subbudu.com » சியாட்டல்

வெற்றிமாறனும் விஷால் பரத்வாஜும்
தற்போதெல்லாம் வெள்ளியன்று படம் வெளிவந்து எல்லா தியேட்டர்களையும் நிறைத்துக் கொள்ள தமிழுலகம் சனி, ஞாயிறுக்குள் பார்த்துவிட சினிமா விமர்சனம் என்ற வஸ்து தேவையில்லை என்றே தோன்றுகிறது. அதனால் விகடன் உட்பட எல்லா வாராந்திரிகளும் ஒரே நேரத்தில் மூன்று நான்கு படங்களுக்கு விமர்சனம் எழுதிவிடுகின்றன. படம் பார்க்க விமர்சனம் படித்ததெல்லாம் போய், படம் பார்த்து வந்து பொறுமையிருந்தால் பிறகு படிக்கிறார்கள் இல்லையென்றால் டுவிட்டரில் 140க்குள் எதையாவது எழுதி வைத்த பின் மறந்து போய் விடுகிறார்கள்.

இங்கே அமெரிக்காவின் கடைக்கோடியிலோ நிலைமை வேறு மாதிரி. இந்தப் படம் ஹிட்டைத் தவிர வேறொன்றும் ஆகாது என்ற காரெண்டி உள்ள படங்களை மட்டும் யாராவது எடுத்து தியேட்டரில் போட்டு விடுவார்கள். அதில் கூட அவ்வப்போது உத்தமபுத்திர தப்புக்கள் நடப்பதுண்டு. சில சமயம் இதற்கு ஏதிர்ப்பதமாக – ஆயிரத்தில் ஒருவன் படம் ஒரு சனிக்கிழமையன்று ஒரே ஒரு ஷோ திரையிடப்பட்டது. அந்த மாதிரி ஒரு பிரமாதமான படத்தை நானும் பதினெட்டு பேரும் பார்த்துக் கொண்டு இருந்தோம்.

இந்தியாவில் இப்படி பல முறை தனியாக படம் பார்த்த அனுபவம் உண்டு. ஹே ராமின் முதல் நாள் மாலைக் காட்சிக்கு ஆபிஸில் சொல்லிவிட்டு போனேன். தேவியில் பாண்டு வாத்திய பேரிசை, ரசிக கண்மணிகளின் சரம், ஆங்காங்கே ”பத்து-நுப்பது பத்து-நுப்பது வாய்ங்க்கோ வாய்ங்க்கோ” ப்ளாக் டிக்கெட் ஆசாமிகளை கடந்து உள்ளே போனால் கமல் எதோ ஜட்கா வண்டியில் பவனி வந்து கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். படம் பார்த்து சிலாகித்துப் போய் ஒரிரு வாரங்களுக்கு பின் நண்பர்களை பேசி சமாளித்து  ஹேராம் பார்க்க கூட்டி வந்தேன். தேவி பாரடைஸ் தியேட்டரின் உள்ளே இருபத்தைந்து பேர், இருக்கிற மின்விசிறிகளை எண்ணிக் கொண்டிருந்தார்கள்.  இதே போல் உட்லாண்ட்ஸில் இருவர் படம் ரிலீஸ் ஆகிய மூன்று வாரங்களுக்கு பின் கல்லூரி நண்பர்களை கூட்டிப் போனேன். அடிக்காத குறை. எண்ணிப் பார்த்தால் கூட என்னையும் சேர்த்து முப்பது பேர். கூட்டம் இல்லாததால் படம் பார்த்துக் கொண்டிருந்த போது குளிர் அதிகமாகி பத்து டிக்கெட்டுகள் ஜகா. என் நண்பர்கள் ஆளுக்கு ஒரு மூலையாக தூங்கி போய்விட நான் ரசித்துக் கொண்டிருந்தேன்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மட்டும் பத்து இருபது நாட்களுக்கு படம் ஓடும். மற்ற ஊர்களில், அதாவது இந்த மாதிரி வடமேற்கு மூலையில் இருக்கும் சியாட்டலில் ஒரு ஷோ, மிஞ்சிப் போனால் நாலு ஷோ. அதுவும் இந்தியாவில் வந்த இரண்டு மூன்று வாரம் கழித்தே வரும். நான் பார்த்து விமர்சனம் எழுதுவதற்குள் அதைப் பற்றிய சுவாரசியம் குறைந்து போய்விடுகிறது. இதில் ஒரு நல்ல விஷயமும் அடக்கம், படம் வந்த முதல் நாளே கதையை விமர்சனத்தில் கோடிட்டு கூட காட்ட முடியாது. ஆனால் எல்லோரும் படம் பார்த்த பின்னர் விரிவாக உட்கார்ந்து அலசி ஆராயலாம். இதற்கேற்ற ஒரு சூழ்நிலை வேண்டும். அதுவும் தமிழில் ஆரோக்கியமாக இல்லையோ என்றே தோன்றுகிறது.

திரும்பவும் அமெரிக்காவுக்கு வரலாம். ஆக, இப்படி தியேட்டரில் வராத படங்களின் டிவிடி வந்தால் தான் படம் பார்க்க முடியும். படம் இந்தியாவில் வெளியான ஒரிரு வாரங்கள் கழித்து, ஸ்ருதிலயம் என்னும் ஒரு கம்பெனியின் டிவிடி வெளிவரும். அது அடாசு ப்ரிண்டாக இருக்க வாய்ப்புண்டு. அதற்கு பிறகு இரண்டு மாதங்கள் கழித்து லோட்டஸ் என்ற கம்பெனியின் பிரகாசமான டிவிடி வெளிவரும். இது எந்த அளவுக்கு ஒரிஜனல் டிவிடி என்ற கேள்விகளெல்லாம் இங்கே இல்லை. அமெரிக்காவில் இருக்கும் இந்தியக் கடைகளில் டிவிடி, அதை உரசிப் பார்க்காமல் வாங்கி வந்து பார்த்து விடுவார்கள் அமெரிக்க தமிழர்கள்.

0000

So we’ll live, And pray, and sing, and tell old tales, and laugh at gilded butterflies என்று ஷேக்ஸ்பியரின் கிங் லியர் சொல்லுவதாய் இருக்கும் வரிகளைப் போன்ற ஒரு கடைசிக் கவிதை முடிவு, ஆடுகளத்தில். கதாநாயகன் தன் காதலியுடன் ஒரு வழியாக தப்பித்து லாரியேறி ஊரை விட்டு போகும் காட்சியில் தெரிவது தான் வெற்றிமாறனின் வெற்றி. Everything gone wrong  கதை. அதில் கடைசியில் யாருமே ஒன்றுமே செய்ய முடியாது என்ற பட்சத்தில் தப்பிப்பதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவு, ரியலிஸ்டிக். ஆனாலும் கடைசிக் காட்சியில் அந்த லாரி கண்ணை விட்டு மறைந்து போக ஆலம் விழுதெல்லாம் தெரிகிறது. ஒருவேளை டைரக்டரின் டச்சோ என்னவோ?

ஆ.களத்தை பற்றி பேசுவதற்கு முன், கிங் லியரை ஷேக்ஸ்பியரின் மிகத் திறமையான படைப்பு என்று கிட்டத்தட்ட எல்லோரும் ஒத்துக் கொண்டு விட்டார்கள். அந்த மாதிரி ஒரு ட்ராஜெடி முடிவை, பதினேழாம் நூற்றாண்டில் எதிர்கொள்வதற்கு கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்திருக்கும்.  இன்னமும் எல்லா பெரிய நடிகர்களும் ஒரு முறையாவது கிங்லியராக நடிக்கும் வாய்ப்பிற்கு தவமிருக்கிறார்கள். தமிழில் கூட சமீபத்தில் அசல் என்ற படத்தில் கிங்லியரை கொஞ்சம் உல்டா அடித்திருந்தார்கள். கி.லியரில் அவருக்கு மூன்று பெண்கள், இங்கே ஆண்பிள்ளைகள். கடைப் பெண் கார்டெலியாவாக இங்கே அஜித் குமார். அசல் அசலல்ல.

ஆடுகளத்தின் கதை, ஏற்கனவே பல முறை சொல்லப்பட்ட துரோகக் கதை. ஆனால் துரோகத்தின் சாத்தியக்கூறுகள் பலப்பல. எத்தனை முறை இப்படியான கதையைப் பார்த்தாலும்/படித்தாலும் ஒரு திடுக்கிடல் வரத்தான் செய்கிறது. அந்த பெரிய மனிதரை(!) துரோக உணர்ச்சி ஆக்கிரமிப்பதை, காமிரா சற்றும் விலகாது படம் பிடிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக சகுனி சூழ்ச்சிகள் நடைப்பெற இனி யார் நினைத்தாலும் தடுக்க முடியாத படி துரோகம் அறுவாளைத் தூக்கிக் கொண்டு அலைய, சீட்டு நுனி லயிப்பிற்கு குறைவில்லை. தனுஷும் அவர் கூட வரும் ’சாவல்’ பார்ட்டியும் நகமும் சதையும், கடைசியில் ரத்தமும் கொண்ட மனிதர்களாக வலம் வருகிறார்கள். உதாரணத்திற்கு தனுஷின் அம்மா, பேட்டைக்காரனின் மனைவி என பல ரியல்-லைப் காரெக்டர்கள்.

வெற்றி மாறனின் இரண்டாவது படமும் அவரின் முதல் படத்தைப் போலவே இருக்கிறது. படத்தின் முக்கிய பகுதி ஓரிரவில் நடக்கிறது, கதையின் கடைசியை முன்னமே கொஞ்சம் காட்டி விடுகிறார், பின்பு கதை ப்ளாஷ்பேக்கில் போகிறது, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கு வருகிறது. இம்மாதிரியாக நான்-லீனியராக கதை சொல்வதில் சில நன்மை/தீமைகள் இருக்கின்றன. இந்த இரண்டு படங்களிலும் நல்ல வேலையாக இது சம்பந்தப்பட்ட குறை தெரியவில்லை.  படத்தில் அந்தக் காதல் தேவையேயில்லை என்று தோன்றினாலும் அதில்லாமல் கல்லா கட்டுவது கடினம்.கடைசியாக டைட்டிலில் இந்தப் படம் எடுக்க உதவிய படங்கள் லிஸ்டில் தேவர் மகன் விருமாண்டி Babel எல்லாம் இருக்கிறது. புத்தகங்களில் கிரிகோரி ராபர்ட்ஸின் Shanthaaram  மற்றும் Roots தென்படுகின்றன. இலக்கியம் படிப்பதன் அவசியம் ஆங்காங்கே படத்தில் தெரிகிறது.

