subbudu.com » உலகம்

யார் தவறு?
”இந்த நாட்களில் கிலோ எத்தனை நிற்கிறது?” என்ற கேள்விக்கு கோயம்பேட்டில் தான் உண்மையான விடை கிடைக்கும். இரண்டு வருடத்திற்கு முன் அங்கே ஒரு கிலோ 800 கிராம்களாக நின்றது, தற்போது 700 கிராம்களாக. இது உள்குத்து விவகாரம் தான் ஆனால் நிஜமாகவே ஒரு கிலோ என்பது 69 கிராம்கள் குறைந்துள்ளது தான் உண்மை. இது தான் ஒரு கிலோ என்றெல்லாம் யார் சொன்னார்கள். ஒரு செகண்ட் என்பது இது தான் என்றது எப்படி வந்தது போன்ற விக்கிபீடியா கேள்விகளுக்கு சரியான விஞ்ஞான காரணங்கள் இருக்கின்றன.

பாரீஸில் இருக்கும் இண்டர்நேஷனல் ப்யூரோ ஆப் வெயிட்ஸில் 90%பிளாட்டினம் + 10% இரிடியத்தால் செய்யப்பட்ட ஒரு கிலோ உருளை இருக்கிறது. இது தான் உலகின் உண்மையான ஒரு கிலோ எடை(the actual kilogram). இதை மூன்று பூட்டுக்கள் போட்டு பாதுகாத்து வருகிறார்கள். இப்படி இருந்தும் விஷயம் என்னவென்றால், சில வருடங்களுக்கு முன் இதை எடையிட்டு பார்க்கும் போது, அதிகமில்லை, 69 கிராம்களாக குறைந்திருப்பதை கண்டுபிடித்தார்கள். இதற்கு காரணம் பழனி முருகனைச் செய்த மாதிரி யாரும் சுரண்டிக் கொண்டு போய்விடுவதில்லை. அவ்வப்போது எடுத்து துடைத்து சுத்தம் செய்து வைக்கும் போது இப்படி ஆகிவிடுகிறது.

பேஜாராகிப் போன விஞ்ஞானிகள், இந்த உருளையை தூக்கி எறிந்து விட்டு Planck’s Constant(h) அளக்கும் முறையான Watt balanceக்கு மாறிவிடலாம் என்று யோசித்திருக்கிறார்கள். இம்மாதிரி பாரத்தை கரெண்டாக மாற்றி அளவிடும் முறை தான். இந்த முறையில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருப்பதால் இந்த முயற்சி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்னும் சில வருடங்களில் இம்முறை நிருபணம் ஆகிவிடும் என்கிறார்கள். அதற்கு பிறகு ஒரு கிலோ என்பது, வாட் பாலன்ஸில் இன்றிருக்கும் ஒரு கிலோவை வஸ்துவை வைத்தால் அதற்கு ஈடாகும் Plank’s constant தான். அதுவரை அவர்கள் ’அளந்து’ கொண்டிருப்பார்கள். காய்கறிக்காரனிடம் சொல்லி, உடைத்துப் பார்த்து இன்னும் ரெண்டு வெண்டக்காயை எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள்.

0000

தமிழில் புத்தகம் வாசிப்பதை அதிகரிக்கிறேன் என்று யாராவது சொன்னால் கூட, டிவி சானல் ப்ரோக்ராம் உட்பட அவர் என்ன செய்தாலும் சந்தா கட்ட ரெடியாக இருக்கிறேன். சமீபத்திய விஜய்யில் ‘நீயா? நானா?’ நிகழ்ச்சியில் வாசிப்பைப் பற்றி பேசியதை கேட்டுப்/பார்த்தேன். இதன் விளம்பரத்தில் பெண் புத்தகம் படிப்பது சரியா என்றெல்லாம் கொஞ்சம் சென்சேஷனஸைல் செய்து விட்டார்கள். மன்னிக்கலாம். புத்தகம் படிக்கக் கூடாதது ஏன் என்று பேசியவர்களின் பேச்சை கேட்டு திடுக்கிட்டு போய் விட்டேன். எதேதோ காரணம் சொன்னார்கள், உண்மையாய் அதிகம் ஒன்றும் அகப்படவில்லை. இவர்கள் எல்லாம் படிக்காமல் எல்லா நேரத்திலும் என்ன செய்கிறார்கள் என்று படிக்காமல் நேற்று முழுவதும் யோசித்தேன். ஹூ..ஹும்.

இட்லி வியாபாரம் செய்யும் ஒரு ஒரு பெண் தனக்கு படிப்பதற்கெல்லாம் வசதி இல்லை என்று சொன்னதை கேட்க கடினமாய் இருந்தது. இந்தப் பெண்ணுக்கு கூட படிக்கிற ரசனையை எதாவது ஒரு ஆசிரியராவது வளர்த்திருந்தால், அவரும் அப்படி பேசியிருப்பாரா என்பது சந்தேகமே. மற்றபடி இரண்டு பக்கம் பேசியவர்களும் குறைப்பட்ட வாதங்களையே முன் வைத்தார்கள். பேச்சு சுவாரசியத்தில் திடிரென்று ஆளாளுக்கு கத்த யார் படித்தவர்கள் மற்றவர் யார் என்று புரியாமல் போய் விட்டது. எஸ்.ரா மிகவும் தெளிவாக கதை சொல்லுதலைப் பற்றி விளக்கினார். ஆனால் இவர் கூட சிறு பத்திரிக்கைகளில் சிக்கலாக எழுதுகிறார். ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் பத்துப் பக்கம் படிக்கும் தமிழ் வாசகனான எனக்கு சி.பத்திரிக்கைகளில் எஸ்.ரா எழுதுவதை புரிந்து கடினமாக இருக்கிறது. விகடனில் எழுதினால் இவரா அவர் என்று அவதிப்படுகிறேன். யார் தவறு?

புத்தகம் படிப்பது வேண்டும் என்று பேசியவர்கள், இலக்கியம் படியுங்கள், நியுஸ் ப்ரிண்ட் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட அல்பாயுசு வார நாவல்களை படிக்காதீர்கள் என்று சொல்ல எத்தனித்து என்ன என்னவோ பேசி முடித்தார்கள். முத்தாய்ப்பாக போகிற போது எல்லோர் கையிலும் ’ஒரு புளியமரத்தின் கதை’யையாவது கொடுத்து அனுப்பியிருக்கலாம். அட்லீஸ்ட் கோபல்ல கிராமம். பிடித்த எழுத்தாளர், பிடித்த பாத்திரம் பற்றிச் சொன்ன இவர்களின் பேச்சில் ஆசோகமித்திரன் அடிபடவில்லை. இந்தப் பகுதியின் முதல் வாக்கியத்தை திரும்பப் படிக்கவும்.

0000

3டி ப்ரிண்டிங் வந்து விட்டது. ஜேம்ஸ் காமரூனின் அவதார் போல காதில் பூச்சுற்றல் எல்லாம் இல்லை. நிஜமான 3டி அதிரடி. Additive Manufacturing என்னும் முறைப்படி செய்யபடும் இந்த ப்ரிண்டிங்கில், நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு பந்தை மாடலிங் செய்து ப்ரிண்ட் கொடுத்து விட்டீர்களென்றால், பக்கதில் இருக்கும் ப்ரிண்டரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் ரசாயணம் வெளிப்பட்டு கொஞ்ச நேரத்தில் பந்து வந்து நிற்கும். இன்னும் ஓரிரு வருடங்களில். அதெப்படி முடியும் என்று நீங்கள் நினைப்பது மனிதத்தனம். வாக்மேன் வந்த போதும், மொபைலைப் பார்த்த போதும் இண்டர்நெட்டைக் கேள்விப்பட்ட போதும் இப்படித்தான் குழம்பினீர்கள்.

இந்த ப்ரிண்டிங் உலகை மாற்றப் போகிறது என்று நம்புகிறார்கள். எப்படி 18ம் நூற்றாண்டின் போது பாக்டரிகள் தயாரித்து தள்ளினவோ அதே போல் அதற்கு மாற்றாகத் தான் இது. யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு தேவையான புத்தகத்தையோ, கிடாரையோ நீங்கள் அமெசானில் தேடிப் போக வேண்டாம். அமெசானில் இருந்து அதன் மாடல் விஷயங்களை இறக்கிக் கொண்டால் போது அடுத்த அரை மணியில் கிடாரோ, சைக்கிலோ ரெடி. இந்த டெக்னாலஜி வழக்கம் போல் ஆர்வமுடையோர் மற்றும் பணமுடையோரின் கைகளில் இருக்கிறது. இன்னும் பத்து வருடங்களில் இவ்வித 3டி ப்ரிண்டர்கள் எல்லோர் வீட்டிலும் வந்து விடும் என்கிறார்கள்.

3டி ப்ரிண்டிங் தயாரிப்பு செலவுகளை குறைப்பதால் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் தயாரிக்கலாம். உங்கள் கிரிக்கெட் குழாமிற்காக மட்டும் செய்யப்பட்ட புதுவித பேட்டுகளை செய்யலாம், உங்கள் குழந்தைக்காக ஸ்பெஷல் பொம்மையை வடிவமைக்கலாம். இன்னும் இரண்டு வருடங்களில் 3டி என்ஜினியரிங் கோர்ஸ் வந்து விடும். உங்கள் வீட்டருகில் தற்போது கட்டிக் கொண்டிருக்கும் எ.காலேஜில் ஒரு சீட்டு 33.5 லட்சம். பையனும் பணமும் ரெடியா?

0000

1960களில் உருவான ஐரோப்பிய இசைப் புரட்சியில் தோன்றிய மற்றொரு நால்வர் குழு தான், The Who. பீட்டில்ஸ், ரோலிங் ஸ்டோன்ஸ், தி ஹூ என்ற மூன்று பெரிய இங்கிலாந்துக் குழுக்களில் ஒருவர்கள்(!). பல வருடங்களுக்கு பிறகு சமீபத்தில், பயணங்களின் நடுவே, இவர்களின் இசையை ரசித்துக் கேட்க முடிந்தது. என்ன வகையான இசை என்று வகைப்படுத்த முடியாத மாதிரியான இசை. அவ்வப்போது reggae போல தோன்று hard metal இசையாக மாறி rock-n-rollலில் அவசியம் முடியும் ஒரு ecstasy அனுபவம்.

இவர்கள் எங்கே போனார்கள் என்று தேடியபோது, அவ்வப்போது பிரிந்து போய் மீண்டும் ஒன்று சேர்ந்து 45 வருடங்களுக்கு பின் இன்னமும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். சாம்பிளுக்கு ஒன்று. இதையெல்லம் கேட்ட பிறகு இன்றைய பாப் இசை கேட்டால் தமாஷாயிருக்கிறது.

பெரும்பள்ளம்
எகிப்தில் நடக்கின்ற மக்கள் புரட்சியை பார்க்கும் போது பிரமிப்பாய் இருக்கிறது. பஸ் பிடித்து போய் பேக்கரியிலோ டுரிஸ்ட் கைடாகவோ வேலை பார்த்து வந்த சாமானியர்கள் திடிரென்று பேசி வைத்த மாதிரி வேலையை உதறிவிட்டு, மனைவி பிள்ளைகளை வீட்டில் அடைத்து விட்டு டஹ்ரீர் ஸ்குயரில் புரட்சி செய்ய ஆரம்பித்தது அவர்களின் கோபத்தை காட்டியது.

