இதற்கு மேல் சொன்னால் ஆசிரியர், இந்தப் பத்தி எதோ சுய-முயற்சிப் பயிற்சியாகிக் கொண்டிருக்கிறது என்று நினைத்து கத்திரி போட்டுவிடுவார் என்பதால் இத்துடன் நிறுத்…

– இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.

இந்த வாரம் எப்படி?
ரத்த சரித்திரத்தின் முதல் பகுதியை இந்தியில் பார்த்தேன். இம்மாதிரி கேங்ஸ்டர் படங்களில் திடீரென்று யார் யாரை சுடுகிறார்கள்,  கூறு போடுகிறார்கள், வெட்டிச் சாய்கிறார்கள் என்று புரிவதற்கு முன் இடைவேளை வந்து விடும். இதில் சின்ன மாற்றம் , படம் முடிந்தே போய் விடுகிறது. மார்ட்டின் ஸ்கார்ஸஸி இத்தகைய படங்களில் பேச்சின் மூலம் கதையை நகர்த்தி, பயமுறுத்தி, டக்கென்று கொன்று விடுவார்கள். இதில் நேரெதிர்.

சுவாரசியமாய் ஒன்றுமேயில்லை.  ரத்தத்தை பார்த்து விட்டு தூங்கப் போக முடியாது என்பதால் வீடு வந்து ஒரு நூறு பக்கம் படித்து விட்டே தூங்கப் போனேன்.  அடுத்த பகுதியில் சூர்யா வருகிறார் என்று டைட்டிலுக்கு முன் ட்ரைலர் போட்டார்கள். பார்க்கலாம்.  ரத்தக் களறி சண்டைக்கு நடுவே நாகேந்திரஹாராய என்று உமாச்சி பாட்டை எல்லாம் போடுவது ரொம்பவும் மெல்லிழைவாக மனித மனங்களில் வன்முறையை நியாயப்படுத்தும் என்பதை இயக்குநர் அறிவாரா?

0000

பாவை பிரபந்தங்கள் பாடும் மாதமிது.  சென்னை வெள்ளாளத் தெருவில் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலுக்கு அருகில் வசித்தவன் என்பதால் மார்கழியில் திருப்பாவை சொல்லச் செல்லும் அம்மாவுடன் கோவிலுக்கு போன ஞாபகங்கள் இன்னமும் மிச்சமிருக்கின்றன. திருப்பாவை என்பதை விட சுடச்சுட வெண்பொங்கல் வாசனை தான் என்னை ஈர்த்தது என்று சொல்ல வேண்டும்.  கோவிலுக்கு போகாத நாட்களில், அம்மா தொன்னையில் வெண் அல்லது சக்கரைப் பொங்கலோ வாங்கி வருவாள். மட மடவென எழுந்து பல் தேய்க்கிற மாதிரி தேய்த்து, கிச்சனில் நுழைந்து ஒரே அமுக்.

பத்தாவது படிக்கும் போது நண்பனின் காதலை ஆதரிக்க ஒரு குழாமாக போன போது தான் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் தினப்படி விஷயமானது. சுபா என்கிற அந்தப் பெண் ஆஞ்சநேயரை சுற்றும் போது எண்ணைக் கையால் அருகில் இருந்த சுவற்றில் ஒரு புள்ளி வைக்க, சுரேஷ் என்கிற என் நண்பன் அடுத்த புள்ளி வைக்க, தினமும் 108 புள்ளிகள் முடிய நாங்கள் எண்ணிக் கொண்டிருந்தோம். இதற்கு நடுவில் யாரோ ஒரு சிறுவன் வந்து அவன் ஹால் டிக்கெட் நம்பரை எழுதி விட்டு போவான். இப்படியே எண்களாலும் கோடுகளாலும் சூழப்பட்டிருந்த ஆஞ்சநேயருக்கு வெண்ணெயையும் தாண்டி மூச்சடைத்துப் போயிருக்கும்.

சட்டென்று ஒரு டைவர்ஷன். திருப்பாவை எப்படி மனப்பாடம் ஆகிற்று என்று இன்னமும் தெரியவில்லை. காலை சமையல் செய்து கொண்டே கிச்சனில் இருந்து பாடும் அம்மாவும் காரணமாய் இருந்திருக்கலாம். ஆடி மாத லவுட்ஸ்பீக்கரில் இருந்து தாயே கருமாரி என்று எல்.ஆர்.ஈஸ்வரி பாடியதும், எங்கள் வீட்டு மர்ஃபி டேப்ரிக்கார்டரில் இருந்து வந்த பெங்களூர் ரமணி அம்மாளின் கணீர் குரலும் மனனம் ஆயின. நானாகவே ரொம்பவும் விரும்பிக் கேட்ட டிவோஷனல் பாடல்களை பாடியது ஒன்று எம்.எஸ் அல்லது பித்துக்குளி முருகதாஸ். வீட்டில் அடிக்கடி ஒலிக்கும் டி.எம்.எஸ்ஸின் கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் பாடல்களும், நாகூர் ஹனிஃபாவின் இறைவனிடம் கையேந்தும் குரலும் பின்னர் பிடித்துப் போயின.