“நீ இந்தப் பையன லவ் பண்றியா இல்ல அவனையா?” என்று கதாநாயகியை கேள்வி கேட்கும் போது இசைக்கும் அந்த ஜில்லிடும் தீம் மியூஸிக் பிரமாதம். ஜி.வி பிரகாஷ் எங்கிருந்து இன்ஸ்பயர் ஆனார் என்று சொல்லியிருக்கலாம். ஒத்த சொல்லால பாடல் எல்லோரையும் சகட்டு மேனிக்கு ஆட வைத்திருக்கிறது. கதர் ஜிப்பா ஜோல்னாப்பை வகையராவுக்கு பிடித்த மாதிரியும் டப்பா கட்டு கட்டும் லுங்கி மாம்ஸ்களுக்கும் பிடித்த மாதிரியும் படமெடுக்கும் வெற்றிமாறனுக்கும் விஷால் பரத்வாஜுக்கும் வித்தியாசம் அதிகமில்லை.

- இன்ன பிற பத்தி – March 8, 2011

இன்ன பிற – நாராயண் இருந்த வீடு
போன வார தமிழ் பேப்பரில் வெளியான இன்ன பிற பத்தி.

சியாட்டல் ரொம்பவே பரந்த மனப்பான்மை கொண்ட நகரம். அதைப் போலவே Indie Films  என்னும் தனியார் எடுக்கும் திரைப்படங்களுக்கு இங்கே ஏக ஆர்வம்.  சினிமா ஆர்வம் கொண்ட இந்திய இளைஞ-ஞிகளும் அதிகம். பார்க்கிற ஆர்வம் போக திரைப்படம் எடுப்பதற்கும்.  போன வருடம் இப்படி ஒரு இந்தியக் குழுவை என் நண்பர் எப்படியோ கண்டுபிடித்தார்.  இவர்கள் எல்லாம் வீக்கெண்ட் இரவுகளில் யாராவது ஒரு வீட்டில் தங்கி எதாவது ஒரு ‘நல்ல’  சினிமா பார்த்து,  அதைப் பற்றி விவாதித்துகொண்டிருக்கிறார்கள் என்று என்னையும் வரச் சொன்னார்.

ஓரிரு மாதங்கள் கழித்துப் போனேன். அன்றைக்குப் பார்த்து அந்தக் குழுவில் இருந்த ஒருவர் தேர்ந்தெடுத்திருந்த ‘பனாரஸ்’ என்ற இந்திப் படம் படு போர். படம் முடிந்தவுடன் பயங்கரமாக இந்திய சினிமாவை திட்டும் விவாதம். விவாதத்தின் முடிவில், ‘இவங்கெல்லாம் படமெடுக்கறாங்க,  நாமேகூட ஒரு குறும் படமெடுத்து பார்க்கலாம்’ என்ற ஒரு முடிவு. அங்கிருந்த மற்றொரு பெண், தான் கேள்விப்பட்ட ஒரு நிஜ வாழ்க்கைக் கதையை சொல்ல, எல்லோரும் தம் ஐடியாக்களை சேர்க்க, கதை கிட்டத்தட்ட ரெடி. சற்றே கடினமான கதை. படித்தால் அல்லது பார்த்தால் மட்டுமே புரியக்கூடிய கதை. மற்றவர்கள் சொன்னால் மொத்தக் கதையும் புரிவது கடினம். இருபது நிமிடப் படமாக எடுக்க முடிவு செய்தார்கள்.  விட்டால் ஆச்சு என்று நான் ஒதுங்கிக்கொண்டேன்.

இரண்டு வாரங்களுக்குப் பின் திரைக்கதை ஆசாமி கேமராமேனாக மாறி ஜகா வாங்க, நான் எழுதித் தருவதாக ஒப்புக்கொண்டேன். ஓரிரவு உட்கார்ந்து அந்தக் கதையை கொஞ்சம் மாற்றி திரைக்கதையாக்கி, முதல் பாதியை எழுதிவிட்டேன். மற்றொரு நாள் மறு பாதியும் எழுதிவிட, அந்தக் கடினக் கதை தன்னையே விடுவித்துக்கொண்டு சுலபமாகிப் போய்விட்டது. மொத்தம் 42 பக்கங்கள். திரைப்பட இலக்கணத்தில் ஸ்கிரிப்டின் ஒரு பக்கம் ஒரு நிமிடப் படமாகும் என்பது தியரி. இருபது நிமிடப் படம் என்று ஆரம்பித்து நாற்பது நிமிடத்தில் போய் நிற்பதால் இயக்குநரும், உப-இயக்குநரும், எடிட்டரும் சேர்ந்து அங்கே இங்கே கட் செய்து ஒரு முப்பது பக்கத்துக்குக் கொண்டுவந்தார்கள். ’கார்த்திக்கும் நானும்’ என்னும் அந்தக் குறும்படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி.

அப்புறம் ஒரு முப்பது நாற்பது பேர்களைப் பேசவைத்து, அழவைத்து,  கண்ணடிக்கவைத்து ரெக்கார்ட் செய்து, கேமரா டெஸ்ட் செய்து, கடைசியாக ஹிரோயின்களும் ஹீரோவும் ரெடி. ஆறு மாதங்களாக எல்லோருக்கும் ஒத்துப்போகும் நேரத்தில் ஷூட் செய்கிறார்கள். போன மாதம் கார்த்திக்கும் அந்தப் பெண்ணும் சந்திக்கும் ஒரு பார்க் சீனை ஷூட்டிங் பார்க்கப் போயிருந்தேன். நகரத்தின் நடுவே ஒரு கூட்டமான பார்க்கில் போவோர் வருவோர் பார்க்க ஷூட்டிங். முதலில் ஏகமாகக் காற்றடித்து ஒலிப்பதிவில் மக்கர். அதற்கப்புறம் சூரியன் மறைய ஆரம்பித்துவிட ஒளிப்பதிவில் மக்கர். நடுவே ஹீரோ ஸ்டார்பக்ஸ் காப்பி கேட்க, ஹீரோயினுக்குக் குளிர மட மடவென, ஷூட் செய்து தள்ளி பேக்-அப் சொன்னார்கள்.

க்ளைமாக்ஸ் காட்சியும் ஒரு பார்ட்டி சீனும் மட்டுமே பாக்கி என்று போன வாரம் இயக்குனர் மெயில் அனுப்பியிருந்தார். நடுவே ஹீரோயினாக நடிக்கும் பெண் இந்தியா போய் வந்தார். ஹீரோ இளைஞன் ப்ளோரிடா போய்விட்டார். எடுத்த வரையில் இன்னும் ஃபர்ஸ்ட் கட் ரெடியாகவில்லை. இயக்குநருக்குக் கதை கிட்டத்தட்ட மறந்துவிட்டது. இப்படி, படமெடுக்கும் பிரசவ வலி புரிகிறது.

எப்படியும் இன்னும் ஓரிரு மாதங்களில் வந்துவிடும். எதாவது விழாவுக்கு அனுப்பிவிடுவார்கள். காசு கேட்காமல் யூட்யூபில் போடுவார்கள். சொல்கிறேன்.

oo0000oo

சூர்யா அட்டைப்படம் போட்ட வருட விகடன் தீபாவளி மலர் 2010-த்துக்குப் பணம் செலுத்திவிட்டேன். ஏறுமயிலேறி ஏர்மெயிலில் வந்துகொண்டிருக்கும். நானூறு பக்கங்கள் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். நல்ல வேளை, அதில் எத்தனை கலர் பக்கங்கள் என்றெல்லாம் போடவில்லை.

ரொம்ப வருடங்களுக்குப்பின் போன வருடத்தின் தீபாவளி மலர் பிடித்திருந்தது. எழுத்தாளர்களின் மனைவிகளைக் கதை எழுத வைத்திருந்தார்கள்.  அருளுரை,  சினிமா பேட்டிகள் என்பதை எல்லாம் தாண்டி அதைப்போல ஏதாவது வித்தியாசமாகச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

oo0000oo

மார்கழி மாசம் இந்தியா வந்திருந்தபோது, கிட்டத்தட்ட பதினேழு வருடங்கள் பிறந்து வளர்ந்த புரசைவாக்கத்தில் இருந்த நண்பன் வீட்டுக்குப் போயிருந்தேன். புரசையைத் தெருத் தெருவாகச் சுற்றித் திரிந்திருக்கிறேன்.  ஏகப்பட்ட நண்பர்கள் இருந்தார்கள். இப்போது பம்பாயிலோ, மஸ்கட்டிலோ, வெஸ்ட்மின்ஸ்டரிலோ, மினியாபோலிஸிலோ இருக்கிறார்கள்.  ஆனால் இன்னமும் வெள்ளாளத் தெரு அப்படியே இருக்கிறது.  சில வருடம் கழித்துச் செல்வதால், ரோடு ரொம்பவும் குறுகியதாகத் தோன்றியது. செல்வ வினாயகரும் கங்காதீஸ்வரரும் பிரசித்தமாகியிருக்கிறார்கள். குளங்களைக் காணவில்லை.

மணிகண்டனும் நானும் பைக்கில் கிளம்பி நாங்கள் படித்த பள்ளிக்குப் போனோம். அங்கேயேதான் இருக்கிறானே தவிர அவனும் சில வருடங்கள் கழித்துத்தான் அந்தப் பக்கம் வருவதாகச் சொன்னான். ஸ்கூலின் முன்னாடி பெரிய சுவர் எழுப்பி, உள்ளே இருந்த தூங்குமூஞ்சி மரங்களை வெட்டி, இன்னுமொரு பெரிய கட்டடம் எழுப்பி விளையாட இடமில்லாமல் செய்திருக்கிறார்கள்.  ஒரு போட்டோ எடுக்கச் சொன்னபோது, “ஏதாவது புள்ள புடிக்கறவங்கன்னு நினைக்கப் போறாங்க” என்று கேமராவைக் கையால் மூடினான். சிரித்துக்கொண்டே Aunty shopபில் லெமன் ட்ராப் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டோம்.

வெள்ளாளத் தெருவில் நானிருந்த வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளியிருந்த வீடு பெயர் போனது.  ராசிபுரம் கிருஷ்ணசாமி ஐயர் நாராயண சாமியின் வீடு.  ஆர்.கே. நாராயண் என்றால் ஊர் அறியும். ஆர்ப்பாட்டமில்லாத யதார்த்தக் கதை எழுத்தாளர். சுவாமியும் நண்பர்களும் புத்தகத்தை இன்று படித்தாலும் அவருக்கு நோபல் கொடுக்கப்படாததன் அரசியல் புரியாது. அவரின் My Days புத்தகம் ஒரு ஆட்டோபயோகிரபிகல் மைல்கல். இணையத்தில் கொஞ்சம் தேடினால் சங்கர் நாக் இயக்கிய மால்குடி டேஸை பார்க்கலாம்.  ஜும்பா லஹரி எழுதிய நாரயணின் நாட்களும் படிக்கலாம்.