மக்கள் புரட்சி என்றால் பிரஞ்சுப் புரட்சியைப் போல் சாவகாசமாய் வருடக்கணக்காக நடக்க வேண்டும் என்பதல்ல. கடந்த 10 தினங்களில் அங்கும் ட்யுனிஷ்யாவிலும் நடந்தைவை உலகை சற்றே மாற்றக் கூடியவை. நான்கு நாட்களுக்கு உலுலாக்காட்டியாக் போய்க் கொண்டிருந்த இந்த புரட்சி ஊர்வலங்களைப் பார்த்து அரசு பயந்து போய் விட்டது நன்றாக தெரிந்தது. அதற்கு பிறகு நடந்தது தான் பயங்கரம். யாரோ போய் கைரோவில் இருந்த சிறைச்சாலையை திறந்துவிட 17,000 கைதிகள் வெளியே தப்பி ஓட, பிடித்தது தீ. இந்த கைதிகளில் அரசு ’சந்தேகத்தின் பேரில்’ பிடித்துப் போட்ட நல்லவர்களும் அடக்கம். ஆக நல்லவர்களும் அல்லாதவர்களும் ஒரே நேரமாக வெளியே வர ஏற்கனவே இருந்த பதட்டம் அதிகமாகி ஒரே களேபாரம். புரட்சி செய்து கொண்டிருந்த மக்கள் கொஞ்சம் பேர் வீடு திரும்பி தத்தம் காலனிக்கு பாதுகாப்பாய் இருக்க மற்றவர்கள் இன்னமும் விடிய விடிய புரட்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

புரட்சி நல்லதா கெட்டதா என்பதை அந்நாட்டவர்களிடம் விட்டு விடலாம். நம்நாட்டில் இம்மாதிரி ஏன் நடக்காது என்றாவது யோசித்துப் பார்க்கலாம். எகிப்தில் முபாரக் என்றொருவர் தான் இருக்கிறார். லஞ்சம் நம்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு தேசிய குணமாகியிருக்கும் இந்நாட்களில் யாரை எதிர்த்து புரட்சி செய்வோம்? ப்ளாக் டிக்கெட்டில் இருந்து, ப்ளாடுக்கு பட்டா வாங்குவது, பம்பு தண்ணிக்கு குழாயை வீட்டுக்கு இழுப்பது, குழந்தைக்கு ஸ்கூல் டொனேஷன் என்று எல்லோரும் எதோ விதங்களில் கறைப்பட்டுப் போய் இருக்கிறோம். அப்படியே புரட்சி பண்ணுகிறோம் என்று ஜெமினி பிரிட்ஜுக்கு அடியில் போய் நின்று கோஷமிடும் போது, உண்மை நெருட திரும்பி வந்து விடுவோம். ஆக புரட்சியும் கூட உதவாதென்றால் என்றால், சிம்பிளாக, சுயேச்சையில் நிற்கும் ஐஐடி மாணவன் யாருக்காவது ஓட்டாவது போட்டு கறை கழுவலாம்.

இத்தனை நாட்களாக சூப்பர் சிங்கர் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ”எகிப்துல என்னாச்சு சார்” என்று கேட்பவர்களுக்கு எழுதிப் புரியவைக்கவே முடியாது. பார்த்துக் கொள்ளுங்கள்.

0000

இந்த எகிப்துப் புரட்சியில் ஈடுபட்டு முக்கிய அமைப்பாளர்களை இந்த சத்தமெல்லாம் ஓய்ந்து விட்ட போது, “அந்த நாட்கள் எப்படி இருந்தது?” என்று கேட்டுப் பார்த்தால், “கருப்பாய் அடி வயிற்றை கவ்வுகிற பயமாய் இருந்தது” என்று சொல்லுவார்கள். வேலையிருக்குமா இருக்காதா, பாஸ் ஆவோமா மாட்டோமா என்ற நாட்கள் நமக்கும் நடந்திருக்கலாம், அப்போது நமக்கு எப்படி இருந்தது என்று கேட்டுப் பார்த்தாலும் இப்படித் தான் பதில் சொல்லுவோம். இதைத் தான், பெரும்பள்ளம் அல்லது Pit என்கிறார்கள்.

உங்கள் வேலையில் தினம் தினம் இம்மாதிரி தோன்றுகிறதா? அமாம் என்றால் நீங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இம்மாதிரி அடிவயிற்று பயம் இல்லையென்றால் உங்களில் comfort zoneல் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். சிறந்த தலைமைப் பண்புள்ளவர்கள் மீண்டும் மீண்டும் இம்மாதிரி பெரும்பள்ளங்களைத் தேடிப்போய் விழுந்து, மீண்டும் மேலெழுந்து வருகிறார்கள். கேட்டால் சேலன்ஞ் என்கிறார்கள். கேள்விப்பட்டதுண்டா?

சமீபத்தில் Validation என்றொரு குறும்படம் பார்த்தேன். இம்மாதிரி கட்டிப்புடி வைத்தியங்களுக்கு நாமெல்லோரும் ஏங்குகிறோம். இதுவும் ஒரு சிறந்த தலைமைப் பண்பு தான் என்று தோன்றுகிறது. பதினாறு நிமிடங்களும் பார்க்க முடியவிட்டாலும் முதலிரண்டு நிமிடங்களையாவது பார்த்து விடுங்கள்.

0000

10 000 000 000 மிருகங்கள். அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு பத்து பில்லியன் மிருகங்கள் உண்பதற்காக கொல்லப்படுகின்றன. இவைகளில் வான்கோழி, கோழிகள் மட்டும் கிட்டத்தட்ட ஒன்பது பில்லியன். மாடுகள் கிட்டத்தட்ட 33 மில்லியன்கள். அதாவது மூன்று கோடியே முப்பது லட்சம்.

Fast Food Nation எனும் புத்தகத்தில் இம்மாதிரி உணவு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் மிருகங்களை எப்படி கொல்லுகிறார்கள் என்று படித்த பொழுது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இந்த வார ஓப்ரா ஷோவில் மாடுகளை கொன்று உணவு Ground Beef தயாரிக்கும் தொழிற்சாலையில் எடுத்த வீடியோவைப் பார்த்து எல்லோரும் அதிர்ந்து போய் விட்டார்கள். என்ன தான் நாங்கள் இம்மிருகங்களை ஒழுங்காக பராமரித்து மரியாதையுடன் தான் கொல்கிறோம் என்றெல்லாம் அவர்கள் சொன்னாலும், கொலை கொலை தான் என்று பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். Inside a Slaughterhouse என்னும் இந்த ஆறு நிமிட வீடியோ உங்களின் வாழ்வை மாற்றக் கூடியது. ஜாக்கிரதை.

வீட்டுக் கதை
சில மாதங்களுக்குப்பின் மீண்டும் கலிஃபோர்னியா வருகிறேன். சின்ன வயதில் கேட்ட மூன்று நாட்டவர்கள் வானத்தில் பறக்கும்போதே தங்களது நாட்டைக் கண்டுபிடிக்கும் (அதாவது இந்தியாவைக் கிண்டலடிக்கும்) ஜோக்கைப்போல் கலிபோர்னியாவின்மேல் பறக்கும்போதே சிலிக்கான் வாசனை மூக்கைத் தொலைக்கிறது. ப்ளேனில் எல்லோரும் திடிரென்று #include <stdio .h> என்றெல்லாம் ப்ரோக்ராம் உளறுகிறார்கள்.

விமானம் சான் ஃப்ரான்சிஸ்கோவில் எப்போதும் படர்ந்திருக்கும் மேகத்தைக் கிழித்தபடி அதிவேகமாக நகர்ந்து சான் ஹொசே ஸ்டேஷனில் இறங்கிவிடுகிறது.  ரோடெல்லாம் தங்கமும் வைடூரியமும் கிடைக்கும் என்று நினைத்தலாகாது. பொட்டைக் காடாக எல்லா இடத்திலும் வானம் தெரியும் பாலைவனமாக இருந்த இடத்தில் திடீரென்று ஒரு முப்பது வருடங்களில் உலகம்முழுவதிலும் இருந்து டெக்னாலஜி ப்ரஜைகள் வந்து அடைத்துக்கொண்டிருக்கும் ஓர் artificial சொர்க்கம். எங்கெங்கும் பணச் செழிப்பு தெரிகிறது. ரேச்சல் வெங்கடாசலம் என்றெல்லாம் பெயர்கள் காணக் கிடைக்கிறது.  சரவணபவன் இருக்கிறது. தக்காளி ரசத்தை சூப் என்கிறார்கள். மினி டிபன் முதற்கொண்டு அடை அவியல், கைமா இட்லிவரை எல்லாம் கிடைக்கிறது. ஏப்பம் உள்பட. எந்தக் கம்பெனி போனாலும் வந்தாலும் இந்தியன் ஸ்டோர்கள் மாறுவதே இல்லை. காய்ந்துபோன டஜன் கறிவேப்பிலைகளை ப்ளாஸ்டிக் பையில் போட்டு ஒரு டாலருக்கு விற்றுவிடுகிறார்கள்.

இங்கிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ்தான் அமெரிக்காவிலேயே rudest நகரமாம். சாண்டா க்ளாராவில் பெல்ட் போடாத கார் ட்ரைவர்கள் வருகிறேன் வருகிறேன் என்று சித்த ஞாழி காக்கவிட்டு 101 ஹைவேயில் கம்ப்யூட்டர் இன்ஜினியர்களுடன் மல்லுக்கட்டி ப்ளேனை எடுக்கும்முன் எப்படியோ கொண்டுவந்து போட்டுவிடுகிறார்கள்.

0000

போன வருடம் படித்த ஆங்கில வரிசையில் எனக்குப் பிடித்த புத்தகம் பில் ப்ரைசன் (Bill Bryson) எழுதிய At Home – A Short History of Private Life என்ற புத்தகம். பில் ப்ரைசன் ஓர் ஆதர்ச எழுத்தாளர். படிக்கும் ஒவ்வொருவரிடமும் 1-1 பேசுகிறமாதிரி எழுதக்கூடியவர். ப்ரபஞ்சத்தில் இருந்து பெருவெடிப்பு, கல் மனிதன் எனக் கடினமான விஷயங்களை A Short history of nearly everythingல் விளக்கியிருப்பவர். ஓவ்வொரு புத்தகத்திலும் புதியவைகளைமட்டுமே எழுதக்கூடியவர்.

ஐம்பதுகளில் இருந்த அமெரிக்காவைப் பற்றி இவர் எழுதிய சுயசரிதையான The Life and Times of the Thunderbolt Kid எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஓரிரு அத்தியாயங்களை இரண்டு மூன்று முறைகூடப் படித்திருக்கிறேன். விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். ஓரிருவருக்குப் பிறந்தநாள் பரிசாக இந்தப் புத்தகத்தை அளித்திருக்கிறேன்.படித்தால் உங்களின் குழந்தைப் பருவத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பீர்கள். படித்தபடியே சிரிப்பு வரவில்லை என்றால் நீங்கள் டாக்டரை நாடவேண்டிவரலாம்.

தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் ப்ரைசனின் வீட்டில் ஒரு நாள் எங்கிருந்தோ தண்ணீர் ஒழுகுகிறது. அவர் ஆட்டிக்(Attic) என்னும் வீட்டின் உட்கூரையின்மேலிருக்கும் அறையில் ஏறிப் பார்க்கிறார்.  முதன்முறையாக அந்த அறைக்கு வரும் அவருக்குத் தோன்றுவது, உலகத்தைப் பற்றியெல்லாம் பேசும் எனக்கு என் வீட்டைப் பற்றியே தெரியாத விஷயங்கள் எத்தனை இருக்கிறது!

இதையடுத்து அவர் தன் வீட்டில் இருக்கும் ஒவ்வோர் அறையாக நம்மை அழைத்துச்செல்கிறார். அந்த அறையின் பின்னணியில் இருக்கும் வரலாறை ஆராய்ந்து விளக்குகிறார். இப்படி உருவானதுதான் இந்தப் புத்தகம் At Home – A Short History of Private Life.

டைனிங் டேபிளில் ஏன் உப்பும் மிளகும்மட்டும் வைக்கிறார்கள், forkல் ஏன் நான்கு பற்கள்மட்டும் இருக்கிறது, பாத்ரூம் உருவானது எப்படி எனச் சுவாரசியமான, ஆனால் அதிகம் பிரசித்தம் இல்லாத விஷயங்களை ஆராய்கிறார். ப்ரசன் சொல்லவருவது உங்கள் வீட்டிற்கும் வரலாறுக்கும் சம்பந்தமில்லை என நினைக்காதீர்கள். வரலாறு கடைசியாக முடிவது வீட்டில்தான்!

ரோமானியர்கள்தான் குளியலறைப் பழக்கத்தைக் கொண்டுவந்தார்கள். அதற்குமுன் கிரேக்கர்கள் Gymnasium என்றோர் இடத்தை வைத்திருந்தார்கள். Gymnasium என்றால் ’ஆடையில்லாத அறை’ என்று அர்த்தம். கொஞ்சம் உடலை வியர்க்கவிட்டுவிட்டுக் குளித்த இடம்தான் அது. அவர்களோடு ஒப்பிடும்போது ரோமானியர்கள் கொஞ்சம் சொகுசானவர்கள். அவர்கள் குளியறை பல ஏக்கர்களுக்குப் பரந்து விரிந்தது. அதனுள் சலூன், நூலகம், ப்யூட்டி பார்லர், டென்னிஸ் கோர்ட், ரெட் லைட் ஏரியா என்று பலதும் இருந்ததாம்.  நகரத்தில் நடுவில் இருந்த இந்தக் காமென் குளியலறைதான் அவர்களின் டைம் பாஸ். கொடுத்துவைத்தவர்கள்!