பள்ளியில் படிக்கும் காலத்தில், தினத்தந்தியில் அன்றைய திருப்பவையையும் திருவெம்பாவையையும்,  ஐந்து வரி தெளிவுரையோடு ஒரு கட்டம் கட்டி போடுவார்கள்.   திருப்பாவை அறிந்திருந்ததால் திருவெம்பாவையை திரும்பத் திரும்பப் படித்தேன். எம்பாவாய் வார்த்தையை காப்பியடித்தது ஆண்டாளா மாணிக்க வாசகரா என்று சந்தேகத்தோடு உலாத்தியதுண்டு. ஆண்/பெண் வித்தியாசங்கள் இருந்தும், திருவெம்பாவையின் பத்தொன்பதாம் பாடலில் தான் இரண்டிற்கும் ஒற்றுமை தெரிந்தன. இப்போது படித்தாலும், அந்த ஒற்றுமைகள் வாழ்கின்றன.  இது திருப்பாவையா, திருவெம்பாவையா என்று தெரியாமல் படித்தால், கண்டிப்பாய் குழம்பிப் போவீர்கள்.

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று

அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்

எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்

எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க

எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க

கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க

இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்

எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

0000

வாரப் பத்திரிக்கைகளில் Most read/emailed என்று செக்‌ஷன்கள் வைத்துப் பார்த்தால் டாப் டென்னில் வருவது எவை என்பதை யோசித்துப் பார்க்கலாம்.

1. இந்த வாரம் எப்படி?

2. எதாவது ஒரு பெயர்ச்சிப் பலன்.

3. கோலிவுட் ரவுண்ட்-அப்

4. _____ நடிகருக்கு பிறந்த குழந்தைப் படங்கள்

5. ______ நடிகை திரும்ப நடிக்க வரும் முன்னர் வரும் மணியோசை

6. எதாவது ஒரு கருத்துக் கணிப்பு

இப்படியாக முக்கிய செய்திகளில் முக்கியமாக இருப்பது ஜோசிய ஹேஷ்யங்கள். வருடத்தின் முதல் வாரத்தில் இந்த வருடம் எப்படி இருக்கும் என்று மாத வாரியாக எழுதும் ஜோசியர்கள், வார ஜோசியம் எழுதும் பொழுது வருட முதலில் எழுதியதை ரெஃபர் செய்து எழுதுகிறார்களா? இப்படி சமீபத்தில் தேடிப் பார்த்த பொழுது, அக்டோபர் மாதத்தில் அமேசிங் வைபவம் ஒன்றும் வேலை சார்ந்த கவலை ஒன்றும் வரலாம் என்று எழுதியிருந்தார் ஒரு ஜோதிடர். அக்டோபர் மாதத்தில் வார வாரம் என்ன எழுதியிருக்கிறார் என்று படித்துப் பார்த்த பொழுது இரண்டுக்கும் ஆறல்ல அறுபது வித்தியாசங்கள் தெரிந்தன. இம்மாதிரி ஜோசியங்கள் ஒருவேளை வானிலை மாதிரி மாறிக் கொண்டே இருக்கும் போலிருக்கிறது.

இவை எதனால், எவரால், எப்படி எழுதப்படுகின்றன என்பதை எல்லோரும் அறிவோம். ஆனாலும் எல்லோரும் வருங்காலத்தை எட்டிப் பார்க்கிற ஆர்வத்தில் இருக்கிறோம் என்பது தான் மனித இயல்பாய் இருக்கிறது. இந்த பத்திரிகையிலும் இப்படியெல்லாம் போட்டால் pageviews பிய்த்துக் கொண்டு பறக்கும் என்பதால், ஆசிரியரை இவற்றை பரிசீலிக்குமாறு மெயிலனுப்பியிருக்கிறேன். நீங்களும் பரிந்துரைக்கலாம்.

0000

சமீபத்தில் ஜூலியன் அசாஞ்ச் பற்றி நாராயணன் எழுதியிருந்த கட்டுரை மிகையாக அவரை ஒரு ஹீரோவாக மட்டுமே காட்டி இருப்பதாய் எனக்கு தோன்றினாலும், கட்டுரைக்குப் பின் இருந்த கடின உழைப்பு தெரிந்தது. பிடித்திருந்தது.  ரெண்டு நாள் பேப்பர் படிக்காமல் போனால் இப்படி ஏதாவது ஒரு பெரிய விஷயம் நடக்கும் நாட்களில் நாமிருக்கிறோம்.  அப்படியிருக்க இந்த மாதிரி சுருக்கமான ஆனால் தெளிவான விவரிப்புகள் ரொம்பவும் முக்கியம். இவைகளை எழுத ஆள் அதிகமில்லை.

இந்த மாதிரி ஒரு 1000 வார்த்தை கட்டுரை எழுத அவர் குறைந்தது ஆறிலிருந்து பத்து மணிநேரம் வெறும் படிக்க மட்டுமே செலவழித்திருக்கலாம்.  இதற்கு பிறகு படித்ததில் இருந்து விவரங்களை தவிர்த்து கருத்துக் கூறுகளை மட்டும் உள்ளடக்கிய ஒரு கட்டுரை எழுதுவதற்கு முன் முழி பிதுங்கி விட்டிருக்கும்.

இம்மாதிரி கட்டுரைகளை முதலில் படிக்கவும்,  பிடித்திருந்தால் ஓரிரு வார்த்தைகளில் ஒரு மெயிலோ/கமெண்டோ அனுப்பலாம், தப்பில்லை.

– இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.