அவர் வெள்ளாளத் தெருவின் முதல் வீட்டில்தான் வளர்ந்தார். பின்பு மைசூர் போய் எழுத்தாளர் ஆனார். அவரிருந்த வீட்டை சில வருடங்களூக்குமுன் இடித்துக் கட்டினார்கள். தற்போது சரவண பவன் இருக்கிறது.  நான் மணிகண்டனைத் தள்ளிக்கொண்டுபோய் அங்கே காப்பி குடிக்கும்போது, RKN-னை ஒரு மடக்கில் நினைத்துக்கொண்டேன்.

oo0000oo

க்ரந்தா(Granta) என்னும் இலக்கிய காலாண்டிதழின் சென்ற பதிப்பு செக்ஸ் ஸ்பெஷல். அதனால் இந்த மாதிரி ஒரு பர்ஸின் போட்டோவைப் போட்டு (பர்ஸ் மட்டும் தெரிந்தால் இதற்குமேல் படிக்காதீர்கள்), பிரபல எழுத்தாளர்களை செக்ஸைச் சுற்றி நடக்கும் கதைகளை எழுதவைத்திருக்கிறார்கள்.  இதிலிருக்கும் மூன்று கதைகளை வைத்துக் குறும்படங்கள்கூட எடுத்துவிட்டிருக்கிறார்கள்.

ராபர்ட் பொலானோ எழுதிய “The RedHead”  என்னும் கதை பதினெட்டு வயதுப் பெண்ணுக்கும் ஒரு போதை மருந்து ஒழிப்பு போலீஸ் ஆபிசருக்கும் இடையே நடக்கும் ரொம்பவே தொந்தரவு செய்யக்கூடிய கதை. இதைப்போல தமிழில் கதைகள், எழுத்தாளரின் உயிருக்கு உத்தரவாதத்தோடு, காலச்சுவடிலோ, உயிர்மையிலோ வருவதெப்போது?

oo0000oo

சிகாகோ அட்டாமிக் விஞ்ஞானிகளின் குழு ஒன்று 1947-ல் The Doomsday Clock  என்னும் ஒரு கடிகாரத்தை அமைத்தார்கள். அதாவது உலகம் நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு அழியப்போகிறது என்று வைத்துக் கொண்டால் இப்போது மணி என்ன என்று நியமிக்கும் குழு இவர்கள்.  கடிகாரம் ஒரு குறியீடுதான்.  உலகில் தற்போது நடக்கும் சாதக பாதக நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு அதற்கேற்றாற்போல இந்தக் கடிகாரத்தின் முட்களை நகர்த்தி வைக்கிறார்கள்.  உலக அமைதி, இயற்கை அழிவுகள் எனச் சில பிரபல நிகழ்ச்சிகள்தான் இதை தீர்மானிக்கின்றன.

1947-ல் 11:53 pm என்று ஆரம்பித்தார்கள். அதற்குப் பின் இந்தக் கடிகாரம் முன்னும் பின்னும் போய் வந்து கொண்டிருக்கிறது.  1949-ல் ரஷ்யா அணுகுண்டு தயார் செய்தபோது மணி 11:57-க்கு நகர்த்திவைக்கப்பட்டது. 1953-ல் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் பகை உச்சியில் இருந்தபோது 11:58 க்கு போய்விட்டு 1991-ல் 11:43 என்று அமைதியாகியது. கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி இந்த வருடம் நடந்த அணுகுண்டு ஒப்பந்தத்தினால் 11:54 என்று இறங்கியிருக்கிறது.  இதற்கு மற்றொரு காரணம் எந்திரன் ரிலீஸ் என்றும் சொல்கிறார்கள். நம்பலாம்.

oo0000oo

இன்ன பிற – 2
“திரைப்படம் எடுப்பது எப்படி என்பதைப் பற்றி புத்தகம் எழுதும் அளவு `மீடியா டிரீம்ஸ்’ நிறுவனத்தில் எனக்கு அனுபவம், ஐந்து திரைப்படங்களில் ஏற்பட்டுவிட்டது. எந்த பட்ஜெட்டும் குறிப்பிட்ட தொகையை இரண்டு மடங்கு மீறும். இதற்கு மனசுக்குள் தயாராக இருக்க வேண்டும். அதாவது, அவர்கள் ஒரு கோடிக்குள் படத்தை முடிக்கிறேன் என்று சொன்னால் இரண்டு கோடிக்குத் தயாராக இருக்க வேண்டும். அதேபோல் ஒரு படத்தை மூன்று மாசத்தில் முடிக்கிறேன் என்று ஒருவர் சொன்னால், ஆறு மாசத்துக்குத் தயாராக இருக்கவேண்டும். படத்தை பதினெட்டு நாளில் முடிப்பேன் என்று ஒருவர் சொன்னால் உடனே அவரை வழி அனுப்பவும். சம்மதத்துக்காக பொய் சொல்கிறார். படத்தில் ஏதாவது ஒரு ஸ்டார் இருந்தால் அதற்காக அரை மடங்கு கூடுதல் பணம், நேரம் இரண்டுக்குமே தயாராகவும், ஒரு நாளைக்கு ஷூட்டிங் செலவு முப்பதாயிரம் என்று சொன்னால் புளுகுகிறார் என்று அர்த்தம். தமிழ் சினிமாவின் ரேட் ஒரு நாளைக்கு ஒரு லட்சம். பெரிய டிபன் பாக்ஸில் குறைந்தபட்சம் இருநூறு பேர் தின்னே தீர்ப்பார்கள். இதை யாரும் எதுவும் செய்ய முடியாது. கலாசாரம் இப்படி.

இதையெல்லாம் படித்த பின்னும் உங்களில் சிலர் படம் எடுக்கும் தைரியம் பெற்றால் கடவுள் உங்களைக் காப்பாற்றட்டும்!”

- `படமெடுத்துப் பாழாய்ப் போக’ கட்டுரையில் சுஜாதா, 2003

இருபத்தி நான்கு வாரங்களாக குமுதத்தில் எழுதிக் கொண்டிருந்த சுஜாதாவின் கதைக்கு முற்றும் போட்டு விட்டார் ரஞ்சன். நாற்பது வருடங்களுக்கு மேல் எழுதிக் கொண்டிருந்த ஒரு மிகப் பிரபலமான எழுத்தாளனின் கதையை எழுதுவது சுலப(ம்/மன்று).

சுஜாதா அவருடைய வாழ்க்கையின் சுவாரசிய பக்கங்களை அவரின் பத்தி எழுத்துக்களில் அவ்வப்போது எழுதி வந்திருக்கிறார். அவை எல்லாவற்றையும் திரட்டி, மேலும் சிலரை சந்தித்து ஒரு பயோகிராபி தொடரை எழுதி முடித்திருக்கும் ரஞ்சனுக்கு நன்றிகள் பல.

எனக்குத் தெரியாத பல விஷயங்கள் தொடரின் கடைசி சில வாரங்களில் வந்தது. சுஜாதா சினிமாவில் ஒரு காட்சியில் நடித்தது, சினிமா டைரக்‌ஷன் செய்ய பெல் நிறுவன வேலையை ராஜினாமா பண்ண நினத்தது, தன்னுடைய கையெழுத்தை வைத்து தனக்காக ஒரு கணிப்பொறி ஃபாண்ட் அமைத்துக் கொண்டது, ராஜீவ் மேனனின் நட்பு மற்றும் குமுதத்தில் ஆசிரியர் அனுபவங்கள்.

குமுதம்காரர்கள் இதை வருகிற புத்தக சீசனில் புத்தகமாக கொண்டு வந்தால் சில ஆயிரமாவது போகும். தேசிகனும் சுஜாதா பற்றி பயோகிராபிக்கு சில வருடங்களாக யோசித்து கொண்டிருக்கிறார். சுஜாதாவுடனும் இதை பற்றி பல மணி நேரங்கள் பேசியிருப்பதாய் சொன்னார். செய்வார் என நம்பலாம்.

அமெரிக்க வரைபடத்தின் வட மேற்கு மலைபகுதியை சூம் செய்தால் தெரியும் சியாட்டலில் ஏகப்பட்ட பனியுடன் வொயிட் கிறிஸ்துமஸ் கொண்டாடினோம். அப்படி ஒரு வெள்ளை விரிப்பு. பச்சை மரங்களையும் கார்களையும் சேர்த்து பனி விழுங்கிக் கொண்டு மீண்டும் ஒரு முறை தன் இருப்பை காட்டிக் கொண்டது.

நான்கு நாட்களாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் போல, டிவியில் சொல்வதற்கு நேர்மாறாக, பனி என்றால் மழை. மழை என்றால் கடும் பனி. சாட்டிலைட் புருடாவுக்கெல்லாம் அசைவதாய் இல்லை இயற்கைத் தாய்.

க்ளிஷேவாக சொல்வதானால், மாறணும் ஆயிரம். தமிழ் சினிமாவில் மாறவேண்டியவை என்று லிஸ்ட் போட்டால், கதை, நடிப்பு என்பதற்குப் பின் மேக்கப் கலை. தசாவதாரத்தை விட நன்றாக இருந்தாலும், அறுபது வயது பெரியவருக்கு முப்பது வயது கையிருக்கிறது.

கெளதம் மேனன் தன் அப்பா பற்றி ஒரு மெமாயிர் எடுத்ததெல்லாம் அவருடைய கதாசிரிய உரிமை. அதற்கு சரியாக ஒரு திரைக்கதை அமைக்காததால், தியேட்டரில் எத்தனை விளக்குகள் விசிரிகள் இருக்கிறதென்று எண்ண ஆரம்பித்து விட்டேன்.

ஹாரிஸின் பாடல்களும் படத்தோடு பார்க்கும் போது ஒரிஜினாலிடி இல்லை. சூர்யாவோ அபூர்வ சகோதர்கள் கமல் போல ஒல்லி மீசையில் நடனமாடும் எண்பதுகளின் பாடலில் அனக்ரானிசமாக contemporary சிந்தஸைஸர் ஒலி. சகிக்கவில்லை.

க்ளைமாக்ஸில் சூர்யாவின் துயரத்தில் பங்கெடுக்காமல் அந்த பின்சீட்டுப் பெண் சிரித்ததில், கெளதம் மேனனுக்கு எதோ ஒரு செய்தி இருக்கிறது.