ரொம்பவும் அபாயகரமான அறை அல்லது இடம் மாடிப்படிதான்.  அமெரிக்காவில் வருடத்திற்குப் பன்னிரெண்டாயிரம் பேர் கீழே விழுகிறார்கள். மீண்டும் எழுவதே இல்லை. அவர்கள் விழுவது படிகட்டிலா, மொட்டை மாடியிலிருந்தா, அல்லது மரக் கிளையிலிருந்தா எனத் தெரிவதில்லை. இங்கிலாந்தில் வருடத்திற்குச் சுமார் மூன்று லட்சம் பேர் படிகட்டிலிருந்து விழுந்து டாக்டர் க்ளினிக் செல்கிறார்கள். இந்த மாடிப் படி பற்றியே MIT ப்ரொஃபஸர் ஒருவர் ஆராய்ச்சி செய்திருக்கிறார். இதன்படி இந்த நம்பர்கள் ரொம்பவே குறைந்தவை என்கிறார் அவர். கார் விபத்திற்கு அடுத்தபடி அதிகமாக நடக்கும் விபத்து இந்த மாடிப்படிச் சறுக்கல்தான்.

ஆனாலும் மற்ற இடங்களுக்குச் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாடிப்படிகளுக்குச் செய்யப்படுவதில்லை என்பதுதான் சோகமே.  நியுயார்க்கில் ஒரு

சப்வேயில் சறுக்காமல் இருக்கப் போடப்பட்டிருந்த ரப்பர் படிகட்டுகள் எங்கு ஆரம்பிக்கின்றன என்று தெளிவாக தெரியவில்லை. அதனால் சுமார் ஆறு வாரங்களில் 1400 பேர் விழுந்துவிட்டிருந்தார்கள். அப்புறம் அதை விழுந்தடித்துக்(!)கொண்டு மாற்றினார்கள்.

கிட்டத்தட்ட எல்லோரும் ஏதாவது தருணத்தில் மாடிப்படியில் இருந்து சறுக்கி விழுகிறார்கள்.  2,222 முறைகளில் ஒரு முறையாவது கண்டிப்பாக நீங்கள் ஒரு படியாவது தவறுவீர்களாம். 63,000 முறைகளில் ஒரு முறையாவது ஒரு சின்ன விபத்தாவது நேருகிறதாம். முப்பது லட்சம் முறைகளில் ஒரு முறையாவது ஹாஸ்பிட்டலுக்கு செல்ல நேர்கிறதாம்.  திருமணமாகாதவர்களும் கொஞ்சம் ஒல்லியானவர்களும் அதிகம் விழுகிறார்களாம்.  ஒருமுறை சறுக்கினீர்கள் என்றால் மீண்டும் சறுக்கும் வாய்ப்பு அதிகமாகிறதாம்.  ஏறுவதைவிட இறங்கும்போதுதான் விபத்துகள் அதிகம் நடக்கிறதாம். நல்ல ஆரய்ச்சி, ந.ப.

இப்படிக் கீழே விழுவதை ஒரு ஸ்லோ-மோஷனில் ஓட்டிப் பார்க்கலாம். படிகட்டில் இறங்குவதே ஒருவிதக் கீழே விழுதல்தான். என்ன, நாம் கொஞ்சம் கண்ட்ரோலில் இருக்கிறோம். ஆகவே விழாமல் இறங்குகிறோம். சட்டென அடுத்த படி சறுக்கிவிட்டால் இந்த மனிதன் இறங்கவில்லை, சறுக்க ஆரம்பித்திருக்கிறான் என மூளைக்குப் புரிந்து உங்கள் ரிஃப்ளக்ஸ் இயக்கத்தில் இறங்க ஆகும் நேரம் 190 மில்லி செகண்டுகள்.  இந்தப் பூதாகர இடைவெளியில் நீங்கள் சரியாக ஏழு இஞ்ச்கள் இறங்கியிருப்பீர்கள். விழலாம், அல்லது விழாமல் சுதாரித்துக்கொண்டும்விடலாம்.

இப்படியான மாடிப்படியில் அதிகம் கவனமாக இருக்கவேண்டிய இடம் முதலும் முடிவும்தான். மூன்றில் ஒரு விபத்து முதல் படியிலோ கடைசிப் படியிலோ நடக்கிறது. மிச்ச இரண்டு பங்குகள் முதல் மூன்று படிகளிலோ கடைசி மூன்று படிகளிலோ நடக்கிறது. ஆக நடுவில் மோட்டு வளையத்தை பார்த்தபடி நடக்கலாம். திடிரென்று ஒரு படி இருக்கக்கூடிய இடங்களும் நான்குக்கும் குறைவான படிகள் இருக்கக்கூடிய பிரதேசங்களிலும் அஜாக்கிரதை அதிகம் இருக்கிறது.

பெட்ரூம் பற்றிக்கூடச் சுவாரசியமான பல குறிப்புகள் இருக்கின்றன. எஜமானர்கள் தூங்கும் படுக்கைகளின் கால் பகுதியில் வேலைக்காரர்கள் படுத்து உறங்கியிருக்கிறார்கள். மன்னர் ஐந்தாம் ஹென்றி அவர் மனைவியுடன் கூடியபோது அவருடைய சமையல்காரரும் வேலைக்காரரும் உடன் இருந்ததாகத் தெளிவான குறிப்புகள் இருக்கின்றன. படுக்கையின் மேல் திரைச்சீலை ஒன்று இருந்திருக்கலாம் என்று சந்தேகத்துடன் எழுதிய குறிப்பும் மங்கலாக இருக்கிறது

0000</stdio>

பன்சாலிப்பூர்
போன வாரம் எழுதியிருந்த eclectic writing பற்றி இன்னமும் கொஞ்சம் கதைக்கலாம். அன்பர் ஒருவர் “நீர் சொல்ல வருவது வேலிக்கு ஓணான் சாட்சியாக இருக்கிறது. எதை வேண்டுமானாலும் எழுத இது ஒரு சாக்கு” என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இருக்கலாம், யோசித்துப் பார்த்தால் அதட்டல் தொனியோடு வரும் குறுக்கு வழிப் புத்தகங்களுக்கும் ’அழகி கொலை’ என மூன்றாவது பாராவில் மூன்று வரி எழுதிவிட்டுப் பாதி பக்கத்துக்குப் பாடியின் பயமுறுத்தும் போட்டோ போடுகிற தினசரிகளுக்கும் நடுவே பத்திரிக்கைகளைதான் சாமானியர்கள் அதிகம் படிக்கிறார்கள்.  காரணம் அவற்றை அணுக முடிகிறது என்பதுதான்.  ஏற்கனவே சொன்னமாதிரி எத்தனை பதற்றமான /சந்தோஷமான சூழ்நிலையிலும் படித்துவிட்டுப் போகக்கூடிய எளிய கட்டுரைகளைதான் மனித மனங்கள் விரும்புகின்றன. நான் சொன்னால் அடிக்க வருவீர்கள் என்பதால் சமுகவியலாளர்களைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறேன்.

உதாரணத்துக்கு எகனாமிஸ்ட் ஜார்ஜ் லோவென்ஸ்டைன் செய்து காண்பித்த ஓர் ஆய்வு. அதில் கலந்து கொண்டவர்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கப்பட்டது:

’இன்றிரவு பார்ப்பதற்கு ஒரு படமும், பின்னொரு நாள் பார்ப்பதற்கு ஒரு படமும் தேர்ந்தெடுங்கள்’.

ரொம்பவும் யோசித்து குழப்படி செய்யாமல் மக்கள் இன்றிரவு பார்ப்பதற்குத் தேர்ந்தெடுத்த படங்கள் காமெடிப் படங்கள் அல்லது ப்ளாக்பஸ்டர்கள். அதாவது பஞ்சதந்திரம் மற்றும் எந்திரன். மற்றொரு நாள் பார்ப்பதற்கு பத்திரமாகச் சேர்த்து வைத்த படங்கள் முக்கியமானவை – இருவர், ஹே ராம் மற்றும் நந்தலாலா போன்ற படங்கள்.

இதில் விஷயம் என்னவென்றால் அந்த ‘நல்ல’ படங்களைப் பார்க்கும் நாள் வரும்போது காவலனோ, சிறுத்தையோ, ஒட்டகச்சிவிங்கியோ ஏதாவதுஒரு காமெடி / ப்.பஸ்டர் படம் வந்துவிடும் ‘இன்று போய் நாளை வா’ கதைதான்.

இதன் பாடம் மக்கள் philistines  என்பதல்ல, அவர்களின் தேர்ந்தெடுப்புகள் எல்லா நேரத்திலும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. எத்தனை பேர் ‘இந்த ஞாயித்துக்கிழமை எல்லா பில்லையும் டாலி செஞ்சு பாங்க் பாலன்ஸைக் கணக்கு பண்ணிடலாம்’ என்று நினைத்துக்கொண்டு வேட்டியை மடித்துக் கட்டிவிட்டு, கடைசியில் டிவி முன் தவமிருக்கிறார்கள். மக்களின் ஆசைகள் குறுகிய கால, நீண்ட காலத் திட்டங்களுக்கு நடுவே ஊசலாடிக்கொண்டிருக்கின்றன.

ஆக, சொல்ல வந்தது eclectic writing என்பது சுவாரசியமாக எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதுகிறேன் பேர்வழி என்ற சாக்கில் மக்களை நம்பவைத்துச் சற்றே கடினமான விஷயத்தையும் மக்களின் மனத்தினுள் கடத்தும் சாகசம். I rest my case, யுவர் ஆனர்.

0000

ஒத்திப்போடுதல் நமது வாழ்வுடன் இரண்டறக் கலந்த செயல். மேலே சொன்ன நல்ல படமா / லைட் படமா ஆய்வில் வந்த முடிவுக்குக்கூடக் காரணம் ஒத்திப்போடுதல்(Procrastination)தான். கேம் தியரி ஆய்வாளர் ஜேம்ஸ் ஷெல்லிங் இதை ’உங்கள் மனத்தில் இருக்கும் ’divided self’ செய்யும் காரியம்’  என்கிறார். நீங்கள் ஏதாவது ஒன்றை முடிவு செய்யும்போது உங்கள் மனத்தில் ஒரு பாராளுமன்றம் கூடுகிறது. ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் வாதிடுகின்றன. அதாவது குறுகிய கால ஆசைகள் கொண்ட மனத்தின் ஒரு பாதியும், நீண்ட நாள் குறிக்கோள்கள் கொண்ட உங்களின் மற்றொரு பாதியும் திட்டித் தீர்த்துக்கொண்டு கடைசியில் அனேகமாக வெற்றி பெறுவது குறுகிய கால ஆசையே.

நாளையிலிருந்து ஜாகிங் செய்யணும்,  அடுத்த வாரம் முதல் சிகரெட்டுக்குத் தடா,  இதுதான் என்னோட லாஸ்ட் குவார்டர் மாமே என்று எத்தனையோ நீண்ட நாள் குறிக்கோள்கள் உங்களுக்கு முன் இருக்கும் ஷிவாஸ் ரிகலின் உடனடி கிக்கினால் தள்ளிப்போடப்படுகின்றன.

ஒத்திப்போடுதலை ஒத்திப்போடுவதற்கு ஓர் எளிமையான வழி, நமக்குள்ள தேர்வுரிமைகளை எளிமையாக்குதல். அதாவது 110 சானல்கள் இருந்தாலும், அவற்றை இரண்டு மணி நேரம் மாற்றி மாற்றிப் பார்த்தாலும் வராத திருப்தி, இரண்டே இரண்டு சானல்களை வைத்துக் கொண்டு பிடித்ததைப் பார்க்கும் திருப்தியை போலதான்.

உங்கள் கூகிள் ரீடரில் எத்தனை வலைப்பதிவுகள் படிக்கப்படாமல் கிடக்கின்றன? அவற்றைப் ’பிறகு படிக்கலாம்’ என்று தள்ளிப்போடாமல், தயவு தாட்சண்யம் பார்க்காமல் நீக்கிவிடுங்கள். மிச்சமிருப்பதுமட்டும்தான் நீங்கள் விரும்புவது.