ஐயய்யோ ஒரு சாதனை!
டான் கில்பர்ட் மற்றும் டான் எரய்லி போன்ற சோஷலாஜிஸ்ட்டுகள் மனித மனங்களை பற்றிச் சொல்லும் சில விஷயங்கள் யோசிக்க வைக்கின்றன.  மனிதன் நடுநிலையுடன் யோசிக்கிறான் என்று நாம் நம்புகிறோம். ஆனால் எல்லோரும் அப்படி இல்லை. தனக்கு தேவையான விஷயங்களில் கூட அசமஞ்சமாகத் தான் செயல்படுகிறான். இரண்டு பிரபல உதாரணங்கள்-

உங்கள் பர்ஸில் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டும் ஒரு ஐம்பது ரூபாய் சினிமா டிக்கெட்டும் இருக்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சத்யம் தியேட்டரை சென்று அடையும் போது டிக்கெட் காணாமல் போய் விடுகிறது. கையில் இருக்கும் ஐம்பது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி பார்பீர்களா இல்லையா?

இந்த முறை உங்களிடம் இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகள் இருக்கின்றன. சத்யத்தை அடையும் போது, ஒரு ஐம்பது ரூபாய் காணாமல் போய் விடுகிறது. இப்போது என்ன செய்வீர்கள், கையில் இருக்கும் ஐம்பது ரூபாயை வைத்துக் கொண்டு டிக்கெட் வாங்குவீர்களா இல்லை வறுத்த வேர்க்கடலை கொறித்துக் கொண்டே திரும்பி வந்து விடுவீர்களா?

இதைப் பலரிடம் கேட்டுப் பார்த்த டான் கண்டுபிடித்தது, முதல் உதாரணத்தில், பலர் சினிமா பார்க்காமல் திரும்பி வந்து விடுவேன் என்றார்கள். ஏன் என்று வினவிய போது,  மீண்டும் ஒரு முறை ஐம்பது ரூபாய் சினிமா டிக்கெட்டிற்குக் கொடுக்க விருப்பமில்லை என்றார்கள். அடுத்த உதாரணத்தில் கையில் இருக்கும் ஐம்பது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவேன் என்றார்கள்.

இரண்டு உதாரணங்களிலும் காணாமல் போனது இரண்டு பேப்பர்கள் தான். ஒன்றில் சத்யம் என்று போட்டிருக்கிற ஒரு ஐம்பது ரூபாய் டிக்கெட். அடுத்ததில் காந்தி படம் போட்ட ரூபாய். ஆனால் மனித மனமோ முதல் உதாரணத்தில் டிக்கெட் விலையை இரட்டடிப்பாக ஆக்கிக் கொள்கிறது, அடுத்த முறை தன் விதியை நொந்து கொள்கிறது.

இதே போல் அடுத்த ஒரு சிச்சுவேஷன், நீங்கள் வாங்க நினைத்த கார் ஸ்டீரியோ உங்கள் வீட்டின் அருகே தி.நகரில் ஆயிரம் ரூபாய்க்கும் பாரீஸ் கார்னரில் தொள்ளாயிரத்திற்கு கிடைக்கிறது.  எங்கே வாங்குவீர்கள்? கொஞ்ச நாள் கழித்து நீங்கள் வாங்க நினைக்கும் கம்ப்யூட்டர், தி.நகரில் 50,000க்கும் பாரீஸ் கார்னரில் 49,900க்கும் கிடைக்கிறது. எங்கே வாங்குவீர்கள்?

மக்கள் சொன்ன பதிலும், நீங்கள் நினைத்த பதிலும் ஒன்றே தான்.  கார் ஸ்டீரியோவிற்கு பாரீஸ் கார்னருக்கும், கம்ப்யூட்டருக்கு தி.நகருக்கும் செல்வதாய்ச் சொன்னார்கள்.  இரண்டிலும் விலை வித்தியாசம் ஒன்றே தான், நூறு ரூபாய்.  அதே நூறு ரூபாய். இரண்டையும் முடிவு செய்வது உங்கள் மனம்.

ஆக மனிதர்களும் அவர்கள் மனங்களும் கால்குலேட்டர்கள் அல்ல.  இதில் நன்மையை விட தீமை தான் அதிகமாக இருக்கிறது.  என்ன தான் யோசித்து முடிவெடுக்கும் மனிதர் கூட கார் ஓட்டிக் கொண்டே டெக்ஸ் செய்கிறார், ரெட் லைட்டைச் சட்டென தாண்ட முயல்கிறார்.  மனிதர்கள் கால்குலேட்டர்களாய் இருந்தால், விபத்துகள் நடக்க வாய்ப்பேயில்லை. காரில் airbag  இத்தியாதி எல்லாம் தேவையில்லை.

0000

காரைப் பத்தி பேசும்போது, கடந்த நூறு வருடங்களில் ஆட்டோமொபைல் டெக்னாலஜி கிட்டத்தட்ட வளரவேயில்லை. கிட்டத்தட்ட.  ஆட்டோமொபைல் எனும் வார்த்தையில் மொபைல் உண்மையாகிவிட்டது. கார் போன்ற வாகனங்களால் நாம் இடம் பெயர்கிறோம். ஆனால் ஆட்டோவாக இல்லை. அதாவது இன்னமும் ஓர் ஆட்டோமொபைலை ஓட்ட ஆசாமி தேவைப்படுகிறார்.