இன்னபிற
சதா எழுதிக்கொண்டிருப்பதே ஒரு நல்ல பழக்கம் தான், எழுத்தாளனுக்கு. ஒரு கணினிப் பொறியாளனுக்கும் அதே போலத் தான், கணினியில் வேலைப் பார்ப்பது. நிற்க. கணினித்  தொழில் செய்து கொண்டே எழுத நினைப்பவர்கள், சற்றே யோசிக்கவும். ஒரு பத்து நாள் எழுதாமல் இருந்து விட்டால், எழுத நினைத்தாலும் முடிவதில்லை. கணினி ப்ரோக்கிராமும் சரி, கன்னித் தமிழும் சரி,  ஒரே மாதிரி தான். பயிற்சி பயிற்சி.

ஒரு மாதமாவது அந்தப் பக்கம் போய் விட்டு வரலாம் என்பதற்குள், இந்தப் பக்கம் காய்ந்து விட்டது. இருக்கியா இல்லயா என்று சில விசாரிப்புகள் வேறு. இந்த மாதிரி இரண்டுப் பக்கமும் மாற்றி மாற்றி எழுதினால், இழந்த சக்தி வைத்தியரிடம் போக வேண்டியது வரலாம். ஆகவே கூடிய சீக்கிரம் எதாவது ஒன்றை(அதாவது அந்தப் பக்கத்தை) மூடி விட்டு, ஆர்குட், பேஸ்புக், டுவிட்டர் தொந்தரவுகளை எல்லாம் சற்று நிறுத்தி, பூதக் கண்ணாடியில் சூரியன் போல, எனர்ஜியை ஒரு முகமாய் குவிக்க எண்ணம்.

கமலின் தசாவதாரத்தை பற்றி எதாவது எழுதியே ஆக வேண்டும். என் பக்கத்து வீட்டு செல்ல நாய், ஸ்பார்கி கூட dogspeak என்னும் வலைப்பதிவில் எழுதிவிட்டதாக குலைத்தது. எல்லாவற்றிலும் தசாவதாரம் தான். வலைப்பதிவுகள், அவ்வப்போது இயங்கும் டுவிட்டர் என்று வலையுலகம் இந்தப் படத்திற்கு பெரிய விழா எடுத்தாகிவிட்டது. வலைத்தளங்களில் மேலும் எழுத பாண்ட்விட்த் இல்லாததால், தமிழர்கள் உள்ளங்கையில் எல்லாம் விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சக இந்தி இந்தியர்கள், கொஞ்சம் வெளிரிப் போய், தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கமலஹாசன் என்கிற நடிகரை தமிழ்த் திரையுலகம் எப்போதோ கண்டு கொண்டு விட்டது. கமல் என்கிற எழுத்தாளனை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் தெரிகிறது. தசாவதாரத்தில் கமல் என்கிற எழுத்தாளனின் குழப்பங்களும், புத்திசாலித்தனமும் வெவ்வேறு கலவைகளில் தெரிந்தன. ஹேராமிலும் அப்படித் தான். இருந்தாலும் தமிழின் மிகச்சிறந்த திரைக்கதை அமைப்பாளர் என்று இப்பொழுது கமலைச் சொல்லலாம். விருமாண்டியிலும் தசாவதாரத்திலும் கமல் காட்டியிருக்கக் கூடிய தேர்ச்சி உலகத் தரத்திற்கு இல்லை என்றாலும், மிகச் சிறந்த வளர்ச்சி தான். அதெப்படி என்று சண்டைக்கு வர நினைப்பவர்கள், Babelலின் டீவிடியை பார்க்கவும். மேலும் இந்த மாதிரி அரை டஜன்  சினிமாக்களை எடுத்துக் காட்ட நான் ரெடி.

“கமல் என்கிற கலைஞன் ஒரு கதாபாத்திரத்திலிருந்து மற்றொன்றுக்கு மாறும் கடின உழைப்பை பார்க்கிறேன்” என்று தசாவதாரம் பற்றியும் கேயாஸ் தியரி பற்றியும் நிறைய எழுதிய சுஜாதா, கடைசியாக படத்தை பார்க்காமல் போய் விட்டதை பற்றி கமல் கண்டிப்பாய் வருத்தப்பட்டிருப்பார். நாமும் தான்.

கமல் வைத்த 2006 புத்தாண்டுப் பார்ட்டிக்கு பிறகு, கற்றதும் பெற்றதும் பகுதியில் சுஜாதா எழுதிய வரிகள் இவை.

புத்தாண்டை வரவேற்க கமல்ஹாசனின் பார்ட்டிக்கு டைரக்டர் ஷங்கருடனும், என் மகனுடனும் போயிருந்தேன். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பெரிசாகக் கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவின் ‘ஹு இஸ் ஹூ?’ போல இருந்த பார்ட்டிக்கு, வந்தவர்களைவிட வராதவர்களைச் சுலபமாக எண்ண முடிந்தது. ஸ்ருதி கமல்ஹாசன்… அமெரிக்கா எல்.ஏ-&யில் படித்துக்கொண்டு இருப்பவர், லீவுக்கு வந்திருந்தார். இளமையும் அழகும் இனிமையும் கலந்து வரவேற்க, ‘வேட்டையாடு விளையாடு’, ‘புதுப்பேட்டை’ படப் பாடல்களுடன் டி.ஜே. உபயத்தில் திடும்திடும் ஓசையும் உச்ச டெசிபல்களில் ஒலிக்க, கமல் க்ளோஸ் கோட்டில் ஸ்மார்ட்டாக இருந் தார். சந்தடியில் கிடைத்த சந்தில், ‘ப்ருஸ் அரசுவோட நாயைக் கொன்னுடறான் சார்’ என்று ‘தசாவதாரம்’ லைனை விட்ட இடத்தில் தொடர்ந்தார்.

தசாவதாரம் படத்தை பார்த்த பொழுது ப்ருஸ் என்கிற கதாபாத்திரத்தையும் அரசுவின் நாயையும் காணோம். கதை மாறியதா ? காரெக்டர்கள் மாறியதா ?

எனக்கு தசாவதாரம் பிடித்திருந்தது. படத்தில் கேயாஸ் தியரி பற்றி கமல் க்ளாஸ் எடுக்கும் போது, தெரியும் அ-சுவாரசிய செயற்கைத்தனமும், அதை ஸ்க்ரிப்டில் கொண்டுவரும் போது தெரியும் புத்திசாலித்தனமும் இரண்டற கலந்துள்ள படம். மூன்று மணி நேரத்தில், பாக்கெட்டிலிருந்து பாப்ஃகார்ன் எடுத்து சாப்பிடக் கூட முடியாதபடி கண்களை கட்டிப் போடும் tour-de-force திரைக்கதை. பத்து கதாபாத்திரங்களில் கமல். ஒரு சிலவற்றில் ப்ளாஸ்டிக் தெரிகிறது. மற்றதில் கமல் தெரியவில்லை. சபாஷ் !!

இந்தப் படத்தின் உண்மையான கதைக் கரு, கமல் சொல்ல வந்த கேயாஸ் தியரி, கடவுள் உண்டா இல்லயா, விஷ்ணுவின் தசாவதாரத்துக்கும் இதற்கும் உள்ள ஒற்றுமை என்றெல்லாம் கணினி இன்ஜினியர்கள் போரடிக்கும் ஆபிஸ் நேரத்தில், பக்கம் பக்கமாக ஈமெயில் எழுதிக் இணையத்தில் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். கமல் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

போன வாரம் பார்த்த கற்றது தமிழ்[தமிழ் எம்.ஏ] என்கிற படம் பிடித்திருந்தது. தெளிவாக ஆரம்பித்து கடைசியில் சற்றே குழம்பிப் போய் முடித்திருந்தாலும், ராம் என்கிற அந்த புதிய இயக்குனர் கண்டு கொள்ளப் படவேண்டியவர். படத்தின் நடுவே, நானே சிவம் என்று யோகிகளுடன் பாங்க் சாப்பிட்டு விட்டு ஜீவா ஆடும் ஆட்டம் தமிழ் சினிமாவிற்கு புதியது. துல்லியமான ஒளிப்பதிவு, கச்சிதமான எடிட்டிங்[ஸ்ரீகர் பிரசாத்], ஆரவாரமான நடிப்பு[ஜீவா, அஞ்சலி] என்று அசத்தியிருக்கிறார்கள்.

கணினி தொழிலால் நலிவடைந்த பிற தொழிலாளர்களின் நிலையை கொஞ்சமாய் எடுத்துச் சொல்லும் விதம் அசட்டுத்தனமாக இருந்தாலும், உண்மை உரைக்கிறது. தாடி வைத்து முகமே மாறிப் போனாலும், கண்களில் மின்னும் நடிப்பால், ஜீவா has arrived. அடுத்த தலைமுறை அசட்டு ஹீரோத்தனங்கள் இல்லாத இயல்பான நடிகன்.

சமீபத்தில் நல்ல புத்தகம் எதும் படிக்கவில்லை. புத்தகமே படிக்கவில்லை என்று சொல்ல முடியாவிட்டாலும், புத்தகம் படிப்பது குறைந்திருக்கிறது. அதே மாதிரி சினிமா பார்ப்பதிலும், இண்டர்நெட்டை பராக்கு பார்ப்பதிலும் கொஞ்சம் சலிப்பு வந்திருக்கிறது.

சியாட்டலில் ஒரு வழியாக வெயில் வந்துவிட்டது. போன வாரம் முதல் அஃபீஷியல் சம்மர். இன்று மழை. இதான் சியாட்டல்.

மேற்கும் கிழக்கும்
மேற்கில், அதாவது சியாட்டலில், இன்னும் மழை பெய்து கொண்டுதானிருக்கிறது. நாளை 80 டிகிரி என்று சொல்லியிருக்கிறார்கள். இருந்தாலும் ஒரு ஃபிளீஸ் ஜாக்கெட்டாவது மாட்டிக் கொண்டு தான் போகப் போகிறேன். சியாட்டல் ஆகாயத்தை நம்புவதற்கில்லை.

ஆனால் மரங்கள் குளிர் கால சோம்பலை முறித்து/முடித்துக் கொண்டு பச்சையாய் குலுங்க ஆரம்பித்துவிட்டன. பார்க்க கண்கொள்ளாக் காட்சி(என்ன ஒரு cliched statement).

போன வார அன்னையர் தினத்தன்று  அதிகமாக கொடுக்கப்பட்ட கிஃப்ட், பத்து பவுண்ட் அரிசி மூட்டையாகத் தான் இருக்கும்.  அமெரிக்காவில் அரிசி கிடைப்பதில்லை என்ற செய்தியை கேள்விப்பட்டீர்களா ? அதெல்லாம் டுபாக்கூர்.

உண்மையில் பற்றாக்குறை சகாய விலை அரிசிக்குத் தான். ஏதோ உண்மையாக அரிசி பற்றாக்குறை வந்து விட்டதாக நினைத்துக் கொண்டு, ஆசியர்கள், முக்கியமாய் இந்தியர்கள் வீட்டில் மூட்டை மூட்டையாக அரிசியை வாங்கி அடுக்க, எல்லா இந்திய ஸ்டோர்களும் இதுதான் சாக்கு என்று பத்து டாலர் அரிசியை இருபதாய் உயர்த்த, கடைசியாய் artificial demand.