0000

மேலே இருக்கும் இரண்டு விஷயங்கள் இப்படி ஒரே கோட்டில் இணையப்போகின்றன என்று எனக்கு முன்னமே தெரிந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.

0000

சஞ்சய் லீலா பன்சாலியின் படங்கள் பன்சாலிப்பூர் என்ற இடத்தில்தான் நிகழ்கின்றன என்று இணையத்தில் நக்கலடித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் ரசிக்கும் சில இயக்குநர்களில் பன்சாலியும் ஒருவர்.  குருதத்போல மக்களிடம் இருந்து ஒதுங்கிப்போய்ப் படமெடுக்கும் இயக்குநர்.

போன வருடக் கடைசியில் வெளிவந்த Guzaarish(வேண்டுதல்) என்னும் படத்தைச் சமீபமாகப் பார்த்தேன்.  Quadriplegia என்னும் ஒருவிதமான பக்கவாத நோயினால் அவதிப்படும் மேஜிக் நிபுணன் தன்னை வலியின்றிக் கொன்றுவிடுமாறு கோர்ட்டில் மனுச் செய்கிறான்.

Euthanasia அல்லது Mercy Killing என்ற சற்றே சர்ச்சைக்கிடமான விஷயம் உலகத்தில் ஆங்காங்கே ஆதரிக்கப்பட்டுவருகிறது. இந்தியாவில் இன்னமும் இது சட்டமாக்கப்படவில்லை. ஆகவே இப்படி வரும் ஒரு வேண்டுதலைக் கோர்ட்டும், அவனைச் சுற்றி இருப்பவர்களும் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை உங்கள் டிவி / டிவிடியில் காண்க. ஏனென்றால் நல்ல படங்கள் ஓடுவதில்லை என்ற தியரிப்படி இதுவும் தியேட்டரை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டுவிட்டது.

பன்சாலியின் படங்கள் நடக்கும் இடங்கள் எங்கிருக்கின்றன என நினைக்கவைக்கும்படி ஓர் ஊரில் கதை நடக்கிறது. இந்தக் கதை கோவாவில் நடந்தாலும் அந்த வீடும் இப்படி 1910களில் வாழ்ந்தவர்கள்போல ஐரோப்பிய உடையணிந்த மனிதர்களும் இன்னமும் அங்கே இருக்கிறார்களா என்ன? ஓர் அழகுணர்ச்சிக்காகவே பன்சாலி இப்படிச் செய்கிறார் என்றாலும் மக்கள் இதை ஒரு குறையாக சொல்லிப் படத்தை டிஸ்கவுண்ட் செய்துவிடுகிறார்கள்.

உணர்ச்சியூட்டும் இசை, துல்லியமான ஒளிப்பதிவு, மிகச் சாதுர்யமான வசனங்கள் என எல்லாத் துறைகளிலும் படம் ஜொலிக்கிறது. கழுத்தைமட்டுமே அசைக்கமுடிந்தாலும் அதில்கூட அவார்டு சாகசம் காட்டும் ரித்திக் ரோஷனும், ’சுக்கு முளகு தட்டி என்ன சூப் வச்சு குடியா’ என்று தமிழ்நாட்டில் தட்டிப்போட்டுவிட்டுப் போய்ப் பாந்தமாக அருமையாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராயும், பன்சாலியும், அவருடைய எழுத்தாளர் பவானி ஐயரும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

இடுப்பு மடிப்புகளையும் ’ஐ லவ் யூ’ பாடல்களையும் காட்டுக் கத்தல் காமெடிகளையும்மட்டுமே எத்தனை நாள்தான் பார்த்துக் கொண்டிருப்பது? ஒத்திப்போடாமல் பார்த்துவிடுங்கள்.

0000

கடிகாரத்தை காணவில்லை
இந்த வருடம் டெக்னாலஜி பற்றி ஜல்லியடிக்க சில வார்த்தைகள்.

Cloud Computing (க்ளவுட் கம்ப்யூட்டிங்) – மேகக் கணினிச் சேவை என்று கூட அழகாகச் சொல்லலாம். ஆனால் ஐ.டி ஆட்கள் பயந்து போய் விடுவார்கள்.  கேள்விப்பட்டிருக்கிறீர்களோ இல்லையோ, இந்த கட்டுரையை இணையத்தில் படித்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக ஒரு முறையாவது டெக்னாலஜி மேகம் உங்கள் வாழ்வைத் தொட்டிருக்கிறது.

இந்த வருடம் நம்மை தொடப் போவது பர்சனல் க்ளவுட் எனப்படும் உங்களுக்கே உங்களுக்கான ஒரு தனி மேகம். அதாவது உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து வைத்திருக்கக்கூடிய பல வகையான புகைப்படங்கள், விடியோ மற்றும் அனைத்து பைல்களையும் இணையத்தில் சேமித்து வைக்கிற சேவை.  இப்படி ஸ்டோர் செய்வதினால் வரும் வருடங்களில் நீங்கள் உங்கள் கணினியை பேக்-அப் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பது முதல் நல்ல விஷயம். ஆக நீங்கள் எடுக்கிற ஆயிரமாயிரம் போட்டோக்களை உங்களுக்காக அவர்களின் டேட்டாசெண்டரில் சேமித்து வைக்கப் போகிறார்கள் க்ளவுட் கம்ப்யூட்டிங் கம்பெனிகள்.

இதற்காக பிரத்யேகமான மென்பொருள்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் வருகைக்குப் பிறகு, கணினிகள் டம்ப் டெர்மினல்களாகக்கூடும் (dumb terminal). அதாவது இணையத்துக்கு உங்களை கனெக்ட் செய்யும் உலாவி மட்டுமே இருக்கக்கூடிய ஒரு இயந்திரம். மற்றபடி நீங்கள் எக்ஸலில் வேலை செய்வதோ, படம் பார்ப்பதோ, பேக்-மேன் விளையாடுவதோ எல்லாமே இணையத்தில் தான். இதற்காக முப்பெரும் டெக்-தேவர்களான மைக்ரோசாஃப்ட், கூகிள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளன. உங்களை, கணினியை விட்டுவைக்க மாட்டார்கள். தயாராகுங்கள்.

Augmented Reality (ஆக்மெண்டட் ரியாலிடி) – டெக்னாலஜியில் வேலை பார்க்கும் ஐந்து பேரை இப்படி என்றால் என்ன என்று கேட்டால் ஆறு விதமாய் பதில் சொல்வார்கள்.  ரொம்பவும் எளிமையாக சொல்ல வேண்டுமானால், க்ராபிக்ஸை நம் வாழ்வில் கலக்கும் ஒரு பெருந்திட்டம் தான் ஆக்.ரியாலிடி. டெர்மினேட்டர். …ஏன் நம் எந்திரனில் கூட ரோபோவின் கண்கள் மூலம் பார்க்கும் போது அது பார்க்கும் ஆளின் எடை, பெயர் விலாச விவரங்கள் தெரிகிற ஸீன் ஞாபகம் இருக்கிறதா? அதே போல் உங்களாலும் செய்ய முடியும், கூடிய சீக்கிரம். அதாவது நம் நிஜ வாழ்வில் க்ராபிக்ஸையும்,  அதன் சத்தங்களையும் வாசனைகளையும் சூப்பர் இம்போஸ் செய்யப் போகிறார்கள்.

2009 TED எனப்படும் விஞ்ஞானக் கருத்தரங்கில் ப்ரணவ் மிஸ்திரி செய்து காண்பித்த வித்தைதான் இந்த இயலைத் தொடங்கி வைத்தது.  உங்களிடம் ஐ-போன் இருந்தால், அதிலுள்ள ஒரு அப்ளிகேஷனின் மூலம், நீங்களும் இந்த AR விளையாட்டை விளையாடலாம். அதாவது உங்களின் செல்போனை ஓப்பன் செய்து எதாவது ஒரு பில்டிங்கை நோக்கி காட்டினால், இந்த அப்ளிகேஷன், அந்த கட்டிடத்திலுள்ள கம்பெனிகள் எவை, எந்த மாடியில் மதிய உணவு கிடைக்கலாம், எந்த மாடியில் புகைக்கலாம் என்றெல்லாம் சொல்லிவிடும். அல்லது உங்கள் போனை ஒரு ரோடை நோக்கிக் காண்பித்தால், உங்கள் நண்பர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று வரைபடத்தில் காண்பித்து விடும். இதெல்லாம் ஆரம்பம் தான், ப்ரணவ் காண்பித்த விஷயங்கள் வந்து விட்டால், கணினி என்பதே தேவைப்படாது போலிருக்கிறது.  மைக்ரோசாப்டின் Aug. Reality விளம்பரம்.

இவை தவிர HTML5, வெப்ஸ்டோர், Quora,  கூகிளின் சோஷியல் நெட்வொர்க், விண்டோஸ் டேப்லட், இணையத்துக்கும் டிவிக்கும் திருமணம், Net Neutrality, 3டி டிவி,   clean tech,  மின் புத்தகங்கள் படிப்பான் போன்றவைகளை கேள்விப்பட்டிருந்தால் இணையத்தில் ஜல்லியடிக்கலாம். டுவிட்டர்-பேஸ்புக் தெரிந்திருந்தால் போதும். ஒரு பத்து பேராவது உங்களை தொடரவேண்டியது அவசியம்.  குட்லக்.

0000

நேரத்திற்கு நேரமாகிவிட்டது. இது புத்தகச் சந்தையில் வரப் போகும் புத்தகமல்ல, கைக்-கடிகாரத்தின் நேரம் முடிந்து விட்டது.  அதாவது இந்தக் கால இளைஞர்களிடம் மணிக்கட்டை காட்டி என்ன என்று வினவினால் பேந்தப் பேந்த முழிக்கிறார்கள். கைக் கடிகாரங்கள் இல்லாத கரங்கள் அவை.  இவர்கள் அலாரம் வைப்பதோ ஐ-போன் time app-ல் தான்.

கடிகாரம் கட்டுவது என்பது இக்காலத்தில் அழகிற்காகத்தான். யோசித்துப் பார்த்தால் நம்மைச் சுற்றி கணினி, செல்போன் என்று நேரம் காட்டுகிற விஷயங்கள் பல வந்து விட்டன, ஆகையால் கைக்-கடிகாரம் கட்டுவது குறைந்து போய்விட்டது என்கிறார்கள். கடிகாரக் கடைகள் இனிமேல் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கின்றன.

என் முதல் கைக்கடிகாரம், ஐந்தாம் வகுப்பின்போது அத்தைமார்கள் வாங்கிக் கொடுத்தது. அதைப் போட்டுக்கொண்டதாக ஞாபகம் இல்லை. எங்கே போயிற்று என்றும் தெரியவில்லை. பன்னிரண்டாம் வகுப்பின்போதுதான், நானாக விரும்பி கடிகாரம் கட்டியது. Allwyn கம்பெனியின் Trendy ப்ராண்ட் கைக்கடிகாரங்கள். அவற்றின் டி.வி விளம்பரங்களில் மயங்கிப்போய் வாங்கினேன். பிறகுதான் தெரிந்தது அந்த விளம்பரங்களின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என்று.  அந்த நீல வாட்சுக்கு அ-மேச்சிங்காக வெள்ளை ஸ்ட்ராப் போட்டிருந்தேன். பிறகு சிவப்பிற்கு மாறி வீட்டினரைத் திகைக்க வைத்தேன். அது நின்று போனபின் ஒன்றிரண்டு டைட்டன் வாங்கியிருக்கிறேன். ஏழு வருடங்களுக்குமுன் கைக்கடிகாரத்தை கட்டுவதை நிறுத்தி விட்டேன். யாராவது ரொம்பவும் சொன்னால் ஒழிய அவற்றை தொடுவதில்லை.  என் கைக்கடிகாரத் தேவை நின்று போய் நாளாகி விட்டது.

டைட்டன் கடை ஃப்ரான்சைஸ் எடுக்க நினைத்திருந்தால் கொஞ்ச ’நேரம்’ யோசியுங்கள், உங்கள் செல்போனில் மணி பார்த்தபடி.

0000

இந்த வாரம் சென்னை புத்தகச் சந்தை ஆரம்பிக்கிறது. நண்பர் வெங்கட் இதன் பொருட்டு வரும் அத்தனை செய்திகளையும், வலைப்பதிவுகளையும், புத்தக விலைப்பட்டியல்களையும் இங்கே சேமித்துக் கொண்டிருக்கிறார். தேவைப்பட்டால் ஒரு லுக் விடலாம்.