மக்கள் வாங்கக் கூடிய விலையில் முதல் காரை தயாரித்த ஹென்றி போர்ட்(Henry Ford) சொன்ன ஒரு விஷயம் – “If I asked my customers what they want, they simply would have said a faster horse.”   எங்கள் கம்பெனி போய் மார்க்கெட் வாக்கெடுப்பு எடுத்திருந்தால் வேகமான குதிரைகளை தான் எங்கள் வாடிக்கையாளர்கள் கேட்டிருப்பார்கள். கார் வேண்டும் என்று சொல்லியிருக்க மாட்டார்கள். ஆகவே தான் யாரையும் கேட்காமல் நாங்களாகவே மக்களுக்குத் தேவையானதைக் கண்டுபிடித்தோம் என்றார். ஆனால் அதற்குப் பின்னர் கடந்த நூறு ஆண்டுகளாக நான் அந்தக் காரை வேகமாக செலுத்துவது பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். தேவை அடுத்த ஹென்றி போர்ட் மற்றும் உண்மையான ஆட்டோ மொபைல்.

இந்தக் காரை கண்டுபிடிக்கும் முன் ஒரு நாள் தனது எஞ்சினியர்களை கூப்பிட்டு அனுப்பினார் போர்ட்.  அவர் சொன்னது -” I dream of a machine that runs on wheels and is driven by an engine. Go find it” இந்த மாதிரியான அடுத்த ஒரு visionary-க்காகத் தான் உலகம் இன்னமும் கார் ஓட்டிக் கொண்டிருக்கிறது.

0000

சமீபத்தில் படித்த Program or be Programmed என்னும் புத்தகத்தில் இது சுவாரஸ்யமான விஷயமாகப்பட்டது. எல்லோரும் சாப்ட்வேர் ப்ரோக்கிராமிங் கற்றுக் கொள்ள வேண்டும் எனும் சிந்தனை. இருக்கிற எஞ்ஜினியர்கெல்லாம் முதலில் வேலையிருக்கிறதா என்ற கேள்வியை தள்ளி வைத்துப் பார்த்தால், இதில் கொஞ்சம் நன்மையிருக்கிறது.

எனக்கு ப்ரோக்கிராமிங் சொல்லிக் கொடுத்த வாத்தியார் முதலில் சொன்னது, உங்களுக்கு கொடுக்கப்பட்ட ப்ரோக்கிராமிங் கேள்வி ஒரு கண்ணாடி போல.   முதலில் கீழே போட்டு உடைத்து விடுங்கள். உடைந்த சில்லுகளை ஆராய்ந்து பாருங்கள், ப்ரோகிராம் எழுத உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்.  எல்லா விஷயங்களும் இப்படித்தான். எல்லா கடினக்காரியங்களையும் சிறு சிறு கடினங்களாக ஆராய்ந்து முடிவெடுத்தால் அந்த பெரிய விஷயத்திற்கு முடிவு கிடைத்து விடும். இதே மாதிரி சிந்திப்பதற்குத் தான் ப்ரோக்கிராமிங் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் டக்லஸ் ரஷ்ஆஃப்.

இதையும் தாண்டி நம்மை சுற்றியுள்ள விஞ்ஞான உலகை அறிந்து கொள்ள ப்ரோக்கிராமிங் உதவும் என்று வாதிடுகிறார். புத்தகம் விற்று தீர்ந்தாகிவிட்டது.

0000

இந்த வருடத்தின் சிறந்த என்று போட்டு வரும் டிவி நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும் நேரமிது. முந்திக் கொள்கிறேன். இந்த வருடத்தின் சிறந்த தமிழிசை அமைப்பாளர் – ஜி.வி. பிரகாஷ்.

போன வருடமே இசை வெளிவந்து விட்டது என்றாலும் ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியானது இந்த வருடம் என்பதால் அதிலிருந்து ஆரம்பிக்கலாம்.   அதோ அந்தப் பறவை ரீமிக்ஸை தவிர்த்து மற்ற எல்லா பாடல்களும் பிரமாதமான காம்பொசிஷன்கள்.  ரொம்பவும் பிடித்தது, ஓ ஈசா பாடல்.

வ.கு.கட்டிங் படத்தில் உன்னைக் கண் தேடுதே பாடல் ரொம்பவே கடினமான பாடல். கேட்டுப் பாருங்கள், ஆரம்ப கால ஏ.ஆர். ஆர் தெரிவார்.

சமீபத்தில் வெளியான தனுஷ்-வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தில் அய்யய்யோ(பாட்டின் பெயர் தான்) பாடல் ஒரு சாதனை. ரொம்பவே சாதாரணமாகத் தோன்றினாலும் இரண்டுமுறை கேட்டால் எஸ்.பி.பியின் குரலுக்கு மீண்டும் ஆட்படுவீர்கள். மீண்டும் மீண்டும் கேட்பீர்கள்.  ஆங்காங்கே இஞ்சி இடுப்பழகு தெரியலாம்.  ஒத்த சொல்லால மற்றும் யாத்தே எனும் பாடல்களும் அட சொல்ல வைக்கின்றன.

இந்த வருடம் பிடித்த வேறு சில பாடல்கள்:  ஷ்ரேயா கோஷல் – ரஹ்மான் – மன்னிப்பாயா, ஆண்ட்ரியா-அஜீஷ் – இது வரை இல்லாத,  கார்த்திக் – உசுரே போகுதே மற்றும் ஆண்ட்ரியா – Who’s the Hero?(மன்மதன் அம்பு). மற்றபடி அழகான ஹீரோயின்களும் வெகு அழகாக பாடுகிறார்கள் என்பது தான் இந்த வருடத்தின் வகைப்படுத்த முடியாத சாதனை.

– இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.

சொர்க்கத்துக்குப் போவேனா மாட்டேனா?
போன வார தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.