ஆபிஸில் அரிசி அலோவன்ஸ் கேட்கலாம் என்று தோன்றும் அளவுக்கு, ஆளாளுக்கு அரிசிப் பைத்தியம் பிடித்திருக்கிறது. அரிசி இல்லாமல் ஒரு பத்து நாளைக்காவது வாழ முடியாதென்பது மனதைச் சார்ந்த விஷயம் தான். அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் கார்போஹைட்ரேட்ஸை விட இத்தாலியன் பாஸ்தாவில் கார்போஹைட்ரேட்ஸ் அதிகம்.

இதனால் சகாய விலையில் அரிசி போடும் காஸ்ட்கோ போன்ற அங்காடிகளில் கூட்டம் அம்முகிறது. காலையில் கடை திறந்தவுடன், எல்லோரும் அரிசி வாங்க முண்டியடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். ஆளுக்கு இரண்டு மூட்டை என்று ரேஷன் கடையை போல அரிசி விற்கப்படுகிறது.

போன வாரம், பெரிய திரையில் பார்த்த மிஷ்கினின் அஞ்சாதே படம் ரொம்பவும் பிடித்திருந்தது. மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு அதைப் பற்றி எழுத எண்ணம்.

தமிழ் சினிமாவுக்குத் தேவை, சில டஜன் மிஷ்கின்கள் தான்.

பா. ராகவன் கிழக்கு ப்ளஸ் என்று கிழக்குப் பதிப்பகத்தின் கதையை விவரமாக எழுதுகிறார். பீக்கன் இந்தியா பிரைவேட் ஈக்விடி ஃபண்ட் என்னும் நிறுவனம், கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனமான நியு ஹொரைசன் மிடியாவில் முதலிடு செய்திருக்கும் இந்நிலையில் கிழக்கின் கதையை எழுத இதுதான் நேரம் என்று நினைத்திருப்பார் போலும்.

இன்னும் விரிவாக கிழக்கு பதிப்பகத்தின் ஆரம்ப எண்ணங்களும் அதைச் சார்ந்த பிற விவாதங்களையும் பற்றி எழுதியிருக்கலாம் என்று தோன்றினாலும், படிக்க சுவாரசியமாக இருக்கிறது.

‘என்னைப் பார் யோகம் வரும்’ என்று கிட்டத்தட்ட கெஞ்சிக் கொண்டிருந்த தமிழ் பதிப்பகத் தொழிலை கவனிப்பாரற்ற நிலையில், எதோ கிரிக்கெட் வெப்சைட் தொழிலில் இருந்த ஒரு இளைஞரும், வார பத்திரிகைத் தொழிலில் வாரா வாரம் உழன்று கொண்டிருந்த மற்றோரு இளைஞரும் இணைந்து கிழக்குப் பதிப்பகத்தை தொடங்க, பதிப்பகத் தொழில் செழிக்க ஆரம்பித்தது என்னவோ உண்மை தான்.

அதன் வளர்ச்சியை பார்த்து பல நிறுவனங்கள் தங்கள் பதிப்பகங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பதும் உண்மை தான்.

சமீபத்தில் ஜெயமோகன் அவரது வலைப்பதிவில் எழுதிய ஆன்மீகம் ,தத்துவம், மதம் பற்றிய ஒரு கட்டுரை, தமிழில் மிக அரிது. மிகத் துல்லியமாக, தெளிவாக எழுத்ப்பட்ட ஒரு கட்டுரை. புரியவில்லை என்றால் மீண்டும் படிக்கலாம்.

போஸ்ட் கவரில் தலைகிழாய் அட்ரஸ் எழுதி வந்தடைந்த வார்த்தை மாத இதழ் கிடைக்கப் பெற்றேன். நன்றி.

செழியனின் முகங்களின் திரைப்படம் கட்டுரையும், கோபால் ராஜாராம் எழுதியிருந்த சுஜாதாவின் அஞ்சலிக் கட்டுரையும் பிடித்திருந்தது. இதழ் நிர்வாகம் செய்யும் ஹரன் பிரசன்னாவின் அன்பு என்னும் கவிதை அபாரம்.

வீடெங்கும் அன்பு சூழ

அன்பே பிரதானம்

அப்படியே ஆகுக

அன்பைப் பற்றியே

எழுதத் தொடங்கினேன்

அடித்தல் திருத்தல்களில்

கிழித்தெறியப்பட்ட

காகிதப் பந்தில்

பயந்து கலைகிறது

தடித்த பல்லி

வாயில் கெளவிய

ஒரு பூரானோடு

-  ஹரன் பிரசன்னா

சல்மாவின் காத்திருப்பு கவிதை பிரமாதமாக தொடங்கினாலும், சற்றே எதிர்ப்பாத்த முடிவு.  வழக்கம் போல எஸ் ராமகிருஷ்ணனின் திரும்பிச் செல்லும் மலைகள் என்னும் சிறுகதையின் முடிவு புரியவில்லை. அதற்காக வரையப்பட்ட ஓவியங்கள் அழகாய் மாடர்னாய் இருப்பினும் அவைகளும் புரியவில்லை. பாவண்ணனின் கூடு சிறுகதையை இன்னும் படித்து முடித்தபாடில்லை.

ஜெயகாந்தனின் பதில்களில் கேள்வி கேட்பவனை பார்த்து வேண்டுமென்றே மீண்டும் கேள்வி கேட்பது தோன்றுவது எனக்கு மட்டுமா என்று தெரியவில்லை.

வார்த்தை இதழ் 500 ருபாய்களுக்கு ஒரு வருட சந்தா[ஸ்பெஷல் ஆஃபர்). ஒரு இதழுக்கு நாற்பது ருபாய்களுக்கு ஸ்டாம்ப் ஒட்டுகிறார்கள். எப்படி கட்டுப்படி ஆகிறது என்று யாராவது விளக்கலாம்.

குழந்தைகள், பெண்கள், ஆண்கள்

ஞாயிறு
கிழமையும் தான். ஆனால் முக்கியமாக, கதிரவன் aka சூரியன் பற்றி. சியாட்டலில், போன வீக்கெண்ட் தான் இந்த வருடத்தின் முதல் சூரிய வீக்கெண்ட். Sunny.

வெயிலடிப்பதே மறந்து போன நிலையில் போன வாரமும் வாரக் கடைசியிலும், சூரியனின் பார்வை பட்டது சந்தோஷமே. Sun comes out and the country freaks out என்பதில் உள்ள உண்மைப் புரிகிறது. குளிரிலும் ரிசஷன் பயத்திலும் உறைந்து போயிருந்தவர்கள், சூரியனைப் பார்த்தவுடன், கண்மண் தெரியாமல் குளுர் ஜாக்கெட்டைத் துறந்து, காரெடுத்துக் கொண்டு மால்களுக்கோ, சாக்கர் விளையாடவோ, ஆர்ட்டிபிஷியல் கடற்கரையில் கால் நனைக்கவோ போய் விட்டார்கள்.

மூன்று வருடங்களுக்கு முன்பு, இதே நேரத்தில் சியாட்டலுக்கு வந்த போது, மக்கள் சூரியனை பார்க்க ஆசைப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், இந்த சூரியன் மிகுந்த வாரக்கடைசிக்காக நானே ஏங்கிக் கிடந்தேன்.

இனிமேல் ஒரு ஆறு மாதத்திற்கு, டிவியில் சண்டே நிகழ்ச்சிகளைப் பார்க்க ஆளில்லை. ரிவர் ராஃப்டிங்கோ, கேம்பிங்கோ, மலை ஏறவோ, பாரா டைவிங்கோ வேறெதுவோ செய்ய போய் விடுவார்கள். கிறிஸ்த்துமஸ்ஸில் சாப்பாடில் ஏறிய அத்தனை பவுண்டுகளும் இறங்கி அடுத்த கிறிஸ்துமஸ் சீசனுக்கு ரெடியாகிவிடும்.

இந்த வருட சம்மர் ரிலிஸ் படங்களின் லிஸ்ட்டோ சுவாரசியமாய் இருக்கிறது. ஸ்பில்பெர்கின் இண்டியானா ஜோன்ஸ், பிக்ஸாரின் வால்-ஈ, லாஸ்ட் சீரியலின் கதாநாயகன் மாத்தியு ஃபாக்ஸ் நடிக்கும் மேட்ரிக்ஸ் சகோதரர்களின் ஸ்பீட் ரேசர், க்ரோனிக்கல்ஸ் ஆப் நார்னியா, செக்ஸ் அண்ட் த சிட்டி, குங்பூ பாண்டா, நைட் சியாமளனின் தி ஹாப்பனிங், மில் மாஹரின் ரிலிஜ்ஜியஸ், ஹெல்பாய் 2, சமீபத்தில் இறந்து போன ஹீத் லெட்ஜர் நடிக்கும் கிறிஸ்டோபர் நோலனின் தி டார்க் நைட், ஜெட் லீ நடிக்கும் மம்மி 3, வில் ஸ்மித்தின் ஹான்காக், ஸ்டார் வார்ஸ்ஸின் கார்ட்டூன் படமான க்ளோன் வார்ஸ் எனப் பலப் பல ஹாலிவுட் படங்கள்.

எனக்குத் தெரிந்து ஒரே சம்மரில் இத்தனை எதிர்ப்பார்போடு வரும் படங்கள் இதுவாகத்தான் இருக்கும். சினிமாவா மலை ஏறவா என்று மக்களை தவிக்கப் போகிறார்கள். வெயில் காலம் முடிந்த கையோடு ஓட்டுப் போட்டு ஜனாதிபதி தேர்தல் வேறு. வெரி இண்ட்ரஸ்டிங் !!

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஏ ஆர் ரஹ்மானும் !!
காலை 8:14. இன்று.

கிட்டத்தட்ட வழிகிற சியாட்டல் பஸ்சில் மூச்சு வாங்க ஓடி வந்து, எப்படியோ ஏறியாகி விட்டது. முதல் நான்கு சீட்டுகளைத் தள்ளிப் போனால், எதிர் எதிரே பார்த்துக் கொண்டு உட்காருகிற ஸ்பெஷல் சீட்டுகள். உண்மையாக இந்த சீட்டுகள் ரொம்பவும் உயரத்தில், முதுகை ரொம்பவும் சாய்த்துக் கொள்ள முடியாத சீட்டுகள். வலது புற நான்கு பேர் உட்காரக் கூடிய சீட்டில் ஹாயாக மூன்று பேர் மட்டுமே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். இதோ அவர்களை கொஞ்சம் தள்ளி உட்கார கேட்டு விட்டு,  கம்பியோடு இடித்துக் கொண்டு, நுணுக்கிக் கொண்டு உட்கார்வது சாட்ஷாத் நானே தான். வழக்கமாக புத்தகம் படித்துக் கொண்டோ, என்.பி.ஆர் கேட்டுக் கொண்டோ ஆபிஸ் செல்லும் நான், இன்றைக்கு கேட்டுக் கொண்டிருப்பது தமிழ்ப் பாடல்கள்.