கல்லூரி படிக்கும்போது,  புத்தகச் சந்தைக்குச் சென்று பனியன் கழட்டாத குறையாக புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். கொஞ்ச வருடங்களுக்குப் பின் படித்த புத்தகங்களை விட படிக்காத புத்தகங்கள் என்னிடம் அதிகமாகி விட்டன. அதன் பின் கண்டிப்பாய் படிக்க போகிறேன் என்று எண்ணும் புத்தகங்களை மட்டும்தான் வாங்குகிறேன். படித்ததும் சிலவற்றைக் கொடுத்து விடுகிறேன்.

புத்தகச் சந்தையில் செய்யப்படும் impulse buy ரொம்பவும் அதிகம். சும்மா அட்டைப்படம் பார்த்தே மயங்கிப்போய் வாங்குபவர் என்றால், முதல் நாள் போய் அட்டைப் படங்களை பொம்மை பாருங்கள், அடுத்த நாள் செல்லும் போது நினைவிருக்கும் புத்தகங்களை மட்டுமே வாங்குங்கள். அல்லது இணையத்தில் கொஞ்சம் உலாவி எந்தெந்த புத்தகங்கள் எப்படி என்று பார்த்து விட்டு பிறகு வாங்கிப் படியுங்கள்.  திடீரென்று எல்லா புத்தகங்களையும் வாங்குவது யாருக்கும் உதவாது. பதிப்பாளருக்கு இந்த வருடம் வருமானமாய் தோன்றலாம், ஆனால் அடுத்த வருடம் நீங்கள் சந்தைப் பக்கமே போக மாட்டீர்கள்.

மற்றபடி முக்கியமாய் – வீட்டிலுள்ள குழந்தைகளை கண்டிப்பாய் கூட்டிச் செல்லுங்கள்.  அவர்களுக்கு இதைவிடப் பெரிய உபகாரம் வேறொன்றுமில்லை.

- இன்னபிற பத்தி.

கிறுக்கல் அவார்ட்ஸ் 2010
வழக்கம் போல் – ’இந்த வருடத்தின் சிறந்த’  சேர்த்துக் கொள்ளவும்

புத்தகம்

ஆங்கிலப் புத்தகம் 1 –  The Big Switch – Nicholas Carr

ஆங்கிலப் புத்தகம் 2 –  At Home: A Short History of Private Life – Bill Bryson

சொந்தக் கதை – Autobiography of Mark Twain – நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு நான்-லீனியர் முயற்சி

நோட்டபிள் புத்தகம் – இன்றைய காந்தி – ஜெயமோகன்

தமிழ் சினிமா

ட்ரைலர் – வா. கு. கட்டிங்

படம் – ஆயிரத்தில் ஒருவன்

நோட்டபிள் படம் – அங்காடித் தெரு

சுமார்ப் படம் – சிங்கம், ராவணன், மதராஸப்பட்டிணம்

காமெடிப் படம் – தமிழ்ப் படம்

ஸ்டண்ட் – நான் மகான் அல்ல

நாயகன் – கார்த்தி(ஆயிரத்தில் ஒருவன்)

நாயகி – அஞ்சலி (அங்காடித் தெரு)

காமெடியன் – சந்தானம் (பாஸ் எ பாஸ்கரன்)

துணை நடிகர் – பார்த்திபன்

பாடல் – ஓ ஈசா(ஆயிரத்தில் ஒருவன்)

படமாக்கப்பட்ட பாடல் – மன்னிப்பாயா

குத்துப் பாடல் – காதல் வந்தாலே(சிங்கம்)

இசையமைப்பாளர் –  ஜி.வி.பிரகாஷ்

பாடகர் – விஜய் யேசுதாஸ் ( தாய் தின்ற மண்ணே)

பாடகி – ஆண்ட்ரியா, ஷ்ரேயா கோஷல்(மன்னிப்பாயா)

பாடல் வரிகள் – வைரமுத்து ( கயல் விளையாடும் வயல்வெளித் தேடி)

நோட்டபிள் பாடல் – ஆரோமலே – அல்போன்ஸ் ஜோசப்,  கைதப்ராம் நம்பூதிரி, ரஹ்மான்

எடிட்டிங் – ஆண்டனி(வி.தா.வ,  வா.கு.க)

ஒளிப்பதிவு – ராம்ஜி(ஆயிரத்தில் ஒருவன்), சந்தோஷ் சிவன் – மணிகண்டன் (ராவணன்)

எழுத்து/இயக்கம் – செல்வராகவன்

நோட்டபிள் இயக்குநர் – சுசீந்திரன் (நான் மகான் அல்ல)

பாலிவுட் சினிமா

படம் – Ishqiya

சுமார்ப் படம் – Karthik calling Karthik

நோட்டபிள் படம் – Peepli [Live]

ஹாலிவுட் சினிமா

படம் – Inception (கனவுத் தொழிற்சாலை)

காமெடிப் படம் – Date Night

சுமார்ப் படம் – - Shutter Island

மற்றவை

டெக்னாலஜி –  Augmented Reality

மொக்கை விளையாட்டு – Farmville

மறதி நியூஸ் –  மத்திய அரசு பட்ஜெட், செந்தமிழ் மாநாடு

இந்த வாரம் எப்படி?
ரத்த சரித்திரத்தின் முதல் பகுதியை இந்தியில் பார்த்தேன். இம்மாதிரி கேங்ஸ்டர் படங்களில் திடீரென்று யார் யாரை சுடுகிறார்கள்,  கூறு போடுகிறார்கள், வெட்டிச் சாய்கிறார்கள் என்று புரிவதற்கு முன் இடைவேளை வந்து விடும். இதில் சின்ன மாற்றம் , படம் முடிந்தே போய் விடுகிறது. மார்ட்டின் ஸ்கார்ஸஸி இத்தகைய படங்களில் பேச்சின் மூலம் கதையை நகர்த்தி, பயமுறுத்தி, டக்கென்று கொன்று விடுவார்கள். இதில் நேரெதிர்.

சுவாரசியமாய் ஒன்றுமேயில்லை.  ரத்தத்தை பார்த்து விட்டு தூங்கப் போக முடியாது என்பதால் வீடு வந்து ஒரு நூறு பக்கம் படித்து விட்டே தூங்கப் போனேன்.  அடுத்த பகுதியில் சூர்யா வருகிறார் என்று டைட்டிலுக்கு முன் ட்ரைலர் போட்டார்கள். பார்க்கலாம்.  ரத்தக் களறி சண்டைக்கு நடுவே நாகேந்திரஹாராய என்று உமாச்சி பாட்டை எல்லாம் போடுவது ரொம்பவும் மெல்லிழைவாக மனித மனங்களில் வன்முறையை நியாயப்படுத்தும் என்பதை இயக்குநர் அறிவாரா?

0000

பாவை பிரபந்தங்கள் பாடும் மாதமிது.  சென்னை வெள்ளாளத் தெருவில் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலுக்கு அருகில் வசித்தவன் என்பதால் மார்கழியில் திருப்பாவை சொல்லச் செல்லும் அம்மாவுடன் கோவிலுக்கு போன ஞாபகங்கள் இன்னமும் மிச்சமிருக்கின்றன. திருப்பாவை என்பதை விட சுடச்சுட வெண்பொங்கல் வாசனை தான் என்னை ஈர்த்தது என்று சொல்ல வேண்டும்.  கோவிலுக்கு போகாத நாட்களில், அம்மா தொன்னையில் வெண் அல்லது சக்கரைப் பொங்கலோ வாங்கி வருவாள். மட மடவென எழுந்து பல் தேய்க்கிற மாதிரி தேய்த்து, கிச்சனில் நுழைந்து ஒரே அமுக்.

பத்தாவது படிக்கும் போது நண்பனின் காதலை ஆதரிக்க ஒரு குழாமாக போன போது தான் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் தினப்படி விஷயமானது. சுபா என்கிற அந்தப் பெண் ஆஞ்சநேயரை சுற்றும் போது எண்ணைக் கையால் அருகில் இருந்த சுவற்றில் ஒரு புள்ளி வைக்க, சுரேஷ் என்கிற என் நண்பன் அடுத்த புள்ளி வைக்க, தினமும் 108 புள்ளிகள் முடிய நாங்கள் எண்ணிக் கொண்டிருந்தோம். இதற்கு நடுவில் யாரோ ஒரு சிறுவன் வந்து அவன் ஹால் டிக்கெட் நம்பரை எழுதி விட்டு போவான். இப்படியே எண்களாலும் கோடுகளாலும் சூழப்பட்டிருந்த ஆஞ்சநேயருக்கு வெண்ணெயையும் தாண்டி மூச்சடைத்துப் போயிருக்கும்.

சட்டென்று ஒரு டைவர்ஷன். திருப்பாவை எப்படி மனப்பாடம் ஆகிற்று என்று இன்னமும் தெரியவில்லை. காலை சமையல் செய்து கொண்டே கிச்சனில் இருந்து பாடும் அம்மாவும் காரணமாய் இருந்திருக்கலாம். ஆடி மாத லவுட்ஸ்பீக்கரில் இருந்து தாயே கருமாரி என்று எல்.ஆர்.ஈஸ்வரி பாடியதும், எங்கள் வீட்டு மர்ஃபி டேப்ரிக்கார்டரில் இருந்து வந்த பெங்களூர் ரமணி அம்மாளின் கணீர் குரலும் மனனம் ஆயின. நானாகவே ரொம்பவும் விரும்பிக் கேட்ட டிவோஷனல் பாடல்களை பாடியது ஒன்று எம்.எஸ் அல்லது பித்துக்குளி முருகதாஸ். வீட்டில் அடிக்கடி ஒலிக்கும் டி.எம்.எஸ்ஸின் கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் பாடல்களும், நாகூர் ஹனிஃபாவின் இறைவனிடம் கையேந்தும் குரலும் பின்னர் பிடித்துப் போயின.

பள்ளியில் படிக்கும் காலத்தில், தினத்தந்தியில் அன்றைய திருப்பவையையும் திருவெம்பாவையையும்,  ஐந்து வரி தெளிவுரையோடு ஒரு கட்டம் கட்டி போடுவார்கள்.   திருப்பாவை அறிந்திருந்ததால் திருவெம்பாவையை திரும்பத் திரும்பப் படித்தேன். எம்பாவாய் வார்த்தையை காப்பியடித்தது ஆண்டாளா மாணிக்க வாசகரா என்று சந்தேகத்தோடு உலாத்தியதுண்டு. ஆண்/பெண் வித்தியாசங்கள் இருந்தும், திருவெம்பாவையின் பத்தொன்பதாம் பாடலில் தான் இரண்டிற்கும் ஒற்றுமை தெரிந்தன. இப்போது படித்தாலும், அந்த ஒற்றுமைகள் வாழ்கின்றன.  இது திருப்பாவையா, திருவெம்பாவையா என்று தெரியாமல் படித்தால், கண்டிப்பாய் குழம்பிப் போவீர்கள்.

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று

அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்

எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்

எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க

எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க

கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க

இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்

எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

0000

வாரப் பத்திரிக்கைகளில் Most read/emailed என்று செக்‌ஷன்கள் வைத்துப் பார்த்தால் டாப் டென்னில் வருவது எவை என்பதை யோசித்துப் பார்க்கலாம்.

1. இந்த வாரம் எப்படி?

2. எதாவது ஒரு பெயர்ச்சிப் பலன்.

3. கோலிவுட் ரவுண்ட்-அப்

4. _____ நடிகருக்கு பிறந்த குழந்தைப் படங்கள்

5. ______ நடிகை திரும்ப நடிக்க வரும் முன்னர் வரும் மணியோசை

6. எதாவது ஒரு கருத்துக் கணிப்பு

இப்படியாக முக்கிய செய்திகளில் முக்கியமாக இருப்பது ஜோசிய ஹேஷ்யங்கள். வருடத்தின் முதல் வாரத்தில் இந்த வருடம் எப்படி இருக்கும் என்று மாத வாரியாக எழுதும் ஜோசியர்கள், வார ஜோசியம் எழுதும் பொழுது வருட முதலில் எழுதியதை ரெஃபர் செய்து எழுதுகிறார்களா? இப்படி சமீபத்தில் தேடிப் பார்த்த பொழுது, அக்டோபர் மாதத்தில் அமேசிங் வைபவம் ஒன்றும் வேலை சார்ந்த கவலை ஒன்றும் வரலாம் என்று எழுதியிருந்தார் ஒரு ஜோதிடர். அக்டோபர் மாதத்தில் வார வாரம் என்ன எழுதியிருக்கிறார் என்று படித்துப் பார்த்த பொழுது இரண்டுக்கும் ஆறல்ல அறுபது வித்தியாசங்கள் தெரிந்தன. இம்மாதிரி ஜோசியங்கள் ஒருவேளை வானிலை மாதிரி மாறிக் கொண்டே இருக்கும் போலிருக்கிறது.