உலகத்தின் டாப் டென் கவலைகளில் முதலிரண்டைப் போன வாரம் நுனிப்புல் மேய்ந்தோம். டாப் டென் கவலைகளுக்கு எதோ ஒரு பிரகஸ்பதியின் வெப்சைட்டில் ஓட்டுப் பதிவு வைக்க, டாப் டென்னுக்கு பின் வந்த கவலைகளின் லிஸ்ட் கவலை கொள்ள வைக்கிறது. பதினேழாமிடம் – பீனட் பட்டர் மேல் வாயில் ஒட்டிக் கொள்வது, முப்பத்தி ஆறாமிடம் மலச்சிக்கல்,  பதினைந்தாமிடம் – பெண்கள் என்று காமெடி டைம். உலகின் மூன்றாம் கவலை என்று பலரும் வாக்களித்தது சொர்க்கத்துக்கு போவேனா மாட்டேனா என்பது தான். சுத்தம்!

oo0000oo

வாழ்வில் நடக்கக்கூடிய சோகங்களில் மிகப் பெரியது குற்றம் செய்வதோ ஆட்படுவதோ என்கிறார்கள் விஞ்ஞானிகள். இறப்பைப் போன்று நமது செல்களில் பதிவு செய்யப்படாதது குற்ற உணர்ச்சி தான். ஜெனட்டிக்காக குற்றம் செய்வது நம்முள் பதிவு செய்யப்படவில்லை.  எல்லோருக்கும் வரும் ஜலதோஷம், ஜுரம் போல குற்றங்கள் எல்லோருக்கும் வருவதில்லை. எதோ ஒன்று இருப்பதாலேயே வருகிறது. அழகோ, ஆடி காரோ, அடையார் பங்களாவோ இப்படி ஏதோ இருப்பதால் தான் குற்றங்கள் அவர்களை நோக்கி வருகின்றன என்பது தான் சோகமே.

ஆனால் குற்றங்கள் நடக்க ஆதாரக் காரணம் தான் என்ன.  2008 அமெரிக்காவில் மிகப்பெரிய ரிசஷன் வந்த எல்லோருக்கும் வேலை இழந்து, வீட்டை இழந்த போது சமூக வல்லுனர்கள் குற்றங்கள் அதிகமாகலாம் என்றார்கள். மோசமான ஒரு பொருளாதாரத்தினால் கடுங் குற்றங்கள் அதிகமாகலாம் என்று நம்புகிறோம்.  அது கிட்டத்தட்ட தப்பு.  அமெரிக்காவில் 60-70களில் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தபோது குற்றங்கள் அதிகரித்தன. 80களில் பொருளாதாரத்துடன் குற்றங்களும் குறைந்தன. அப்போது பொருளாதாரத்திற்கும் குற்றங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றால், பிறகு? தேவையில்லாமை தான்.

குழந்தை தேவையில்லை என்று நினைக்கும் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகள் கிரிமினல்களாகின்றன என்கிறார்கள்.  கொஞ்சம் நெளிய வைத்தாலும் 1973ல் நிறைவேற்றப்பட்ட  Abortion Actக்கு பிறகு பத்து வருடங்களுக்குப் பிறகு குற்றங்கள் குறைய ஆரம்பித்தது அமெரிக்காவில்.  தேவையில்லை என்று நினைக்கும் பெற்றோர்களின் சிசுக்கள் அபார்ஷனில் போய்விட்டதால், அந்தத் தலைமுறையின் நிறைய குற்றவாளிகள் பிறக்கவேயில்லை என்பது தான் Freakonomics எழுதிய லெவிட் மற்றும் டப்னரின் வாதம்.  இதனை data வைத்துக் கொண்டு நிருபித்தார்கள்.

குற்றவாளிகள் நம்முடன் தான் இருக்கிறார்கள். நம்மைப் போலவே பிள்ளையாரை பார்த்தால் குட்டிக் கொள்கிறார்கள், அயர்ன் பண்ணி ட்ரஸ் போடுகிறார்கள், சேனல் தாவுகிறார்கள்.நம்மைப் போலவே ஊக்கம் இல்லாவிட்டால் ஒரு விஷயத்தைச் செய்யாதிருப்பார்கள். ஆக அவர்களுக்கு ஊக்கம் இல்லாது செய்துவிட்டால். அதாவது காசு வாங்காது கைது செய்து,நேரத்திற்கு கேஸ் ஃபைல்களை பிரித்து, தண்டனையளித்து,  உள்ளே போட்டால் ஊக்கமிழந்து விடுவார்கள். இதை முடியாமல் செய்யும் உப-குற்றக்காரர்களைத் தான் முதலில் உள்ளே போடவேண்டும்.

இதையெல்லாம் விட அமெரிக்காவில் டெலிவிஷனால் தான் குற்றங்கள் அதிகரிக்கின்றன என்கிறார்கள். டிவி பார்த்துக் கொண்டு பாப்கார்ன் கொறித்துக் கொண்டிருக்கும் அந்தச் சிறுவர்கள் மற்றவர்களுடன் பழகுவதை விட்டுவிடுகிறார்கள்.  தனித்துப் போய் விடுகிறார்கள்.  அல்லது அவர்கள் பெற்றோர்கள் டிவி பார்த்துக் கொண்டே இருப்பதால் வெறுப்படைந்து போய் கதவை மூடிக் கொள்கிறார்கள்.