எனக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பவரின் தலை பிளாக் அண்டு ஒயிட்டில் இருக்கிறது. இருந்தாலும் ஏகமாய் முடி வளர்த்து, ஆத்திப் பின்னல் போட்டிருக்கிறார். கெட்டி கருப்பு பிரேம் போட்டு மாடர்னாய் கண்ணாடி. படித்துக் கொண்டிருப்பது ஆரஞ்சுப் பத்திரிக்கை, Financial Express. அதற்கு பக்கத்தில் இருக்கும் goatie இளைஞன் எங்கோ மோட்டு வளையத்தைப் பார்த்துக் கொண்டு, தனது கோட்டியை திருத்தி திருகிக் கொண்டிருக்கிறான். கண்கள் சற்றே மறைக்கபடும் அளவிற்கு மங்கிகாப் பாஷனாய் அணிந்திருக்கிறன். அப்படியே எழுந்து டிவி காமிராவை நோக்கி குத்தி குத்திப் பாடினால், ஹிப்-ஹாப் பாடகன் தான்.

அதற்குப் பக்கத்தில் இரண்டு ஆசிய இளைஞர்கள். ஒருவன் நிண்டெடோ டி.எஸ்ஸில் எதோ விளையாடிக் கொண்டிருக்கிறான். மற்றொருவன், ஃபாம் டிரையோ 650 போனில் எதோ செய்து கொண்டு அவனருகில் நின்றிருக்கிறான்.

எதிரில் நான்கு பேர் சீட்டில், நான்கு பேர். நாலு பேரும் நாலுவிதம். முதலில், எனக்கு நேர் எதிரில், ஒரு ஸ்பானிஷ் பெண். காதில் பெரிய வளையத்தோடு, கிட்டத்தட்ட ஒரு அரை-வெள்ளை நிறத்தில் உதட்டுச்சாயம் இஷிக்கொண்டிருக்கிறாள். கைகள் மறைக்கும் வரை சந்தன நிறத்தில் ஒரு புசுபுசு வென்ற ரெக்ஸின் ஜாக்கெட். கண்களில் நேர்மை. கையில் ரொம்பவும் சின்ன கைப்பை. சின்னது என்றால் ரொம்பவும் சின்னது விரல்பை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அவளுக்கு பக்கத்தில், Debbie Macomberன், The Manning Sisters படித்துக் கொண்டிருக்கும் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி. சொல்லத்தான் நினைக்கிறேன் ஜெயசித்ரா மாதிரி பெரிய ப்ரேம் கண்ணாடி. தடிமனாக கருப்பு கம்பிளி கோட்டு. கண்டிப்பானவள் ஆனால் அன்பானவள் போல் தோன்றுகிறார்.

அவருக்கு பக்கத்தில் சிறிய கண்களுடன், கருப்பு கலரில் கவாஸ்கர் தொப்பி, புலன் விசாரனை விஜயகாந்தின் பிரவுன் கலரில் நீண்ட டிடெக்டிவ் கோட்டு போட்டிருக்கும், ஒரு ஜப்பானிய அல்லது கொரியன் மாமா. மிஞ்சிப் போனால் ஐம்பத்தைந்து வயதிருக்கலாம்.இப்போதெல்லாம் ஜப்பான் முகத்துக்கும் சீன முகத்துக்கும் வித்தியாசம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. தொப்பியை எடுத்தால் கண்டிப்பாய் வழுக்கை தான். என்ன பந்தயம் ? சுத்தமாய் காலையில் ஷேவ் செய்திருக்கிறார். ஜில்லெட் மாக் 3. கையில் லெதரில் ஆபிஸ் பை. உள்ளே ஒரு ஐபிஎம் லாப்டாப் அல்லது டெல் இருக்கலாம். சில பைல்களும், சில வீட்டு பில்களும், ஒரு ப்ளூம்பெர்க் மாகஸின்னும் இருக்கலாம் என்பது என் யூகம்.

அடுத்தவருக்கு போவதற்கு முன் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து உட்காருகிறேன். பக்கத்தில் இருப்பவர் கொஞ்சம் நகர்ந்து உட்கார, ஹம்…ம்..அ..ப்பா. ஆங்கிலத்தில் வரும் appa அல்ல இது, hubba என்று பெருமூச்சு. ஒரு வழியாய் சுகமாய சாய்ந்து உட்கார்ந்து விட்டேன். பஸ் மெர்சர் ஐலண்ட் அருகே சீராக அறுபதில் பயணிக்கிறது. நின்று கொண்டிருப்பவர்கள் எல்லாம் எதிலோ சாய்ந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். அதோ, அங்கே ட்ரைவரின் சீட்டிற்கு பின்னால் நின்று கொண்டிருக்கும் அந்த அம்மணி, இந்த கூட்டத்தை தாண்டி வந்தால், உட்கார என் இடம் கொடுப்பேன். சத்தியம். இதில் சத்தியம் தேவையில்லை, இது ஒரு நற்குணம். அதுகூட இல்லை. கடமை. யூஷுவலாக நின்று கொண்டு போவது எனக்கு பிடிக்கும். கொஞ்சம் காலரியாவது குறையும் என்ற குறுக்கு புத்திதான். அதைத் தவிர உட்கார்ந்து போவதில் நிறைய சிரமங்கள். ஆனால் கண்டிப்பாய் பஸ்சில் கடைசியாய் ஏறி நின்று கொண்டு பயணிக்க கூடாது. பல்லவன் பஸ்சில் புட்போர்ட் அடிக்கிற மாதிரி, ஒவ்வொரு ஸ்டாப்பாய் ஏறி இறங்க வேண்டும். ஆனாலும் பஸ்ஸிலிருந்து வெளியேறுபவர்களின் முகங்களை பார்க்க வசதியாயிருக்கும். ஓரிருவர் ஸ்டாப் வந்தாயிற்று, இனி எட்டு மணி நேரம் ஆபிஸில் சீட்டு தேய்க்க வேண்டும் என்கிற மாதிரி இறங்குவார்கள். பலர் பக்கத்தில் இருப்பவருடன் பேசிக் கொண்டு. சிலர் தனக்குத் தானே பேசிக் கொண்டு, சிலர் தூங்கி எழுந்து கலங்கிய கண்களுடன் என்று ஏராளமான முகபாவங்கள்.

சொல்லிக் கொண்டே, முக்கியமாய் சொல்ல வந்ததை எங்கேயோ விட்டுவிட்டேன். ஆங் !! எதிரில் உட்கார்ந்திருக்கும் அந்த மூன்றாவது ஜப்பானிய மாமாவுக்கு பக்கத்தில், ஜீன்ஸில் ஒரு டினேஜ் பெண். ரெண்டு நாசித்துவாரத்துக்கு நடுவே சின்னதாய் ஒரு வளையம் போட்டுக் கொண்டிருக்கிறாள். பிங்க் கலர் போனில் சதா எதோ/யாருக்கோ டெக்ஸ்ட் செய்து கொண்டிருக்கிறாள். நைக்கீயின் லொகோ போட்ட வெள்ளை ஷூ. லோகோவைச் சுற்றி பிங்க் கலரில் லைனிங். வெள்ளை டீஷர்ட்டில் Bratz !! என்று குறும்பாய் குறுக்கலாய் ஜிகினாவில் எழுதியிருக்கிறது. கையில் மொந்தையாய் கருப்பு லெதர் ஸ்டராப் கடிகாரத்தில், ஊர்க்கோடி வரை டைம் தெரியும். அதன் நொடி முள் தற்போது முப்பத்தாரில்…அல்ல… முப்பத்தேழில் ஓடிக்(அதென்ன ஓடி ?) கொண்டிருக்கிறது. நாற்பத்தி ஒன்று. இரண்டு. மூன்று. நான்கு.

ஊஞ்சலாடும் பாலம் எனப்படும், லேக் வாஷிங்கடனின் மேலே(மேலே என்றால் ரொம்பவும் மேலே அல்ல. எங்கேயோ பாலத்தைக் கட்டி அப்படியே தண்ணீரின் மேல் மிதக்கவிட்ட மாதிரி ஒரு பாலம்). ப்ராக்கட்டில் அந்த வாக்கியத்தை எழுதி முடிப்பதற்குள் எதற்காக சொல்ல வந்தோம் என்பது மறந்து, அதை துறந்து, திரும்பவும் எழுத ஆரம்பிக்கிறேன். ஊஞ்சலாடும் பாலம் எனப்படும், லேக் வாஷிங்கடனின் மேலே கார்-பூல் லேனில் பஸ் சென்று கொண்டிருக்கிறது. அதாவது ஒருவருக்கு மேற்பட்டவர் ஒரு வண்டியில் இருந்தால், அந்த வண்டிகள் மட்டும் செல்லக்கூடிய லேன் சிஸ்டம். நூற்றுக்கு ஆறு அல்லது ஏழு கார்களில் தான் ஒருவருக்கு மேற்பட்டு இருக்கிறார்கள். ஆகவே இந்த கார்-பூல் லேனில் கூட்டம் கம்மி. மற்ற லேன்களில் அம்மும் கார்க் கூட்டம். பக்கத்து லேனில் சுப்பரு கார் ஆசாமி…ஐயோ, மோட்டர் ரேசரில் ஷேவல்லவா செய்து கொண்டிருக்கிறான். கார் ஓட்டிக் கொண்டே. பஞ்சதந்திரத்தில் கமல் செய்து காட்டிய மாதிரி. அந்த லேனில் போகும் கார்களின் எவர்சில்வர் வீல்கள் வேகமாய் சீராய் சுத்துவது பார்க்க அழகாய் இருக்கிறது.

விஷயத்துக்கு வருவோம். எதிரில் உட்கார்ந்து கொண்டிருப்பது நாலு பேரும் நாலு விதம் என்றேனல்லவா. ஆனாலும் எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை. எல்லார் காதிலும், எம்.பி.திரி ப்ளேயர்களின் இயர்-போன்கள். அந்த மத்திய வயது அம்மணி மட்டும் கருப்பு கலர் ஒயரில் இயர்போன். மற்றவர்கள் வெள்ளை. காதில் சொருகியிருக்கும் இயர்போனை பார்த்தாலே தெரிகிறது, எல்லாமே ஆப்பிள் ஐ-பாடின் இயர்போன்கள்.