இவை எதனால், எவரால், எப்படி எழுதப்படுகின்றன என்பதை எல்லோரும் அறிவோம். ஆனாலும் எல்லோரும் வருங்காலத்தை எட்டிப் பார்க்கிற ஆர்வத்தில் இருக்கிறோம் என்பது தான் மனித இயல்பாய் இருக்கிறது. இந்த பத்திரிகையிலும் இப்படியெல்லாம் போட்டால் pageviews பிய்த்துக் கொண்டு பறக்கும் என்பதால், ஆசிரியரை இவற்றை பரிசீலிக்குமாறு மெயிலனுப்பியிருக்கிறேன். நீங்களும் பரிந்துரைக்கலாம்.

0000

சமீபத்தில் ஜூலியன் அசாஞ்ச் பற்றி நாராயணன் எழுதியிருந்த கட்டுரை மிகையாக அவரை ஒரு ஹீரோவாக மட்டுமே காட்டி இருப்பதாய் எனக்கு தோன்றினாலும், கட்டுரைக்குப் பின் இருந்த கடின உழைப்பு தெரிந்தது. பிடித்திருந்தது.  ரெண்டு நாள் பேப்பர் படிக்காமல் போனால் இப்படி ஏதாவது ஒரு பெரிய விஷயம் நடக்கும் நாட்களில் நாமிருக்கிறோம்.  அப்படியிருக்க இந்த மாதிரி சுருக்கமான ஆனால் தெளிவான விவரிப்புகள் ரொம்பவும் முக்கியம். இவைகளை எழுத ஆள் அதிகமில்லை.

இந்த மாதிரி ஒரு 1000 வார்த்தை கட்டுரை எழுத அவர் குறைந்தது ஆறிலிருந்து பத்து மணிநேரம் வெறும் படிக்க மட்டுமே செலவழித்திருக்கலாம்.  இதற்கு பிறகு படித்ததில் இருந்து விவரங்களை தவிர்த்து கருத்துக் கூறுகளை மட்டும் உள்ளடக்கிய ஒரு கட்டுரை எழுதுவதற்கு முன் முழி பிதுங்கி விட்டிருக்கும்.

இம்மாதிரி கட்டுரைகளை முதலில் படிக்கவும்,  பிடித்திருந்தால் ஓரிரு வார்த்தைகளில் ஒரு மெயிலோ/கமெண்டோ அனுப்பலாம், தப்பில்லை.

– இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.

ஐயய்யோ ஒரு சாதனை!
டான் கில்பர்ட் மற்றும் டான் எரய்லி போன்ற சோஷலாஜிஸ்ட்டுகள் மனித மனங்களை பற்றிச் சொல்லும் சில விஷயங்கள் யோசிக்க வைக்கின்றன.  மனிதன் நடுநிலையுடன் யோசிக்கிறான் என்று நாம் நம்புகிறோம். ஆனால் எல்லோரும் அப்படி இல்லை. தனக்கு தேவையான விஷயங்களில் கூட அசமஞ்சமாகத் தான் செயல்படுகிறான். இரண்டு பிரபல உதாரணங்கள்-

உங்கள் பர்ஸில் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டும் ஒரு ஐம்பது ரூபாய் சினிமா டிக்கெட்டும் இருக்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சத்யம் தியேட்டரை சென்று அடையும் போது டிக்கெட் காணாமல் போய் விடுகிறது. கையில் இருக்கும் ஐம்பது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி பார்பீர்களா இல்லையா?

இந்த முறை உங்களிடம் இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகள் இருக்கின்றன. சத்யத்தை அடையும் போது, ஒரு ஐம்பது ரூபாய் காணாமல் போய் விடுகிறது. இப்போது என்ன செய்வீர்கள், கையில் இருக்கும் ஐம்பது ரூபாயை வைத்துக் கொண்டு டிக்கெட் வாங்குவீர்களா இல்லை வறுத்த வேர்க்கடலை கொறித்துக் கொண்டே திரும்பி வந்து விடுவீர்களா?

இதைப் பலரிடம் கேட்டுப் பார்த்த டான் கண்டுபிடித்தது, முதல் உதாரணத்தில், பலர் சினிமா பார்க்காமல் திரும்பி வந்து விடுவேன் என்றார்கள். ஏன் என்று வினவிய போது,  மீண்டும் ஒரு முறை ஐம்பது ரூபாய் சினிமா டிக்கெட்டிற்குக் கொடுக்க விருப்பமில்லை என்றார்கள். அடுத்த உதாரணத்தில் கையில் இருக்கும் ஐம்பது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவேன் என்றார்கள்.

இரண்டு உதாரணங்களிலும் காணாமல் போனது இரண்டு பேப்பர்கள் தான். ஒன்றில் சத்யம் என்று போட்டிருக்கிற ஒரு ஐம்பது ரூபாய் டிக்கெட். அடுத்ததில் காந்தி படம் போட்ட ரூபாய். ஆனால் மனித மனமோ முதல் உதாரணத்தில் டிக்கெட் விலையை இரட்டடிப்பாக ஆக்கிக் கொள்கிறது, அடுத்த முறை தன் விதியை நொந்து கொள்கிறது.

இதே போல் அடுத்த ஒரு சிச்சுவேஷன், நீங்கள் வாங்க நினைத்த கார் ஸ்டீரியோ உங்கள் வீட்டின் அருகே தி.நகரில் ஆயிரம் ரூபாய்க்கும் பாரீஸ் கார்னரில் தொள்ளாயிரத்திற்கு கிடைக்கிறது.  எங்கே வாங்குவீர்கள்? கொஞ்ச நாள் கழித்து நீங்கள் வாங்க நினைக்கும் கம்ப்யூட்டர், தி.நகரில் 50,000க்கும் பாரீஸ் கார்னரில் 49,900க்கும் கிடைக்கிறது. எங்கே வாங்குவீர்கள்?

மக்கள் சொன்ன பதிலும், நீங்கள் நினைத்த பதிலும் ஒன்றே தான்.  கார் ஸ்டீரியோவிற்கு பாரீஸ் கார்னருக்கும், கம்ப்யூட்டருக்கு தி.நகருக்கும் செல்வதாய்ச் சொன்னார்கள்.  இரண்டிலும் விலை வித்தியாசம் ஒன்றே தான், நூறு ரூபாய்.  அதே நூறு ரூபாய். இரண்டையும் முடிவு செய்வது உங்கள் மனம்.

ஆக மனிதர்களும் அவர்கள் மனங்களும் கால்குலேட்டர்கள் அல்ல.  இதில் நன்மையை விட தீமை தான் அதிகமாக இருக்கிறது.  என்ன தான் யோசித்து முடிவெடுக்கும் மனிதர் கூட கார் ஓட்டிக் கொண்டே டெக்ஸ் செய்கிறார், ரெட் லைட்டைச் சட்டென தாண்ட முயல்கிறார்.  மனிதர்கள் கால்குலேட்டர்களாய் இருந்தால், விபத்துகள் நடக்க வாய்ப்பேயில்லை. காரில் airbag  இத்தியாதி எல்லாம் தேவையில்லை.

0000

காரைப் பத்தி பேசும்போது, கடந்த நூறு வருடங்களில் ஆட்டோமொபைல் டெக்னாலஜி கிட்டத்தட்ட வளரவேயில்லை. கிட்டத்தட்ட.  ஆட்டோமொபைல் எனும் வார்த்தையில் மொபைல் உண்மையாகிவிட்டது. கார் போன்ற வாகனங்களால் நாம் இடம் பெயர்கிறோம். ஆனால் ஆட்டோவாக இல்லை. அதாவது இன்னமும் ஓர் ஆட்டோமொபைலை ஓட்ட ஆசாமி தேவைப்படுகிறார்.

மக்கள் வாங்கக் கூடிய விலையில் முதல் காரை தயாரித்த ஹென்றி போர்ட்(Henry Ford) சொன்ன ஒரு விஷயம் – “If I asked my customers what they want, they simply would have said a faster horse.”   எங்கள் கம்பெனி போய் மார்க்கெட் வாக்கெடுப்பு எடுத்திருந்தால் வேகமான குதிரைகளை தான் எங்கள் வாடிக்கையாளர்கள் கேட்டிருப்பார்கள். கார் வேண்டும் என்று சொல்லியிருக்க மாட்டார்கள். ஆகவே தான் யாரையும் கேட்காமல் நாங்களாகவே மக்களுக்குத் தேவையானதைக் கண்டுபிடித்தோம் என்றார். ஆனால் அதற்குப் பின்னர் கடந்த நூறு ஆண்டுகளாக நான் அந்தக் காரை வேகமாக செலுத்துவது பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். தேவை அடுத்த ஹென்றி போர்ட் மற்றும் உண்மையான ஆட்டோ மொபைல்.

இந்தக் காரை கண்டுபிடிக்கும் முன் ஒரு நாள் தனது எஞ்சினியர்களை கூப்பிட்டு அனுப்பினார் போர்ட்.  அவர் சொன்னது -” I dream of a machine that runs on wheels and is driven by an engine. Go find it” இந்த மாதிரியான அடுத்த ஒரு visionary-க்காகத் தான் உலகம் இன்னமும் கார் ஓட்டிக் கொண்டிருக்கிறது.

0000

சமீபத்தில் படித்த Program or be Programmed என்னும் புத்தகத்தில் இது சுவாரஸ்யமான விஷயமாகப்பட்டது. எல்லோரும் சாப்ட்வேர் ப்ரோக்கிராமிங் கற்றுக் கொள்ள வேண்டும் எனும் சிந்தனை. இருக்கிற எஞ்ஜினியர்கெல்லாம் முதலில் வேலையிருக்கிறதா என்ற கேள்வியை தள்ளி வைத்துப் பார்த்தால், இதில் கொஞ்சம் நன்மையிருக்கிறது.

எனக்கு ப்ரோக்கிராமிங் சொல்லிக் கொடுத்த வாத்தியார் முதலில் சொன்னது, உங்களுக்கு கொடுக்கப்பட்ட ப்ரோக்கிராமிங் கேள்வி ஒரு கண்ணாடி போல.   முதலில் கீழே போட்டு உடைத்து விடுங்கள். உடைந்த சில்லுகளை ஆராய்ந்து பாருங்கள், ப்ரோகிராம் எழுத உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்.  எல்லா விஷயங்களும் இப்படித்தான். எல்லா கடினக்காரியங்களையும் சிறு சிறு கடினங்களாக ஆராய்ந்து முடிவெடுத்தால் அந்த பெரிய விஷயத்திற்கு முடிவு கிடைத்து விடும். இதே மாதிரி சிந்திப்பதற்குத் தான் ப்ரோக்கிராமிங் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் டக்லஸ் ரஷ்ஆஃப்.

இதையும் தாண்டி நம்மை சுற்றியுள்ள விஞ்ஞான உலகை அறிந்து கொள்ள ப்ரோக்கிராமிங் உதவும் என்று வாதிடுகிறார். புத்தகம் விற்று தீர்ந்தாகிவிட்டது.

0000

இந்த வருடத்தின் சிறந்த என்று போட்டு வரும் டிவி நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும் நேரமிது. முந்திக் கொள்கிறேன். இந்த வருடத்தின் சிறந்த தமிழிசை அமைப்பாளர் – ஜி.வி. பிரகாஷ்.

போன வருடமே இசை வெளிவந்து விட்டது என்றாலும் ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியானது இந்த வருடம் என்பதால் அதிலிருந்து ஆரம்பிக்கலாம்.   அதோ அந்தப் பறவை ரீமிக்ஸை தவிர்த்து மற்ற எல்லா பாடல்களும் பிரமாதமான காம்பொசிஷன்கள்.  ரொம்பவும் பிடித்தது, ஓ ஈசா பாடல்.

வ.கு.கட்டிங் படத்தில் உன்னைக் கண் தேடுதே பாடல் ரொம்பவே கடினமான பாடல். கேட்டுப் பாருங்கள், ஆரம்ப கால ஏ.ஆர். ஆர் தெரிவார்.