“பேப்பர திறந்த கொலை கொள்ளை, நம்மூர் கெட்டுப் போச்சு” என்று சொல்லும் மாமாக்களுக்கு கொஞ்சம் வித்தியாசமான பதில் இருக்கிறது.  சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் கண்டுபிடித்த உண்மை எல்லோரையும் உறைய வைத்தது. இத்தனை ஜனநெரிசல் அதிகமான உலகத்தில் ஐநூறு வருடங்களாக கடுங்குற்றங்கள் குறைந்து வருகின்றன.  15ம் நூற்றாண்டில் லட்சத்தில்73 கொலைகாரர்கள் இருந்தார்கள், 20ம் நூற்றாண்டில் மூன்றே பேர் தான். இதே போல் வேறு பல நாடுகளிலும் இதே கதை தான்.  ஆக மக்கள் தொகை அதிகமாகும் இக்காலத்தில் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதா, குறைகின்றன என்பதா?

இம்மாதிரி உலக மகா ரிசஷன்கள் வரும் போதும் கூட பொய் சொல்லாமல், பிக் பாட்கெட் அடிக்காமல், கொலை வழிப்பறி செய்யாமல் எத்தனையோ சான்ஸ்களை வேண்டாம் என்று விட்டுவிட்ட நமக்குள் இருக்கும் குற்றவாளிகளுக்கு ஒரு கைக்குலுக்கல்-சல்யூட்.

மற்றபடி குற்றத்திற்கு ஆதாரமான காரணம் கஞ்சத்தனம். யோசித்துப் பார்த்தால் புரியும்.

பி.கு – சூர்யா-ராமுவின் ரத்த சரித்திரம் இன்னமும் பார்க்கவில்லை.

oo00000oo

நாத்திகத்தின் போஸ்டர் பாய் என்றழைக்கப்படும் சாம் ஹாரிஸ் எழுதிய The moral landscape என்ற புத்தகத்தினால் ஆத்திக-நாத்திக சண்டைகள் அதிகமாகியுள்ளன. சாம் சொல்ல வருவது இதைத்தான் – மதங்கள் ஒருவர் ஒழுங்காக இருப்பதற்கு மோசமான காரணங்களைக்க் கொடுக்கின்றன. ஆப்பிரிக்காவில் பசிக் கொடுமை இருக்கிறது. கிறிஸ்து என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார், ஆப்பிரிக்காவுக்கு எதாவது பண உதவி செய்தால் என்னை சொர்க்கத்தில் சேர்த்துக் கொள்வார் என்பதனால் செய்கிறீர்களா? அல்லது மற்றவர்களின் மேலிருக்கும் தூய்மையான அன்பினாலா?

அவரிடம் சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் கேட்கப்பட்ட கேள்வி சிந்திக்க வைக்கிறது – Why is science a better alternative? Science is the most durable and non divisive way of thinking about the human circumstance. It transcends cultural, national, and political boundaries. You don’t have American science versus Canadian science versus Japanese science.

oo0000oo

பாஸ் (எ) பாஸ்கரன் படம் கொஞ்சம் பிடித்திருந்ததுக்கு காரணம் சந்தானம்.  அவரின் விஜய் டிவி காலத்திலிருந்தே அவரைப் பார்த்து வருகிறேன். வத்திப் போன தமிழ்க் காமெடி உலகில் கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தவர், இப்போது தமிழ் சினிமாவுக்காக மாறிக் கொண்டு வருகிறார். எந்திரனில் எதோ மெக்கானிக்கிடம் வேலை பார்க்கும் ( “டேய் அந்த எட்டு ஸ்பானரை எடுத்துப் போடு”) சைட் கிக் போல வந்தவர், இந்தப் படத்தில் ஆர்யா விட்டுக் கொடுக்க, ஓரிரு தருணங்களில், விலா நோக வைக்கிறார். சித்ரா லட்சுமணனைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. மற்றபடி படத்தில், ஒரு பாடலில் பணக்காரனாகும் விக்கிரமன் படத்தைக் கிண்டல் செய்து கொண்டே ஒரே பாடலில் பணக்காரர்கள் ஆகிறார்கள்.  என்ன ஒரு cliché reversal.

விமர்சனம் – கடிதம்
டியர் சுப்புடு,

உங்களின் யாவரும் நலம் விமர்சனம் படித்தேன். படித்தேன் என்பதை விட அதை மிகவும் ரசித்தேன், மதித்தேன். பத்து வருடங்களாக என் மனதின் இருந்த பல சந்தேகங்களும் விடை தந்தது அந்த விமர்சனம். சமீபமாக தமிழில் வந்த மிக முக்கியமான விமர்சனம் இதுதான். இதை கண்டிப்பாக உலகத்தின் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும். ஜாதி மதம் கடந்த ஒரு சிறந்த பார்வை அது.

கடந்த முப்பது வருடங்களாக தமிழ் நாவல் உலகின் மிக முக்கியமான வாசகரான உங்களை ருஷ்யாவின் விமர்சன எழுத்தாளர் டுபாக்ஸி கேனைகனக்கோவ்வுடன் ஓப்பிட்டு நானும் எனது நண்பர்களும் அடிக்கடி பேசிக்கொள்வோம். என் நண்பன் ஜிக்கி உங்களை நியுசிலாந்தின் ஆத்தி லாக்கர் உடன் இணைத்து பேசப் போக எனக்கு கோபம் வந்து, கையில் இருந்த பீர் பாட்டிலால் அவனது மண்டையை உடைத்து விட்டேன். நான் மதிக்கும் சுப்புடுவின் விமர்சனத்துக்கு அருகில் ஆத்தி எழுதிய ஸ்டார் ட்ரக் விமர்சனம் எல்லாம் தூசு. இப்படி செய்ததற்காக கோபப்படாதீர்கள். என்னுடய பல பெண் நண்பர்கள் சதா சர்வ காலமும் உங்களை பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் படிப்பது உங்கள் எழுத்துக்களை மட்டும் தான். நிஷிதா உங்கள் புகைப்படத்தை தான் மொபைலின் பேக்கரவுண்டாக வைத்து கொண்டிருக்கிறாள்.