அதற்கு முன்னால், இந்த ஸ்டாப் வந்து விட்டது. இதற்கு அடுத்த ஸ்டாப் தான், சியாட்டல் டவுண்டவுனின் முதல் ஸ்டாப். இந்த ஸ்டாப்பிற்கு என்ன பெயர் என்று மூன்று வருடங்களுக்கு பிறகும் தெரியவில்லை. அவ்வளவாக யாரும் ஏறி இறங்காத ஒரு ரெண்டு கெட்டான் பஸ்ஸ்டாப். ஒரே ஒரு முறை மட்டும், மழை பெய்த ஒரு சாயங்காலத்தில் வீட்டிற்கு போகும் போது, இந்த பஸ் ஸ்டாப்பில் நின்றிருக்கிறேன். சீ..சீ. பெண்கள் விஷயம் எல்லாம் இல்லை. கல்யாணமாகி விட்டது எனக்கு.

புத்தகம் படிக்கிற ஆர்வத்தில், மறந்து போய் தெரியாமல் எதோ ஒரு பஸ்சில் ஏறி விட்டேன். பிறகு தான் தெரிந்தது, அது ரெண்டன் போகிற பஸ்சென்று. அதுவும் இரண்டு ஸ்டாப்புகளுக்கு பிறகு. ட்ரைவர் ஒரு வழியாய் என்னை இந்த பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டு சென்று விட்டார். புத்தகத்தை மூடி வைத்து பஸ்ஸுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன். பெல்வியு போகிற பஸ்செல்லாம், இந்த ஸ்டாப்பில் யார் ஏறப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு அடித்து கொண்டு போகிறார்கள். போதாகுறைக்கு மழை வேறு. இப்படியே போனால் ஒரு பஸ்ஸும் நிற்காது என்று நினைத்த போது, சடாரென்று தமிழ் சினிமா க்ளைமாக்ஸ் போல, மழை நிற்க, அடுத்த பஸ்ஸும் வந்து நிற்க, எல்லாம் சுபம்.

இந்த ஆனானிமஸ் ஸ்டாப்பில் யாரோ ஒரு சைக்கிளோட்டி இறங்குகிறார். சைக்கிள் ஹெல்மெட் போட்டுக்கொண்டு, முன்பக்க பாரில் வாட்டர் பேக் ஒட்டிக் கொண்டு. பஸ்ஸுக்கு முன்னால் சொருகியிருந்த தனது சைக்கிளை எடுத்துக் கொள்ள, பஸ் புறப்படுகிறது.

எதிர் சீட், ஐபாட் அன்பர்கள் மேலே சொன்ன தத்தம் வேளையை செய்து கொண்டிருந்தார்கள். அந்த ஜப்பான் மாமா ரொம்பவும் சாந்தமாய் தெரிந்தார். கண்களில் அமைதி தெரிந்தது. காதில் ஐ-பாட் இயர்போன் இன்னமும் இருக்கிறது. ஆக எதோ கேட்டுக் கொண்டிருக்கிறார். என்ன ? இப்படி சாந்தமாய் என்னத்தை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சாட்டர்…டே நைட் பார்ட்டிக்கு போகலாம் வரிரியா..ஓயே ஒயே என்று யாரோ, தமிழை பாஷனாய், எந்த பாடகியோ, இந்தக் கணத்தில், சத்தமாய் ஆல்டோ வாய்சில், ரஹ்மான் இசையில், என் காதில் கத்துகிறாள். எழுந்து ஆட கால்கள் துடிக்கின்றன. இன் ஃபாக்ட் ஜோடி நம்பர் ஒன்னில் வெற்றி பெறுகிற அளவுக்கு, கைகளாலேயே டான்ஸ் செய்து கொண்டிருக்கிறேனே ஜப்பான்காரரே, தெரியவில்லையா.

நீங்கள் எதைக் கேட்டுக் கொண்டு சாந்த சொரூபியாய் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் கேட்பதென்ன, அந்த காலத்து உங்க ஊர் சினிமா பாடல்களா, அல்லது உமாச்சி பாட்டா, ஃபாட்காஸ்டா, ஆடியோ புக்கா ? என்ன தான் அது ?  என்னால் முடியவில்லை. பூம் ஷாக்…….பூம் பூம் ஷாக்…. என் காதில் ஓடும் பாடலை கொஞ்சம் நேரம் கேட்கிறீர்களா. சத்தியமாய் ஆடுவீர்கள். அல்லது மாட்டீர்கள்.

பெண்கள் ஒரு மிக்ஸி..ஆண்கள் வந்தால் சட்னி, பெண்கள் ஒரு கிரிக்கெட்..ஆண்கள் தான் விக்கெட்… ஒத்துக் கொள்கிறேன் அபத்த தமிழ் சினிமாவின் அபத்தா-அபத்தமான வரிகள் தான். இருந்தாலும், தமிழன் எனக்கே புரியாத வரியாக இருந்தாலும் நான் ரசிக்கவில்லையா. அந்த மாதிரி நீங்களும், பென்னியும் உஜ்ஜயினியும் பாடும் இந்த சாட்டர்டே பார்ட்டிக்கு போகலாம் வரியா..ஓயே…..ஒயே இளமை பாடலை ரசிக்க முடியும். கேட்பீர்களா சார் ?

அது சரி, இந்த பாட்டு முடிவதற்குள் ஆபிஸ் வந்து விடும் போலிருக்கிறது. இப்போது நின்றது அமெசான் ஸ்டாப். அமெசான் சாஃப்ட்வேர் மச்சான்கள் இறங்கிப் போகிறார்கள். அதோ இறங்குகிறானே ராஜ், அமெசான் வெப் ஸர்வீஸில் அப்ளிகேஷன் டெவலப்பர். அவனும் ஸாண்டிஸ்க் ப்ளேயரில் இதைத் தான் கேட்கிறான் என்று நினைக்கிறேன். பேபி உன் டி.ஜே நான்…ஒரு முறை இருமுறை பலமுறை கேட்டிடும் சங்கீததோயுயுயும்ம்ம். அது தான மச்சான் என்று கேட்பதற்குள் தனக்குத் தானோ தலையாட்டிக் கொண்டே இறங்கி விட்டான். வேறு என்ன பாடலாய் இருக்க முடியும் தலையாட்ட. கண்டிப்பாய் இது தான்.

தொப்பியை சரி செய்து இறங்க ஆயுத்தமாகி விட்டார் என் எதிர் சீட்  ஜப்பான்காரர். வழுக்கை தெரிகிறது. சொன்னேனல்லவா.  நீ….நீ…நீ மார்லின் மன்றோ க்ளோனிங்கா…இல்ல….ஜெனிபர் லோபஸ் ஸ்கானிங்கா…ஒண்டே மட்டும் கேர்ள் ப்ரண்டாக வரியா. என்ன ஒரு பாடல். என்றாவது ஒருநாள் அவரை இந்த பாட்டுக் கேட்டு ஆட வைக்க வேண்டும். ஸ்டாப் வந்தாகிவிட்டது. வரட்டா..ஒயே ஒயே !!

<embed src= "http://odeo.com/flash/audio_player_tiny_black.swf" quality="high" width="145" height="25" allowScriptAccess="always" wmode="transparent" type="application/x-shockwave-flash" flashvars= "valid_sample_rate=true&external_url=http://www.arthika.net/1234TB/new/AzhagiyaTamilMahan/TamilBeat.Com%20-%20Nee%20Marilyn%20Monroe.mp3" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer"> </embed>

அமெரிக்க தேர்தல் 2008
அமெரிக்காவில் இது தேர்தல் சீசன். ஜார்ஜ் புஷ்ஷுக்கு பிறகு வரப்போகும் 44வது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கிட்டத்தட்ட ஒரு வருடம் இருக்கும் நிலையில், இப்போதே பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நியுஸும்,  பிராசரங்களுமாய் மீடியா ஏக பிசியாகி விட்டது. பிரிட்னி ஸ்பியர்ஸின் மனவியாதியும், நாலு படங்களில் மூன்றாம் ஹிரோவாக நடித்த எதோ ஒரு ஹாலிவுட் ஸ்டாரின் ஆறாவது காதல் கல்யாணமும் இப்போது அடுத்த நியுஸ் தான்.

டிவி தொகுப்பாளினிகள் காமிரா நடுவே ஓடி ஓடி நியுஸ் சேர்க்கிறார்கள். மழையிலும் பாஞ்சோ போட்டுக் கொண்டு நனைந்து கொண்டே சமீபத்திய தேர்தல் எண்களை ஓயாமல் பேசுகிறார்கள். சி.என்.என்னில் அறுபது இஞ்ச் டச் ஸ்கிரீன் எல்.சி.டிகளை வைத்துக் கொண்டு, அமெரிக்கா வரைப்படத்தில் ஸூம்-இன்/அவுட் செய்து முன்-தேர்தல் ரிசல்டுகள் அறிவிக்கப்படுகின்றன. அனலிஸ்டுகள் ஓயாமல் பேசுகிறார்கள். ஒரே பேச்சு வெள்ளம்.

மக்களும் ஒரு கையில் மைக்குடன், ஸ்டார்பக்ஸ் காபியை ஸிப் செய்து கொண்டே சாந்தமாய் தான் யாருக்கு ஓட்டுப் போடப் போகிறேன் என்று பேட்டி கொடுக்கிறார்கள். போஸ்டர்கள் ஒட்டாமல், நாற்பதடி கட்-அவுட்  வைக்காமல், தெருவடைச்சானாக பந்தல் போட்டு கரகர தீப்பொறிக் குரலில் சோடா பாட்டில் பேச்சுக்கள் இல்லாமல், “சே என்ன ஒரு தேர்தல் !!” என்று சோர்வு தட்டும் அளவுக்கு தேர்தல் மேளா ஆரம்பித்திருக்கிறது.

ஜனநாயக(டெமாக்ரடிக்)  மற்றும் குடியரசு(ரிபப்ளிகன்) என்று இரண்டு கட்சிகள் தான். அவ்வப்போது, க்ரீன் பார்ட்டி என்று ஒரு தனிக்கட்சி எதோவொன்று தலைக்காட்டுகிறது.