சமீபத்தில் வெளியான தனுஷ்-வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தில் அய்யய்யோ(பாட்டின் பெயர் தான்) பாடல் ஒரு சாதனை. ரொம்பவே சாதாரணமாகத் தோன்றினாலும் இரண்டுமுறை கேட்டால் எஸ்.பி.பியின் குரலுக்கு மீண்டும் ஆட்படுவீர்கள். மீண்டும் மீண்டும் கேட்பீர்கள்.  ஆங்காங்கே இஞ்சி இடுப்பழகு தெரியலாம்.  ஒத்த சொல்லால மற்றும் யாத்தே எனும் பாடல்களும் அட சொல்ல வைக்கின்றன.

இந்த வருடம் பிடித்த வேறு சில பாடல்கள்:  ஷ்ரேயா கோஷல் – ரஹ்மான் – மன்னிப்பாயா, ஆண்ட்ரியா-அஜீஷ் – இது வரை இல்லாத,  கார்த்திக் – உசுரே போகுதே மற்றும் ஆண்ட்ரியா – Who’s the Hero?(மன்மதன் அம்பு). மற்றபடி அழகான ஹீரோயின்களும் வெகு அழகாக பாடுகிறார்கள் என்பது தான் இந்த வருடத்தின் வகைப்படுத்த முடியாத சாதனை.

– இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.

இன்ன பிற – நடு ராத்திரி டின்னர்
போன வார தமிழ் பேப்பரில் வெளியான இன்ன பிற பத்தி.

சமீபமாக ஃபாரினில் எடுக்கப்படும் பாடல் காட்சியில் ஹீரோ ஹீரோயினுடன் ஆடுவது எப்போதும் போல அந்த இருபது இந்தியப் பெண்களல்ல. அந்நாட்டு டான்ஸர்கள்.  இதற்கெல்லாம் எப்படியும் ஏதாவது யூனியனில் ஸ்ட்ரைக் பண்ணிவிடுவார்களே, எங்கே அவர்கள்? யாராவது எதையாவது செய்து இந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்தலாம். காதல் பாடம்,  அன்பே உன் இடையோ, ராஜ வேர்வை, நெலாவே டல்லா இருக்கு, லவ் கன்பர்ம், கண்மணி ஓ, கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா போன்ற தமிழிசையின் பொன் வரிகளுக்கு க்யூட்டாகத் தோற்றமளிக்கும் ஐரோப்பிய இளைஞன் நம்மூர் ஹீரோவுடன் டப்பாங்கூத்து ஆடுவது தமாஷாக இருக்கிறது. அதுவும் வீட்டின் வாண்டுகள் ரிமோட்டை ஒளித்து வைத்து விட்டதாக நினைத்துக் கொண்டு வால்யூம் குறைத்துப் பார்த்தால் உங்கள் பி.பி குறைந்துவிடும்.

எங்கிருந்து ஆரம்பித்தது இந்த சம்பிரதாயம்? சூர்யாவிலிருந்து ஆர்யா வரை எல்லோருடனும் அவர்கள் ஆடிவிட்டார்கள். குறிப்பாக விஜய்.  ஒரு வாரமாக ஒளிபரப்பாகும் எல்லா பாடல்களையும் கூர்ந்து பார்த்ததில், இது இந்தியனில் ஆரம்பித்தது தெரிந்தது. சாகிர் ஹுசைனின் எதுவோ என்று கமல் மனிஷாவைத் தட்டிவிடும்போது பிண்ணனியில் ஆஸ்திரேலியப் பெண்கள்.  அந்தப் படத்தின் முதல் பாடலில், கோடம்பாக்க டான்ஸர்களை விடுத்து மும்பை மாடல்களுக்கு மல்லிப்பூ கட்டி கூட்டி வந்த போதே எதிர்ப்பு தெரிவித்தார்கள். இன்று எங்கே போனார்கள்? உடனடித் தேவை – அந்த இருபது பின்னணிப் பெண்கள்.

கும்பகோணம் வடக்கு மாட வீதியில் காதலைச் சொல்லப் பின்தொடரும் ஹீரோ, அடுத்த ஷாட்டில் கூலிங் க்ளாஸ் குளிர் கோட்டு எல்லாம் போட்டுக் கொண்டு பார்சிலோனாவில் ஹீரோயினின் இடுப்பைக் கிள்ளுகிறார். Offending. இந்த மாதிரி படத்தின் நடுவே பாடல்கள் நுழைவதைப் பெரும் புரட்சியாகக் கருதுவதை நம்மூர்க்காரர்கள் விட்டு விட்டு, கொஞ்சம் நேராக யோசிக்கலாம். கதை சொல்லல்(Narrative) என்ற ஒரு விஷயத்தைக் கிட்டத்தட்ட மறந்து விட்டோம். அந்தக் காலத்தில் பாடல்கள் இருந்ததற்கு நாடகக் காரணங்கள் இருந்தன. இப்போது இந்த ஹசிலி பிசிலி காரணங்கள் போதா. கெளதமின் விண்ணைத் தாண்டிய காதல் கதையில் தன் வீட்டு இரும்பு கேட்டைத் தாண்டிக் குதிக்கும் அந்த இருபத்தைந்து வயது இளைஞன் இறங்குவது ஏதோ ஒரு குறுகிய மொண்டே கார்லோவின் தெருவில். ராயப்பேட்டையில் நடக்கும் கதாநாயகி ரோட்டை திரும்பியவுடன் திடிரென்று சிகாகோ இளைஞர்கள் Grafitti அடித்த சுவர்களின் முன்னே நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். சினிமா என்பது suspension of disbelief என்பார்கள்.  இது டூ மச் சஸ்பென்ஷன்.

நமக்கு தேவை ஒரேயொரு நிகழ்வை ஒட்டிய கதைகளும் அவற்றுக்கான சிறுகதை முடிவுகளும். அதாவது incident based திரைக்கதைகள். தசாவதாரம் போல. உதாரணத்துக்கு ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கும் கதை என்று வைத்துக் கொள்ளுங்கள்,  ஹீரோவின் முன்- கதை சுருக்கத்தை ஒரு ப்ளாஷ்பேக்கில் சட்டென சொல்லிவிட வேண்டும் . அதை விடுத்து பாங்கினுள் நுழையும்போது நிதானமாக இரண்டாம் க்ளாஸ் படிப்பதில் இருந்து ப்ளாஷ்பேக் சொன்னால், குட் லக்.  அதே மாதிரி, ஹிரோயின் பாங்கினுள் மாட்டிக் கொள்கிறாள் என்றால், அவளை எதாவது ஒரு ரூமில் அடைத்து வைத்திருக்கும்போது, பப்பிள்ஸ் போட்டு ட்ரீம் ஸீக்குவன்ஸ் எப்படி வரும்.  இந்தக் கதையும் வங்கி கொள்ளையைப் போல பத்து மணிக்கு ஆரம்பித்து பனிரெண்டுக்கு முடிய வேண்டும்.  இம்மாதிரி கதைகளை பாட்டு இல்லாமல் தைரியமாக எடுக்கலாம். பாட்டுக்கள் இருந்தாலும் மகேந்திரன் – பாலு மகேந்திரா படங்கள் போல Montageகளாக இருக்கலாம். ஒரு பல்லவியும் ஒரு சரணமும் படத்தில் காட்டினால் போதும், மிச்சத்தை எம்பி3யில் கேட்டுக் கொள்ளலாம். இம்மாதிரி திரைப்படங்கள் எடுத்தால் தமிழ் நவ-சினிமாவின் உதயத்தை எதிர்பார்க்கலாம். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு சுவிசர்லாண்டின் தெருக்கள்.

OOO

2050ல் 9 பில்லியன் மனிதர்கள் இந்த பூமியில் நடமாடிக் கொண்டிருப்பார்கள் என்கிறார்கள்.  இந்த 9 பில்லியன் நம்பரில் பல பில்லியன் கவலைகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன.  முதல் இரண்டு கவலைகளை மேலோட்டமாக கண்டுக்கலாம்.

ஜனத்தொகை. நமக்குத் தெரிந்து இவ்வுலகத்தில் இத்தனை பேர் இருந்ததேயில்லை.  வெத்துப் பெட்டி அப்பார்ட்மெண்டுகளுக்கு சண்டை போடும் நாம், நிற்க நடக்க சண்டையிட வேண்டியதாகலாம் என்கிறார்கள். இதில் கொஞ்சமாவது உண்மையுள்ளது. இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொண்டால் சீன அரசாங்கம் கன்னாபின்னாவென்று வரி போட, கடந்த முப்பது வருடங்களில் கிட்டத்தட்ட 300 மில்லியன் அதாவது முப்பது கோடி பிறப்புக்களைத் தடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.  இந்த மாதிரி, இன்னும் கடினமான சட்டங்கள் வரலாம். Population pressure அதிகமாகி இயற்கை பேராபத்துகள் வரலாம். ஆட்டோ, கார்கள் அதிகமாகி ட்ராபிக் ஸ்தம்பிக்கலாம் எனச் சில டிஸ்டோபியன் சிந்தனைகள் நடமாடுகின்றன.

உணவு மற்றும் உணவுப் பழக்கங்கள். தனியொருவனுக்கு இல்லாவிட்டால் பரவாயில்லை, இத்தனை ஜனத்துக்கும் எப்படி உணவளிக்கப் போகிறோம். ஏற்கெனவே சென்னையில் 300-400அடியாவது தோண்டினால்தான் குடிநீர் வருகிறது. எந்த மரத்தின் வேர்கள் 300 அடிக்குக் கீழே போய் தண்ணி உறியமுடியும். ஆகவே மரங்கள், செடி கொடிகள் மறித்துப் போன சென்னை ஜெய்ப்பூருடன் போட்டியிட்டு வெல்ல முடியும்.

அமெரிக்காவில் 100 மைல் உணவு என்று ஒரு விஷயம் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. அதாவது 100 மைல் சுற்றளவிற்குள் உருவாக்கப்படும் உணவுகளை உண்ணும் ஒரு வகை டயட். இப்படி செய்தால் சூப்பர் மார்க்கெட்டுகளை சார்ந்திருக்காமல் உழவர் சந்தையிலிருந்து வாங்கி சமைக்கலாம். இந்த வழிமுறை இன்னும் பிரபலமாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். பெட்ரோல் கிணறுகள் காய்ந்து போனால் உணவுப் பொருட்களை நகர்த்துவது சிரமமாகும்.

ஒரு முறை பூந்தமல்லியில் ஒரு லாரியிலிருந்து மற்றொரு லாரிக்கு முட்டை கோஸ்களை ட்ரான்ஸ்பர் செய்து கொண்டிருந்தார்கள்.  முதல் லாரியிலிருக்கும் க்ளீனர்(!) ஒரு முட்டைகோஸை எடுத்து, நீல நிற திரவம் கொண்ட பக்கெட்டில் முக்கி தூக்கி வீசுகிறார். அடுத்த லாரிக்காரர் அதை காட்ச் பிடித்து அழுக்கே அழுக்கான அந்த லாரியின் பின்புறத்தில் போட்டுக் கொள்கிறார். கேட்டதுக்கு, ப்ரஷ்ஷாக இருக்க க்ளோரின் வாஷ் என்றார்கள். முட்டைக்கோஸை பூட்டகேஸ் என்று சாப்பிடுவதை விட்டுவிட்டேன்.  ஆகையால் லோக்கல் உழவர்களை பேஸ்புக்கில் நண்பர்களாக்கிக் கொள்ளுதல் உத்தேசம்.

இது மாதிரி எதுவுமே நடக்காமல் போனாலும் சரி, உங்களூர் சூப்பர் மார்க்கெட்டுகள்தான் நீங்கள் சாப்பிடுவதைத் தேர்ந்தெடுக்கின்றன. இதில் ஏகப்பட்ட அரசியல் இருக்கிறது. ஒரு சூப்பர் மார்க்கெட்டின் அமைப்பிலிருந்து, உள்ளே நுழைந்தவுடன் உங்கள் கண்ணில் தெரியும் முதல் பொருளிலிருந்து இருந்து பில் போடும் போது பக்கத்தில் instinct buyக்காக வைக்கப்பட்டிருக்கும் சாக்லேட் சமாசாரங்கள் வரை எல்லாமே கன்ஸூமர் விஞ்ஞானப்படி அமைக்கப்பட்டது. சூப்பர் மார்கெட்டுகளைத் தவிர்த்தால் உங்களின் டின்னரை நீங்களே முடிவு செய்ய முடியும். இதே மாதிரி பாஸ்ட் புட் டிஷ்கள், கொறிக்கும் சிப்ஸ் என்று தவிர்க்க ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது.