உலகில் இருக்கும் பலவிதமான விஷயங்களை பற்றியும் உங்களின் கருத்துக்களை அறிய முற்படும் பல கோடிப் பேர்களில் நானும் ஒருவன். காலை எழுந்தவுடன் பல் தேய்பதற்கு முன் படிப்பது உங்கள் வலைதளத்தை தான். ஒருநாள் நீங்கள் எழுதாவிட்டால் எனக்கு தூக்கம் வருவதில்லை. மீண்டும் மீண்டும் நீங்கள் முன்பு எழுதியதையே படித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை உங்களில் ஆறுபத்தி எட்டு பத்திகளை பல்லாயிரக்கணக்கான முறை படித்து விட்டேன். என் பக்கத்து வீட்டு தாத்தாவிடம் உங்களின் புனைகதையை படித்துக் காட்ட சந்தோஷத்தில் குதிக்க ஆரம்பித்து விட்டார்.

இந்த கடிதத்தை நீங்கள் வலைதளத்தில் பதிப்பிக்க மாட்டீர்கள். இதைப் போல உங்களுக்கு ஏராளமான கடிதங்கள் குவியலாம். இதை உங்கள் வலைதளத்தில் ஏற்றினால், எனக்கு ஜென்ம சாபல்யம். நிஷிதா உங்களுக்கு ஒரு பெரிய ‘ஹாய்’ சொன்னாள்.

ஜூன் 5, 2009

சிவராமன்

குடவாசல்.

சிவராம்,

முதலில் குடவாசலில் இருக்கும் அந்த ஜம்பு கோலி சோடா கடை இன்னும் இருக்கிறதா. சிறுவயதில் எனக்கு என் தந்தை அங்கு கோலி சோடா வாங்கித் தந்தார். பின்பு பல முறை பார்க் ஷெராடனில் தீர்த்தசவாரி செய்யும் போதெல்லாம், அந்த கோலி சோடா தான் ஞாபகம் வரும்.

நீங்கள் எழுதியதெல்லாம் எனக்கு பழகி போய் விட்டது. தசாவதாரத்தின் பாடலை பற்றி நான் எழுதிய அந்த நுண்ணிய விளக்கத்தை படித்து கமல் போன் செய்து பாராட்டினார். டுவிட்டரை பற்றி நான் எழுதிய பத்தியை ஆப்ரிக்காவின் பீலாயுவில் சர்சையை உருவாக்கியிருக்கிறது. விக்கிபிடியாவில் என்னையும் இரானின் பாரூட் டுமாரருக்கையும் இணைத்து கொண்டாடுகிறார்கள். எதிர் வீட்டில் சந்தியா பூனையை பார்க்கும் பொழுது என் கர்வம் உடைகிறது.

எண்பதுகளில் என்னுடைய எட்டாவது வயதிலேயே என்னை பெண்கள் சுற்றி வர ஆரம்பித்தார்கள். இன்று வரை என் மெயில் பாக்ஸை திறந்தாலே, இங்கே வரியா, போன் பண்ணுவாயா என்று ஏகப்பட்ட மெயில்கள்.

போன வாரம் ஜகன் பரமேஷ்வர் என்பவர் டுவிட்டரில் எனக்கு கானா பாடத் தெரியாது என்று எழுதியிருந்தார். அவருக்கு பதிலை இன்று முதல் ஆயிரத்தெட்டு டுவீட்டுகளாக எழுத உள்ளேன். பிக்கடோர் நிறுவனம் அந்த பதில்களை இணைத்து சுப்புடுவும் ஜிகினா கானாக்களும் என்று புத்தகம் போட ரெடியா உள்ளார்கள். இதற்கு அட்வான்ஸாக 10,000 ருபாய் செக் கொடுத்தார்கள். இன்று ஞாயிறாக உள்ளதால் அதை என்காஷ்(என் காசு) செய்ய முடியவில்லை. நண்பர்கள் யாராவது சிங்கிள் டீக்கு மூன்று மணிக்குள் கைக்காசு கொடுத்தால் நன்றாக இருக்கும். அதற்கு பிறகு நான் பெங்களூருக்கு ப்ளைட்டில் சென்று இரவு ஷெராட்டனில் தங்கப் போகிறேன்.

1:16:15 pm.

ஜீவனோபாயம்; எழுத்தாளன்
சுஜாதாவை எடுத்துக் கொள்வோம். தமிழகமே கொண்டாடிய – ஆனால் இலக்கியவாதிகளால் புறக்கணிக்கப்பட்ட – எழுத்தாளர். அவர் தன்னைப் பற்றிய ஒரு விபரத்தைக் கூட எழுதியதில்லை. சுயசரிதைத் தன்மையான எதையுமே அவருடைய எழுத்தில் பார்க்க முடியாது. ஆறே மாதங்களாக நான் வளர்த்து வரும் பப்பு, ஸோரோ பற்றி இதுவரை எத்தனையோ பக்கங்கள் எழுதிவிட்டேன். விவேக் கூட பேச்சை ஆரம்பித்த போது “பப்புவும் ஸோரோவும் எப்படி இருக்காங்க?”: என்று கேட்டு, தன் தந்தை வளர்த்த ஜெர்மன் ஷெப்பர்ட் பற்றி எவ்வளவோ சொன்னார். அவருடைய அப்பாவும் என்னை மாதிரியே, அவருடைய நாயை நாய் என்று விவேக் எகுறிப்பிட்டால் “நீதான்டா நாய்; இவனை ஏன்டா நாய் என்று சொல்லுகிறாய்?” என்பாராம்.