ஒவ்வொரு கட்சியிலும் மூன்று நான்கு பேர் தன்னை ஜனாதிபதிக்கு போட்டியிட நிறுத்துமாறு முன்வருகிறார்கள். நம்மூரைப் போலவே ஒவ்வொரு கட்சியின் பொதுக்குழுவே தேர்தலில் நிற்கப்போகும் தலைவரை முடிவு செய்கிறது. ஆனால் கட்சியின் பொதுக்குழு, உள்கட்சிக் குழு, ஓட்டுப் போடும் பொதுகுழு என்றெல்லாம் குழப்படி கேஸ் பண்ணாமல், அந்தந்த கட்சியில் ரிஜிஸ்டர் செய்திருக்கும் மக்கள் அனைவரும் ஓட்டுப் போட வாய்ப்பளித்து, பொதுக்குழு(delegates)வை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த டெலிகேட்ஸ்ஸுகள், இந்த சம்மரில் நடக்கும் கன்வென்ஷனில் கலந்து கொண்டு ஜனாதிபதிக்கு நிற்கப்போகும் தலைவரை தேர்ந்தெடுக்கிறார்கள்.

இவ்வாறு மக்கள் டெலிகேட்ஸ்களை தேர்ந்தெடுக்கும் முன்- தேர்தலை தான் ப்ரைமரி அல்லது காக்கஸ்(caucus) என்கிறார்கள். ப்ரைமரியில் ஓட்டு இயந்திரத்தில் ஓட்டுப்போடப்பட்டு, அந்த மிஷின் ஓட்டுகளை எண்ணுகிறது. காக்க்ஸ் என்பது கொஞ்சம் பழைய ஓட்டுப் போடும் முறை. அதில் எதாவது ஒரு சர்ச்சிலோ, கல்யாண மண்டபத்திலோ மக்கள் தனக்கு பிடித்த வேட்பாளரின் பக்கமாய் பிரிந்து நின்று, கையுயர்த்தி ஓட்டளிக்கிறார்கள்.

இரண்டு மாதங்களாக நடக்கும் இந்த தேர்தலுக்கு-முந்திய-தேர்தலில், இரண்டு மூன்று மாநிலங்களில் தோற்று விட்டால், இனிமேல் பிரயோஜனமில்லை என்று ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளராய் கழற்றிக் கொள்கிறார்கள்.

குடியரசுக் கட்சியில் ஜான் மெக்கெய்ன், மைக் ஹக்கபீ என்று இரண்டு தலைகள் தான் இன்னும் போட்டியில் இருக்கிறார்கள். இதில் மெக்கெய்ன் ஒரு வியட்நாம் போர்வீரர். ரொம்ப காலமாய் வாஷிங்டன்வாசி. அரசாங்க இயக்கங்கள் புரிந்தவர். மைக் ஹக்கபீ சர்சில் ஒரு பாஸ்டராய் இருந்தவர். இவர்களுக்கு இடையே மெக்கெய்ன் தற்போது அதிக பிரதிநிதிகளை தன் வசம் வைத்திருக்கிறார்.

ஜனநாயக கட்சியில் தான் ஏக கெடுபிடி. பாரக் ஒபாமா என்ற ஆப்பரிக்க அமெரிக்கருக்கும், ஹில்லரி கிளிண்டனுக்கும் தான் போட்டி. இவர்களில் யார் ஜனாதிபதியானாலும், அது ஒரு வராலாற்று நிகழ்வு தான். இதனால் இந்த போட்டியை, race vs gender போட்டி என்கிறார்கள்.

பாராக் ஒபாமாவை மாற்றத்தின் பிரதிநிதியாக மக்கள் பார்க்கிறார்கள். சியாட்டலில் போன வாரம் அவர் வந்திருந்த போது, ஒரு பாஸ்கெட் பால் ஸ்டேடியம் நிரம்பி வழிய, கிட்டத்தட்ட 18,000 பேர் நின்று கொண்டு அவர் பேச்சைக் கேட்டார்கள். “யெஸ் வி கேன்”, என்ற ஒபாமாவின் பிராசர வாசகம் இப்போது யுடூபில் ஏக பிரபலம்.

ஹில்லாரி கிளிண்டனை, அவரது கணவரான பில் கிளிட்டனின் ஜனாதிபதியாக ஆண்ட போது இருந்த அமெரிக்க பொருளாதார செழுமைக்கு, மீண்டும் கொண்டு செல்லக் கூடிய சக்தியாக பார்க்கிறார்கள்.

இவர்கள் இருவரும் ஒரே மேடையில் விவாதிக்கும் போது, மிடியா சந்தோஷத்தில் குதிக்கிறது. கிட்டத்தட்ட ஒரு ரியாலிடி ஷோ போல இவர்களின் விவாதம் ஆன போது, சட்டென்று புரிந்து கொண்டு, இருவரும் சற்றே அமைதியாய் எதிர்த்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். டிவி எழுத்தாளர்கள் ஸ்ட்ரைக் நடந்து கொண்டிருந்த போது, இவர்களைப் பற்றிய நியூஸைத் தான் ப்ரைம் டைம் டிவி நம்பிக் கொண்டிருந்தது.

இவர்கள் சண்டையில், ரிபப்ளிகன் பார்ட்டி மீண்டும் வந்து விடும் என்று ஆருடம் சொல்லுகிறார்கள். யார் வருகிறார்களோ இல்லையோ, இந்த அதிவேக கலாசாரத்தில், டுவிட்டர், டிக்க், வோர்ட்பிரஸ். சி.என்.என், யு-டியுப் ஆகிய இடங்களில், யாராரோ சதா சர்வ காலமும் எதையாவது எழுதிக் கொண்டோ, பேசிக் கொண்டோ இருக்கிறார்கள். கொஞ்சமாய் தலைச் சுற்றுகிறது !!

ஜலதோஷம், தமிழ் மென்பொருள் மற்றும் பழனி
இந்த வாரம் ரொம்பவும் பேசப்பட்ட க்ளிஷே, “If america sneezes, asia catches cold”. இதையே பலரும் பேசிப்பேசி,  ”அமெரிக்காவுக்கு தும்பல் வந்தா , எங்க வீட்டு பசு மாட்டுக்கு ஜலதோஷம் பிடிச்சுகிறது” என்று எருமபுடிச்சான் பட்டி வரை எதிரொளித்தது. விஞ்ஞான முறைப்படி, தும்பலினால் ஜலதோஷம் பரவுவது மூன்று நான்கடி வர தான். இந்த coldக்கு காரணம் ஆயிரமாயிரமாய் ஆளாளுக்கு பங்கு மார்க்கெட்டில் கொட்டிய துட்டு.

அமெரிக்காவின் சகாப்பதம் இந்த ரிசஷனோடு முடிந்தது என்றெல்லாம் எழுதுகிறவர்கள் டீ குடிக்க போய்விட்டார்கள். இந்த ரிசஷன் பயத்தினால் வீழ்ந்த உலக ஸ்டாக் மார்கெட்டுகள், அமெரிக்காவின் பிஸினஸ் உலக தாக்கத்தை மீண்டும் உணர்த்தியது. ஒரு பத்து வருடத்திற்கு முன்பு, தனித்திருந்த இந்தியாவின் பங்கு மார்க்கெட்டும், உலகளவில் உயர்ந்து, தற்போது தான் அமெரிக்காவின் பங்கு மார்கெட்டின் மேல் சாய்ந்து இன்னும் அதிகமாக அதைச் சார்ந்து இருக்கிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்காவில், கிட்டத்தட்ட பத்து வருடத்திற்கு இரண்டு என்று இது வரை எட்டு ரிசஷன்கள் வந்திருக்கின்றன. எல்லா ரிசஷனும் ஆரம்பிக்கும் போது, “This is the worst recession ever”, என்று ரிப்போர்ட் செய்திருக்கிறார்கள். இது ஒரு வழக்கமான பிஸினஸ் சைக்கிள் தான். நியுட்டனின் முன்றாம் விதிக்கு, பங்கு மார்க்கெட் ஒன்றும் விதிவிலக்கல்ல என்று மறுபடி மறுபடி நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரிசஷன் என்பது நீண்டு கொண்டே இருப்பதல்ல. ஒரு வருடத்திற்கு மேல் நீண்ட ரிசஷன்கள் வெகுச்சில.

ஆனால் இந்த முறை தான் இந்தியாவைப் பற்றி அமெரிக்காவில் அதிகம் பேசுகிறார்கள். நேற்று நடந்த ரிபப்ளிகன் ஜனாதிபதி விவாதத்தில் கூட, சைனா இந்தியா என்று சேர்த்துச் சேர்த்து பேசினார்கள். ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு இது சாத்தியமில்லை. இது ஒரு பெருமையாய் இருக்கும் பட்சத்தில், இதற்கு கொடுக்கும் விலை, நமது பங்கு மார்க்கெட் அமெரிக்க மார்க்கெட்டின் மேல் சார்ந்திருக்கும் நிலைமை.

இந்த முறை வந்திருக்கும் அல்லது (சிலரைப் பொருத்தவரை) வந்து கொண்டிருக்கக்ககூடியது ரிசஷன் தான். இதற்கு முந்தைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமேன் சொன்ன விதிமுறை, “It’s a recession when your neighbor loses his job. It’s a depression when you lose your own”.

சமீபத்தில் தான், புதிதாய் வாங்கிய மாக்கிண்டாஷில், dual bootஆக மாற்றி, விண்டோஸை நிறுவினேன்.மாக்கிண்டாஷில் அதன் ஆப்பரேடிங் ஸிஸ்டத்தின் கூடவே வருகிறது தமிழ் எழுத்துரு – தமிழில் எழுத உதவும் சாஃப்ட்வேர்.

விண்டோஸில் வழக்கமாக ஈ-கலப்பை வைத்து தமிழில் எழுதி வந்திருந்தேன். நியு ஹொரைசன் மிடியாவில், NHM Writer  என்கிற தமிழில் எழுத உதவும் மென்பொருளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

அதை பயன்படுத்தி பார்த்த போது, அது தமிழில் எழுத உதவுவதோடு மட்டும் இல்லாமல், விண்டோஸ் கணினியின் மூலம் இணையத்தில் தமிழை சரியாக படிக்கும் படி அதை configureம்  செய்கிறது.

இதுவரை தங்கள் கணினியில் தமிழ் படித்து/உள்ளிட முடியாதவர்கள் பயன்படுத்தலாம்.

கமர்ஷியல் பஞ்சாமிர்தம் என்று உப தலைப்புடன், பழனி என்கிற படம் வந்திருக்கிறது. ‘அதிரடி கமர்ஷியல்’ (என்றால் என்ன?) இயக்குனர் பேரரசின் படம்.

இதைப்போல முடிவெடுத்து மசாலா படமெடுக்கும் தயாரிப்பாளர்கள், கவலைப்படாமல், ஸ்ரீகாந்த் தேவாவை பயன்படுத்தலாம். கொடுத்த பைசாவுக்கு கன்னாபின்னாவென்று மசாலா மெட்டிசைக்கிறார். டிவி பேட்டியில் கள்ளமில்லாமல் பேசுகிறார், சிரிக்கிறார். பழனியின் பாடல்கள், சிவகாசி படத்தின் பாடல்களைப் போல பிடித்து விட்டது.