இப்பொழுதெல்லாம் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடுவது ஒரு ஃபாஷானாகி விட்டது, கவனித்தீர்களா?  பலர் ப்ரேக் பாஸ்டே சாப்பிடுவது இல்லை.  நள்ளிரவுக்குப் பின் டின்னர் சாப்பிடுவது சாதாரணமாகி விட்டது. இருபது-முப்பது வருடங்களுக்கு முன்னால் சாப்பாடுகளின் நடுவே ஏதாவது சாப்பிட்டால் ஏளனமாய்ப் பார்ப்பார்கள். இது எப்போது மாறியது?

இதற்கு நேரெதிராக உணவுப் பசியால் மாண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது. இன்னும் இப்படித்தான் இருக்கும் என்கிறார்கள், இதைத் தடுக்கலாம்.

யோசித்துப் பார்த்தால் தீவிரவாதத்தை விட தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டியது உணவுப் பசி தான். தீவிரவாதத்தினால் மாண்டவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகம். ஒரு நாள் மட்டுமாவது குறை சொல்லாது, பாலிடிக்ஸ் பண்ணாது, லஞ்சம் கொடுக்காது/வாங்காது,  புறம் பேசாது, தூங்கி வழியாது சில பசித்தவர்களுக்கு புசிக்கக் கொடுத்தால் உலக அழிவை ஓரிரு தீபாவளியாவது தள்ளிப் போடலாம்

கிறுக்கல் அவார்ட்ஸ் 2007
எல்லா விருதுகளுக்கும் முன்னால் ‘சிறந்த‘   சேர்த்துக் கொள்ளவும்.

புத்தகம்

அட்டைப்படம் – ஹோமரின் இலியட் [கிழக்கு பதிப்பகம்]

ஓலிப்புத்தகம் – வந்தார்கள் வென்றார்கள் [கிழக்கு ஒலிப்புத்தகம்]

தொகுப்பு – சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்கள் – [தேசிகன் - உயிர்மை]

சிறுவர் புத்தகங்கள் – எப்படி இயங்குகிறது ? – [ப்ராடிஜி பதிப்பகம்]

சிறந்த ஆராய்ச்சிப் புத்தகம் – ராமானுஜர் [இந்திரா பார்த்தசாரதி - கிழக்கு]

புத்தக விற்பனை நிலையம் – நியு புக் லாண்ட்ஸ்[தி.நகர்]

புத்தக நிறுவனம் – கிழக்குப் பதிப்பகம்

வார இதழ் பிரபலம் – ஞாநி [இதற்கு முன்னால் இவர் எழுதிய தீம்தரிக்க்ட மாதமிருமுறை இதழ் அவ்வளவு பிரபலமில்லை]

உட்டாலாக்கடி தொடர் – அரசு கேள்வி பதில் [குமுதம்]

வெகுஜன இதழ் -ஆனந்த விகடன்

டாட்காமிதழ் – குமுதம்

ஆங்கில புத்தகம் –  Small is the new big [ Seth Godin]

இந்த ஆண்டு படித்த பழைய -

நாவல் – எழாவது உலகம் [ஜெயமோகன் - தமிழினி]

கதைத் தொகுப்பு – இன்று [அசோகாமித்திரன் - கிழக்கு]

கட்டுரைத் தொகுப்பு – பார்வைகளும் பதிவுகளும் [வாஸந்தி - உயிர்மை]

கவிதை – கல்யாண்ஜி கவிதைகள் [சந்தியா பதிப்பகம்]

தொலைக்காட்சி

பேட்டி – காபி வித் அனு [சூர்யாவின் தீபாவளி பேட்டி]

போட்டி – சூப்பர் சிங்கர் ஜூனியர்[விஜய் டிவி], Deal or No Deal[NBC -USA]

விவாத மேடை – நீயா ? நானா ?[ராசிபலன் உண்மையா இல்லையா ?]

ரியாலிடி நிகழ்ச்சி – ஜோடி நம்பர் ஒன் – சீசன் 2.

தொகுப்பாளினி – திவ்யதர்ஷினி [ஜோடி நம்பர் ஒன்]

பார்க்கத் தூண்டிய நிகழ்ச்சி – Planet Earth[BBCயின் தொடர், டிஸ்கவரி சானலில்]

சிறுவர் தொலைக்காட்சி – ஜெட்டிக்ஸ்

நகைச்சுவை நிகழ்ச்சி – லொல்லு சபா

புள்ளி விவரங்கள்- ஹெட்லைன் நியூஸ்

உடனுக்குடன் செய்தி – சி.என்.என் ஐ.பி.என்

தமிழ் சாட்டிலைட் சானல் – விஜய் டீவி

சினிமா

தமிழ் -

ட்ரைலர் – ஓரம்போ

சுமார் ட்ரைலர் – கற்றது தமிழ், பில்லா

டைட்டில்ஸ் – சிவாஜி

வசனகர்த்தா – சுஜாதா [சிவாஜி]

அதிகம் சொல்லப்பட்ட பஞ்ச் – சும்மா அதிருதுல்ல!! [அனுராதா ஸ்ரீராம் வரை எல்லோரும் சொல்லியாகி விட்டது]

அதிகம் சொல்லப்படக்கூடிய பஞ்ச் – சிக்ஸுக்கு அப்புறம் செவண்டா, ______க்கு அப்புறம் எவண்டா!! [கோடிட்ட இடத்தை உங்கள் நாமகரணத்தால் நிரப்புக]

ஸ்க்ரிப்ட் – வெற்றி மாறன் [பொல்லாதவன்]

நம்பக்கூடிய ஸ்டண்ட் – ராம்போ ராஜ்குமார் – பொல்லாதவன்

‘காதுல பூ’ ஸ்டண்ட் – சிவாஜி

குருப் டான்ஸர்கள்  – வாஜி வாஜி

பாடல் செட் – வாஜி வாஜி

குத்துப் பாடல் – சரோஜா சாமான் நிகாலோ

முணுமுணுக்க வைத்த பாடல் – உன்னாலே உன்னாலே [என் வசம் என் வசம் இரண்டடுக்கு ஆகாயம், இரண்டிலும் போகுதே என் காதல் கார் மேகம்]

பாடல் – யாரோ யாரோடு இங்கு யாரோ [ சென்னை 600 028]

பாடகர் – எஸ்.பி.பி [யாரோ யாரோடு இங்கு யாரோ], கார்த்திக் / நரேஷ் ஐயர் [ கரு கரு விழிகளால்]

பாடகி – ஹரிணி [உன்னாலே உன்னாலே], சின்மயி [நான் முத்தம் தின்பவள்]

பாடலாசிரியார் – தாமரை [கரு கரு விழிகளால் - கையின் ரேகை போலே கள்ளத்தனம் ஓடும்], வைரமுத்து [நான் முத்தம் தின்பவள் - இரு குறையட்டும் தெருவிளக்கு, நீ இடங்சுட்டி பொருள் விளக்கு]

இசை – யுவன் [சென்னை 600 028],  ரஹ்மான்[குரு]

சுமார்ப் படம் – சிவாஜி, மாயக் கண்ணாடி[சேரன்]

சொதப்பல் படம் – பொய்[கே.பாலசந்தர்]

வராத படம் – தசாவதாரம்

பார்க்கத் தூண்டிய படம் – எவனோ ஒருவன்

நோட்டபிள் படம் – பருத்தி வீரன்

ஆங்கில காப்பி படம் – கண்ணாமூச்சி ஏனடா

படம் – சென்னை 600 028,  பொல்லாதவன்

நடிகர் – கார்த்தி [பருத்தி வீரன்]

நடிகை – ப்ரியா மணி [பருத்தி வீரன்]

நகைச்சுவை நடிகர்/நடிகை – ஹும் ஹும்.

புது இயக்குனர் – வெற்றி மாறன் [பொல்லாதவன்]

ஆங்கிலம்

காதுல பூ படம் – Live Free Die Hard

கொட்டாவி – Shrek 3

காமெடிப் படம் – Knocked Up

சொதப்பல் காமெடிப் படம் – Super Bad

கலக்கல் படம் – The Lives Of Others [2006]

பார்க்கத்தூண்டிய படம் – No Country for Old Men

நாவலிலிருந்து எடுக்கப்பட்ட படம் – Atonement [Ian McEwan]

இந்தி

படம் – சக் தே இந்தியா

இயக்குனர் – மணி ரத்னம் [குரு]

இசை – ஏ ஆர் ரஹ்மான்

மற்றவை

காபி – சரவணபவன்

டிபன் – ஆனியன் ரவா [கற்பாகாம்பாள் மெஸ்]

ஞாபகமறதி நியுஸ் – இந்தியாவின் உலகக்கோப்பை வெளியேற்றம், நந்திகிராம்

கடையலங்காரம் – போத்தீஸ் [சம்மர் ஸ்பெஷல்]

விளம்பரம் – ஏர்டெல்

கூட்டமான ஹோட்டல் – முருகன் இட்லி [வெளியே சேர் போட்டு லைனில் கூட்டம் - பெசன்ட் நகர்]

க்ரெடிட் கார்ட் காலி கடை – லாண்ட்மார்க் [ஸ்பென்ஸர் ப்ளாசா]

நகம் போன ஆட்டம் – 20-20 சாம்பியன்ஷிப் பைனல்

இயந்திரா – ஆப்பிள் ஐ.போன், நிண்டேண்டோ வீ

டெக்னாலஜி – ஆயிரம் டாலருக்கு உங்கள் டி.என்.ஏ ரீடிங் [23 & me].

இந்த ஆண்டுக்கான இடது கைப் பரிசுகள் [கற்றதும் பெற்றதும் ஸ்டைலில்] -

1. ஜோடி நம்பர் ஒன்னில் கிடைத்த கேப்பில் புட்டேஜ் எடுத்துக் கொண்டு, “எனக்கு நடிக்கத் தெரியாதையா” என்று அழுது அதிர வைத்த சிம்புவுக்கு அரை டஜன் கைக்குட்டைகள்.

2. சிவாஜியில் கூல் கூல் என்று காதில் பூச்சுற்றிய இயக்குனர் ஷங்கருக்கு, Quentin Tarantino: The Cinema of Cool புத்தகம் பரிசு.

3. தீப்பெட்டி சைஸ் சென்னை சிட்டி சென்டரில், பிகர் வெட்ட காத்திருக்கும், நூற்றுக்கணக்கான பல்சர் டீனேஜர்களுக்கு ஆளுக்கு ஒரு KFC சிக்கன் லெக் பீஸ்.

4. இந்திய உலக சினிமா என்று அவ்வப்போது உடான்ஸ் விடுவதற்காக, மீரா நாயருக்கு, சிவகவி படத்தின் ஒரு தேய்ந்த விடியோ காஸெட்.

5. இந்தியாவின் உலகக் கோப்பை வெளியேற்றத்திற்கு பிறகு, “இனிமேல் நோ மோர் அட்வர்டைசிங் வித் ப்ளேயர்ஸ்” என்று உதார் விட்டு இப்போது மீண்டும் அவர்களை அழைக்கும் நிறுவனத் தலைவர்களுக்கு, கோலி சோடா.

6. ரியாலிடி ஷோவான பிக் பிரதரில் பங்கு கொண்டு நாட்டுக் பெருமை சேர்த்த ஷில்பா ஷெட்டிக்கு, பிரபு குஷ்பு நடித்த சின்ன தம்பி படத்தின் டிவிடி பரிசு.

7. கிண்டியில் ரவுண்டானாவை நோண்டி போட்டுவிட்டு வீட்டுக்கு போய் விட்ட அதிகாரிகளுக்கு, நகர்வலமாக புல்டோசரில் ஒரு ரவுண்டு இலவசம்.

8. விடாமல் மெகா சிரியல் பார்க்கும் தாய்மார்களுக்கு ஒரு பாட்டில் க்ளிசரின் பரிசு.

9. இரண்டு மொபைல் போன் வைத்திருக்க்கும் சென்னைவாசிகளுக்கு, தீப்பெட்டிகளில் நூலால் கட்டிய  மற்றொரு போன் இனாம்.

10. ஓயாமல் போன்-இன் நிகழ்ச்சிகளுக்கு போன் செய்யும் பொதுஜனத்திற்கு, சுகபோதானந்தாவின் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் புத்தகம்.