இதேபோல் அவர் தனது சொந்தப் பிரச்சினைகளையும் எழுதியதே இல்லை. அவர் தன் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய ஜீவனோபாயத்துக்காக வெவ்வேறு அலுவலகங்களில் வேலை பார்த்து வந்தார். கடைசிக் கட்டத்தில் ஒரு அலுவலகம். ஒரு சிறிய அறை. சுஜாதாவோ ஆறு அடிக்கு மேல் உயரம். ஆறேகால் கூட இருக்கலாம். காலை நீட்டினால் எதிர் சுவர் இடிக்கும். எழுந்து நின்றால் மேலே தலை இடிக்கும். யாராவது விசிட்டர் வந்தால் சுஜாதா அவரை வெளியே வந்துதான் சந்திக்க வேண்டும். உள்ளே அவர் அறையில் இடம் இருக்காது. இப்படி ஒரு கல்லறை மாதிரியான ஒரு அறையில் தனது கடைசி காலத்தில் அவர் ஏன் வேலை செய்ய வேண்டும்? வேலை செய்யாவிட்டால் அவருடைய அன்றாட வாழ்க்கையே பிரச்சினையாகி இருக்கும். எழுத்தின் மூலம் வரும் பணம் அவருக்கு ஒருநாளைக்குக் காணும். மீதி 29 நாட்களுக்கு எங்கே போவார்? இதைப் பற்றியெல்லாம் அவர் எங்கேயாவது எழுதியிருக்கிறாரா? எழுத மாட்டார்.

இந்த இரு பாராக்களை எழுதியவர் ஒரு ‘fantasy writer’. எந்த ஒரு எழுத்தாளைனையும் படிக்காமல், சூழ்நிலைக்கேற்ப தான் எழுதியதையே மாற்றி மாற்றி எழுதும் கலகக்கார so-called-எழுத்தாளர்கள் இருக்கும் வரை மற்ற எழுத்தாளர்கள் எல்லாம் கேனக்கிறுக்கர்கள் தான்.

மேலே உள்ள இரண்டு பாராக்களை பிரித்து மேய்ந்து எழுத முடியும். எழுதினால் எனக்கும் இதை எழுதியவருக்கும் வித்தியாசம் இருக்காது. முக்கியமான விஷயங்கள் – சுஜாதா தன்னுடைய கடைசி பத்து வருடங்களாக எழுதியவை சுயசரிதை தன்மையுடைய கட்டுரைகளே. அவரே கற்றதும் பெற்றதுமில், விகடன் பாலசுப்பிரமணியன் சுயசரிதை எழுத சொன்னதாகவும். சுயசரிதை எழுதினால் வம்பு வரும் என்பதால், கற்றதும் பெற்றதும் போல எல்லாம் கலந்த பத்தி எழுதலாம் என தீர்மானித்தார் என்கிறார். கற்றதும் பெற்றதுமின் முதல் வருடத்தில் அவர் எழுதிய சுயசரிதை சம்பவங்கள் பல. இதையெல்லாம் தவிர தன் அப்பா மறைந்தவுடன் எழுதிய அப்பா அன்புள்ள அப்பா முதல் முதல் ப்ளைட் ஓட்டிய அனுபவம், வீடு மாறிய அனுபவம், பெண் பார்த்த அனுபவம், குடும்பத்துடன் எல்டிசியில் தமிழ்நாடு டூர் போன அனுபவம் என அவர் தன்னுடைய சுயசரிதையை பிரித்து பிரித்து பல இடங்களில் எழுதியிருக்கிறார்.

இந்த பாராக்களில் குறிப்பிடப்பட்டுள்ள, ஜீவனோபாயத்துக்காக என்கிற வார்த்தையை கவனிக்கவும். இந்தப் பாரா முழுவதும் பொய் என சுஜாதாவே எழுதியதை வைத்தே சொல்ல முடியும். பணத்தை பற்றி தனது கவலைகள் பல ஆண்டுகளுக்கு முன்னே போய்விட்டதாகவும், தான் தற்போது எழுதுவது எல்லாம் ஒரு ஆர்வத்தினால் மட்டுமே என்று பலப்பல முறை கூறியிருக்கிறார். கடைசி வரை பணத்துக்காக அன்றி நண்பர்களுக்காக மட்டும் சினிமா வசனம் எழுதியவரை பற்றி அவரது இறப்புக்கு பிறகு திரித்து எழுதுவது இங்கே மட்டுமே சாத்தியம்.

ஒரு அரை மணி நேரம் வேஸ்ட் செய்து இவரின் வலைதளத்தை மேய்ந்ததால் கிடைத்த பிற விடயங்கள், இந்த எழுத்தாளருக்கு சமீபத்தில் வாசகர் வட்டம் அதிகரித்து இருக்கிறதாம். அமெரிக்க பல்கலைகழகத்தில் படிக்கிறார்களாம். சினிமா விமர்சனம் என்னும் பேரில் கதாகாலட்சேபம். ஹிட் ரேட் கூடியிருக்கிறதாம். கமல் படிக்கிறாராம். கொண்டாடுகிறார்களாம். கொஞ்சம் காமெடி டைம் நிறைய Hallucination.